Dec 2, 2018

விமான நிலையத்தில் விமானம் நிறுத்தப்பட்டுள்ளது

திருச்சி  02.12.18

நேற்று இரவு திருச்சியிலிருந்து சிங்கப்பூருக்கு 1.35 மணிக்கு 150 பயணிகளை ஏற்றி கொண்டு சென்ற ஸ்கூட் விமானம், விமான ஒடுதள பாதையில் சென்று கொண்டு இருக்கும் போதே தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டது.

இவ்விமானத்தில் பயணித்த 150 பயணிகள் உயிர் தப்பினர், அவர்களை திருச்சி தனியார் விடுதியில் தங்க வைத்துள்ளனர்.

இது போன்ற நிகழ்வுகள் திருச்சியில் சமீபகாலமாக விமான கோளாறு, விமான விபத்து என அடிக்கடி நிகழ்ந்து வருகிறது.

விமான நிலையத்தில் தங்கம் பறிமுதல்



*விமான நிலையத்தில் 10.49 இலட்சம் மதிப்புள்ள 345 கிராம் தங்கம் பறிமுதல்*

மலேசியா, துபாயிலிருந்து இரவு வந்த விமானத்திலும், இன்று காலை  சிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்த விமானத்தில் பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தபோது திருவாரூரை சேர்ந்த அகமதுகான், புதுக்கோட்டையை சேர்ந்த அடைக்கலம், குலசேகரபட்டினம் சேர்ந்த அப்துல்காதர், மற்றுமொரு பயணி என 4 பேரிடமிருந்து 10.49 இலட்சம் மதிப்புள்ள 345 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்து விசாரணை.

Dec 1, 2018

கைத்தறி சிறப்பு கண்காட்சி

திருச்சி      01.12.18

மாநில அளவிலான சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை தொடக்கம்


தமிழ்நாடு அரசு கைத்தறி மற்றும் துணிநூல் துறை இணைந்து நடத்தும் மாநில அளவிலான சிறப்பு கைத்தறி கண்காட்சி திருச்சி தில்லைநகர் 5 வது கிராஸில் அமைந்துள்ள மக்கள் மன்றத்தில் தொடங்கியுள்ளது.


இன்று முதல் ஜனவரி 16 வரை நடக்கும் கைத்தறி கண்காட்சியை அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி தொடங்கிவைத்தார்.

இந்த விற்பனை கண்காட்சியில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த 52 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் சார்பாக 35 விற்பனை அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

பட்டு சேலை, பட்டு வேஷ்டி, துண்டு, போர்வை விரிப்புகள் மற்றும் கால்மிதி போன்ற ஏராளமான கைத்தறி தயாரிப்புகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.

'இயந்திரங்களை பயன்படுத்தாமல், நெசவாளர்களின் உழைப்பில் உருவாக்கப்பட்ட கைத்தறி தயாரிப்புகள், சிறப்பு தள்ளுபடி விலையில், இங்கு விற்பனை செய்யப்படுகின்றன. இவை தரத்தில், மற்ற இயந்திர தயாரிப்புகளை விட உயர்ந்தவை. மக்கள் இதுபோன்ற பொருட்களை வாங்கினால் தான், நெசவாளர்களின் வாழ்வு புத்துயிர் பெரும். அதற்கு இதுபோன்ற கண்காட்சி மற்றும் விற்பனை நிகழ்ச்சிகள் உபயோகமாக இருக்கும்.' என்றார்

தொடக்க விழாவில், மாவட்ட ஆட்சியர் திரு .கு.இராசா மணி, கோ-ஆப்டெக்ஸ் அதிகாரிகள்  பங்கேற்றனர்.

திருச்சி மாணவ மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி

திருச்சி 1.12.18
திருச்சி மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறையின் சார்பில்
2017-18 மற்றும் 2018-19ஆம் ஆண்டிற்கு 47,208 மாணவ, மாணவியர்களுக்கு ரூபாய் 19 கோடி மதிப்பில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் பணியினை சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி ஆகியோர் தொடங்கி வைத்தார்கள்.

முதற்கட்டமாக திருச்சியில் இன்று 2183 மாணவ, மாணவியர்களுக்கு ரூபாய் 80 இலட்சம் மதிப்பில் விலையில்லா மிதிவண்டிகளை சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி ஆகியோர் வழங்கினார்கள்

திருச்சிராப்பள்ளி மாவட்டம், பள்ளிக்கல்வித்துறையினர் அரசு சையது முர்துஷா மேல்நிலைப்பள்ளி 406 மாணவ, மாணவியர்களுக்கு ரூபாய் 15 இலட்சம் மதிப்பில் விலையில்லா மிதிவண்டிகள் மாணவ, மாணவியர்களுக்கு ரூபாய் 80 இலட்சம் மதிப்பில் விலையில்லா மிதிவண்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் .இராசாமணி. தலைமையில்,  சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் , பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி ஆகியோர் இன்று வழங்கினார்கள்.

 விலையில்லா மிதிவண்டிகளை மாணவ, மாணவியர்களுக்கு வழங்கி மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் விழா பேருரையாற்றியதாவது

மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தார்கள். மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் சிந்தனையில் உதித்த நல்ல பல திட்டங்களில் இதுவும் ஒன்றாகும். குழந்தைகள் கருவில் இருக்கும் காலம் முதல் பள்ளி படிப்பு, உயர்கல்வி, அரசு பணியில் சேரும் வரை அவர்களுக்காக சீரிய பல திட்டங்களை மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கொண்டு வந்தார்கள். கல்வித்துறைக்கென மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்த ஆண்டு 27,500 கோடி நிதிஒதுக்கீடு செய்துள்ளார்கள்.

கல்வித்துறையில் இந்திய திருநாடே வியக்கின்ற வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா காலணி, விலையில்லா மதியஉணவு, கலர் சீருடை போன்றவை வழங்கப்படுகிறது.

மாண்புமிகு அம்மாவின் அரசு அற்புதமான அரசு. எனவே மாணவ, மாணவியர்கள் இவ்வாய்ப்புகளை பயன்படுத்தி நன்றாக படிக்க வேண்டும். வரலாற்று சாதனைகள் படைக்க வேண்டும். தாய் தந்தையரை மதித்து நடக்க வேண்டும். இந்த சையது முர்துஷா மேல்நிலைப்பள்ளி எனது சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பள்ளியாகும். எனவே எனது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து இப்பள்ளிக்கு மேலும் கூடுதலாக முதல் தளத்தில் 4 வகுப்பறைகள் கட்டுவதற்கு ரூபாய் 47 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் திருச்சிராப்பள்ளி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றிய பெருந்தலைவர் கார்த்திகேயன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இராமகிருட்டினன், மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) ராமசாமி, அரசு சையது முதுர்ஷா மேல்நிலைப்பள்ளி தாளாளர் திரு.வேலுச்சாமி, மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவியர்கள், கூட்டுறவு வங்கி தலைவர்கள், முன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Nov 26, 2018

திருச்சி அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேட்டி

திருச்சி   25.11. 18

திருச்சியில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேட்டி


திருச்சியில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தலைமையில் கிழக்கு சட்டமன்ற தொகுதி சார்பாக கஜா புயலால்  பாதிப்படைந்த பகுதிகளுக்கு புயல் நிவாரண பொருட்கள் அனுப்ப பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக 5வது முறையாக புயல் நிவாரண பொருட்கள் இன்று தஞ்சாவூர் மாவட்டத்திற்கு 150 காய்கறிகள் மூட்டை  அனுப்பப்பட்டன.அப்போது வெல்லமண்டி நடராஜன் கூறுகையில்,

நேற்று  2000 நபர்களுக்கு திருச்சி சட்டமன்ற தொகுதி சார்பாக பரிமாறப்பட்டது அதேபோன்று இன்று அமைச்சர் செங்கோட்டையன் துரைக்கண்ணு ஆகியோருடன் தொடர்பு கொண்டு பேசிய பின்பு அவர்களின் முயற்சியில் திருச்சி மாவட்ட சார்பில் வெங்காயம் முட்டைகோஸ் பீட்ரூட் போன்ற காய்கறி மூட்டைகள் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளது மின்சாதன பாதிப்படைந்த பகுதிகளுக்கு மின்சாரம் தயாரிக்கும் பணியும் மிக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இன்று காலை காந்தி மார்க்கெட் போன்ற பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு நாளை காலை அரசு அலுவலர்களான BDO போன்றவர்களை அழைத்து நாளைக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது என்று தெரிவித்தார்.

Nov 4, 2018

திருச்சி இந்தியன் ஆயில் நிறுவனம் நடத்திய மாரத்தான்


ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக‌ இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வாக்கத்தான்




திருச்சி  இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வாக்கத்தான் நிகழ்ச்சியை தென்னூர் உழவர் சந்தை திறந்தவெளி திடலில், திரு. எஸ்.செந்தில்குமார், எக்ஸிகியூட்டிவ் டைரக்டர் (ரீஜனல் சர்வீசஸ்), தென் மண்டலம் - இந்தியன் ஆயில், திரு. டி.ஜி.நாகராஜன், சீஃப் ஜெனர‌ல் மேனேஜர் (விஜிலன்ஸ்), தென் மண்டலம் - இந்தியன் ஆயில், திரு. சி.கோபாலகிருஷ்ணன், சீஃப் ஜெனர‌ல் மேனேஜர் (சில்லறை விற்பனை) - இந்தியன் ஆயில் தமிழ் நாடு, திரு. திருவள்ளுவன், டெபுடி ஜெனரல் மேனேஜர் (விஜிலன்ஸ்), தென் மண்டலம் - இந்தியன் ஆயில், திரு. பாபு நரேந்திரா, சீஃப் டிவிஷனல் சில்லறை விற்பனை மேனேஜர், திருச்சி டிவிஷனல் அலுவலகம் ஆகியோர் முன்னிலையில் திரு. கே.ராஜமணி ஐ.ஏ.எஸ்., மாவட்ட கலெக்டர் - திருச்சிராப்பள்ளி மாவட்டம் துவங்கி வைத்தார்.

பள்ளி மாணவ மாணவியர், இந்தியன் ஆயில் அலுவலர்கள், டீலர்கள், கஸ்டமர் உதவியாளர்கள், பொதுமக்கள் உட்பட 500 பேர் உழவர் சந்தையிலிருந்து எம்.ஜி.ஆர் சிலை வரையில் 2 கி.மீ தூரத்திற்கு நடைபெற்ற இந்தியன் ஆயில் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வாக்கத்தான் நிகழ்ச்சியில் பங்குபெற்றனர். பள்ளி மாணவ மாணவியர் விழிப்புணர்வு வாரத்தைக் குறித்த வாசகங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்தி, கோஷங்களை எழுப்பினர்.

ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தி, ஊழலையும் ஊழல் செய்யப்படுவதையும் தடுப்பதன் அவசியத்தைக் குறித்து பேசினார். மேலும் அவர் "கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம்" மிக உயர்ந்த அளவில் வெளிப்படைத்தன்மையையும் நியாயமிக்க முறையில் செயல்பாடுகளை கையாளுவதையும் உறுதிப்படுத்துவதற்கு நமது சமூக அமைப்பையும் நாம் செயல்படும் முறையையும் மீண்டும் கவனத்தில் கொள்ள ஒரு வாய்ப்பை அளிக்கிறது. ஊழல் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொதுமக்கள் தொடர்பு செயல்பாடுகளில் இந்தியன் ஆயில் மானவ மாணவிகளை ஈடுபடச் செய்வது மகிழ்ச்சியளிக்கிறது" என்று திருச்சிராப்பள்ளி மாவட்ட கலெக்டர் திரு. கே.ராஜமணி ஐ.ஏ.எஸ் கூறினார்.

கண்காணிப்பு விழிப்புனர்வு வாரத்தின் செய்தியை மக்களிடம் சேர்ப்பிக்கும் வகையில், தமிழ் நாட்டிலுள்ல பல பண்பலை நிலையங்களிலிருந்து வானொலிச் செய்திகள் ஒலிபரப்பப்பட்டு, பொதுமக்கள் மத்தியில் ஊழல் தடுப்பு விழிப்புண‌ர்வை உருவாக்கும் நோக்குடன் 2 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு கைபேசி குறுஞ்செய்திகளும் அனுப்பப்பட்டுள்ளன. இளம் மனங்களை ஊழலுக்கெதிரான பொறியை பற்ற வைத்து ஊழலற்ர தேசத்தை கட்டமைக்கும் நோக்குடன் "ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற தலைப்பில் ஓவியப் போட்டி மற்றும் கட்டுரை போட்டிகள் தமிழகமெங்குமுள்ள பள்ளிகளில் நடத்தப்பட்டுள்ளன.

இந்தியன் ஆயில் சில்லறை விற்பனை மையங்கள் தரம், அளவு ஆகியவற்றை உறுதி செய்யும் வகையில் எரிபொருள் நிரப்பும் முன்பு வாடிக்கையாளர்களே எரிபொருளை விஞ்ஞான ரீதியாக சோதித்துப் பார்க்கும் முகாம்களை நடத்தியுள்ளன. தமிழகத்தின் பல பகுதிகளிலும் அதிக விற்பனை நடைபெறும் சில்லறை விற்பனை மையங்களில், ஊழல் கண்காணிப்பு குறித்த தகவல் பலகைகள் வைக்கப்பட்டு வாடிக்கையாளர்கள் மத்திய கண்காணிப்பு கமிஷனுடைய ஆன்லைன் நேர்மை உறுதிமொழியை எடுப்பதில் பங்குபெறவும் ஊக்குவிக்கப்படுகின்றனர் என்று இந்தியன் ஆயில் தென் மண்டலம்  எக்ஸிகியூட்டிவ் டைரக்டர் (ரீஜனல் சர்வீசஸ்) திரு. எஸ்.செந்தில்குமார் கூறினார்.

Oct 16, 2018

திருச்சி உலக உணவு தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் பேட்டி

திருச்சி - 16.10.18

உலக உணவு தினத்தையொட்டி சத்தான உணவை உட்கொள்ள வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் விழிப்புணர்வு பேரணி - உடலுக்கு கெடுதல் தரும் அஜினோமோட்டோ உள்ளிட்ட ரசாயன பொருட்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை.


அனைவருக்கும் சத்தான சரிவிகித உணவு கிடைக்கப் பெற வேண்டும், கலப்பட உணவுப் பொருட்களை  கண்டறிந்து  அவற்றை தடுக்கப்பட வேண்டும், ஆயுளைக் குறைக்கும் துரித உணவுப் பொருட்களை தவிர்த்துவிளம்பர மோகத்தில் இருந்து வெளியேறி இயற்கை உணவுகளையும் சத்தான உணவுகளையும் பொது மக்கள் உண்ண வேண்டும் என்ற கோட்பாட்டுடன் உலக உணவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.

இதனிடையே உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை சார்பில் திருச்சியில் அனைவரும் சரிவிகித நஞ்சில்லாத உணவை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், ஆரோக்கியமான வாழ்வுக்கு அத்தியாவசியமான உணவுப் பொருட்களை தயாரித்து நுகர்வோருக்கு வழங்க வேண்டும், சுகாதாரமானதாகவும் பாதுகாப்பானதாகவும் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி மாணவ மாணவிகள் உணவு பாதுகாப்பு மற்றும் சத்தான உணவு குறித்த வீதி நாடகத்தை அரங்கேற்றினார் மேலும் அனைவரும் ஆரோக்கிய வாழ்வு வாழ சத்தான உணவை உட்கொள்ள வேண்டும் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டதுடன் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் இருந்து தென்னூர் வரையிலான இருசக்கர வாகன பேரணி சென்றனர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சியர் கு. ராஜாமணி கொடியசைத்து தொடங்கி வைத்தார். உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தடைசெய்யப்பட்ட பொருட்கள் விநியோகம் செய்வதை கண்டறிய குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இதனை உணர்ந்து உணவு தயாரிப்பு தொழிலில் ஈடுபடுவார்கள் சட்டங்களை முழுவதும் பின்பற்றி தரமான பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும். உடலுக்கு கெடுதல் தரும் அஜினோமோட்டோ உள்ளிட்ட ரசாயன பொருட்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் அதனை அனுமதிப்பதை தடை செய்யப்படும், கண்காணிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. குட்கா பான்மசாலா உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்படும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்றார்.

பேட்டி - திரு.கு.ராசாமணி, மாவட்ட ஆட்சியர்

Oct 12, 2018


Oct 7, 2018

திருச்சி சுகாதாரத்துறை அமைச்சர்வி ஜயபாஸ்கர் பேட்டி

திருச்சி_07.10.18

திருச்சியிலிருந்து விமானம் மூலம் சென்னை செல்வதற்காக திருச்சி விமான நிலையம் வந்த மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில்...

பருவமழை காலங்களில் அல்லது மழை காலம் முடிந்த பிறகு மக்கள் நல்வாழ்வுத்துறையின் பணிகள் மிகவும் அத்தியாவசியமானதாகும்.
அந்த வகையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவர் மூலமாகவும், சுகாதாரத்துறை செயலாளர்கள் மூலமாகவும் மழைக்கு பின்னால் நோய் தொற்று  ஏதும் இல்லாத அளவிற்கு மிகுந்த முன்னெச்சரிக்கையோடு இருக்க வேண்டுமென்று அலர்ட் செய்து இருக்கிறோம். அந்தவகையில் தமிழ்நாடு முழுக்க நடமாடும் மருத்துவ குழுக்கள், அவசர உதவிக்கு 108 ஊர்தி, மற்றும் பொதுமக்கள் அவசர தகவலுக்கு 104 போன்ற கட்டுப்பாட்டு அறைகளும் தயார் நிலையில் உள்ளன.

போதுமான அளவு மருந்து, மாத்திரைகளும் கையிருப்பில் உள்ளன. பொது மக்கள் தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளோம். முதல்வர் உத்தரவின் பேரில் குறிப்பாக எல்லையோர பகுதிகளில் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும்.

திருச்சி அரசு மருத்துவமனைக்கு விரைவில் கூடுதலாக மருத்துவர்களும், செவிலியர்களும் பணியமர்த்தப் படுவார்கள். வெகு விரைவில் 6 கோடி மதிப்பில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் கருவி திறக்கப்படும். அது மட்டுமின்றி 18 கோடி மதிப்பில் புற்றுநோயை கண்டறிந்து குணப்படுத்தக்கூடிய கருவி ஏர்போர்ட் அத்தாரிட்டி சார்பில் நிறுவப்படஉள்ளது.இன்னும் வரும் காலங்களில் திருச்சி அரசு மருத்துவமனை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக இயங்கும் என்று தெரிவித்தார்.

Oct 5, 2018

திருச்சி : மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி பேட்டி :



திருச்சி :
மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி  பேட்டி :


அக்டோர் 7ம் தேதி கூடுதல் மழை பெய்யும் என்பதால் மாவட்டத்தை பொறுத்தவரை வடகிழக்கு எதிர்கொள்ளும் பொருட்டு பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க பருகியது

கடந்த காலம் எங்கே எல்லாம் மழை சேதம் ஏற்பட்டு இருக்கிறது. அதை எல்லாம் கணக்கெடுத்து தற்போது சேதம் ஏற்படாமல் பாதுகாப்பதிலும் தாழ்வான பகுதியில் இருக்க வேண்டும் என்றும், காவிரி கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் இருக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தபடுகிறது. வருவாய்த்துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை, அதேபோல பொதுப்பணித் துறை நெடுஞ்சாலைத் துறை போன்ற துறையில் தொடர்ந்து முன்னெச்சரிக்கை பணிகளில் மழைக்காலங்களில் தடையின்றி செல்வதற்கு சிறிய, பெரிய பாலங்கள் ரோடுகள் எந்தவிதத் தடையுமின்றி செல்ல உறுதி செய்துப்படுகிறது.
ஏற்கனவே அதிகமாக மழை பெய்து பாதிக்ககூடிய154 இடங்கள் கண்டறிய பட்டுள்ளன. அந்த பகுதியில் உள்ள மக்களை அப்புறப்படுத்தி பாதுகாப்பாக வைப்பதற்கான ஏற்பாடுகள் அரசு தயார் நிலையில் உள்ளன. மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக ஒரு பகுதிக்கு 10 பேர் விதம் 1,440 பேருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. தீயணைப்புத்துறையினர் பயிற்சி எடுத்து வருகின்றனர் கால்நடைகள் பாதுகாப்பு தேவைப்படுகிறது கால்நடை பராமரிப்பு துறை இணைந்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது, மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது. பொதுமக்களுக்கு வேண்டுகோள் காவிரி ஆற்றில் விவசாயத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது குழந்தைகள், பெரியவர்கள் தண்ணீர் அருகில் செல்லாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும், மேலும் ஏரிகள் குளங்கள் தண்ணீர் இருப்பதால் அதில் ஆபத்தை உணராமல் உள்ளே சென்று குளிக்க வேண்டும் அவற்றை தவிர்க்க வேண்டும்.

