Nov 27, 2014
Nov 26, 2014
திருப்பூர் மேயர் விசாலாட்சி ஆய்வு
திருப்பூர் பெருமாள் கோவிலில் வருகிற 1-ந்தேதி நடைபெறும் கும்பாபிஷேகம் விழாவினை யொட்டி மாநகராட்சி சார்பில் ரூ.35 லட்சம் மதிப்பில் நடைபெறும் புனரமைப்பு மற்றும் தூய்மைபடுத்தும் பணியினை மேயர் விசாலாட்சி பார்வையிட்டார்.
திருப்பூர் பெருமாள் கோவில் திருக்குட நன்னீராட்டுப் (கும்பாபிஷேக) பெ ருவிழா நடைபெறுகிறது. விழா தரிசனத்துக் காக பல்லாயிரக்காணக்கான மக்கள் இப்பகுதிக்கு வருகை தருகின்றனர். இங்குள்ள சாலைகளில் ரூ.35 லட்சம் மதிப்பில் சாக்கடை கால்வாய், மழைநீர் வடிகால், தெரு விளக்கு, பேவர் பிளாக் கற்கள் பாதிக்கும் பணிகள் என மாநகாட்சி சார்பில் நடைபெறுகிறது.பொதுமக்கள் மற்றும் பக்கதர்களின் வசதிக்கா கவும், கோவில் விழா சிறப்பாக நடைபெறவும் மாநகராட்சி பணியாளர்களை துரிதமாக பணிகளை செய்து முடிக்க உத்த்ரவிடப்படுள்ளது. மேலும் கும்பாபிஷேக விழா நாளில் இப்பகுதியில் 4 இடங்களில் குடிநீர் தொட்டி, 4 இடங்களில் தற்காலிக கழிப்பிடம் அமைக்கப்பட உள்ளது. இத்துடன் பூ மார்க்கெட் மற்றும் அருகில் உள்ள வீதி பகுதிகளில் உடனுக்குடன் குப்பைகளை அகற்றவும், சுகாதாரம் பேணவும் 100க்கும் மேற்பட்ட மாநகராட்சி பணியாளர்கள் தூய்மை பணியில் ஈடுபடுவார்கள். கும்பாபிஷேக நாளில் மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தர மாநகராட்சி நிர்வாகம் முழு வீச்சில் செயல்படும்.இவ்வாறு மேயர் விசாலாட்சி கூறினார்.
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை நகராட்சி சார்பில், நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொசுவினால் பரவக்கூடிய
டெங்கு மற்றும் மலேரியா போன்ற நோய்களைத் தடுக்கும் வகையில் கொசுப்புழு உற்பத்தியினைக் கட்டுப்படுத்துவதற்காகவும், நோய் பரவுவதை தவிர்ப்பதற்காகவும், கோயம்புத் தூர் போன்ற பெறு நகரங்களில் முதிர்ந்த கொசுக்களை அழிக்கப் பயன்படுத்துகின்ற பெரிய கொசுப்புகையடிக்கும் இயந்திரம் போன்று, உடுமலை நகராட்சியிலும் மினி டெம்போ லாரிகளில் பொருத்தப்பட்டுள்ள பெரிய கொசுப்புகையடிக்கும் இயந்திரத்தினை உடுமலை நகராட்சியின் சார்பாக நகரமன்றத் தலைவர் கே.ஜி.எஸ்.ஷோபனா, நகராட்சி ஆணையாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நகர்நல அலுவலர் டாக்டர்.அருண், சுகாதார ஆய்வாளர்கள் இளங்கோவன்,பி.செல்வம், சிவக்குமார், ஆர்.செல்வம் மற்றும் செல்வக்குமார் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் கொசுப்புழு உற்பத்தியாகும் இடங்கள் குறித்து ஆய்வு செய்து, பணியாளர்களைக் கொண்டு கொசுப்புழுக்கள் அழிக்கப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து சென்னை,
திருப்பூர் மாவட்டம்,உடுமலைப்பேட்டையில், ஜெயலலிதா மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்க வேண்டி
ஜெயலலிதா பேரவை சார்பில் புறநகர் மாவட்ட பேரவை செயலாளர் ஜி.வி.வாசுதேவன் தலைமையில் தளி ரோட்டில் உள்ள போடிபட்டி ஸ்ரீ பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அண்ணா தி.மு.க.புறநகர் மாவட்டச்செயலாளரும், சட்டமன்ற துணை சபாநாயகருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன், ஒன்றியக்குழு துணைத்தலைவர் ஜெகன்நாதன், முன்னாள் எம்.எல்.ஏ. மணிவாசகம், அண்ணா தொழிற்சங்கச் செயலாளர் சுந்தர்ராஜ், பேரவை நிர்வாகிகள் ரகுபதி, ராஜேந்திரன் வடிவேலு, போடிபட்டி ஊராட்சி மன்றத்தலைவர் பாக்கியலட்சுமி, கவுன்சிலர் கண்ணன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மடத்துகுளத்தில் நடைபெற்ற வேலைவாய்ப்பு பயிற்சி முகாமில் கலந்து கொண்ட இளைஞர்களுக்கு மடத்துக்குளம் சி.சண்முகவேலு எம்.எல்.ஏ., நவீன கருவிகளையும், மத்திய அரசின் சான்றிதழ் மற்றும் ஆயுள் காப்பீட்டையும் வழங்கினார்.
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் பகுதி கிராமப்புற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் தென்னை வளர்ச்சி வாரியம் மற்றும் மடத்துக்குளம் தென்னை உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் குமரலிங்கம் ஜே.எஸ்.ஆர் தோட்டத்தில் 6 நாட்கள் பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த பயிற்சி முகாமினை மடத்துக்குளம் தென்னை உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் செயலாளர் எஸ்.ராஜ்குமார் தொடங்கி வைத்தார். இப்பயிற்சியில் அந்த பகுதியைச் சேர்ந்த 40 இளைஞர்கள் பங்கேற்றனர். இப்பயிற்சியில் நவீன கருவி மூலம் தென்னை மரத்தில் ஏறி தேங்காய் அறுவடை செய்வது பற்றியும், பதநீர் இறக்கி, அதன்மூலம் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்து சந்தைப்படுத்தும் முறைகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது. மேலும் தென்னையில் நீர் மேலாண்மை, உர மேலாண்மை, பூச்சி தாக்குதல், நோய்கள் பராமரிப்பு மற்றும் களைச்செடிகள் பராமரிப்பு பற்றிய அனைத்து தொழில்நுட்பங்கள் பற்றியும், இவர்களுக்குத் தேவையான முதலுதவி, சிறுசேமிப்பு, தகவல் பரிமாற்றம், மது அருந்துவதால் ஏற்படும், தீமைகள், அதிலிருந்து மீள்வது பற்றிய கருத்துக்களும் வழங்கப்பட்டது.
இறுதி நாள் விழாவிற்கு மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர். சி.சண்முகவேலு தலைமை தாங்கினார். பயிற்சியை முழுமையாக நிறைவு செய்தவர்களுக்கு ரூ.3500 மதிப்புள்ள நவீன கருவி, ரூ.2 லட்சத்திற்கான காப்பீட்டையும் வழங்கினார். உடுமலை தென்னை உற்பத்தியாளர்கள் கூட்டமைப்புத் தலைவர் பெரியநாயகம், மடத்துக்குளம் தென்னை உற்பத்தியாளர்கள் கூட்டமைப்புத் தலைவர் ஜெயமணி ஆகியோர் பயிற்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசின் சான்றிதழை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் குமரலிங்கம் பேரூராட்சித் தலைவர் சிவக்குமார், துணைத் தலைவர் சிவலிங்கம், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச்சங்க செயலாளர் சுப்பிரமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் பகுதி கிராமப்புற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி முகாம், தென்னை வளர்ச்சி வாரியம் மற்றும் தென்னை உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் குமரலிங்கம் ஜே.எஸ்.ஆர் தோட்டத்தில் 6 நாட்கள் நடந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்ட இளைஞர்களுக்கு சி.சண்முகவேலு எம்.எல்.ஏ., நவீன கருவிகளையும், மத்திய அரசின் சான்றிதழ் மற்றும் ஆயுள் காப்பீட்டையும் வழங்கினார்.
