சொத்து குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை பெங்களூர் கோர்ட்டு வழங்கியதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. தொண்டர்கள் தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜெயலலிதா மீதான வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை கண்டித்து தென்சென்னை தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் வி.என். ரவி தலைமையில் ஆயிரக்கணக்கானோர் கோயம்பேட்டில் நேற்று உண்ணா விரதம் மேற்கொண்டுள்ளனர்.
அந்த வகையில் தென்சென்னை தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் விருகை. வி.என். ரவி தலைமையில் கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணையம் அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த உண்ணாவிரதத்திற்கு மைத்திரேயன் எம்பி, அமைப்பு செயலாளர் பொன்னையன், ஓட்டுநர் அணி மாநில செயலாளர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த உண்ணாவிரதத்தில் எம்எல்ஏக்கள் ஜி. செந்தமிழன், எம். கே. அசோக், மயிலை ராஜலெட்சுமி, முன்னாள் எம்எல்ஏ பி.எஸ். அண்ணாமலை, சென்னை மாநகராட்சி சுகாதார நிலைக்குழு தலைவர் ஆ. பழனி, கவுன்சிலர்கள் எம்.எம். பாபு, நூர்ஜகான், என்.எஸ். மோகன், முன்னாள் கவுன்சிலர்கள் சொ. கடும்பாடி, ராஜேந்திர பாபு, பாசறை மாவட்ட செயலாளர் விஜயகுமார், நிர்வாகிகள் சைதை சாரதி, தி.நகர் ஆறுமுகம், எம்.ஜி.ஆர் நகர் அன்பு, மயிலை ராஜேஷ்கண்ணா உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
சென்னையில் நேற்று 3–வது நாளாக தொண்டர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். வடசென்னை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பாலகங்கா ஏற்பாட்டில் 4 தொகுதிகளில் உண்ணாவிரதம் நடைபெற்றது.
எழும்பூர் பகுதி செயலாளர் மகிழன்பன் தலைமையில் பெரம்பூர் பேரக்ஸ் ரோட்டிலும், துறைமுகம் பகுதி செயலாளர் இருசப்பன் தலைமையில் மின்ட் அரசு அச்சகம் அருகிலும் உண்ணாவிரதம் நடந்தது.
திரு.வி.க.நகர் பகுதி செயலாளர் சுகுமார் தலைமையில் மகாலட்சுமி தியேட்டர் அருகிலும், ராயபுரம் பகுதி செயலாளர் ராமஜெயம் தலைமையில் ஜி.ஏ.ரோட்டிலும் உண்ணாவிரதம் நடந்தது. இதில் கவுன்சிலர்கள் இம்தியாஸ், சந்தானகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திரு.வி.க.நகர் பஸ் நிலையம் அருகில் சென்னை மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் அ.தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் தலைமை கழக பேச்சாளர் தரங்கை கண்ணன், கவுன்சிலர் உஷா பெருமாள், பெருமாள், ஆர்.கே.சந்திரன், அசோக், யுவராஜ், செல்வி, கோமதி, குமார், கோபி, ரவி, ஆனந்த், பாஸ்கர், முருகேஷ், பிரகாஷ், ஜெயின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பெரம்பூர் பகுதி செயலாளர் லட்சுமி நாராயணன் தலைமையில் மூலக்கடை சந்திப்பில் உண்ணாவிரதம் நடந்தது.இதில் அவைத்தலைவர் மதுசூதனன், மாவட்ட செயலாளர் வெங்கடேஷ்பாபு, வட்ட செயலாளர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தென்சென்னை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கோயம்பேடு பஸ் நிலையம் எதிரில் மாவட்ட செயலாளர் வி.என்.ரவி தலைமையில் உண்ணாவிரதம் நடந்தது.
இதில் மேயர் சைதை துரைசாமி, முன்னாள் அமைச்சர் பொன்னையன், மைத்ரேயன் எம்.பி., எம்.எல்.ஏக்கள் செந்தமிழன், அசோக், ராஜலட்சுமி, டாக்டர் அழகு தமிழ்செல்வி, வே.சோலை, கவுன்சிலர் மலைராஜன், வி.என்.சேகர், தனசேகர், அரி உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற் றனர்.
மாதவரம் மூலக்கடையில் பெரம்பூர் பகுதி செயலாளர் லட்சுமி நாராயணன் தலைமையில் அ.தி.மு.க.வினர் உண்ணாவிரதம் இருந்தனர்.
இதில் 150 பெண்கள் உள்பட 600–க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். மூலக்கடை சக்தி, முன்னாள் கவுன்சிலர் எறும்புலி வடிவேல் ஆகியோரும் பங்கேற்றனர்.