12 நேரடி கொள்முதல் நிலையங்கள் உள்ளன.

38 இடங்களில் அதிகபடியான மழை பாதிப்பு இருக்கும்.
41 இடங்களில் மிதமான பாதிப்பு இருக்கும்.
72 இடங்கள் பாதுகாப்பான இருக்கும்.

பள்ளி செல்ல கூடிய குழந்தைகள் பாதுகாப்பாக அனுப்புவதற்கு பெற்றோர்களை கேட்டு கொள்ள படுகிறது. பள்ளி நிர்வாகமும் பள்ளி குழந்தைகளை பார்த்து கொள்ள வேண்டும்.

அவசர உதவிக்கு 1077 என்ற என்னும், 0431 - 2418995 என்னையும் தொடர்பு கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

திருச்சி துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பேட்டி

திருச்சி-05.10.18

தமிழகத்தில் மழையை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது-துணை முதலமைச்சர் ஒ.பன்னிர்செல்வம் பேட்டி


தேனியிலிருந்து சென்னை செல்வதற்காக திருச்சி விமான நிலையம் வந்த துணை முதலமைச்சர் ஒ.பன்னிர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசுகையில்...

தங்க தமிழ் செல்வன் அளித்த பேட்டியை நான் இன்னும் முழுமையாக பார்க்கவில்லை,அதை பார்த்த பின்பு விரிவான பதிலை அளிக்கிறேன்.

தமிழகத்தில் மழையை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

டி.டி.வி தினகரனை கடந்த ஆண்டு சந்தித்தீர்களா என்கிற கேள்விக்கு *அது கடந்த காலம்* என பதில் அளித்தார்.

Sep 25, 2018

மலைக்கோட்டை தாயுமானவர் சன்னதி

மலைக்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி விழா 13-ம் நாளை முன்னிட்டு பிள்ளையாருக்கு  27-வகை அபிஷேகம்


மலைக்கோட்டை


திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் விநாயகர் சதுர்த்தி திருவிழாவையொட்டி இன்;று மதியம் மாணிக்க விநாயகர் கோவிலில் உற்சவ விநாயகருக்கு 27 வகையான அபிஷேகம் செய்யப்பட்டு நடன கணபதி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மலைக்கோட்டை கோவில்
தென்கயிலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு பார்த்த நிலையில் மிகப்பெரிய சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். மலை உச்சியில் உச்சிப்பிள்ளையாரும் மலை அடிவாரத்தில் மாணிக்க விநாயகரும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.

விநாயகர் சதுர்த்தி
முழு முதற்கடவுள் என்று போற்றப்படும் விநாயகர் எல்லா வகையான துன்பங்களையும் போக்கும் ஆற்றல் படைத்தவர். விநாயகரை வழிபட்டால் தீராத நோய்கள் எல்லாம் தீரும் கிரக தோஷங்கள் நீங்கும் செல்வ செழிப்பு உண்டாகும். நல்ல கல்வி கிடைக்கும்.  “ஓம் கம் கணபதியே நம” என்பது விநாயகர் நாமம். இந்த நாமத்தை அன்றாடம் 3 முறையோ அல்லது 111 முறையோ சொன்னால் வாழ்க்கையில் அனைத்தும் கிடைக்கும் என்;பது நம்பிக்கை.  அழகிற்கு முருகன் அறிவுக்கு கணபதி (விநாயகர்) என்று அனைவராலும் சொல்லப்படுகிறது.
இந்த பிள்ளையாருக்கு ஆண்டு தோறும் ஆவணி மாதத்தில் வளர்பிறையில் வரும் சதுர்த்தியன்று விநாயகர் சதுர்த்தி (விநாயகர் பிறந்த நாள்) அமாவாசை முடிந்த 4-வது நாள்  கொண்டாடப்படுகிறது.
ராட்சத கொழுக்கட்டை
இந்த விநாயகர் சதுர்த்தி விழாவை  முன்னிட்டு மலைக்கோட்டை உச்சி விநாயகர் மாணிக்க விநாயகருக்கு  150 கிலோ எடை கொண்ட மிக பிரமாண்ட ராட்சத கொழுக்கட்டை  தயாரிக்கப்பட்டு  உச்சிப்பிள்ளையாருக்கும் மாணிக்க விநாயகருக்கும் தலா 75 கிலோவாக பிரித்து தொட்டில் கட்டி தூக்கி சென்று படையல் போட்டு பக்தர்கள் அனைவருக்கும் கொழுக்கட்டை பிரசாதம் வழங்கப்பட்டது.
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி மலைக்கோட்டை உச்சி விநாயகர்  மாணிக்க விநாயகர் கோவிலில் கடந்த 13-ம்தேதி தொடங்கி விநாயகருக்கு ஒவ்வொரு நாளும் உபயதாரர்களை கொண்டு மாணிக்க விநாயகர் கோவில் மண்டபத்தில் உற்சவ கணபதிக்கு பால கணபதி நாகாபரண கணபதி  லஷ்மி கணபதி
தர்பார் கணபதி பஞ்சமுக கணபதி மூசிக கணபதி இராஜ கணபதி மயூர கணபதிகுமார கணபதி வல்லப கணபதி ரிஷபாருட கணபதி சித்தி புத்தி கணபதி  என 12 நாட்கள் மாலை 6 மணிக்கு அலங்காரம் செய்யப்பட்டு  அபிஷேகம் நடைபெற்றது.
27 வகை அபிஷேகம்
 இதில் 13-ம் நாளான இன்று பகல் 12 மணிக்கு மாணிக்க விநாயகர் கோயில் மண்டபத்தில் உற்சவ கணபதிக்கும் மாணிக்க விநாயகர் மூலவருக்கும்  திருச்சி சாரதாஸ் சார்பில் விபூதி சந்தனாதி தைலம் திரவிய பொடி அரிசி மாவு நெல்லி முல்லி பொடி மஞ்சள் பொடி குங்குமம் தேன் நெய் பஞ்சாமிர்தம் பால் தயிர் எலுமிச்சம்பழம் சாத்துக்குடி கரும்புசாறு திராட்சை விளாம்பழம்  மாதுளை அன்னாசிப்பழம் முப்பழம் பழவகைகள் அன்னாபிஷேகம் வெந்நீர் இளநீர் சந்தனம் சொர்ணாபிஷேகம் பன்னீர்  உள்ளிட்ட 27 வகையான அபிஷேகமும் அதை தொடர்ந்து நடன கணபதிக்கு சிறப்பு அலங்காரமும்  நடைபெற்றது.
14-ம் நாளான நாளை (புதன் கிழமை) காலை 11 மணிக்கு மூலவர் உற்சவருக்கு திருக்கோயில் பணியாளர்கள் சார்பில் சிறப்பு அபிஷேகம் லட்சார்ச்சனையும் நடைபெற்று விநாயகர் சதுர்த்தி விழா நிறைவு பெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் விஜயராணி மற்றும் கோவில் அர்ச்சகர்கள் பணியாளர்கள் செய்து இருந்தனர்.
 ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர் 

Sep 19, 2018

திருச்சி பூம்புகார் விற்பனை மையத்தில் கண்காட்சி திறந்து வைத்து மாவட்ட ஆட்சியர் பேட்டி அளித்தார்

திருச்சி – 18.09.18

 
       



திருச்சி பூம்புகார் விற்பனைமையத்தில் நவராத்திரி கொலு பொம்மைகள் கண்காட்சி தொடங்கியது – ஏராளமானோர் பார்வையிட்டு வாங்கிச்செல்கின்றனர்.

முக்கொம்பு மேலணை உடைப்பால் மூடப்பட்ட முக்கொம்பு சுற்றுலா மையம் விரைவில் திறக்கப்படும் - ஆட்சியர் பேட்டி.
                 


தமிழகத்திலுள்ள கைவினைக் கலைஞர்களால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை விற்பனை செய்து அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் வகையில் பூம்பூகார் விற்பனைநிலையம் செயல்பட்டுவருகிறது. இதனிடையே தமிழக மக்களால் இல்லங்களில் நட்பை வளர்க்கும் விதமாகவும், சந்தோஷத்தை வெளிப்படுத்தும்விதமாக நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படுகிறது. நவராத்திரி பண்டிகையையொட்டி திருச்சி சிங்காரத்தோப்பு பகுதியில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில் இன்று முதல் அக்டோபர் 20ம்தேதிவரை நடைபெறும் நவராத்திரி 'கொலுபொம்மைகள்' கண்காட்சி தொடங்கியது. இக்கொலு பொம்மைகள் கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் கு.ராஜாமணி குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார். இக்கண்காட்சியில் சிறப்பு அம்சமாக பலவித கொலுபொம்மைகள், ராமாயண கதையை விளக்கும் பொம்மைகள், ஆழ்வார்கள், நாயன்மார்கள், கடவுள்கள், கொலு செட்டுகள், கொண்டபள்ளி பொம்மைகள், மரப்பாச்சி பொம்மைகள், காகிதக்கூழ், மண், பலிங்கு, மாக்கல், நவரத்தினகற்கள், மெழுகு, சந்தனமரம், நூக்கமரம் போன்ற பொருட்களால் ஆன பொம்மைகள், புதிய வரவுகள் என ரூ.50முதல் 25ஆயிரம் வரை இடம்பெற்றுள்ளது. கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த கொலு பொம்மைகளை ஏராளமானோர் பார்வையிட்டு பொருட்களை வாங்கிச்சென்றனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு ஆட்சியர் அளித்த பேட்டியில் முக்கொம்பு கொள்ளிடம் கதவணை சேதமடைந்து தற்காலிக பராமரிப்பு பணிகள் முழுஅளவில் முடிக்கப்பட்டு காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதுடன், 20ஆயிரத்து 152கனஅடி தண்ணீர் வரப்பட்டுள்ளது, கொள்ளிடத்தில் 700கனஅடி தண்ணீர் வெளியாகிறது. அதேபோன்று வாய்க்கால்பாசனத்திற்காக 500கனஅடிதண்ணீர் திறக்கப்படுவதுடன், நாளைமுதல் 200கனஅடி தண்ணீர் கூடுதலாக திறக்கப்படவுள்ளது. சம்பாசாகுடிக்கான தண்ணீர் உரியமுறையில் செல்ல பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுத்துவருகிறது. தண்ணீரை முழுவதும் நிறுத்துவதற்கான பணிகள் நடைபெற்றுவருகிறது. வடகிழக்குபருவமழைக்கு முன்னதாக கொள்ளிடத்தில் பாதுகாப்பானமுறையில் கண்காணிக்கவும், உரியமுறையில் வெளியேற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. 410கோடி ரூபாய்க்கு கட்டப்படும் கதவணையின் பூர்வாங்கப்பணிகளுக்கான அறிக்கை தயாரிக்க ஆய்வுசெய்து தயரிக்கப்பட்டுவருவதுடன், அப்பணிகளும் விரைவில் முடிவடைந்து பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். தண்ணீர்வரத்து அதிகரித்து இருந்தாலேயே முக்கொம்பு கொள்ளிடம் உடைப்பு சரிசெய்யும் பணிகள் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், உடைப்பால் விவசாயத்திற்கும், தண்ணீர் விவசாயத்திற்கு செல்வதற்கும் எந்தவித தொடர்பும் இல்லையென ஆட்சியர் தெரிவித்தார். அதேநேரம் மேலணை உடைப்பால் மூடப்பட்ட முக்கொம்பு சுற்றுலா மையம் வருகிற சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