உடுமலை ரெயில்வே மேம்பால பணிகளை சட்டமன்ற துணைத்தலைவர் ஆய்வு செய்தார்.
உடுமலை நகரில் நடைபெற்று வரும் ரெயில்வே மேம்பாலப்பணிகளை சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆய்வு செய்தார்.
திருப்பூர் மாவட்டம், உடுமலை நகரில் கடந்த 2009ம் ஆண்டில் ரூ.18 கோடி மதிப்பீட்டில் ரெயில்வே மேம்பாலப்பணிகள் தொடங்கப்பட்டது. பல்வேறு காரணங்களால் பாலப்பணிகள் தாமதமாக நடைபெற்று வந்தன.இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடந்த 5 ஆண்டுகளாக கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். இதற்கிடையில், பழனி-உடுமலை-பொள்ளாச்சி வழித்தடத்தில் இன்னும் ஒரு மாதத்தில் ரெயில் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அப்படி ரெயில்கள் இயக்கப்படும் பட்சத்தில் மேம்பாலப்பணிகள் முடிவடையாத சூழ்நிலை ஏற்படுமானால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்கும் நிலை ஏற்படும். இதனை கருத்தில் கொண்டு இப்பணிகளை விரைவு படுத்த வேண்டும் என மக்கள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு பொதுமக்களும், வியாபாரிகளும் கோரிக்கை விடுத்தது இருந்தனர்..
ஜெயலலிதா வழிகாட்டுதலின் பேரில் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், சட்டப்பேரவைத் துணைத் தலைவருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் ஆலோசனையின் பேரில் மேம்பால பணிகளை உடனடியாக முடிக்குமாறு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் பொள்ளாச்சி வி.ஜெயராமன் கேட்டுக் கொண்டார். இந்த ஆய்வின் போது உடுமலை நகரமன்றத் தலைவர் கே.ஜி.எஸ்.ஷோபனா,ஆணையாளர் கே.பாலகிருஷ்ணன், துணைத் தலைவர் எம்.கண்ணாயிரம், அண்ணா தி.மு.க. நகர\ செயலாளர் கே.ஜி.சண்முகம், வழக்கறிஞர் கண்ணன், கவுன்சிலர் கண்ணன், தொகுதிச் செயலாளர் பாண்டியன், குடிமங்கலம் ஒன்றியக்குழுதலைவர் முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருப்பூர் மாவட்ட ஊராட்சி குழுவின் சாதாரண கூட்டம் தலைவர் டேம்.சண்முகம் தலைமையில், துணைத்தலைவர் ஆனந்தகுமார் முன்னிலையில் நடைபெற்றது
கூட்டத்தில் ஊராட்சி செயலாளர் வீரமலை, ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் சங்கமித்திரை, வட்டார வளர்ச்சி அலுவலர் (நிர்வாகம்) மகேஸ்வரி மற்றும் கவுன்சிலர்கள் தண்ணீர்பந்தல் நடராஜன், வாசுதேவன் உள்ளிட்டவர்களும், அரசு அலுவலர்களும் கொண்டனர்.
கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட ஊராட்சிக்குழு உறுபினர்கள் பேசுகையில்,
நஞ்சிகாளிபாளையம் பகுதியில் தார்ரோடு அமைக்கக்கோரி கலெக்டர் கலந்து கொண்ட மனுநீதி முகாமில் விண்ணப்பம் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. தாராபுரம் தளவாய்பட்டினம் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படாமல் உள்ளது. குறிப்பாக குப்பை மற்றும் தெருவிளக்கு பிரச்னை அதிக அளவில் உள்ளது. குண்டடம் பகுதிக்கு காவேரி கூட்டுகுடிநீர் திட்டத்தின் வாயிலாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக மேற்குபகுதி 11வது வார்டு முழுவதும் குடிநீர் பிரச்னை பெரிய அளவில் உள்ளது. ஆககே குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், திருமூர்த்தி கூட்டு குடிநீர் திட்டத்தின் வாயிலாக குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். நந்தவனம் ஊராட்சி அத்திகாடு பகுதியில் உள்ள மக்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜல்லிப்பட்டி பகுதியில் மின் கம்பங்கள் மோசமான நிலையில் உள்ளது. பெரிய அளவில் விபத்து ஏற்படும் முன் மின் கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். உடுமலை தாலுகா உழவர் சந்தை அருகே உள்ள வணிக வளாகத்தில் ஏற்கனவே உள்ளவர்களுக்கே கடைகள் ஒதுக்கப்பட்டு வருகிறது. மற்றவர்களுக்கும் கடைகள் ஒதுக்கி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வணிக வளாகத்தின் மேல் பகுதி முழுவதும் கடைகள் காலியாக உள்ளது. அதை மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்தவர்களுக்கு வாடகைக்கு ஒதுக்க வேண்டும்.
தாராபுரம் தாலுகாவுக்கு உட்பட்ட நந்தவனம்பாளையம் ஊராட்சியில் ரேசன் கடைகளில், தமிழக முதல்வரின் சிறப்பு திட்டங்களி ல் ஒன்றான விலையில்லா அரிசி திட்டத்திற்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையில், விலையில்லாமல் வழங்க வேண்டிய 20 கிலோ அரிசிக்கு பதிலாக 15 கிலோ மட்டும் வழங்கி வந்தார்கள். இதுகுறித்து கலெக்டரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. கலெக்டரின் நடவடிக்கையின் பேரில் 20 கிலோ அரிசி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் தும்பரப்பட்டி கிராமத்தில் உள்ள ஒரு ரேசன் கடையில் இன்னும் 15 கிலோ அரிசி மட்டுமே வழங்கி வருகிறார்கள். அரசின் பெயரை கெடுக்கும் வகையில் செயல்படும் ரேசன் கடை ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேற்கண்டவாறு மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் பேசினர். அவர்களின் புகாருக்கு பதிலளித்து தலைவர் எம்.சண்முகம் பேசியதாவது:-
உறுபினர்களின் கோரிக்கைகள் அனைத்தும் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மழை காலங்களில் சேதமடைந்த குண்டும் குழியுமாக உள்ள ரோடுகளை சீரமைக்க நெடுச்சாலைத்துறையிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடிநீர் பற்றாக்குறை உள்ள ஊராட்சி பகுதிகளில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்.துங்காவி ஊராட்சியில் உள்ள ஆதி திராவிட மக்களுக்கு தாமதம் இல்லாமல் இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
குறிப்பாக அரசின் திட்டத்தை செயல்படும் வகையில் செயல்படும் ரேசன் கடை ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து அதிகாரிகள் விசாரிக்க வேண்டும். மாவட்ட ஊராட்சி நிதி நிலையை பொருத்து, 17 வார்டுகளிலும் ரூ.4 லட்சம் மதிப்பில் பொது கழிப்பிடம் கட்ட அந்தந்த வார்டு கவுன்சிலர்கள் இடத்தை தேர்வு செய்து வழங்கவேண்டும்.குறிப்பாக கழிப்பிடங்கள் பள்ளி மாணவர்கள் பயன்படக்கூடிய வகையில், பள்ளி அருகில் இருக்கும்படி இடத்தை தேர்வு செய்ய வேண்டும். மேலும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் வாயிலாக சாக்கடை கால்வாய் கட்டும் இடத்தையும் தேர்வு செய்து ஒப்படைக்க வேண்டும்.
இவ்வாறு மாவட்ட ஊராட்சி தலைவர் எம்.சண்முகம் பேசினார்.
திருப்பூரில் ரூ.2.87 கோடி மதிப்புள்ள திருமண உதவி தொகை 4 கிராம் தங்கம் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் வழங்கினர்.
தலைமுறை தலைமுறைக்கு பெயர் சொல்லும் திட்டங்களை ஜெயலலிதா அறிவித்து செயல்படுத்தி வருகிறார் என பொங்கலூர்,அவினாசியில் 583 பெண்களுக்கு ரூ. 2.87 கோடிமதிப்புள்ள திருமண உதவி தொகை மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் விழாவில் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார்.
