Dec 22, 2014

திருப்பூர் அருகே புது வாழ்வு திட்டத்தில் அரசின் நல உதவிகளை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் வழங்கினார்.

ஜெயலலிதா வழிகாட்டுதலின்படி மக்களை தேடி சென்று சேவை செய்யும் அரசாக அண்ணா திமுக அரசு திகழ்கிறது என அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் ஒன்றியம், கேத்தனூர் ஊராட்சியில் தமிழக அரசின் சார்பில் 97 பயனாளிகளுக்கு ரூ.93.27 லட்சம் மதிப்பில்  97 மாற்று திறனாளிகளுக்கான உபகரனங்கள், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு நிதியுதவி உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்கும் விழா  ஊராட்சி ஒன்றிய மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன்,பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:-
தேர்தல் நேரத்தில் கொடுக்கும் வாக்குறுதிகளை எந்த அரசியல் கட்சிகளும் நிறைவேற்றிய வரலாறு இல்லை.ஆனால் இந்தியாவில் மக்கள் முதல்வர் ஜெயலலிதா தேர்தலின் போது அவர் அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி உள்ளார். தமிழகத்தில் உள்ள ஏழரை கோடி மக்களும் ஜெயலலிதா அரசில் ஏதாவது ஒரு நலத்திட்ட உதவியை நிச்சயம் பெற்று இருப்பார்கள்.அதற்கு உதாரணம் கேத்தனூர் ஊராட்சியில் அனைத்து கிராமங்களும் இன்று சிறப்பாக  இருக்கிறது என்பதற்கும், இந்த ஊராட்சி தன்னிறைவு பெற்ற ஊராட்சியாக திகழ்வதற்கும் காரணம் ஜெயலலிதாவின் திட்டங்கள்.அனைத்தும் தொலைநோக்கு சிந்தனையுடன் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது அதை நீங்கள் உணர வேண்டும். அரசை தேடி மக்கள் சென்ற காலம் போய் ஜெயலலிதா வழி காட்டுதலின்படி இன்று மக்களை தேடி சென்று சேவை செய்யும் அரசாக அண்ணா திமுக அரசு திகழ்கிறது.
இந்த ஊராட்சியின் மந்திரிபாளையம் பகுதிக்கு 15 நாட்களில் பட்டா வழங்கப்படும். முதியோர் ஓய்வூதிய தொகை 210 பேருக்கு இந்த கிராமத்தில் வழங்கப்படுகிறது.
ஜெயலலிதா ஆட்சி பொறுப்பேற்ற பின்னர்தான் 17 ஊராட்சிகளில் ,2468 குடும்பங்கள் மேம்பட புது வாழ்வு திட்டம் வாய்ப்பு அளிக்கிறது. புது வாழ்வு திட்டம் மூலம் 11218 பயனாளிகள்  பயன் பெற்று இருக்கிறநற். அவர்களுக்கு மறுவாழ்வு அளித்தது ஜெயலலிதாவின் திட்டம் தான். ரூ.15.60 கோடி செலவில் புது வாழ்வு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 634  சுய உதவி குழுக்கள் பயன் பெற்றுள்ளது, இரு பாலருக்கும் இத்திட்டம் மூலம் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.
17 ஊராட்சிகளில் வறுமை ஒழிப்பு சங்கங்கள், கூட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. 3வது முறையாக ஜெயலலிதா ஆட்சி பொறுப்பேற்ற வுடன் 1 லட்சம் பட்டாக்களும், அடுத்த ஆண்டில் 2 லட்சம் பட்டாக்கள் வழங்கவும் அறிவித்தார். நமது மாவட்டத்தில் மட்டும் 9 ஆயிரம் பட்டாக்கள் வழங்க இலக்கு நிர்ணயித்தார். இது வரை 6 ஆயிரம் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது.,
மாற்றுத்திறனாளிகளுக்கு , வாசிப்பாளர்களுக்கு இரு மடங்கு கல்வி உதவி தொகை, ஜெயலலிதா அறிவிப்பின்படி, அவரது வழி காட்டுதலின் பேரில் வழங்கப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் மன நல காப்பகம் அமைக்க சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவித்தார். அதுவும் செயல்பாட்டுக்கு வர உள்ளது. இப்படி பல்வேறு திட்டங்களை மக்கள் பயன்பெறும் வண்ணம் செயபடுத்தும் அரசாக மக்கள் முதல்வர் ஜெயலலிதா வழிகாட்டுதல்படி செயல்படுகிற இந்த அரசு செயல்படுகிறது. என்றைக்கும் அவரது விசுவாசிகளாக நீங்கள் இருக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார்.
விழாவில் பல்லடம் எம்.எல்.ஏ., கே.பி.பரமசிவம், மாவட்ட ஊராட்சி தலைவர் எம்.சண்முகம், துணை மேயர் சு.குணசேகரன்,  பொங்கலூர் ஒன்றியக் குழுத்தலைவர் 
நிகழ்ச்சியில் பல்லடம் ஒன்றிய தலைவர் எம்.கே.ஆறுமுகம்,கரைப்புதூர் ஊராட்சி மன்ற தலைவர்கள் நடராஜன், முருகசாமி, மாவட்ட கவுன்சிலர் தண்ணீர்பந்தல் நடராஜன் உள்ளிட்ட மாவட்ட கவுன்சிலர்கள், மாவட்ட நிர்வாகிகள் கண்ணப்பன், கருவம்பாளையம் மணி, அன்பகம் திருப்பதி, மார்க்கெட் சக்திவல், வழக்கறிஞர் சுப்பிரமணியம், புத்தரச்சல் பாபு, சித்துராஜ் உள்ளிட்ட கூட்டுறவு சங்க தலைவர்கள் ஜெய்ஸ்ரீராம் கல்வி நிறுவனங்களின் தலைவர் கே.எம்.தங்கராஜ், மாவட்ட சுகாதாரத்துறை  துணை இயக்குனர் டாக்டர் ரகுபதி, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தமிழ் மொழி அமுது,உதவி அலுவலர் பாலாஜி, மற்றும் ஏ.டி.பி.கிரிதரன், அர்ஜுன், பொது மக்கள் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..



