Feb 25, 2015

ஜெயலலிதா பிறந்தநாள்: மதுரை மாநகராட்சியில் 67 அடி நீள கேக் வெட்டி கொண்டாட்ட

ஜெயலலிதா பிறந்தநாள்: மதுரை மாநகராட்சியில் 67 அடி நீள கேக் வெட்டி கொண்டாட்டம்
ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி மதுரை மாநகராட்சியில் மேயர் ராஜன்செல்லப்பா தலைமையில் அமைச்சர் செல்லூர் ராஜூ 67 அடி நீள கேக்கை வெட்டினார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் 67–வது பிறந்தநாள் விழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. மதுரை மாநகராட்சியில் சிறப்பு கவுன்சில் குழு கூட்டமும் நடைபெற்றது. கூட்டம் தொடங்குவதற்கு முன்பு கூட்ட மன்ற அரங்கின்வெளியே 67 அடி நீளமுள்ள பிரமாண்ட கேக் வைக்கப்பட்டது. அதனை மேயர் ராஜன்செல்லப்பா தலைமையில் அமைச்சர் செல்லூர் ராஜூ வெட்டினார்.
அப்போது அ.தி.மு.க. நிர்வாகிகளும், கவுன்சிலர்களும் அம்மா வாழ்க என்று கோஷமிட்டனர். தொடர்ந்து மேயர் ராஜன் செல்லப்பா தலைமையில் கவுன்சில் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக அமைச்சர் செல்லூர் ராஜூ, கோபாலகிருஷ்ணன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.போஸ், சுந்தர்ராஜ், முத்துராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் துணை மேயர் திரவியம் உறுதிமொழி வாசித்ததும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை பாராட்டி மேயர் ராஜன்செல்லப்பா தீர்மானங்களை வாசித்தார்.
அப்போது அமைச்சர் செல்லூர் ராஜூ மற்றும் கவுன்சிலர்கள் மேஜையை தட்டி மகிழ்ச்சி தெரிவித்தனர். கமிஷனர் கதிரவன், மண்டலத் தலைவர்கள் சாலைமுத்து, ராஜபாண்டியன், சண்முகவள்ளி, நிலைக்குழு தலைவர்கள் முத்துக்கருப்பன், சுகந்தி அசோக், முனியாண்டி, கவுன்சிலர்கள் முருகேசன், ராஜீவ்காந்தி, கேசவ பாண்டியம்மாள், அனுராதா, கார்னர் பாஸ்கரன் உள்பட அனைவரும் பங்கேற்றனர்.
மதுரை மாநகராட்சி எல்கையில் உள்ள ஆஸ்பத்திரிகளில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் கட்டணமில்லா பிறப்பு சான்றிதழ் வழங்குவது, இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் அம்மா இளைஞர் மேம்பாட்டு மையம் தொடங்கி அதன் மூலம் உயர்கல்வி மேம்பாட்டு பிரிவு, விளையாட்டு மேம்பாட்டு பிரிவு, கலை மேம்பாட்டு பிரிவு போன்றவற்றை அரசு மானியத்துடன் ஒவ்வொரு மண்டலத்திலும் செயல்படுத்துவது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

ஜெயலலிதா பிறந்தநாள்: அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் சர்வ சமய பிரார்த்தனை- அன்னதானம்

ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் சர்வ சமய பிரார்த்தனை மற்றும் அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் 67–வது பிறந்த நாள் மதுரையில் இன்று விமரிசையாக கொண்டாடப்பட்டது. மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் ஜெயலலிதா நீடூழி வாழவேண்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
பின்னர் அங்குள்ள நந்தவனத்தில் மா, வில்வ மரக்கன்றுகளை அமைச்சர் செல்லூர் ராஜூ நட்டார். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டன.
தெற்குவாசல் முகைதீன் ஆண்டவர் பள்ளி வாசலில் ஜெயலலிதா நீடூழி வாழ வேண்டி சிறப்பு தொழுகை நடந்தது. இதில் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் மலர் போர்வை போர்த்தி வழிபாடு நடத்தினர். பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டன. தெற்கு 2–ம் பகுதி சார்பில் 100 பெண்களுக்கு சேலைகள் வழங்கப்பட்டன.
பின்னர் கீழவாசல் தூய மரியன்னை தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
மதுரை அண்ணாநகரில் பகுதி செயலாளர் முருகன் ஏற்பாட்டில் 10 ஆயிரம் பேருக்கு மதிய அறுசுவை விருந்து வழங்கப்பட்டது. மதுரையில் உள்ள 76 வார்டுகளிலும் அ.தி.மு.க. நிர்வாகிகள் இனிப்பு வழங்கி ஜெயலலிதா பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடினர். இன்று மாலை 6 மணிக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் தெற்கு கிருஷ்ணன் கோவிலில் தங்கத்தேர் இழுக்கப்படுகிறது.
ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி இன்று அரசு ஆஸ்பத்திரியில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தங்கமோதிரம் வழங்கப்படுகிறது. இதற்கான நிகழ்ச்சி வருகிற 26–ந் தேதி நடக்கிறது.
அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் அமைச்சர் நத்தம் விசுவநாதன் குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை அணிவிக்கிறார். மேலும் அனைத்து பகுதி, தொகுதி, வட்டங்களிலும் ஜெயலலிதா பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன

அ.இ.அ தி.மு.க கழக நிரந்தர பொது செயலாளர் அம்மாவின் 67வது பிறந்தநாளை முன்னிட்டு நத்தர்சா பள்ளிவாசலில்

அ.இ.அ தி.மு.க கழக நிரந்தர பொது செயலாளர் அம்மாவின் 67வது பிறந்தநாளை முன்னிட்டு நத்தர்சா  கவுன்சிலர்  மற்றும்  சிறுபான்மை பிரிவு துணைத்தலைவர்சார்பில் திருச்சி நத்தர்சா பள்ளிவாசலில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது  தலைமை கொறடா மனோகரன் அவை தலைவர் வெல்லமண்டி நடராஜன்மேற்கு சட்டமன்ற உறுப்பினர் பரஞ்சோதி ஸ்ரீரங்க சட்டமன்ற உறுப்பினர் வளர்மதி  சுரேஷ் குப்தா   கழக உறுப்பினர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர் 

Feb 24, 2015

அ.இ.அ தி.மு.க கழக நிரந்தர பொது செயலாளர் அம்மாவின் 67வது பிறந்தநாளை முன்னிட்டு


அ.இ.அ தி.மு.க கழக நிரந்தர பொது செயலாளர் அம்மாவின் 67வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி ஸ்ரீரங்கம் ராகவேந்திர கோவிலில் மக்களின் முதல்வர் அம்மா பல்லாண்டு வாழ வெள்ளி தேர் தலைமை கொறடா மனோகரன் அவை தலைவர் வெல்லமண்டி நடராஜன்மேற்கு சட்டமன்ற உறுப்பினர் பரஞ்சோதி ஸ்ரீரங்க சட்டமன்ற உறுப்பினர் வளர்மதி  சுரேஷ் குப்தா   மருத்துவரணி டாக்டர் சுப்பையா மகளிரணி டாக்டர் தமிழரசி கழக உறுப்பினர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர் 

அ.இ.அ.தி.மு,க அரசு சார்பில்சாதனை விளக்க கண்காட்சி

அ.இ.அ.தி.மு,க  அரசு சார்பில்சாதனை விளக்க கண்காட்சி திருச்சி ஸ்ரீரங்கம் ராஜ கோபுரம் அருகே அமைச்சர் பூனாட்சி துவங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் பழனிசாமி,தலைமை கொறடா மனோகரன் மற்றும் சட்டமன்ற உறுபினர்கள் மாமன்ற உறுபினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர் 

Feb 22, 2015

திருச்சி அ.இ.அ.தி.மு.க கழக பொது செயலாளர் புரட்சி தலைவி அம்மா 67வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி பெரிய மிளகுப்பாறையில் உள்ள ஸ்ரீஒண்டி கருப்புசாமி ஸ்ரீராஜகாளி அம்மன் கோவிலில் மாபெரும் அன்னதானம் நலத்திட்டங்கள் வழங்கும்

திருச்சி அ.இ.அ.தி.மு.க கழக பொது செயலாளர் புரட்சி தலைவி அம்மா 67வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி பெரிய மிளகுப்பாறையில் உள்ள ஸ்ரீஒண்டி கருப்புசாமி ஸ்ரீராஜகாளி அம்மன் கோவிலில் மாபெரும் அன்னதானம் நலத்திட்டங்கள் வழங்கும்,விழாவில் மாவட்ட மாணவரணி இணை செயலாளர் சதீஷ் குமார் தலைமையில் நடைபெற்றது.விழாவை குமார் கழக இளைஞர் பாசறை இளம்பெண்கள் பாசறை செயலாளர் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் தலைமை கொறடா மனோகரன் எம்.எல்.எ .க்கள் விழாவினை துவக்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார்