திருப்பூர் மாவட்ட சமூக நலத்துறையின் சார்பில், ஏழை பெண்கள் திருமண நிதி உதவியுடன், திருமாங்கல்யத்துக் கு 4 கிராம் தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் 583 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே, 87 லட்சத்து, 48 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பல்லடம் தொகுதி பொங்கலூர் லட்சுமி திருமண மண்டபத்திலும், அவினாசி தொகுதி ஸ்ரீ கருணாம்பிகா திருமண மண்டபத்திலும் நடைபெற்றது.விழாவிற்கு மாவட்ட க லெக்டர் ஜி.கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். மேயர் அ.விசாலாட்சி, எம்.எல்.ஏ.க்கள் பல்லடம் கே.பி பரமசிவம், அவிநாசி கருப்பசாமி ஆகியோர் முன்னிலை வகித்து பேசினார். மாவட்ட சமூக நல அலுவலர் ஜெயந்தி வரவேறு பேசினார்.விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசியதாவது:-
தமிழ்நாடு இந்தியாவில் முதன்மை மாநிலமாக திகழ வேண்டும் என்பதற்காக இந்த 3 ஆண்டுகால ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் மூலம் தமிழகத்தில் உள்ள 7 1/2 கோடி மக்களும் பயன்பெறும் வகையில் முதலமைச்சரால் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தேர்தலின் போது அறிவிக்கப்பட்ட 54 திட்டங்களையும் முதல்வராக பதவி ஏற்ற 2 1/2 ஆண்டுகளில் முழுமையாக நிறைவேற்றியவர் ஜெயலலிதா.அவர் அறிவித்த திட்டங்களில் பொதுமக்கள் ஒவ்வொரு திட்டத்தின் மூலமும் பயன் அடைந்து வருகின்றனர். அடித்தட்டு மக்களின் வாழ்க்கை தரம் உயர வேண்டும் என்கிற அடிப்படையில் பல்வேறு திட்டங்களை ஜெயலலிதா செயல்படுத்த்தினார். அந்த வகையிலே இன்று அவரது வழிகாட்டுதல் படி இன்று தமிழக அரசு சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.
அந்தவகையில் ஏழை எளிய குடும்ப பெண்களுக்காக, இந்தியாவிலேயே எங்கும் இல்லாத வகையில் திருமண உதவி தொகை வழங்கப்படுகிறது. பட்டப்படிப்பு படித்த பெண்களுக்கு 4 கிராம் தங்கமும் ரூ. 50 ஆயிரம் பணமும் வழங்கப்படுகிறது, +2 முடித்த பெண்களுக்கு 4 கிராம் தங்கமும் ரூ.25 ஆயிரமும் வழங்கப்படுகிறது. 3 1/2 ஆண்டில் திருப்பூர் மாவட்டத்தில் 10 ஆயிரத்து 929 பயனாளிகளுக்கு ரூ.51.46 கோடி மதிப்பிலான திருமண உதவி மற்றும் 4 கிராம் தங்கம் வழங்கப்பட்டுள்ளது.ஒரு பெண்ணுக் கு திருமணம் எப்படி நடந்தது என்று அந்த பெண்ணின் பேரன் கேட்டால் கூட மக்கள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் அவர் அறிவித்த அற்புத திட்டத்தில்தான் திருமணம் நடந்தது என்று சொல்ல கூடிய வகையில் தலைமுறை, தலைமுறைக்கு பேசும் சாதனை திட்டங்களை வழங்கி வருகிறார். அவருக்கு நீங்கள் என்றென்றும் உறுதுணையாக,விசுவாசமாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார்
மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் தலைமை தாங்கி பேசும்போது, தமழக அரசு பல்வேறு அற்புதமான திட்டங்களை குறிப்பாக கறவை மாடுகள,ஆடுகள் வழங்கும் திட்டம், மருத்துவ காப்பீட்டு திட்டம், கர்ப்பிணி தாய்மார்களுக்கு மகப்பேறு நிதி உதவி வழங்கும் திட்டம், அம்மா திட்டம், அம்மா உணவகம், உணவுக்கு உத்திரவாதம் அளிக்கும் வகையில் விலையில்லா 20 கிலோ அரிசி வழங்கும் திட்டம் உள்ளிட்ட முத்தான திட்டங்களை வழங்கி வருகிறது.அதில் முத்தாய்பான திட்டன் தான் ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவி மற்றும் திருமாங்களியத்திற்கு 4 கிராம் தங்கம் வழங்கும் திட்டமாகும். எனவே, பொது மக்கள் இது போன்ற திட்டங்கள் மூலம் பயன் பெற வேண்டும் என கூறினார்.
மேயர் அ.விசாலாட்சி முன்னிலை வகித்து பேசும்போது, தமிழக முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்ற பின்னர் வாக்களித்த மக்களுக்கு வாக்குறுதி கொடுத்த திட்டங்களை கூர்ந்து கவனித்து, அந்த திட்டங்களை எங்களை போன்ற மக்கள் பிரதிநிதிகள் மூலம் வாங்கும் வகையில் வழி வகை செய்துள்ளார். திருப்பதி கோவிலுக்கு கூட தங்கம் தட்டுபாடு வந்ததாக பேசப்படுகிறது. ஆனால் சாதாரண ஏழைப்பெண்ணுக்கு தஹ்ங்கம் இல்லாமல் திருமணம் தடைபடகூடது என்கிற தொலை நோக்கு பார்வையுடன் திருமண நிதிஉதவியுடன் தாலிக்கு 4 கிராம் தங்கமும் ஜெயலலிதா வழங்குகிறார்..
எனவே, மக்கள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என பேசினார்.
இந்த விழாவில், மாவட்ட ஊராட்சி தலைவர் எம்.சண்முகம், துணைத் தலைவர் ஆனந்தகுமார், ஊராட்சி ஒன்றியகுழு தலைவர்கள் சிவச்சலம் (பொங்கலூர்) எம்.கே.ஆறுமுகம் (பல்லடம்), பத்மா நந்தினி (அவினாசி), ஊராட்சி மன்ற தலைவர்கள் கரைபுதூர் நடராஜ்,யு.எஸ்.பழனிசாமி .மாவட்ட கவுன்சிலர்கள் ப.நடராஜன்,பழனிசாமி, மாநகராட்சி மண்டல தலைவர்கள் ராதாகிருஷ்ணன் கிருத்திகா சோமசுந்தரம், பல்லடம் வைஸ் பழனிசாமி, அண்ணா தி.மு.க.நிர்வாகிகள் கே.என்.சு ப்பிரமணியம், எம்.மணி, மு.சுப்பிரமணியம், சேயூர் வேலுசாமி, ராமசாமி,ஜெக தீசன், பேரூராட்சி தலைவர் ஜெகதம்பாள், பூண்டி முன்னாள் தலைவர் லதாசேகர், கோகுல் ராஜ்குமார், அர்ஜுனன் மற்றும் தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மற்றும் உள்ளாட்சி மன்ற, கூட்டுறவு சங்க பிரதி நிதிகள், அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Nov 25, 2014
Nov 23, 2014
திருப்பூர் மாநகரில் சட்டம் ஒழுங்கு சிறப்புடன் உள்ளது என குறுஞ்செய்தி தகவல் மையம் துவக்க விழாவில் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார்
திருப்பூர் மாநகர காவல்துறை ஆணையாளர் அலுவலகத்தி ல்"பாதுகாப்பான திருப்பூர்' என்ற திட்டத்தின் கீழ் போலீசாருக்கு மக்கள் தகவல் தெரிவிப்பதற்கான இலவச எஸ்.எம்.எஸ். சேவை (குறுஞ்செய்தி தகவல் மையம்) திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க வெள்ளி விழா ஆண்டினை முன்னிட்டு அச்சங்கத்துடன் இணைந்து மக்கள் தகவல் தெரிவிப்பதற்கான குறுஞ்செய்தி தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் துவக்க விழா ஆணையாளர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் தலைமை தாங்கி பேசினார்.திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தலைவர் ஏ.சக்திவேல் முன்னிலை வகித்து பேசினார். மாநகர துணை ஆணையாளர் திருநாவுக்கரசு வரவேற்று பேசினார். குறுஞ்செய்தி அனுப்பும் தகவல் மையத்தை வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் உதுவக்கி வைத்து பேசியதாவது:-
ஒரு நாடு நல்லமுறையில் செயல்பட வேண்டும் என்றால் அந்த நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியாக இருக்க வேண்டும். அந்த வகையில் மிக பெரிய தொழில் நகரமாக பல்வேறு மாநில மக்கள் தொழில் செய்யும் நகரமாக விளங்கும் திருப்பூரில் சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு சவால் விடும் நகரமாக இருந்தது. ஆனால் திருப்பூரில் கடந்த 3 ஆண்டுகாலமாக இவை கட்டுபாட்டுக்குள் உள்ளது என்றால் மக்கள் முதல்வர் ஜெயலலிதா வழிகாட்டுதலின் பேரில் தமிழக காவல்துறைக்கு ஆக்கமும், ஊக்கமும் அளித்து அத்துறைக்கு பல்வேறு திட்டங்களை அளித்ததின் பயனாக இன்று இந்தியாவில் தமிழ்நாடு அமைதி பூங்காவாக உள்ளது.திருப்பூர் மாவட்ட காவல்துறை திருப்திகரமாக உள்ளது.திருப்பூர் காவல்துறைக்கு பல்வேறு சிறப்பு திட்டங்களை ஜெயலலிதா தார் உள்ளார். அந்த வகையில் திருப்பூர் மாநகர காவல் ஆணையகரத்திற்கு சொந்தமாக அலுவலகம் அமைய நான் உறுதுணையாக இருப்பேன். இவ்வாறு அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார்.