பேட்டி : 1)திரு.கு.ராஜாமணி – மாவட்ட ஆட்சியர்

Sep 18, 2018

திருச்சி பூம்புகார் விற்பனை நிலையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கண்காட்சியை திறந்து வைத்தார்

திருச்சி
18.09.2018
 
 தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு கைத்திறத்தொழில்கள் வளர்ச்சி கழகத்தின் , பூம்புகார் விற்பனை நிலையம் திருச்சி சிங்காரதோப்பில்  மாநகர மக்களின் பேராதரவோடு 44 வருடங்களை வெற்றிகரமாக கடந்து 45 வது வருடத்தில் அடிஎடுத்து வைக்கிறது என்பதை மகிழ்வோடு தெரிவிப்பதோடு வழமைபோல் இவ்வாண்டும் வருகின்ற நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு 18.09.2018  முதல் 20.10.2018 வரை (ஞாயிறு உட்பட) கொலு கண்காட்சி நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இக்கண்காட்சியின் சிறப்பு அம்சமாக பலவித கொலு பொம்மைகள், கொலு செட்டுகள், கொண்டபள்ளி  பொம்மைகள், மரபாச்சி பொம்மைகள், காகிதக்கூழ் பொம்மைகள், மண், பளிங்குக்கல், மாக்கல், நவரத்தின கற்களினாலான பொம்மைகள் குறைந்த பட்சமாக ரூ.50 முதல் ரூ.25000 வரை இக்கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.
இக்கண்காட்சியை திரு.கு.இராசாமணி,இ.ஆ.ப.,மாவட்டஆட்சித்தலைவர்,    திருச்சிராப்பபள்ளி,அவர்கள் 18.09.2018 செவ்வாய் கிழமை அன்று மாலை 6.00  மணியளவில் குத்துவிளக்கேற்றி கண்காட்சியை துவக்கி வைத்தார்கள்.
இக்கண்காட்சியில் இடம் பெற்றுள்ள பொம்மை செட்டுகள்:

                 அஷ்ட பைரவர் செட், நவதுர்கா வாகனம், கிராமிய விளையாட்டுகள் செட், வேத மூர்த்திகள் செட், கார்த்திகை தீபம், கள்ளழகர் செட், கல்யாண ஊர்வலம்,  கிரிக்கெட், சஞ்சீவி செட், பெருமாள் ஊர்வலம் செட், நவ கண்ணிகள் செட், பானைகிருஷ்ணன் செட், தசாவதாரம் செட், அஷ்டலக்ஷ்மி செட், கயிலாய மலைசெட், கார்த்திகை பெண்கள் செட், ஸ்ரீரங்கம் செட், அன்னபூரணி செட்,          விநாயகர் செட், மஹாலக்ஷ்மி வரம் செட், மாயா பஜார் செட்,                             சீனிவாச கல்யாணம் செட், மீனாட்சி கல்யாணம் செட், மும்மூர்த்தி செட், ராமர் பட்டாபிஷேகம் செட், தாத்தா பாட்டி செட், பெருமாள் தாயார் செட்,
    ராமர் பாலம் செட், சுக்ரீவர் பட்டாபிஷேகம் செட், கனகதாரா செட், முருகர் உபதேசம் செட், கஜேந்திர மோட்ஷம் செட், மாங்கனி செட், கீதா உபதேசம் செட், ஜோதிர்லிங்கம் செட், பரத நாட்டியம் செட், அசோகவனம் செட், பீஷ்மர் அம்பு படுக்கை செட், கனையாழி செட், ஆழ்வார் செட், கோபியர் டான்ஸ் செட், விவசாய செட், தட்டாங்கி செட், ஜடாயு மோட்சம் செட், ராமர் செட், அகலியா சாப விமோட்சம் செட் முதலான பொம்மைகள்  கல்கத்தா, மணிபூர், இராஜஸ்தான், ஒரிஸா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் பிற மாநிலங்களிலிருந்து வரவழைக்கப்பட்ட பொம்மைகள், எண்ணற்ற தனி பொம்மைகளும் பலவிதமான மாடல்களில் வண்ணங்களில் இடம் பெற்றுள்ளன.
              இக்கண்காட்சியில் காட்சிக்கும் விற்பனைக்கும் உள்ள பல்வேறு மாநிலங்களிலிருந்து தருவிக்கப்பட்டுள்ள அழகிய கொலு பொம்மைகளை திருச்சி மாநகர மக்கள் வாங்கி தங்கள் இல்லத்திற்கு அழகூட்டி, வரும் நவராத்திரி பண்டிகையை சிறப்பாக கொண்டாடி மகிழ அன்புடன் அழைக்கின்றோம்.
     என பூம்புகார் சார்பாக மேலாளர் தெரிவித்தார்

Sep 7, 2018

திருச்சி பூம்புகார் விற்பணை நிலையம் கணபதி தரிசனம் சிறப்பு கண்காட்சி

தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம்
             


  பூம்புகார் விற்பனை நிலையம்இ திருச்சி- 8
           

 கணபதி தரிசனம் – சிறப்பு கண்காட்சி


      ஐங்கரன்இ ஆனைமுகத்தோன்இ கஜேந்திரன்இ விக்னேஸ்வரன்இ கணபதிஇ பிள்ளையார் என்று பல பெயர்களில் அழைக்கப்படுபவர்இ கடவுளின் மூலக் கடவுள் என்றும் போற்றப்படுபவர்இ நம் அனைவராலும் வணங்கப்படுபவர் விநாயகர். விநாயகர் என்றால் வினை தீர்ப்பவர்இ வினையை அகற்றுபவர் என்று பொருள். நம் வாழ்விலும் பல இன்னல்கள்இ கஷ்டங்கள்இ தீராத வினைகள் இருக்கின்றன. இப்பிரச்சனைகளை அகற்றும் கடவுள் நம் விநாயகர். இவரின் பண்டிகையை தான் நாம் விநாயகர் சதுர்த்தி என்று அழைத்து ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறோம்.  
இவர் கலைகளின் கடவுளாகவும் ஞானத்தின் கடவுளாகவும் வணங்கப்படுவார்இ. இந்த விநாயகர் பல வடிவங்களில்இ பல அவதாரங்களில் கணபதியாக தோற்றம் கொண்டுள்ளார்.
தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்சிக் கழகம் கைவினைஞர்களின் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கத்தில் தமிழகம் முழுவதும் மற்றும் புது டெல்லிஇ கொல்கத்தாஇ உட்பட அனைத்து விற்பனை நிலையங்களை நடத்தி வருவதோடுஇ மற்றொருவித வாய்ப்பாக இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் பலவகைக் கண்காட்சிகளை நடத்தி வருகிறது.
அதன் தொடர்ச்சியாக திருச்சி சிங்காத்தோப்பில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையம்இ 06.09.2018 முதல் 15.09.2018  வரை (ஞாயிறு உட்பட) கணபதி தரிசனம் என்ற சிறப்பு கண்காட்சி ஒன்றை தன் விற்பனை நிலையத்தில் நடத்தி வருகிறது.
இக்கண்காட்சியினை திரு.யு.ளு.சமது யுபுஆ (ர்சு) டீர்நுடுஇ  திருச்சி அவர்கள் வியாழன் கிழமை அன்று துவக்கி வைத்து சிறப்பித்தார்கள்.


Sep 3, 2018

திருச்சி இந்திரா கணேசன் பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா

இந்திரா கணேசன் பொறியியல் கல்லூரியின் ஆறாம்  பட்டமளிப்பு விழா கல்லூரி
வளாகத்தில் 02.09.2018 அன்று நடைபெற்றது.



பட்டமளிப்பு விழாவிற்கு தலைமை ஏற்று கல்லூரியின் செயலர் திரு ராஜசேகரன் தொடங்கி
 வைத்தார்.  இயக்குனர் முனைவர் பாலகிருஷ்ணன் மற்றும் முதல்வர் முனைவர்
பாரதிராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



விழாவில் சிறப்பு விருந்தினராக பெங்களூர் டீ.சி.எஸ் தலைமை அதிகாரி  திரு.
அபூர்ப தாஸ் கலந்து கொண்டார்.



முன்னதாக கல்லூரியின் அறிக்கையை கல்லூரி முதல்வர் திரு பாரதிராஜா பதிவு
செய்தார். அதில் மாணவ மாணவிகளின் சாதனைகள், பேராசிரியர்களின் சாதனைகளை
குறிப்பிட்டார்.



பின்னர் பட்டமளிப்பு உரை நிகழ்த்திய  பெங்களூர் டீ.சி.எஸ் தலைமை அதிகாரி  திரு.
அபூர்ப தாஸ் தனது உரையில் முதலாவதாக புதிய பட்டதாரிகளுக்கு வாழ்த்துக்களை
தெரிவித்தார்.



பின்னர் தொடர்ந்து பேசுகையில், மாணவர்கள் தங்கள் தனி திறமைகளை வளர்த்து
கொள்வதன் அவசியம் பற்றி குறிப்பிட்டார். மேலும் மாணவர்கள் உயர்ந்த
எண்ணங்களையும், சிந்தனைகளையும் வளர்த்துகொண்டால் வாழ்வில் பல சாதனைகளை
படைக்கலாம் என்று கூறினார்.