Feb 21, 2015

திருச்சி அ.இ.அ.தி.மு க சார்பில் வயலூரில் திமுக சமுக விரோதிகளால் தாக்கப்பட்டு இறந்த அ.தி மு க பிரமுகர் குடும்பத்திற்கு நிவாரண தொகை மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் கூறினர்


திருச்சி அ.இ.அ.தி.மு க சார்பில் வயலூரில் திமுக சமுக விரோதிகளால் தாக்கப்பட்டு இறந்த அ.தி மு க பிரமுகர் குடும்பத்திற்கு நிவாரண தொகை மற்றும் பாதிக்கப்பட்ட  குடும்பத்திற்கு கழக நிரந்தர பொது செயலாளர் சார்பில் தலைமை கொறாடா மனோகரன்,அமைச்சர் பூனாட்சிமற்றும் சட்ட மன்ற உறுப்பினர்கள் ஆகியோர்  ஆறுதல் கூறினர்.

திருச்சி அ இ அ தி மு கசார்பாக கழக நிரந்தர பொது செயலாளர் அம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மாவட்ட நீதி மன்றம் அருகே உள்ள புரட்சிதலைவர் M.G.R சிலைக்கு

திருச்சி  அ இ அ தி மு கசார்பாக கழக நிரந்தர பொது செயலாளர்  அம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மாவட்ட நீதி மன்றம் அருகே உள்ள புரட்சிதலைவர் M.G.R சிலைக்கு தலைமை கொறாடா மனோகரன்,அவை தலைவர் வெல்லமண்டி நடராஜன்,சட்ட மன்ற உறுப்பினர்கலந்து கொண்டு மாலை அணிவித்தனர்  

திருச்சி புறநகர் மாவட்ட கழக செயலாளரும் எம்பியுமான டி.ரத்தினவேல் தலைமை வகித்தார்.

திருச்சி புறநகர் மாவட்ட கழக நிர்வாகிகள் செயல்வீரர்கள் ஆலோசனைகூட்டம்
ஜெயலலிதா பிறந்த தின விழாவை முன்னிட்டு நடைபெற்றது
மண்ணச்சநல்லூர்,பிப் ,21:
            அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா 67- வது பிறந்த தின விழாவைமுன்னிட்டு திருச்சி புறநகர் மாவட்ட கழக நிர்வாகிகள் செயல்வீரர்கள்,வீராங்கனைகள் ஆலோசனைக்கூட்டம் நெ.1 டோல்கேட்டில் நடைபெற்றது.
      கூட்டத்திற்கு திருச்சி ுறநகர் மாவட்ட கழக செயலாளரும் ம்பியுமான டி.ரத்தினவேல் தலைமை கித்தார்.
        மாநில கதர் மற்றும் கிராமத் தொழில்கள்துறை அமைச்சரும் திருச்சிமாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச்செயலாளருமான டி.பி.பூனாட்சிஎம்பியும்மாநில இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் .குமார்,பெரம்பலூர் எம்,பி மருதராஜாமுன்னாள் அமைச்சரும் எம்எல்ஏவுமானஎன்.ஆர்.சிவபதிிருச்சி மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும் அம்மா பேரவைமாவட்ட செயலாளருமான தி.ராமுதிருச்சி மாவட்ட ஊராட்சி தலைவர்ராசாத்தி ஆகியோர் சிறப்புரை வழங்கி ஆலோசனை வழங்கினார்கள்.
      மேலும் கூட்டத்தில் எம்எல்ஏக்கள் டி.இந்திராகாந்திஆர.சந்திரசேகர்,முன்னாள் அமைச்சர்கள் .பொன்னுசாமிஅண்ணாவிமுன்னாள் மாவட்டமாணவரணி செயலாளர் அறிவழகன் விஜய்ஒன்றிய செயலாளர்கள் டி.என்.டி.சூப்பர்நடேசன்,எம்.கே.ராஜமாணிக்கம்பொதுக்குழு உறுப்பினர்கள்டி.என்.ிவக்குமார்கே.ஜெயராமன்யூனியன் சேர்மேன்கள்நளாயினிநாகராஜன்என்.ஆர்.சேதுபதிதுணைச் சேர்மேன்வெற்றிச்செல்விதர்மலிங்கம், புள்ளம்பாடி பேரூராட்சி தலைவர்ஜேக்கப்அருள்ராஜ்மாவட்ட கவுன்சிலர் அரிசிமூக்கன்,எம்ஜிஆர் மன்ற மாவட்டமாணவரணி துணைச்செயலாளர் சிறுமருதூர் கதிரவன் ஆகியோர் கூட்டத்தில்பங்கேற்றனர்.