முன்னிலை வகித்த மாநகர காவல்துறை ஆணையாளர் எஸ்.என்.சே ஷசாய் பேசியதாவது:-
மக்களுக்கு ஏதேனும் சம்பவங்கள் நிகழ்ந்தால், 94876 61100, 94897 71100 ஆகிய கைப்பேசி எண்களுக்கு குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.)அனுப்பினால், காவல் கட்டுப்பாட்டு அறை மூலமாக சம்மந்தப்பட்ட காவல்துறை ஆய்வாளருக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்படும். இதன் மூலமாக காவல் துறையினர் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள முடியும். குறுஞ்செய்தி தகவல் மையத்திற்கு தகவல் தெரிவிப்போருக்கு உரிய பதிலும் குறுஞ்செய்தி மூலமாக அனுப்பி வைக்கப்படும். இது கட்டணமில்லா சேவையாகும். சென்னை மாநகருக்கு அடுத்தபடியாக திருப்பூரில் இச்சேவை ஏற்படுத்தப்பட்டுள்ளது. பிரச்னைகள் குறித்து முன்கூட்டியே தகவல் கிடைத்தால் அதை சமாளித்து தீர்வு காண முடியும். போக்குவரத்து நெருக்கடி, குடிபோதையில் தகராறு செய்வது, பொது இடத்தில் தொந்தரவு செய்வது, சாலை மறியல் உள்ளிட்ட சட்டம்-ஒழுங்கு பிரச்னைகளை கட்டுப்படுத்த இது உதவியாக இருக்கும்.பாதுகாப்பான திருப்பூராக மாற்றுவதற்காக, பல பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன
மேலும், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகள் தொடர்பாக மக்கள் குறுஞ்செய்தியில் தகவல் அனுப்பினால் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்குத் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும். குறுஞ்செய்தி தகவல் மையத்திற்கு அனைத்துத் தரப்பினரும் தகவல் அனுப்பலாம். அது உண்மையாக இருக்க வேண்டும். இச்சேவைப் பணி வெற்றியடைய அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். மாநகர காவல்துறைக்கு தற்போது 100 இளம் காவல்படையினர் உள்ளனர். மேலும் 250 இளம் காவல் படையினர் விரையில் வர உள்ளனர்.
கூடுதலாக, புதிய வாகனங்களும் விரைவில் மாநகர காவல்துறைக்கு வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
மேயர் அ.விசாலாட்சி பேசும்போது, இத்திட்டம் வெற்றிகரமாக செயல்பட 60 வார்டுகளில் ஒவ்வொரு வார்டுக்கும் முதலாவதாக தலா 5 அறிவிப்பு பலகைகள் மாநகராட்சி சார்பில் பேனர்கள் அமைக்கப்படும் என்று கூறினார்.
நிகழ்ச்சியில் துணை மேயர் சு.குணசேகரன், மண்டல தலைவர்கள் வி.ராதாகிருஷ்ணன், ஜெ.ஆர்.ஜான், தொழில் அதிபர்கள் ஈஸ்ட்மென் சந்திரன்,ராம்ராஜ் காட்டன் நாகராஜ், கே.எம்.சுப்பிமணியம், எஸ்பி.என்.பழனிச்சாமி, அட்லஸ் சி.லோகநாதன், உஷா ரவிகுமார், கிளாசிக் போலோ சிவராம், சக்தி பிலிம்ஸ் சுப்பிரமணியம், அண்ணா தி.மு.க.நிர்வாகிகள், பொதுமக்கள ஆகியோர் கலந்து கலந்து கொண்டனர்.
முடிவில் மாநகர காவல் துணை ஆணையர் சுந்தரமூர்த்தி நன்றி கூறினார்.
Nov 22, 2014
திருப்பூரில் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் துவக்கி வைத்த முதலமைச்சரின் சிறப்பு மருத்துவ முகாம்
மக்கள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் சென்னையில் உலக தரம் வாய்ந்த மருத்துவமனை உருவாக்கப்பட்டுள்ளது என அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் கூறியுள்ளளார்.
திருப்பூர் வடக்கு கணக்கம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் தமிழக அரசின் சுகாதார மேம்பாட்டு பணிகளை மேம்படுத்தும் வகையில், தமிழக முதலமைச்சரின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர்.ரகுபதி தலைமை தாங்கினார். ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ஆர்.சாமிநாதன் முன்னிலை உரையாற்றினார்.மாவட்ட ஊராட்சித்தலைவர் எம்.சண்முகம் வாழ்த்தி பேசினார்.முகாமில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் முகாமினை துவக்கி வைத்தும், பயனாளிகளுக்கு மருத்துவ கருவிகளை வழங்கியும் பேசியதாவது:-
தமிழக அரசின் சார்பில், தமிழக முதல்வரின் சிறப்பு மருத்துவ முகாம் திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 13 வட்டாரங்களில், வட்டாரத்திற்கு 3 முகாம்கள் வீதம் மொத்தம் 39 மருத்துவ முகாம்கள் ஊரக பகுதிகளில் நடைபெற உள்ளன. முதற்கட்டமாக திருப்பூர் ஊராட்சி ஒன்றியம் கணக்கம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பெருமாநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
தமிழக அரசு அம்மா அவர்களின் வழிகாட்டுதலின்படி, இந்த சிறப்பு முகாம் சிறப்பாக நடைபெறுகிறது,மக்கள் நோய் நொடியின்றி சுகாதாரமாக வாழ வேண்டும் என்ற அடிப்படையில் மக்கள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவ துறைக்காக பல கோடி ரூபாய் நிதிகளை ஒதுக்கி இது போன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். ஜெயலலிதா ஆட்சி பொறுப்பேற்ற உடன் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.4 லட்சம் மதிப்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் வண்ணம் மருத்துவ காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.12 ஆயிரம் நிதி வழங்கப்படுகிறது. கிராமப்புறத்தில் மருத்துவர்களே வந்து முகாமிட்டு கிராம பெண்கள் மற்றும் மக்கள் சிகிச்சை அளிக்கும் முகாம்கள் திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் 30 க்கும் மேல் நடைபெற்று வருகிறது.
இது போன்ற சிறப்பான திட்டங்களை மக்கள் முதல்வர் ஜெயலலிதா உருவாக்கி தந்திருக்கிறார். தமிழ்நாட்டில் ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் தான் உலக தரத்தில் சென்னையில் ஒரு மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துவமனையை அவர் உருவாக்கி தந்துள்ளார்.
நீங்கள் சுகாதாரமாக வாழ வேண்டும், என்பதற்காக தான் ஜெயலலிதா வழிகாட்டுதல்படியான திட்டங்களை தமிழக அரசு செய்து வருகிறது.