Sep 2, 2018

திருச்சி அமைச்சர்கள் முக்கொம்பு கொள்ளிடம் ஆய்வு

திருச்சி.         1.9.18

திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் மதகுகள் பணிகள் இன்னும் நான்கு நாட்களில் பணிகள் நிறைவடையும், தண்ணீர் வரத்து அதிமாக வருவதால் இரும்பு தூண்களை கொண்டு பணிகள் நடைபெற்றுவதாக ஆய்வு பின் அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்

திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் அணையில் 45 மதகுகள் உள்ளன. இதில் 6-வது மதகில் இருந்து 14-வது மதகு வரை உள்ள 9 மதகுகள் கடந்த 22-ந் தேதி இரவு திடீரென்று இடிந்து விழுந்தன. இதனால் கொள்ளிடம் அணையில் இருந்து தண்ணீர் வெளியேறியது. உடைந்த மதகுகளை தற்காலிகமாக சீரமைக்கும் பணி ரூ.95 லட்சம் செலவில் நடைபெற்று வருகிறது.

முதல் கட்டமாக 1-வது மதகில் இருந்து 17-வது மதகு வரை 220 மீட்டர் தூரத்துக்கு 3 லட்சம் மணல் மூட்டைகள் அடுக்கி தடுப்பு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், அணையின் முன்பாக கான்கீரிட் சுவர் அமைத்தல், மதகு உடைந்த இடங்களில் பாறாங்கற்களை கொண்டு நிரப்புதல் உள்ளிட்ட பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்த பணியில் ஏராளமான தொழிலாளர்கள் இரவு, பகலாக ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்தநிலையில் மதகுகள் உடைந்த இடத்தில் தண்ணீரின் வேகத்தை கட்டுப்படுத்தி சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதில் கடும் சவால் ஏற்பட்டுள்ளது. இதற்காக முக்கொம்பு கொள்ளிடம் அணை சீரமைப்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. அணை உடைந்த இடத்தில் மிகவும் ஆழமாக இருப்பதால் அங்கு பாறாங்கற்கள் கொண்டு நிரப்பும்போது, அவை உள்ளே இறங்கி விடுகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள ராணுவ உதவி கோர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்தநிலையில் கொள்ளிடம் அணையின் 6-வது மதகில் இருந்து 14-வது மதகு வரை மட்டுமே உடைந்துள்ள நிலையில் நேற்று பாதுகாப்பு கருதி 5-வது மதகில் பொருத்தப்பட்டு இருந்த மதகை ஏற்றி, இறக்க பயன்படக்கூடிய (கியர் பாக்ஸ்) இரும்பு ராடுகள், சங்கிலிகள் மற்றும் இரும்பு பொருட்கள் ஆகியவற்றை அதிகாரிகள் உத்தரவின்பேரில் தொழிலாளர்கள் அகற்றினார்கள். தற்போது மேட்டூர் அணையில் இருந்து 4 ஆயிரம் கனஅடி மட்டுமே தண்ணீர் வருவதால், காவிரியில் 1,700 கனஅடியும், கொள்ளிடத்தில் 2,300 கனஅடியும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக குறைந்து வருவதால் இனி, பணிகள் துரித வேகத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தற்காலிகமாக சீரமைக்கும் பணி ரூ.95 லட்சம் செலவில் நடைபெற்று பணிகளை இன்று மாலை போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுற்றுலா துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், சிறுபான்மை நலத்துறை அமைச்சர் எஸ். வளர்மதி , பொதுப்பணித்துறை அமைச்சர் பிரபாகரர், சட்டமன்ற உறுப்பினர்கள் செல்வராஜ், பரமேஸ்வரி முருகன் மற்றும் பொதுபணித்துறை அதிகாரிகள் ஆகியோர் பார்வையிட்டு பணிகளை குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் பொதுபணித்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

பின்னர் பணிகளை குறித்து விரிவாக ஆய்வு செய்தாரா. பின்னர் படகு மூலம் பணிகள் நடைபெற்றுபணிகளை பார்வையிட்டார். பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது ', முக்கெம்பு மதகுளை பணிகளை பார்வையிட்டு அங்கு பணிகளை குறித்து ஆய்வு செய்ய தமிழக முதலைமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தினார். அதன் பேரில் நான் மற்றும் அமைச்சர்கள் வெல்லமண்டி என். நடராஜன், எஸ். வளரமதி, பொதுப்பணித்துறை செயலாளர் பிரபாகர் , மாவட்ட ஆட்சியர் ராசாமணி ஆகியோரிடம் பணிகளை குறித்து ஆலோசனை செய்தேன்.

தண்ணீர் அலம் குறிப்பிட்ட பகுதியில் 14 அடி முதல் 20 அடியாக உள்ளது. அங்கு பெரும் சவலாக இருநாதாலும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இரவு பகலாக 13 பொக்லைனை கொண்டு நாள்  ஓன்றுக்கு 50 ஆயிரம் மூட்டைகளும், மறுபுறமும் பெரிய அளவிலான பாறைகளும் கொண்டும் தண்ணீர் தடுக்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது.

இன்று அதிகமாக தண்ணீர் வரத்து அதிகமாக காணப்படுகிறது. ஆகையால் இரும்பு தூண்களை கொண்டு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இன்னும் மூன்று அல்லது நான்கு தினங்களில் பணிகளா முடிவடைய பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு அறிவுரை படுத்தப்பட்டுள்ளது. அது ஓரு புறம் இருக்க புதிய அணைகள் கட்டும் பணிக்கான ஆய்வு பணிகள் நடைபெற்றது. கடைமடை பகுதிக்கு தண்ணீர் வரவில்லை எனபது உண்மையில்லை தேவையான பகுதிக்கு தண்ணீர் வந்து கொணாடு இருக்கிறது.

எந்த அளவுக்கு பணிகளை முடிக்கம் முடியுமோ அந்த அளவுக்கு பணிகளை முடிக்கப்பட்டும் .15 ஆடி அகலத்தில் இருப்பதால் பல்வேறு நுணுக்கங்களை கொண்டு பணிகள் நடைபெற்றது வருகிறது.மணல் மூட்டிகளை அடுக்கி வைப்பது பெரும் சவலாக கொண்டு தொழிலாளர்கள் வேவை பார்த்து வருகிறார்கள். அவ்வப்போது பணிளை குறித்து தமிழக முதலைமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டறிந்து வருகிறார். மணல் அள்ளுவதால் இந்த மதகுகள் விழந்தது காரணம்

திருச்சி கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் கோட்டம், மணிகண்டம் ஒன்றியத்தில், ராம்ஜி நகர் பகுதியில் புங்கனூர் கிராமத்தில் 750 கால்நடைகளுக்கு இலவச கோமாரி நோய் தடுப்பூசி  முகாம் இன்று நடைபெற்றது. இதில்  பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதி அவர்கள் கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்தார். அருகில் புங்கனூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத் தலைவர் சின்னத்துரை, புங்கனூர் செல்வம், அக்தர் பெருமாள் மற்றும் கால்நடை மருத்துவர்கள் உள்ளனர்.

Aug 26, 2018

Trichy J.J. College of Engineering and Technology, Tiruchirappalli graduation day

J.J. College of Engineering and Technology, Tiruchirappalli

Graduation Day – 26.08.2018


J.J. College of Engineering and Technology had celebrated its 20th graduation day on 26th August 2018 Sunday at 11.00 am in the college Auditorium. Dr. S. Subbaiyah, Former Vice-Chancellor of Alagappa University, Karaikudi was the chief guest of the day. He delivered his graduation day address to the graduates. He had also conferred the degree for around 799 graduands. He was very glad to present himself in the college in the great occasion.
He felt happy that Engineering graduates are budding roses in India. He also stated that Indian People/ Engineer are more talented compared to other countries.Graduation day is the happiest moment to each and everyone like Wedding day. This day is also very important in our life. He praised all, our Chairman, Management, Trustees about their second experience in the field of education. He had also ensured that employment will be made for all graduates by Dr. S. Ramamoorthy, Secretary, JJ Group of Institutions & Chairman of Sowdambika Group of Institutions. He had insisted the graduands to thank their parents for their sacrifice sincere love towards their children. Next to Parents Teachers and Professors are to be thanked and respected who had encouraged the students to get into higher positions. He had quoted few Gurus and Disciples for Teacher-Student relationship like Alexander & Aristotle, Beema Rao & Ambedkar, Abdul Kalam & Siva Subramanian, Swami Vivekananda & Sri Ramakrishna Paramahmasar. He had also praised our Indian Culture, Tradition and our Tamil language which was treated as an official language in many foreign countries. He had applauded by quoting Nalanda University. He quoted about Robert browning’s words “to set a goal”. In 2006 he joined in Alagappa University as a lecturer for temporary post. At that time his senior professor questioned that what would he like to become in future? His answer was to become as Vice-chancellor of Alagappa University within 2020. But he was appointed as VC in 2015 itself. All this success is because of his determination and desire to win.
Dr. S. Ramamoorthy, secretary, J.J. Group of Institutions and Chairman, Sowdambika Group of Institutions had presided  the function. Mr. G. Ravichandran, Joint- Secretary and Mr. A.K.K. Ravichandran, Mr. R. Chendur Selvan, Sowdambika Group of Institutions & Mr. P.S.K. Karuppiah, Correspondent PSK School, Trustees of JJ Group of Institutions & Mr. P. Gandhi, Ex. President, Ammapettai, are participated in this grand function. Dr. S. Sathiyamoorthy, Principal, JJCET Felicitated the graduation day by his graceful words. He had also thanked all the students, Faculty members, Technicians, Press People, Parents and the management for making the ceremony a grand success.

