திருச்சி மாநகராட்சி சார்பில் மாநகராட்சி ஆணையர் தலைமையில் தூய்மை பணியாளர்களுக்கு சமூக இடைவெளியை பின்பற்றி கபசுரக் குடிநீர் பாக்கெட்டுகள் இலவசமாக வழங்கப்பட்டது
திருச்சி தமிழக அரசு ஆரோக்கியம் திட்டத்தின் கீழ் தொற்று பரவாமல் இருக்க எதிர்ப்பு சக்தியை தூண்டும் வகையில் கபசுர குடிநீர் தமிழக அரசால் வலியுறுத்தப்பட்டு பொதுமக்களுக்கு பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் இன்று திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் இலவசமாக கபசுர மூலிகை பாக்கெட் வழங்கப்பட்டது திருச்சி மாநகராட்சியில் கொரோனா வைரஸ் நோய் எதிர்ப்பு சக்தியாக சித்தாவில் பயன்படுத்தப்படும் கபசுர மூலிகை பாக்கெட்டுகளை மாநகராட்சி ஆனையர் சிவசுப்பிரமணியன,பொன்மலை கோட்டம் உதவி ஆணையர் தயாநிதி, திருச்சி பீமநகர் சித்த மருத்துவமனை மருத்துவர் ரத்தினம், ஆகியோர் கலந்துகொண்டு மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு கபசுர மூலீகை பாக்கெட் வழங்கினார் இதில் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டு வாங்கி பயனடைந்தனர்