இது போன்ற சிறப்பான திட்டங்களை மக்கள் முதல்வர் ஜெயலலிதா உருவாக்கி தந்திருக்கிறார். தமிழ்நாட்டில் ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் தான் உலக தரத்தில் சென்னையில் ஒரு மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துவமனையை அவர் உருவாக்கி தந்துள்ளார்.
நீங்கள் சுகாதாரமாக வாழ வேண்டும், என்பதற்காக தான் ஜெயலலிதா வழிகாட்டுதல்படியான திட்டங்களை தமிழக அரசு செய்து வருகிறது.
எனவே மக்கள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு என்றும் நீங்கள் விசுவாசமாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார்.
இந்த முகாமில் டெங்கு விழிப்புணர்வு கண்காட்சி, சத்துணவு மற்றும் உடல் நலம் பேண கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்த கண்காட்சியை மருத்துவ துறையினர் அமைத்து இருந்தனர். முகாமில் பொது மருத்துவம், குழந்தைகள், பெண்கள் மருத்துவம், இருதய நோய் பரிசோதனை, எலும்பு மூட்டு,, பல், சர்க்கரை நோய் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டு மருந்துகள் வழங்கப்பட்டது.
இந்த முகாமில் டெங்கு விழிப்புணர்வு கண்காட்சி, சத்துணவு மற்றும் உடல் நலம் பேண கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்த கண்காட்சியை மருத்துவ துறையினர் அமைத்து இருந்தனர். முகாமில் பொது மருத்துவம், குழந்தைகள், பெண்கள் மருத்துவம், இருதய நோய் பரிசோதனை, எலும்பு மூட்டு,, பல், சர்க்கரை நோய் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டு மருந்துகள் வழங்கப்பட்டது.
இம்முகாமில் 214 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா கண் கண்ணாடிகளை மாண்புமிகு வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் வழங்கினார்
மேலும் இந்த சிறப்பு மருத்துவ முகாமில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பொது மருத்துவம், குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவம், பெண்களுக்கான மகப்பேறு மருத்துவம், இருதய நோய் சிகிச்கை, காது மூக்கு சிறப்பு சிகிச்சை, எலும்பு சம்பந்தப்பட்ட சிறப்பு மருத்துவம், பல்,மற்றும் சர்க்கரை நோய் மருத்துவம், கண், தோல் நோய் சிறப்பு மருத்துவம், சித்த மருத்துவம், ஆகிய மருத்துவ சேவைகள் செய்யப்படுகின்றன. மேலும், நாற்பது வயதிற்கு மேற்பட்ட ஆண், பெண்இருபாலருக்கும் இரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை, இரத்த அழுத்த பரிசோதனை, ஸ்கேன் பரிசோதனை நுஊபு பரிசோதனை, கண் பரிசோதனை ஆகிய பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் கே.என். விஜயகுமார், மாவட்ட கவுன்சிலர் எஸ்.எம்.பழனிசாமி, அரசு வழக்கறிஞர் கே.என்.சுப்பிரமணியம், இணைஇயக்குநர் கேசவன், ஊராட்சி மன்ற தலைவர்கள் பொன்னுலிங்கம் (காளிபாளையம்), ஸ்ரீதேவி பழனிசாமி (வள்ளிபுரம்), செல்வகுமார் (ஈட்டிவீரம்பாளையம்), மூர்த்தி (பொங்குபாளையம்), லட்சுமி (கணக்கம்பாளையம்), மண்டல தலைவர்கள் வி.ராதாகிருஷ்ணன், ஜெ.ஆர்.ஜான், ஒன்றியகுழு உறுப்பினர்கள் கிருத்திகா ரத்தினசாமி, சித்ரா பெரியசாமி, சித்ரா சௌந்தராஜன், மாவட்ட அண்ணா தி.மு.க.நிர்வாகிகள் எம்.மணி, புத்தரச்சல் பாபு, ராஜேஷ்கண்ணா, கோகுல், கவுன்சிலர் சண்முக சுந்தரம் மற்றும் உள்ளாட்சி மன்ற, கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருப்பூர் மாநகராட்சி கூட்டத்தில் ரூ.45 கோடிக்கு நடைபெறும் சாலை மற்றும் குடிநீர் வளர்ச்சி பணிகளுக்கும், முல்லை பெரியாறு அணை நீர் மட்டம் 142 அடியை தொட்டதற்கும் ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
திருப்பூர் மாநகராட்சியின் சாதாரண மற்றும் அவசரக்கூட்டம் மேயர் அ.விசாலாட்சி தலைமையில் ஆணையாளர் எம்.அசோகன், துணை மேயர் சு.குணசேகரன் ஆகியோர் முன்னிலையில் மாமன்ற கூட்ட அரங்கில் நடைபெற்றது.கூட்டத்தில் வி.ராதாகிருஷ்ணன், ஜெ.ஆர்.ஜான், கிருத்திகா சோமசுந்தரம் உள்ளிட்ட மண்டல தலைவர்கள், பூலுவபட்டி பாலு, வசந்தமணி,அன்பகம் திருப்பதி, பிரியா சக்திவேல் உள்ளிட்ட நிலைக்குழு தலைவர்கள், மாநகர பொறியாளர் ரவி மற்றும் உதவி பொறியாளர்கள், சபியுல்லா, வாசுகுமார், கண்ணன் உள்ளிட்ட உதவி ஆணையாளர்கள் மாமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக மேயர் அ.விசாலாட்சி கொண்டு வந்த சிறப்பு கவனதீர்மானத்தை கொண்டு வந்து அவர் பேசியதாவது:-
முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டம் 141 அடிக்கு மேல் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டது.அது 142 அடியை எட்டியுள்ளது.இதன் மூலம் அணை குறித்த அத்தனை கேடு மதியாளர்களின் புளுகு மூட்டைகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது.எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதில் எந்த விதமான அணுகு முறையைக் கடை பிடித்தல், அதன் மூலம் தமிலனாத்டிர்க்கும், தமிழ் நாட்டு மக்களுக்கும், நன்மை ஏற்படும் என்பதாஹிப் புரிந்து, முல்லைப் பெரியாறு பிரச்சனையில், தமிழ்நாட்டு விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் வகையில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துத் தமிழ்நாட்டு மக்களுக்கு சாதகமான தீர்ப்பைப் பெற்றுத் தந்த வடகிழக்குப் பருவமழையினும் விஞ்சிய கருணை மழைமக்கள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு இம்மன்றம் நன்றியோடு, போற்றி புகழ்ந்து வணங்கி அவர் மீண்டும் தமிழக முதல்வராக வேண்டும் என இம்மன்றம் இறைவனிடம் வணங்கி மகிழ்கிறது.இவ்வாறு மேயர் விசாலாட்சி பேசினார்.
கூட்டத்தில் மாநகராட்சிக்கு உள்பட்ட தென்னம்பாளையம், ஊத்துக்குளி சாலை, 15 வேலம்பாளையம் ஆகிய பகுதிகளில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள
கூட்டத்தில் மாநகராட்சிக்கு உள்பட்ட தென்னம்பாளையம், ஊத்துக்குளி சாலை, 15 வேலம்பாளையம் ஆகிய பகுதிகளில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள
மூன்று இடங்களில் குடியிருப்பு மனைப்பிரிவுகளுக்கு அங்கீகாரம் அளிப்பது உட்பட 216 தீர்மானங்கள் மன்ற உறுபினர்களின்ஒப்புதலுக்கு முன்வைக்கப்பட்டன.முறையாக ஆய்வு மேற்கொள்ளாததால், மனைப்பிரிவுகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் தீர்மானங்களை ஒத்திவைக்க வேண்டுமென மண்டல தலைவர்கள் வலியுறுத்தி பேசினார்.நகரில் உள்ள டியூப்லைட்டுகளை, எல்.இ.டி., விளக்குகளாக மாற்றுவது, ரோடு வசதி, மழைநீர் வடிகால் வசதி, புதிய போர்வெல் அமைப்பது, அம்மா உணவகம், புதிய உபகரணங்கள் கொள்முதல் செய்வது உள்ளிட்ட தீர்மானங்கள் மீது மன்ற உறுப்பினர்கள் பேசினார்.