Jun 8, 2018

திருச்சி கிருஷ்ணா ஸ்கேன் சென்டர் மீது அதிகாரிகள் நடவடிக்கை

திருச்சி முறையற்று செயல்பட்ட கிருஷ்ணா ஸ்கேன்  செய்யும் ஸ்கேன் சென்டர் மாவட்ட ஆட்சித்தலைவர் பரிந்துரையின்

பேரில் குருநாதன் தமிழ்நாடு பிரதிநிதி சீர் முறை ஆணையம் அவர்கள் மற்றும் இணை இயக்குனர் மருத்துவர் ஷம்ஷத் பேகம் தலைமையில் நடத்திய ஆய்வுகளில் முறையற்ற ஆவணங்கள் இல்லாமலும் ஸ்கேன் சென்டர் செயல்பட்டு வந்துள்ளது தெரிந்தது அதனடிப்படையில் அவர்கள் ஸ்கேன் சென்டருக்கு சீல் வைத்தனர்

அப்போது இணை இயக்குனர் மருத்துவர் சம்பத் பேகம் கூறுகையில் இன்றைக்கு மட்டும்  45 நோயாளிகள் பரிசோதனை செய்யப்பட்டு ள்ளது அதில் 18 பேர் கர்ப்பிணி பெண்கள் மூன்று மாத காலங்களாக முறையான ஆவணங்கள் பராமரிப்பு இல்லாமலும் ஸ்கேன் சென்டர் ரினிவல் செய்வதற்கு எந்தவித முயற்சியும் எடுக்காமல் செயல்பட்டு வந்தது அதில் கடந்த சனிக்கிழமை நாங்கள் ஆய்வு செய்த ஆய்வின் போது ஸ்கேன் சென்டரில் முறையாக லைசன்ஸ் வாங்கும்போது இருந்த மருத்துவர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து விட்டு சென்றுள்ளனர் ஆனால் ஸ்கேன் சென்டரில் நிரந்தரமான மருத்துவர்கள் இல்லாமல் அவ்வப்போது மருத்துவர்களை அழைத்து ஸ்கேன் செய்துள்ளனர் ஸ்கேன் அப்படி ஸ்கேன் செய்யும்போது form 6 நிரப்பப்படவில்லை இந்த ஸ்கேன் சென்டருக்கு சட்டப்படி நோட்டீஸ் அனுப்பியும் அவர்கள் மறுப்பும் தெரிவிக்கவில்லை மேலும் ஸ்கேன் சென்டர் முறையற்ற நடத்தி வந்தனர் பொதுநலன் கருதி மாவட்ட ஆட்சியர் பரிந்துரையின் பேரில் நாங்கள் ஆய்வு மேற்கொண்டோம் சட்டப்படி ஸ்கேன் சென்டருக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார் இந்நிகழ்வின்போது தில்லைநகர்புவனேஸ்வரி காவல்துறை துணை ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்



பேட்டி மருத்துவ இணை இயக்குனர் டாக்டர் சம்சாத் பேகம்

May 17, 2018

திருச்சி கல்லூரி மற்றும் பள்ளி வாகனங்கள் முதல் கட்டமாக ஆய்வு

திருச்சி   17.5.18

திருச்சி தீரன் ஆக்ஸ்போர்டு பொறியியல் கல்லூரி வளாகத்தில் மேற்கு வட்டார போக்குவரத்து துறை அலுவலகத்திற்குப் பட்ட பள்ளி வாகனங்களில் வருடாந்திர பாதுகாப்பு அம்சங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் இராசாமணி தலைமையில் ஆய்வு செய்யப்பட்டது.

திருச்சி மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி வாகனங்களும் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி தமிழக அரசின் உத்தரவுப்படி ஒவ்வொரு ஆண்டும் ஆய்வு செய்யப்படுகிறது.வரும் கல்வியாண்டு ஜூன் முதல் வாரத்தில் தொடங்கப்படவுள்ளது. தனியார் பள்ளிகள் மற்றும் அனைத்து பள்ளி வாகனங்களும் முறையாக பராமரிக்கப் படுகிறதா ஆய்வு செய்யப்படுகிறது. குழந்தைகளின் பாதுகாப்பு அம்சங்கள் 100% உறுதி செய்யப்படும் அனைத்து பள்ளி வாகனங்களும் இந்த மாத இறுதிக்குள் ஆய்வு செய்து முடிக்கப்படும்.

பள்ளி வாகனங்கள் ஆய்வை வருவாய் துறை மற்றும் இதர துறைகள் மூலம் கண்காணிக்கப்படும். பள்ளி வாகனஒட்டுனர்களுக்கு உடல் தகுதி, கண் பரிசோதனை போன்றவை ஆய்வு செய்யப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் பள்ளி வாகனங்களின் வருடாந்திர பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது.இந்த ஆய்வில் பாதுகாப்பில்லாத வகையில் இயக்கப்படும் வாகனங்களை தகுதி நீக்கம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி ஆண்டுதோறும் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி வாகனங்கள் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கொண்ட குழுவினரால் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன

அந்த வகையில் திருச்சி மாவட்ட போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட பள்ளி வாகனங்களில் வருடாந்திர பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

திருச்சி மேற்கு மற்றும் மணப்பாறை போக்குவரத்து துறை அலுவலகத்திற்கு உட்பட்ட 152 வாகனங்கள் இன்று பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் 17 வாகனங்கள் குறைபாடுகள் கண்டறியப்பட்டு தகுதி சான்று தற்காலிமாக ரத்து செய்யப்பட்டது. இன்று மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பள்ளி வாகனங்களும் முதலுதவி பெட்டி, அவசர கால வழிகள் உள்ளதா, டயர் மற்றும் பிரேக் திறன் ஆகியவற்றில் குறைபாடு இருப்பின் பள்ளி வாகனங்களின் அனுமதி ரத்து செய்யப்படும்.

ஆய்வின் போது பள்ளி வாகனஒட்டுநர்களுக்கு Dr.அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் மருத்துவனை செய்யப்பட்டு 152 ஒட்டுநர்களில் 16 ஒட்டுநர்க்கு கண் குறைபாடு கண்டறியப்பட்டு மேல் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டு அந்தந்த பள்ளி தாளாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஒட்டுநர்களுக்கு தீ தடுப்பு நடவடிக்கை குறித்து தீயணைப்பு கருவிகள் மூலம் தீயை எப்படி அணைப்பது தொடர்பாக செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

மேலும், ஆய்வின் போது சார் ஆட்சியர் கமல் கிஷோர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன், திருச்சி சரகம் துணை போக்குவரத்து ஆணையர் உமாசக்தி, உதவி காவல்துறை ஆணையர் அருணாச்சலம், தீயணைப்பு மீட்பு பணிகள் துறை உதவி மாவட்ட அலுவலர் கருணாகரன், மணப்பாறை காவல் துணை கண்காணிப்பாளர் ஆசை தம்பி, மணப்பாறை மோட்டார் வாகனம் ஆய்வாளர் உமாமகேஸ்வரி, மேற்கு வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் அனிதா, முகமது மீரா ஆகியோர் உடன் இருந்தனர்

Apr 27, 2018

திருச்சி பள்ளி கல்வி துறை அமைச்சர் பேட்டி

திருச்சி மாவட்ட பள்ளிக் கல்வித்துறை மற்றும் பொது நூலக இயக்கம் சார்பில் நூலகர்கள் மற்றும் வாசகர் வட்ட தலைவர்கள் கருத்தரங்கம், மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் தொடக்க விழா, உலக புத்தக தின போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ,பரிசளிப்பு விழா திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் மாவட்ட ஆட்சியர் ராசாமணி தலைமையில் நடைபெற்றது.


பள்ளி கல்வித்துறை அமைச்சர் திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தை தொடங்கி வைத்தார்.

விழாவில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, பாரளுமன்ற உறுப்பினர் பா.குமார்
கலெக்டர் ராஜாமணி, மாவட்ட நூலக அதிகாரி சிவக்குமார், மாணவரணி கார்த்திகேயன், அருள் ஜோதி, ஏர்போர்ட் விஜி,பொன்.செல்வராஜ்,தர்கா காஜா, திருப்புகழ், அக்தர் பெருமாள், மகாலட்சுமி மலையப்பன்
பலர் கலந்து ெகாண்டனர்.இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியில்

நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழகத்தில் உள்ள மையங்களில் நீட் தேர்வு எழுதுவதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்கொண்டு வருகிறது. அதற்கான கடிதத்தை சிபிஎஸ்சி-க்கு கடிதம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது விடுமுறை காலங்களில்  சிறப்பு வகுப்பு நடத்தும் பள்ளிகள் மீது புகார்கள் குறித்து விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார். 

Apr 26, 2018

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவள கத்தில் அமைச்சர் தங்க மணி தலைமையில் ஆய்வு கூட்டம்

திருச்சி .26.04.18.

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்
தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் திருச்சி மண்டல ஆய்வுக் கூட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் தங்கமணி தலைமையில் தற்போது நடைபெறுகிறது.
அமைச்சர்கள் வளர்மதி, வெல்ல மண்டி நடராஜன்
M.P. குமார், ஆட்சியர் கு.ராசா மணி பங்கேற்பு
கூட்டத்தில் பேசிய,மின்சாரத் துறை
அமைச்சர்,தங்கமணி
மின்வாரியத்துறை அதிகாரிகள் மாவட்டம் தோறும் சென்று ஆய்வு நடத்தினர். அந்த ஆய்வின் அடிப்படையில் துணை மின் நிலையங்கள் அதிகமாக தேவை என கண்டறியப்பட்டு
அரசும் உடனடியாக  132 துணை மின் நிலையங்கள் அமைக்க தமிழக முதல்வர்  110 விதியின் கீழ் அறிவித்தார்.
துணை மின் நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது.டெல்டா மாவட்டங்களான
திருச்சி தஞ்சையில் விவசாயம் பிரதானமாக இருந்து வருவதால் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது தமிழகத்தில் மின்வெட்டே இல்லை  என்றாலும் ஒரு சில பகுதிகளில் அரை மணி நேரம் மின்சாரம் தடைபட்டாலே பொது மக்கள் அது குறித்து என்னிடமே கேள்வி கேட்கும் அளவிற்கு விழிப்புணர்வு பெற்றுள்ளனர்.

