ஜெயலலிதா தரப்பில் மொத்தம் 4 மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்று அப்பீல் மனுவாகும். அந்த அப்பீல் மனுவில், சிறப்பு கோர்ட்டு நீதிபதி ஜான் மைக்கேல் டிகுன்கா மிகவும் தவறான தீர்ப்பை வழங்கியுள்ளார். நெறி தவறிய அந்த தண்டனையை குறைக்க வேண்டும் என்று கூறப் பட்டுள்ளது.
மற்றொரு அப்பீல் மனுவில் ’சிறப்பு கோர்ட்டு அளித்த ரூ.100 கோடி அபராதம், 4 ஆண்டுகள் தண்டனை ஏற்புடையதல்ல. எனவே இந்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மூன்றாவது மனு ஜாமீன் மனுவாகும்.அந்த ஜாமீன் மனுவில், நான் அரசியல் கட்சியின் தலைவர். எனக்கு 66வயது ஆகிறது. சர்க்கரை வியாதி, ரத்தக்கொதிப்பு நோய் உள்ளதால் தொடர்ந்து சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். எங்கும் தப்பி ஓட மாட்டேன், சாட்சிகளையும் கலைக்க மாட்டேன்.. ஜாமீன் மனுவில் ஜெயலலிதா உறுதி அளித்துள்ளார். பெங்களூர் சிறைச்சாலையில் போதிய பாதுகாப்பு இல்லை என்பதால் அச்சுறுத்தல் உள்ளது. மேலும் , 100 கோடி அபராதம் என்பது நிறைவேற்ற முடியாத நிபந்தனை. நான் ஒரு சாதாரண நபர் அல்ல. மூன்று முறை தமிழகத்தின் முதல்வராக இருக்கிறேன். தமிழ்நாட்டில் ஒரு கோடி அதிமுக தொண்டர்கள் உள்ளனர். அவர்களிடத்தில் எனக்கு நல்ல பெயர் இருக்கிறது. ஜாமீனில் சென்றால் எங்கும் தப்பி ஓடமாட்டேன். வெளியே சென்றால் சாட்சிகளை கலைக்க மாட்டேன் என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
நான்காவது மனுவில் தன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை கர்நாடகா ஐகோர்ட்டு மீண்டும் நடத்தி மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் தனது ஜாமீன் மனு மீதான விசா ரணையை நாளை செவ் வாய்க்கிழமையே எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.