தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் கோட்டம், மணிகண்டம் ஒன்றியத்தில், ராம்ஜி நகர் பகுதியில் புங்கனூர் கிராமத்தில் 750 கால்நடைகளுக்கு இலவச கோமாரி நோய் தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்றது. இதில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதி அவர்கள் கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்தார். அருகில் புங்கனூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத் தலைவர் சின்னத்துரை, புங்கனூர் செல்வம், அக்தர் பெருமாள் மற்றும் கால்நடை மருத்துவர்கள் உள்ளனர்.