Apr 20, 2018

திருச்சி ஆலோசனைக் கூட்டம்

 திருச்சி மலைக்கோட்டை பகுதி கழகம் சார்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
நடைபெற்ற கூட்டத்தில் மாநகர மாவட்ட செயலா ளர் மற்றும் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் உறுப்பினர் அட்டை வழங்கிய போது
 இந்நிழ்ச்சியில் மாநில வக்கீல் பிரிவு இணைச் செயலாளர் வக்கீல் ராஜ்குமார், மாநகர மாவட்ட துணைச் செயலாளர் ஜாக்குலின், மாநகர எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் பத்மநாபன்,  பகுதி கழக செயலாளர்கள் அன்பழகன், கலீல் ரஹ்மான், என்.எஸ்.பூபதி, எம்.ஆர்.ஆர். முஸ்தபா, மாநகர பொருளாளர் மலைக்கோட்டை அய்யப்பன், நத்தர்வலி வலி வார்டு பொறுப்பாளர் தர்கா காஜா, மாநில செயற்குழு உறுப்பினர் டாக்டர் தமிழரசி, டாக்டர் சுப்பையா, நத்தர்வலி தர்காவின் பரம்பரை அறங்காவலர் தர்கா அமீன், மாநகர மாவட்ட மாணவரணி செயலாளர் கார்த்திகேயன், முன்னாள் கோட்ட தலைவர் மனோகர், கேபிள் முஸ்தபா, ஜே.எல். ஜமால், இலியாஸ், மொய்தீன்,ஜவஹர்லால் நேரு, கட் பீஸ் ரமேஷ், காசிப்பாளையம் சுரேஷ், வீரமுத்து, சாந்திதேங்காய்கடைகங்காதரன், தியாக ராஜன், அக்தர் பெருமாள் டி.எஸ்.ராமலிங்கம் சீரங்கம் .பகுதி செயலாளர் டைமன் திருப்பதி, சகாாாாதேவன் பாண்டி, வணக்்க்கம் சோமு
மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Mar 29, 2018

திருச்சி போக்குவரத்து துறையினக்கு அமைச்சசர்கள் பாராட்டு

திருச்சி        29.3.18


இந்தியன் ஆயில் நிறுவனம் மற்றும் அரசு போக்குவரத்துக் கழகம் ( கும்பகோணம்) இணைந்து நடத்தும் டீசல் செயல் திறனில் சாதனை புரிந்த பணியாளர்களுக்கு பரிசு வழங்குதல்

டீசல் செயல் திறன் அதிகரிப்பதால் விபத்துக்கள் ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது. உதிரி பாகங்கள் தேய்மானம் குறைவதோடு டயர் உழைப்புத் திறன் அதிகரிக்கிறது. இதன் மூலம் போக்குவரத்துக் கழகம் டயர் உழைப்புத் திறனில் அதிகபட்சமாக 2.51 என்ற அளவில் தமிழகத்திலுள்ள அனைத்து போக்குவரத்துக் கழகங்களிலும் முதன்மை இடத்தில் உள்ளது.

கும்பகோணம் கோட்டத்துக்கு உட்பட்ட 6 மண்டலங்களிலும் இருந்து 3 4 5 டிரைவர்கள், 59 கண்டக்டர்கள், 36 தொழில் நுட்பப் பணியாளர்கள், 18 டீசல் பொறுப்பாள்கள்,6 ஓட்டுநர் கண்காணிப்பாளர்கள், 18 உதவி மற்றும் இளநிலை பொறியாளர்கள், 12 கிளை மேலாளர்கள் 6 உதவி மேலாளர்கள் என 500 பேருக்கு சாதனையாளர் பரிசுகளை திருச்சி கோஹினூர் தியேட்டர் அருகே உள்ள போக்குவரத்து கழகத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.

Mar 17, 2018

திருச்சி சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

திருச்சி சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி:

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.விரைவில் அமைக்கப்படும் என மத்திய அரசும் தெரிவித்துள்ளது.

உடலுறுப்பு தானத்தில் தனியார் மருத்துவமனைக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதில்லை,பதிவு மூப்பு அடிப்படியில் தான் உடலுறுப்புகள் வழங்கப்படுகிறது.

தமிழகம் உடலுறுப்பு தானத்தில் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக இருக்கிறது.

ஏர்வாடியில் கண் பார்வை பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் அனைவரும் நலமுடன் இருக்கிறார்கள் என்றார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் வெல்ல மண்டி நடராஜன் , வளர்் மதி, பாராளுமன்ற உறுப்பினர் குமார், தலைமை மருத்துவர்ககள் சம்சத் பேகம், அனிதா சித்த மருத்துவர் காமராஜ் மற்றுும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்

திருச்சி வண்ணத்துப்பூச்சி பூங்காவில் மரம் நடுவிழா


திருச்சி ஸ்ரீீீரங்க ம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட வண்ணத்துப் பூச்சி பூங்்கா்காவில் மார்க்கன்று நடும்்் விழா
நடைபெற்றறது அமைச்சர்கள் வெல்்ல்ல மண்டி நடராாஜன் அமைச்சர் வளர்மதி பாாரளுமன்ற்ற உறுப்பினர் குமார் மாவட்டட ஆட்சித் தலைவர் இராாாசா மணி மரக்கன்றுகள் வைத்தனர்

இந்நிழ்ச்சியில் மாநில வக்கீல் பிரிவு இணைச் செயலாளர் வக்கீல் ராஜ்குமார், மாநகர மாவட்ட துணைச் செயலாளர் ஜாக்குலின், மாநகர எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் பத்மநாபன்,  பகுதி கழக செயலாளர்கள் அன்பழகன், கலீல் ரஹ்மான், என்.எஸ்.பூபதி, எம்.ஆர்.ஆர். முஸ்தபா, மாநகர பொருளாளர் மலைக்கோட்டை அய்யப்பன், நத்தர்வலி வலி வார்டு பொறுப்பாளர் தர்கா காஜா, மாநில செயற்குழு உறுப்பினர் டாக்டர் தமிழரசி, டாக்டர் சுப்பையா, நத்தர்வலி தர்காவின் பரம்பரை அறங்காவலர் தர்கா அமீன், மாநகர மாவட்ட மாணவரணி செயலாளர் கார்த்திகேயன், முன்னாள் கோட்ட தலைவர் மனோகர், கேபிள் முஸ்தபா, ஜே.எல். ஜமால், இலியாஸ், மொய்தீன்,ஜவஹர்லால் நேரு, கட் பீஸ் ரமேஷ், காசிப்பாளையம் சுரேஷ், வீரமுத்து, சாந்திதேங்காய்கடைகங்காதரன், தியாக ராஜன், அக்தர் பெருமாள் டி.எஸ்.ராமலிங்கம் சீரங்கம் .பகுதி செயலாளர் டைமன் திருப்பதி, சகாாாாதேவன் பாண்டி
மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Mar 16, 2018

Trichy Central minister program

பாதுகாப்புத்துறைக்கான உபகரணங்கள் உள்நாட்டில் தயாரிக்க முன்வர வேண்டும்–அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்


திருச்சியில் தொழில்துறையினர் நடத்தும் கருத்தரங்கில் தமிழக அமைச்சர்கள், துப்பாக்கி  தொழிற்சாலையின் உயர்அதிகாரிகள் இந்தக்  கருத்தரங்கில் கலந்து கொண்டு தொழில்  வளர்ச்சிக்கான கருத்துக்களைப் பரிமாறி  கொண்டனர்.

இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட மத்திய  பாதுகாப்பு துறை  அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்  பேசுகையில்  :

இந்தியஅளவில் உள்ள  தொழில்களில் மத்திய  அரசின்கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களில்தனியார் மயமாக்குதல்  என்பது எந்தவகையில் வளர்ச்சி பாதையை நோக்கிப்  பயணிக்கும்என்பது குறித்த  விளக்கங்களைத்தெரிவித்தார்

பொது நிறுவனங்கள்  தற்போது சிறு தனியார் நிறுவனங்களை நம்பி தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆகவே பொதுத்துறையில்தனியார்  தலையீடு இருந்தால்  வேலைவாய்ப்புஅதிகரிக்கும்,  பொருட்களின் உற்பத்தி, பொருட்களின் தரத்தில் கூடுதல் கவனம்,  என்றும், பல வளர்ச்சிகள்  உள்ளதாக கூறினார்.

திருச்சியைப் பொறுத்தவரை பாரத மிகுமின்நிலையம்,  துப்பாக்கி தொழிற்சாலை,  உள்ளிட்டவற்றிலும் தனியார் வசம் ஒப்படைக்கப்படும் என்று  அறிவிக்கப்பட்டது. அதற்கான  பணிகள் நடைபெற்று வருகிறது.  பாரதமிகு மின் நிலையத்தைச்சுற்றி உள்ளசிறு, குறு தொழில்  முனைவோர்கள்தங்களுடைய  திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்களுக்கும்  ஒரு வாய்ப்புஇந்தத் தனியார் மயமாக்குதல் மூலம் நடக்கும்என்று கூறினார்.

ராணுவ தளவாடங்களை தமிழகத்தில் உற்பத்தி செய்யவும், தேஜஸ் விமானங்களை போர் விமானங்களாக தயாரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளார். பாதுகாப்புத்துறைக்கான உபகரணங்கள் உள்நாட்டில் தயாரிக்க முன்வர வேண்டும்

தனியார் தலையீடு இல்லாமல்பொதுத்துறைநிறுவனங்கள் செயல்பட முடியாது.  பலதிறமையானவர்களை  தனியார் மயாக்குதல் மூலம் பயன்படுத்தி கொள்ள முடியும், குறிப்பாக  இந்திய இராணுவத்திற்கும்,  தமிழககாவல்துறைக்குமான  தேவையை தற்போதுஉள்ள இந்தபொதுத்துறை நிறுவனத்தால்கொடுக்க முடியவில்லை. ஆனால் தனியாரின்தலையீடு இருந்தால் அதை நாம் ஈடுசெய்யமுடியும். நாங்கள் எதையும் விற்கவில்லைஅனைத்தையும் உயிர்ப்பிக்க முயற்சிசெய்கிறோம். என்று தெரிவித்தார். நம்முடைய நாட்டில் பாதுகாப்பு துறையை தனியார் மூலம் வலிமையான நிறுவனங்களாக மாற்ற முடியும் என்பது தான் மத்திய அரசின் கொள்கை எனவே அதனை செயல்படுத்த தான் இதுபோன்ற கருத்தரங்குகள் மூலம் மக்களிடம் தனியார் மயமாக்குதலை பற்றி எடுத்துக்கூறி வருகிறோம் என்று கூறினார்.

தொழிற் வளர்ச்சிக்கான சர்வதேச மாநாடுநடைபெற உள்ளது அதில் 60 நாடுகள் மற்றும்75 நிறுவங்கள் கலந்து  கொள்வதாகவும் இதில்50%  மானியத்துடன் வழங்கப்படும் என்றும்தெரிவித்தார். மேலும் அரசு  மற்றும் தனியார்நிறுவனங்கள் நன்று வளர்ந்து Make in indiaதிட்டத்தின் கிழ் கொண்டு வந்து நாட்டைமுன்னேற்ற பாதையில் கொண்டு போவதே எங்கள் நோக்கம் எனவும்  தெரிவித்தார்.இந்தியா  ஏற்றுமதியில் சிறந்து விளங்கஓத்துழைக்குமாறும் வலியுறுத்தினார்..

Mar 14, 2018

திருச்சி 14.03.18. மாவட்ட அளவிலான தொழிற் முனைவோர் விழிப்புணர்வு முகாம்.

திருச்சி  14.03.18.