12வது வார்டு உறுப்பினர் ரவிச்சந்திரன் (இ.கம்யூனிஸ்ட்) ஜெயலலிதா படத்தை மன்ற தில் மற்ற கூடாது என பேசியதற்கு மேயர் விசாலாட்சி பதிலளித்து பேசியதாவது:-
முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டம் 141 அடிக்கு மேல் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டது.அது 142 அடியை எட்டியுள்ளது.இதன் மூலம் அணை குறித்த அத்தனை கேடு மதியலர்களின் புளுகு மூட்டைகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது.எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதில் எந்த விதமான அணுகு முறையைக் கடை பிடித்தல், அதன் மூலம் தமிலனாத்டிர்க்கும், தமிழ் நாட்டு மக்களுக்கும், நன்மை ஏற்படும் என்பதாஹிப் புரிந்து, முல்லைப் பெரியாறு பிரச்சனையில், தமிழ்நாட்டு விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் வகையில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துத் தமிழ்நாட்டு மக்களுக்கு சாதகமான தீர்ப்பைப் பெற்றுத் தந்த வடகிழக்குப் பருவமழையினும் விஞ்சிய கருணை மழைமக்கள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு இம்மன்றம் நன்றியோடு, போற்றி புகழ்ந்து வணங்கி அவர் மீண்டும் தமிழக முதல்வராக வேண்டும்.
இவ்வாறு மேயர் விசாலாட்சி பேசினார்.
தேசத் தந்தை காந்தியடிகள் ஒரு கவுன்சிலராக இல்லாத நிலையில் ஒரு அரசு அதிகாரிகள் கிறிஸ்துவராக இருந்தால் ஏசு, மாதா படங்களையும், இஸ்லாமியர்களாக இருந்தால் மெக்கா படத்தையும், இந்துக்களாக இருந்தால் விநாயகர், முருகன் உள்ளிட்ட அவரகளின் இஷ்ட தெய்வங்களின் படங்களைஅவர் இந்திய தேசதின் விடுதலைக்காக அமைதியுடனும், அறப்போரட்டங்கள் நடத்தியும் சுதந்திரம் பெற்று தந்தார்.அவருடைய படத்தை இந்திய அரசாங்கம் ரூபாய் நோட்டில் அச்சடித்துள்ளன ஒரு வியாபார நிறுவன உரிமையாளராக இருந்தாலும்,அதிகாரியானாலும், ச ாதாரண தொழிலாளியாக இருந்தாலும் அவரவர ்களின் வீடுகளில், அலுவலகத்தில் அவரவர்கள் வழிபாடும் தெய்வங்களின் படங்களை வைத்திருப்பார்கள். மாமன்றத்தில் அசுர பலத்துடன் உள்ள நாங்கள் (அண்ணா தி.மு.க) இந்திய தேசத்தின் தந்தை காந்தியடிகள் என்றால், தமிழக மக்களின் தாயாக இருந்து காத்துவரும் எங்களின் இஷ்ட தெய்வமான ஜெயலலிதா படத்தை வைத்துள்ளோம் என்று பதிலளித்து அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
முருகசாமி, செல்வம், ரங்கசாமி, வசந்தாமணி, செல்வி (அண்ணா தி.மு.க.):-
கடந்த 6 மாதத்திற்கு முன்பே 2வது குடிநீர் திட்டத்தில் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என அமைச்சர், மேயர் ஆகியார் கூறியும், இன்னும் செயல்படுத்தப்படாமல் உள்ளது. குடிப்பதற்கு ஏதுவாக இல்லாத 3வது குடிநீர் திட்டத்தின் வாயிலாக விநியோகம் செய்யப்படும் தண்ணீரை குடிப்பதால் காய்ச்சல் உள்ளிட்ட நோய் பாதிப்புகள் ஏற்படுதாக மக்கள் நினைக்கிறார்கள். 2வது குடிநீர் திட்ட தண்ணீரை வழங்குவதில் ஏதாவது இடையூறு உள்ளதா என்பதை தெரியப்படுத்த வேண்டும்.2வது குடிநீர் திட்ட தண்ணீர் தெற்கு பகுதிக்கு விநியோகம் செய்து 2 மாதத்திற்கு மேல் ஆகிறது. எனவே, குடித்தநீரை முறையாக விநியோகிக்க மேயர், ஆணையாளர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மக்களின் அடிப்படை வசதிகளை செய்து தர மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசினார்.
மாரப்பன் (மா.கம்யூ.,):- எனது வார்டு பகுதியில் கடந்த மாதத்தில் பெய்த மழையால் சாலைகள் பழுதடைந்து குண்டும், குழியுமாக மாறிவிட்டது. மழைநீர் தேங்கி நிற்கிறது. வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். தெருவிளக்குகள் எரிவதில்லை. அடிப்படை பிரச்னைகளை உடனடியாக சரி செய்ய வேண்டும்.இவ்வாறு விவாதங்கள் நடந்தது.கூட்டத்தின் முடிவில் மாநகராட்சி பகுதிகளில் சாலை மற்றும் குடிநீர் வசதிகளை மேம்படுத்த ரூ.45 கோடி வளர்ச்சி பணிகளுக்கு மன்றம் ஒப்புதல் வழங்கியது.
Nov 21, 2014
மதுரை மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை :ஸ்டாலின் புகாருக்கு மேயர் ராஜன் செல்லப்பா பதிலடி
மதுரையில் நடைபெற்ற திமுக பிரமுகர் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய திமுக பொருளாளர் முக ஸ்டாலின் ,தானும்,குழந்தைவேலுவும் மேயராக இருந்தபோது அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளில் நடைபெற்ற மேயர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசி இருக்கிறோம். அப்போது தி.மு.க.வின் எண்ணங்கள், கலைஞரின் கொள்கைகள் பற்றி பேசவாய்ப்பு கிடைத்தது.
சென்னை மேயராக இருந்தபோது, தான் செய்த சாதனைகள், திட்டங்கள், நிறைவேற்றப்பட்ட பணிகள் பற்றியெல்லாம் எடுத்து கூறினார்கள். குழந்தைவேலு மேயராக இருந்தபோது, மதுரையில் சுற்றுவட்டச்சாலை, மேம்பாலங்கள், பாதாள சாக்கடை இதுபோன்ற பல்வேறு திட்டங்கள் அவர் காலத்தில் நிறைவேற்றப்பட்டன.இப்போது நடைபெறும் ஆட்சியில், இதுபோன்ற பொதுப்பணிகள் நடைபெற்று இருக்கிறதா? என்பதை நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். என கேள்வி எழுப்பினார் .இதற்கு பதில் அளிக்கிற வகையில் செய்தியாளர்களை சந்தித்த மதுரை மேயர் ராஜன் செல்லப்பா ,திமுக கடந்த 15 ஆண்டு காலம் மாநகராட்சியில் பதவி வகித்தும் ஒரு நன்மை கூட மதுரை மக்களுக்கு செய்யவில்லை ,இப்போது அதிமுக அரசின் மீது தவறான புகார் கூறுகின்ற முக ஸ்டாலின் துணை முதல்வராக இருந்த போதும் அவரது அண்ணன் மத்திய அமைச்சராக இருந்த போது மதுரைக்கு செய்தது என்ன என்று கேள்வி எழுப்பினார்.அப்போது நிறைவேற்றப்படமடாமல் அரை குறையாய் விடப்பட்ட மேம்பால திட்டங்களை நிறைவேற்றியது அதிமுக ஆட்சி தான்.அவர்கள் 600 கோடியில் திட்டங்களை நிறைவேற்றியதாக சொல்வதெல்லாம் உண்மைக்கு மாறானது .அந்த திட்டத்திற்கு மாநகராட்சி நிதியை பயன்படுத்தாத காரணத்தால் தான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 250 கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கி தந்ததாக குறிப்பிட்டார் .மேலும் மழையால் சேதமடைந்துள்ள சாலைகள் விரைவில் சீரமைக்கபப்டும் .விதிமுறை மீறிய கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்கபப்ட்டு வருகிறது .கிருதுமால் நதி வாய்க்கால் தோண்டுகிற பணிகள் நடைபெற்று வருவதாக கூறினார் .பேட்டியின் போது துணை மேயர் திரவியம் ,எம் எல் ஏ க்கள் சுந்தர்ராஜன் ,முத்துராமலிங்கம் ,மண்டல தலைவர் சாலைமுத்து,சுகந்தி அசோக் ,வழக்கறிஞர் ரமேஷ் ,நிலையூர் முருகன் ஆகியோர் உடன் இருந்தனர்
இந்தியாவிலேயே கூட்டுறவுத்துறைக்கு தமிழகம் வழிகாட்டியாக திகழ்கிறது: செல்லூர் ராஜூ பேச்சு
மதுரை மாவட்ட 61வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா தமுக்கம் கலையரங்கில் நடந்தது. மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரைப்பாண்டியன் வரவேற்றுப்பேசினார். மேயர் ராஜன்செல்லப்பா, கோபாலகிருஷ்ணன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.போஸ், தமிழரசன், சாமி, கருப்பையா, கதிரவன், சுந்தரராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 1,019 பயனாளிகளுக்கு ரூ.4.82 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது:–
இந்தியாவில் கூட்டுறவு சங்கங்கள் தொடங்கப்பட்டு 110 ஆண்டுகள் ஆகிறது. இந்த சங்கத்தில் யார் வேண்டுமானாலும் உறுப்பினர் ஆகலாம். அவர்களுக்கும் அந்த சங்கத்தில் பங்கு தொகை உண்டு. நிர்வாகிகளாகவும் வரலாம்.
