May 6, 2020

திருச்சி மாவட்ட ஆட்சியர் தகவல்

*திருச்சிராப்பள்ளி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் நோய் 
தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தகவல்* 

நமது மாவட்டத்தினை சார்ந்த 51 நபர்கள் கொரோனா வைரஸ் நோய் 
பாதிக்கப்பட்டதன் விளைவாக சிகிச்சை பெற்று வந்தனர். இதில் ஏற்கனவே 47 நபர்கள்
பூரண குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 
திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிலிருந்து வருகை 
புரிந்த 28 நபர்கள் மற்றும் இதர மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களிலிருந்து வருகை புரிந்த 
667 நபர்களுக்கு இரத்த பரிசோதனை செய்ததில் ஏற்கனவே 4.5.2020 அன்று 4 நபர்களுக்கு 
கொரோனா வைரஸ் நோய் தொற்று உள்ளது என உறுதி செய்யப்பட்டுள்ளது.
மீதமுள்ள 
304 நபர்களுக்கு இன்று(5.5.2020) ரத்த மாதிரி பரிசோதனை செய்ததில் 303 நபர்களுக்கு
கொரோனா வைரஸ் நோய் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. 1 நபருக்கு 
கொரோனா வைரஸ் நோய் தொற்று உள்ளது என உறுதி செய்யப்பட்டுள்ளது. 
திருச்சி மாவட்டத்தை சார்ந்த 9 நபர்கள் அரியலூர் மாவட்டத்தைச் சார்ந்த 9
நபர்களும் பெரம்பலூர் மாவட்டத்தைச் சார்ந்த 12 நபர்களுக்கும் புதுக்கோட்டை 
மாவட்டத்தைச் சார்ந்த 1 நபரும் ஆக கூடுதல் 31 நபர்கள் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
அனைத்து நபர்களும் நலமுடன் உள்ளனர். 
வெளிமாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பிறமாவட்டங்களிலிருந்து திருச்சி 
மாவட்டத்திற்குள் வரும் நபர்கள் உடனடியாக சுகாதாரத்துறையினரை தொடர்பு கொண்டு 
தகவல் தெரிவிப்பதுடன் 14 நாட்களுக்கு வீட்டினை விட்டு வெளியே வராமல்
தனித்திருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றது. 
தேவையில்லாமல் வெளியில் நடமாடுவதை பொது மக்கள் தவிர்க்க வேண்டும். 
விழித்திரு - விலகி இரு - வீட்டில் இருக்கஎன்பதை கடைபிடிக்க வேண்டும். திருச்சிராப்பள்ளி 
மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் இல்லாத மாவட்டமாக மாற்றுவதற்கு பொதுமக்கள் 
அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்