மாவட்ட அளவிலான தொழிற் முனைவோர் விழிப்புணர்வு முகாம்.

மாவட்ட அளவிலான தொழிற் முனைவோர் விழிப்புணர்வு முகாம் திருச்சியில் உள்ள தனியார் விடுதியில் நடைப்பெற்றது.இதில் கலந்து கொண்ட திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் கு.இராசா மணி பேசிய போது தமிழக அரசு புதிதாக அமைத்திடும் தொழில்களை ஊக்கப்படுத்தவும் அதன் மூலம் வேலை வாய்ப்பினை பெருக்கிடவும் மானியத்துடன் கூடிய திட்டங்களை செயல்படுத்துவதாகவும். திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பின் தங்கிய வட்டாரங்களிலும் புதியதாக தொழிலகங்கள் அமைக்கப்பட்டு அதிக பட்சம் ரூ.30 இலட்சம் மூலதன மான்யமாக வழங்கப்பட்டு வருவதாகவும்,புதியதாக அமைக்கப்பட உள்ள தொழிலங்களுக்கு மின் மான்யம், ஜி.எஸ்.டி வரி மான்யம், ஜெனரேட்டர் மான்யம் வழங்கப்படுவதாகவும், மேலும் படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் சுயமாக தொழில் அமைத்திட ரூ.10 இலட்சம் வரை வங்கி கடனுதவியும் மான்யமாக 1.25 இலட்சம் அரசு வழங்குகிறது. தமிழக அரசு பட்டம் மற்றும் பட்டயம் படித்துள்ள இளைஞர்களுக்கு ஏற்ற தொழில்களை ஒரு கோடி ரூபாய் வரையிலான மதிப்பீட்டில் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தினை செயல்படுத்தி வருகிறனர். இத்திட்டத்தின் கீழ் ரூ.25 இலட்சம் மான்யம் வழங்கபட்டு கடனுக்கான வட்டி விகிதத்தில்  மூன்று விழக்காடு மான்யமும் வழங்கப்படுகிறது. இதில் திருச்சி மாவட்டத்தில் ஜவுளிப் பூங்கா அமைக்க 10 ஏக்கர் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் விரைவில் தொழிற் வளர்ச்சிடையும் எனவும்
 இந்தியன் வங்கி சார்பாக தொழிற் செய்ய 80 ஆட்டோக்கள் வழங்கப்படுகிறது. மேலும் மணப்பாறையில் 1000 ஏக்கர் இடம் ஒதுக்கி தொழிற்பேட்டை அமைய உள்ளதாகவும் கூறினார். புதிதாக தொழிற்முனைவோர்கள் இந்த திட்டங்களின் கீழ் பயன் பெற்று தங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்திட முன்வருமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டு கொண்டார்.

Mar 5, 2018

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் புதுத்தெரு, அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் இன்று காலை கும்பாபிஷேகம் நடைப்பெற்றது.

திருச்சி       

ஸ்ரீரங்கம்,அங்காள பரமேஸ்வரி கோவில் கும்பாபிஷேக விழா - திரளான பக்தர்கள் பங்கேற்பு

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் புதுத்தெரு, அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் இன்று காலை கும்பாபிஷேகம் நடைப்பெற்றது.

கும்பாபிஷேக நிகழ்ச்சி நேற்று முன்தினம் காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து அன்று காலை காவிரி ஆற்றில் தென்கரையில் மேல சிந்தாமணி படித்துறை பகுதியில் இருந்து பக்தர்கள் புனித நீர் எடுத்து வந்தனர். மாலையில் கால யாக பூஜையும் தொடர்ந்து நேற்று காலை கால யாக பூஜையும், பிரசாதம் வழங்குதல் நடைப்பெற்றது. மாலையில் மூன்றாம் கால யாக பூஜையும் நடைப்பெற்றது. இன்று காலை நான்காம் கால யாக பூஜையும், மஹா பூர்ணாஹீதியுடன் கலசங்கள் புறப்பாடு நடைப்பெற்றது.

அதனை தொடர்ந்து திருக்குடம் புறப்பாடு செய்யப்பட்டு கோவில் யாக சாலை பிரவேஷம் செய்யப்பட்டது. தொடர்ந்து கோவில் விமானத்திற்கும், மூலஸ்தானத்திற்கும் கும்பாபிஷேகம் நடைப்பெற்றது. பின்னர் தீபாராதனை செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. இவ்விழாவில் ஏராளமானோர் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

Mar 3, 2018

திருச்சி 3.3.18 முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு 200பேருக்கு அன்னாதம் மற்றும் இலவச வேட்டி சேலைகளை அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி வழங்கினார்

திருச்சி      3.3.18

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு  200பேருக்கு அன்னாதம் மற்றும் இலவச வேட்டி சேலைகளை  அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி வழங்கினார்.


திருச்சி மாநகர் மாவட்ட கழக சார்பில் அனைத்து வார்டுகளிலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு அன்னதானம், நலத்திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகளை செய்யப்பட்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்கள். 

அதன் ஒரு பகுதியாக இன்று  திருச்சி பெரியகடை வீதி சந்துக் கடை பகுதியில் மாநகர் மாவட்ட செயலாளர் மற்றும் அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் தலைமையில்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 70-வது பிறந்த நாளை முன்னிட்டு    எழை எளிய மக்கள் 200 பேருக்கு மதியம் உணவுகள் மற்றும் 200 பேருக்கு இலவச வேட்டி மற்றும் சேலைகளை  அமைச்சர்கள்  வெல்லமண்டி என்.நடராஜன், எஸ். வளர்மதி ஆகியோர் தொடங்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியானது சந்துகடை வார்டு வட்ட பிரதிநிதி  சந்துரு  ஏற்பாட்டில் செய்யப்பட்டிருந்தது. 

இந்த நிகழ்ச்சியில் மாநில வக்கீல் பிரிவு இணைச் செயலாளர் வக்கீல் ராஜ்குமார், மாநகர மாவட்ட துணைச் செயலாளர் ஜாக்குலின், மாநகர எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் பத்மநாபன்,  பகுதி கழக செயலாளர்கள அன்பழகன், கலீல் ரஹ்மான், என்.எஸ்.பூபதி, எம்.ஆர்.ஆர். முஸ்தபா, மாநகர பொருளாளர் மலைக்கோட்டை அய்யப்பன், நத்தர்வலி வலி வார்டு பொறுப்பாளர் தர்கா காஜா, மாநில செயற்குழு உறுப்பினர் டாக்டர் தமிழரசி, டாக்டர் சுப்பையா, நத்தர்வலி தர்காவின் பரம்பரை அறங்காவலர் தர்கா அமீன், மாநகர மாவட்ட மாணவரணி செயலாளர் கார்த்திகேயன், முன்னாள் கோட்ட தலைவர் மனோகர், கேபிள் முஸ்தபா, ஜே.எல். ஜமால், இலியாஸ், மொய்தீன்,ஜவஹர்லால் நேரு, கட் பீஸ் ரமேஷ், காசிப்பாளையம் சுரேஷ், வீரமுத்து, சாந்திதேங்காய்கடைகங்காதரன், தியாக ராஜன், அக்தர் பெருமாள் டி.எஸ்.ராமலிங்கம்ம
மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

 அமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டு சால் அணிவித்து மரியாதை செய்யப்பட்டது

திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன்பாட்டுக்கு வரும் என மாவட்ட ஆட்சியர் ராஜாமணி தெரிவித்துள்ளார்

திருச்சி 3.3.18
திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன்பாட்டுக்கு வரும் என மாவட்ட ஆட்சியர் ராஜாமணி தெரிவித்துள்ளார்

திருச்சி திருவாணைக்காவல் மேம்பால பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் ராஜாமணி இது குறித்து தெரிவித்தது திருச்சி மக்களின் போக்குவரத்து நெரிசலை பூர்த்தி செய்யும் வகையில் சென்னை-திருச்சி-திண்டுக்கல் சாலையில் (தற்போது மாநில நெடுஞ்சாலையில்) உள்ள குறுகிய திருவாணைக்காவல் ரயில்வே மேம்பாலத்திறற்கு மாற்றாக நான்கு வழித்தட புதிய மேம்பாலம் கட்ட தமிழக அரசால் உத்திரவிடப்பட்டிருந்தது அதன்படி இப்பாலம் பணிகள் சென்னை- திருச்சி சாலையில் நான்கு வழித்தடமாகவும் கல்லணை மார்க்கத்தில் மூன்று வழித்தட இணைப்பு பாலமாகவும் அமைக்கப்பட்டுவருகிறது.இப்பால பணி சென்னை திருச்சி கல்லணை ஆகிய மூன்று சாலைகளையும்  இணைக்கும் சாலையாக  உள்ளது
இப்பாலம் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தால் 2.10 லட்சம்மக்கள் தொகை கொண்ட திருவரங்கம்ääதிருவாணைக்காவல் மற்றும் லால்குடி புள்ளம்பாடிதிம்மராய சமுத்திரம் மேலூர் திருச்சி மாநகரம் மற்றும் கரூர் குளித்தலை நகரத்துடன் இணைக்கும்.தற்போது திருவானைக்காவல் பழைய மேம்பாலத்தை அகற்றிவிட்டு புதிய மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது
இப்பால வேலைப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது இப்புதிய மேம்பாலத்தின் நீளம் 1430.284 மீட்டரும் 17.20 அகலமும் பாலப்பகுதியில் மட்டும் கட்டுமான பணிகள் 907.76 மீட்டரும் பாலத்தின் ஓடுதள அகலம் 7.50மீட்டரும் (நான்கு வழிச்சாலை )ஆகும் 
இப்புதிய மேம்பாலத்திற்கு 48 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளது பாலத்தின் மீதம் உள்ள பணிகளை முடிக்க துரித நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்பட்டு முடிபெரும் தறுவாயில் உள்ளது என்றும் அதனால் சென்னை- திருச்சி திண்டுக்கல் சாலையை இணைக்கும் வகையில் திருவானைக்காவல் மேம்பாலம் ரூ47.3கோடி மதிப்பில் கட்டப்பட்டு தற்போது 85 சதவீத பணிகள் முடிவுற்ற நிலையில் மீதமுள்ள பணிகள் முடிவுற்ற நிலையில் மீதமுள்ள பணிகள் விரைந்து முடிக்க நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் செயல்பட வேண்டுமெனவும் தடுப்பு சுவர் மற்றும் அணுகு சாலைகள் அமைக்கும் பணி முடிந்தவுடன் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.