கடந்த தி.மு.க. ஆட்சியில் 392 சங்கங்கள் நஷ்டத்தில் இருந்தன. அம்மாவின் ஆலோசனையின் பேரில் வேண்டிய உதவிகளை செய்து, அவை இப்போது ஒரு கோடிக்கு மேல் வருமானம் தரும் சங்கங்களாக உயர்த்தப்பட்டுள்ளன.
மதுரை மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் கூட்டுறவுத்துறை மூலம் 56 ஆயிரத்து 43 விவசாயிகளுக்கு பயிர் கடனாக சுமார் ரூ.305.52 கோடி வழங்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலம் வறட்சி நிவாரணமாக 64 ஆயிரத்து 216 விவசாயிகளுக்கு, அரசு ரூ.23.29 கோடி வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் பயிர் கடன் வட்டி இல்லாமல் வழங்கப்படுகிறது. பிரதமர் மோடி ஆட்சி செய்த குஜராத் மாநிலத்தில் கூட 7 சதவீத வட்டியுடன் கூடுதல் கடன் வழங்கப்படுகிறது. இந்தியாவிலேயே தமிழகம் கூட்டுறவு துறைக்கு வழி காட்டியாக திகழ்ந்து வருகிறது.
இதுதவிர கூட்டுறவு வங்கி மூலம் பால்மாடு வாங்க, ஆடு வளர்ப்பு, விவசாய உபகரணங்கள், கடன், மகளிர் சுயஉதவிக்குழு கடன், வீடு கட்ட மற்றும் வீட்டு அடமான கடன்களை வழங்குகிறது. மேலும் மதுரை மாவட்டத்திலுள்ள அனைத்து கூட்டுறவு வங்கிகளும் முற்றிலும் கணினிமயமாக்கப்பட்டுள்ளன. கூட்டுறவு வங்கிகள், சங்கங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இதையொல்லாம் விட 37 ஆண்டுகளாக வரலாற்று சாதனையாக பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியாக இன்று உயர்ந்துள்ளது. இதன் மூலம் 5 மாவட்ட விவசாயிகள், பொதுமக்கள் வாழ்வில் ஒளியேற்றிய மக்கள் முதல்வர் அம்மாவை தினமும் வணங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அளவில் சிறந்து விளங்கிய பாண்டியன் கூட்டுறவு சிறப்பங்காடி உள்ளிட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு பாராட்டு கேடயங்கள், பரிசுகளை அமைச்சர் செல்லூர் ராஜு வழங்கினார்.
கூட்டுறவு வங்கி மண்டல இணைப்பதிவாளர் பழனிவேலு, கூட்டுறவு இணைப்பதிவாளர் தனலட்சுமி, ஆவின் தலைவர் தங்கம், பாண்டியன் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் ராஜா, மண்டல தலைவர் சாலைமுத்து, ஜெயவேல், ராஜபாண்டியன், பகுதி செயலாளர்கள் ஜெயபால், மாரிச்சாமி, பிரிட்டோ, புதூர் அபுதாகீர், முருகன், நிர்வாகிகள் வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன், அன்புசெழியன், ஐ.பி.எஸ்.பாலமுருகன், ஏ.கே.பி.சிவசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் முருகேசன் நன்றி கூறினார்
Nov 20, 2014
Nov 17, 2014
மக்களின் முதலவர் மாண்புமிகு அம்மா அவர்கள் மீண்டும் தமிழக முதல்வராக வர வேண்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன
மக்களின்
முதலவர் மாண்புமிகு அம்மா அவர்கள் மீண்டும் தமிழக முதல்வராக வர வேண்டி
மதுரை இன்மையில் நன்மை தருவார் கோவிலில் மாநகர் மாவட்ட
அதிமுக சார்பில் காலை 7.45 மணி முதல் 12.30 மணி வரை மகா யாகம் நடைபெற்றது
.ஜெயதுர்கை அம்மனுக்கு 108 சுமங்கலிகள் கலந்து கொள்ளும் பூஜை நடைபெற்றது
.108 கோ பூஜை ,ஸ்ரீ கஜ பூஜை ,ஸ்ரீ அச்வ (குதிரை) பூஜை மற்றும் 108
சிவசாரியர்கள் பங்கேற்று 9 லட்சம் ஆவர்த்தி ஜவம்,9 ஆயிரம் ஆவர்த்தி ஹோமம்
மற்றும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன .இந் நிகழ்ச்சியில் அமைச்சர் செல்லூர்
ராஜு மற்றும் அமைச்சரின் துணைவியார் ஜெயந்தி செல்லூர் ராஜு உள்ளிட்ட
ஏராளமான கழக தொண்டர்கள் பங்கேற்றனர் ..
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வாரவிழாவில் ரூ.3.52 கோடிக்கு நலத்திட்டங்களை அமைச்சர் ஆனந்தன் வழங்கினர்
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப்புள்ள அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், மீயர் விசாலாட்சி ஆகியோர் வழங்கினார்.
திருப்பூர் மாவட்ட கூட்டுறவுத்துறையின் சார்பில், 61-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா பல்லடம் ரோடு,லட்சுமி திருமண மண்டப கலையரங்கில் நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் என்.கிருஷ்ணராஜ் கூட்டுறவு கொடியை ஏற்றி வைத்தார். கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ஆர்.ஏ.சக்திவேல் வரவேற்று பேசினார். திருப்பூர் கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் சா.பாபு திட்ட விளக்க உரை ஆற்றினார். விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசியதாவது:-
கூட்டுறவே நாட்டுயர்வு என்ற அடிப்படையில், மூன்றரை ஆண்டுகளுக்கு முன் ஆட்சிப்பொறுப்பேற்ற ஜெயலலிதா தமிழக மக்களுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். இன்றைக்கு அந்த திட்டங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. நிதிப்பற்றாக்குறை இருந்தாலும் திட்டங்கள் தொடர்கின்றன. இன்றைக்கு தமிழகத்தில் அனைத்து கூட்டுறவு சங்கங்களுக்கும் தேர்தல் நடத்தில் அதற்கு தலைவர், இயக்குனர்களை நியமித்து சங்கங்களின் செயல்பாடுகளை அதிகரித்துள்ளார்.விவசாயத்துக் கான அனைத்து முன்னேற்ற நடவடிக்கைகளையும் கூட்டுறவு சங்கங்கள் செயல்படுத்துகிறது.
கடந்த ஆண்டில் ரூ.4 கோடிக்கும் அதிகமாக பருத்தியும் 2 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இதர விளை பொருட்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இப்படி பல்வேறு கடனுதவிகள் செயல்பட்டு கொண்டிருக்க காரணம் இந்த துறையை சிறப்பாக மேம்படுத்தி செயல்படுத்தி கொண்டிருக்கிறதென்றால் அதற்கு காரணம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். இன்று ஒரு நாள் மட்டும் 591 பயனாளிகளுக்கு 3.53 கோடி ரூபாய் மதிப்பில் கடன் வழங்கப்பட்டுள்ளது.கூட்டுறவு சங்கங்கள் மூலமாக கூட்டுறவு காய்கறி அங்காடிகள் செயல்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக அம்மா மருந்தகங்கள் செயல்பட்டு வருகின்றன. திருப்பூர் மாவட்டத்தில் 5 அம்மா காய்கறி அங்காடிகள் துவக்க ஜெயலலிதா அனுமதி அளித்துள்ளார்.வறட்சியால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. சுய உதவிக் குழுக்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் பயன்பெற்று கொண்டிருக்கின்றன.திருப்பூர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கின்றன. இந்த விழாவில் வட்டியில்லா கடனாக மாற்றுத் திறனாளிகள் 343 பேருக்கு ரூ. 2 கோடி வழங்கப்பட்டுள்ளது. நலிவுற்ற சங்கங்களுக்கு நிதியுதவி அளிக்கப்படுகிறது.183 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் மூலமாக 2,015 உறுப்பினர்களுக்கு பயிர்க்கடனாக ரூ. 135.85 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. 125 சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு ரூ. 6.80 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. மத்திய காலக் கடனாக 259 பேருக்கு ரூ. 22.87 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.கடந்த ஆண்டில் ரூ. 4 கோடி மதிப்புக்கு பருத்தியும் ரூ. 2 கோடி மதிப்புக்கு இதர விளை பொருள்களும் கூட்டுறவு சங்கங்களால் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இவ்விழாவில் மட்டும் 591 பயனாளிகளுக்கு ரூ. 3.53 கோடி மதிப்பில் கடன் வழங்கப்பட்டுள்ளது
இவ்வாறு அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார்.
கூட்டுறவு சங்கங்கள் மூலம் விலையில்லாமல் 20 கிலோ அரிசி, கூட்டுறவு காய்கறி அங்காடிகள் செயல்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் அம்மா மருந்தகங்கள் செயல்பட்டு வருகின்றன. வறட்சியால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே இந்த திட்டத்தை ஜெயலலிதா ஒருவர்தான் சிறப்பாக செயல்படுத்தி உள்ளார்.இன்றைக்கு தமிழகத்தில் உள்ள சுய உதவி குழுக்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் பயன்பெற்று கொண்டிருக்கின்றன.
இன்றைக்கு திருப்பூர் மாவட்டத்தில் 183 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளும்,3 நகர கூட்டுறவு வங்கிகளும் உள்பட மொத்தம் 226 கூட்டுறவு சங்கங்கள் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. இதற்கு முழு காரணம் மக்கள் முதல்வர் ஜெயலலிதாதான்.
இன்றைக்கு வட்டியில்லா கடனாக மாற்றுத்திரனாளிகள் 343 பேருக்கு 2 கோடி ரூபாய்க்கு மேலாக வழங்கப்பட்டுள்ளது. நலிவுற்ற சங்கங்களுக்கு நிதியுதவி அளிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. பாதுகாப்பு வசதிக்காக 5 சங்கங்களில் பாதுகாப்பு பெட்டகம் அமைக்கப்பட்டுள்ளது.
நமது மாவட்டத்தில், 183 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் மூலமாக 2015 உறுப்பினர்களுக்கு பயிர்க்கடனாக 135.85 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. 125 சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு 6.80 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. மத்திய காலக்கடனாக 259 பேருக்கு 22.87 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
திருப்பூர் கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் தலைமையுரையில், பொதுவாக கூட்டுறவு சங்கம் என்றால் ரேசன் கடை என்று மட்டும் தான் நினைத்திருந்தார்கள்.தற்போதைய அரசு சங்கங்களுக்கு நிறைய நிதி அளித்துள்ளது.திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் இந்த ஆண்டில் 240 சங்கங்களுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் கணினி மயமாக்கப்பட்டுள்ளது.மாவட்டத்தி ல் 20018 நபர்களுக்கு பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. நகர கூட்டுறவு வங்கி மூலம் பல்வேறு கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.
திருப்பூர் மேயர் அ.விசாலாட்சி முன்னிலையுரையில் உலகம் இன்று தொழில்நுட்பத்தில் வளர்ந்து விட்டது.கூட்டுறவு துறையின் இது போன்ற விழாக்கள் மூலம், நமது ஒற்றுமை,மரபு, மாண்புகள் காப்பாற்றப்படுகின்றன.தனிமரம் என்றைக்கும் தோப்பாகாது; கூடி செய்தால் தான் எதையும் செய்ய முடியும். மக்கள் முதல்வர் ஜெயலலிதா கூட்டுறவாக செயல்பட வேண்டும் என்று தான் கூறி இருக்கிறார். கூட்டுறவு உலகத்தின் வளர்ச்சிக்கு அச்சாணி. எனவே, ஜெயலலிதாவிற்கு நீங்கள் என்றென்றும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று பேசினார்.
விழாவில் அரசு கேபிள் டி.வி.நிறுவனத்தலைவர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், பொள்ளாச்சி எம்.,பி.சி.மகேந்திரன், எம்.எல்.ஏ.,க்கள் மடத்துக்குளம் சி.சண்முகவேலு, காங்கயம் என்.எஸ்.என்.நடராசன், பல்லடம் பரமசிவம், தாராபுரம் பொன்னுசாமி,அவினாசி கருப்பசாமி, மாவட்ட ஊராட்சி தலைவர் எம்.சண்முகம் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
மேலும் பொங்கலூர் ஒன்றிய பெருந்தலைவர் சிவச்சலம், ஊராட்சி தலைவர்கள் கரைபுதூர் நடராஜன், யு.எஸ்.பழனிசாமி மாநகராட்சி மண்டல தலைவர்கள் ஜான், ராதாகிருஷ்ணன், கிருத்திகா சோமசுந்தரம், கவுன்சிலர்கள் கே.பி.சண்முகம், கூட்டுறவு சங்க தலைவர்கள் கருணாகரன், மார்க்கெட் சக்திவேல், சித்துராஜ், ராமமூர்த்தி, ஈஸ்வரமூர்த்தி,கோகுல், துத்தேரிபாளையம் நாகராஜ், எஸ்.எஸ்.மணியன் மற்றும் கருவம்பாளையம் மணி, ருக்மணி, அரசு வழக்கறிஞர் கே.என்.சுப்பிரமணியம், வளர்மதி சாகுல் ஹமீது, தாமோதரன், நீதிராஜன்,ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக 61வது கூட்டுறவு வார விழாவினை யொட்டி திருப்பூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் சா.பாபு, மண்டல அலுவலகத்தில் கூட்டுறவு கொடியினை ஏற்றி வைத்தும், அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் கூட்டுறவு விற்பனை சங்கங்களின் மேலாண்மை இயக்குனர் மற்றும் துணை பதிவாளர் ரவீந்திரன், துணை பதிவாளர்கள் கிருஷ்ணமூர்த்தி (திருப்பூர் சரகம்), சண்முகவேலு (பொது விநியோக திட்டம்), கூட்டுறவு சார் பதிவாளர் ((பொது விநியோக திட்டம்) ஜெயராமன், அலுவலர்கள் ராமகிருஷ்ணன், பிரைம் நாத், கேசவன் (கோவை கூட்டுறவு ஒன்றியம்) மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் முதல்வர் ஜெயலலிதா வழிகாட்டுதலின் பேரில் திருப்பூர் வடக்கு தொகுதி மேற்குப்பதி அசோகபுரத்தில்
வடக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 2 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிறுத்த நிழற்குடையை வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ஆர்.சாமிநாதன், வடக்கு ஒன்றிய செயலாளர் கே.என்.விஜயகுமார், தொகுதி செயலாளர் ஜெ.ஆர்.ஜான், வி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள், ஊராட்சி செயலாளர் வடிவேல், கூட்டுறவு சங்க தலைவர்கள் வெ.அய்யாசாமி, ஜெகநாதன் உளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.