திருப்பூரில் கியாஸ் மணியம் பெற சிறப்பு முகாமை துணை மேயர் தொடங்கி வைத்தார்

திருப்பூரில், சமையல் கியாஸ் மானியத்திற்கான பதிவு செய்யும் சிறப்பு முகாமை துணை மேயர் குணசேகரன் தொடக்கி வைத்தார்.சமையல் கியாஸ் மானியத்தை பெற வாடிக்கையாளர்களுக்கு வங்கிக் கணக்கு மூலமாக வழங்கிட மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்காக, வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கு, ஆதார் அட்டை எண் ஆகியவை சமையல்கியாஸ் ஏஜென்சி விநியோக மையங்களில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், திருப்பூர் மாநகர் மாவட்டஇளைஞர் அணி செயலாளரும், மாநகராட்சி துணை மேயருமான  சு.குணசேகரன், பாரத் கியாஸ் ஏஜென்சியுடன் இணைந்து திருப்பூர் வாலிபாளையம் மாநகராட்சி பள்ளியில் கியாஸ் மானிய பதிவு முகாம் நடத்த ஏற்பாடு செய்தார். அதன்படி கியாஸ் மானிய பதிவு முகாம் நடந்தது. திருப்பூர் துணை மேயர் சு.குணசேகரன் பொதுமக்களுக்கு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அளிக்க ஏற்பாடு  செய்திருந்தார்.இதனால் ஒரே நாளில் 31-வது வார்டு பகுதியை சேர்ந்த 800 க்கும் அதிகமானோர் கியாஸ் மானியம் பெற பதிவு ,செய்தனர். இந்த முகாமில் பி.கே.எஸ்.சடையப்பன், சிவகுமார், மாப்பிள்ளை என்கிற வெங்கிடுபதி ஆகியோர் உள்ளிட்ட கியாஸ் ஏஜன்சி அலுவலர்கள் பங்கேற்றனர். வருகின்ற 23 ந் தேதி வாலிபாளையம் மாநகராட்சி பள்ளியில் மக்களின் முதல்வர் இதய தெய்வம், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், மாநகர் மாவட்ட கழக செயலாளரும், வனத்துறை அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் ஆலோசனையின் பேரில் கியாஸ் மானியத்துக்காக வங்கி கணக்கு துவங்க சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக திருப்பூர் துணை மேயர் சு.குணசேகரன் தெரிவித்தார்.


திருப்பூர் கேத்தனூர் ஊராட்சி எட்டமமநாயக்கன்பாளையத்தில், அரசின் தொகுப்பு வீடுகளையும், அந்த பகுதியின் அம்மா நகர்' பெயர் பலகையும் தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் திறந்து வைத்தார்







திருப்பூர் கேத்தனூர் ஊராட்சி எட்டமமநாயக்கன்பாளையத்தில், அரசின் தொகுப்பு வீடுகளையும், அந்த பகுதியின் அம்மா நகர்' பெயர் பலகையும் தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் திறந்து வைத்தார். திருப்பூர் கலெக்டர் கோவிந்தராஜ், பல்லடம் எம்.எல்.ஏ., பரமசிவம்,  மாவட்ட ஊராட்சி தலைவர் சண்முகம், ஊராட்சி ஒன்றிய தலைவர் ஆறுமுகம், கேத்தனூர் ஊராட்சி தலைவர் ஹரிகோபால், மக்கள் தொடர்பு அலுவலர் தமிழ் மொழி அமுது, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியில் நுண்கலை மன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியர்க்கு தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பரிசு, சான்றிதழ்களை வழங்கினார்







திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியில் நுண்கலை மன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியர்க்கு தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பரிசு, சான்றிதழ்களை  வழங்கினார்.திருப்பூர்  துணை மேயர் சு.குணசேகரன், கல்லூரி முதல்வர் ரேச்சல் நான்சி பிலிப் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், திருப்பூர் கலெக்டர் கு.கோவிந்தராஜ் பார்வையிட்டனர்



திருப்பூர், கேத்தனூர் ஊராட்சி பள்ளியில் வைக்கப்பட்டிருந்த தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், திருப்பூர் கலெக்டர் கு.கோவிந்தராஜ், பல்லடம் எம்.எல்.ஏ. பரமசிவம், மாவட்ட ஊராட்சி தலைவர் சண்முகம், திருப்பூர் துணை மேயர் குணசேகரன், கேத்தனூர் ஊராட்சி தலைவர் ஹரிகோபால் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

அ.தி.மு.க., அமைப்பு தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில் நடந்தது



அ.தி.மு.க., அமைப்பு தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் 
வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில் நடந்தது



திருப்பூர், டிச. 22-
திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள் பங்கேற்ற அமைப்பு தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், தலைமை தாங்கி  சிறப்புரையாற்றினார். அவினாசி எம்.எல்.ஏ., கருப்பசாமி, பல்லடம் எம்.எல்.ஏ., பரமசிவம், திருப்பூர் துணை மேயர் சு.குணசேகரன் ,அவைத்தலைவர்கள் எம்.சண்முகம், வெ.பழனிசாமி  அம்மா பேரவை செயலாளர் ராதாகிருஷ்ணன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 கூட்டத்தில் வனத்துரை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசும்போது கூறியதாவது:&
 மக்கள் முதல்வர் அம்மா அவர்கள் அமைச்சர்கள் கோகுல இந்திரா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரை பொறுப்பாளர்களாக நியமித்து உள்ளார்கள். அம்மா அவர்கள் தேர்தலை எப்படி நடத்த வேண்டுமென அறிவுரை வழங்கி உள்ளார்கள். இந்த தேர்தலை நீங்கள் அமைதியாக நடத்தி தர கேட்டுக்கொள்கிறேன். கட்சி நிர்வாகிகள் விட்டுக்கொடுத்து செயல்பட வேண்டும். அம்மா அவர்கள் அறிவுரைப்படி இதுவரை நல்ல முறையில் செயல்படுகிறோம். கடந்த வாரத்தில் தி.மு.க., அமைப்பு தேர்தலில் பல்வேறு தகராறுகள் நடந்ததை அறிவோம். ராணுவ கட்டுப்பாட்டுடன் நமது கழகத்தை நடத்தி வரும் அம்மா அவர்கள் மிக அமைதியான இயக்கமாக நடத்தி வருகிறார்கள். 
 அந்தந்த பகுதிகளில் கழக நிர்வாகிகள்ஆஅலோசனை நடத்தி, அரவணைத்து செல்ல வேண்டும்; நல்ல அரவணைத்து செல்லும் பொறுப்பாளர்களை நீங்களே தேர்வு செய்து கொள்ள வேண்டும். 
 பொறுப்பாளர்களை தேர்ந்தெடுக்க அம்மா அஅவர்கள் சில விதிமுறைகளை அறிவித்து உள்ளார்கள். 
அ.தி.மு.க., இடைவெளியின்றி தொடர்ந்து 5 ஆண்டுகள் இருப்பவர்கள் மட்டுமே கழக தேர்தலில் வாக்களிக்கவும், போட்டியிடவும் தகுதி பெற்றவர்கள். கழக உறுப்பினராக இருக்கும் கால கட்டத்தில் கழக வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட்டவர்கள் தகுதியற்றவர்கள்.
 இந்த தேர்தலை சிறப்பாக நடத்த விழுப்புரம் மாவட்டத்திலிருந்து பொறுப்பாளர்கள் வர உள்ளனர். அவர்களுடன் இணைந்து, இந்த தேர்தலை சிறப்பாக நடத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார்.
 இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:&
பல்லடம் சட்டமன்ற தொகுதியை மாநகர் மாவட்ட கழகத்தில் இணைந்து செயல்பட அனுமது வழங்கிய அம்மா அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொளவ்து; வருகிற அமைப்பு தேர்தலை திருப்பூர் மாநகர் மாவட்ட பகுதியில் அமைதியாகவும், சுமூகமாகவும் நடத்தி முடிப்பது. திருப்பூர் மாநகர், மாவட்ட வளர்ச்சிக்காக நிதியை வாரி வழங்கி மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் மாண்புமிகு அம்மா அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்வது. 2016 தேர்தலில் கருணாநிதியை முழுமையாக மக்கள் புறக்கணிக்கும் வண்ணம் சிறப்பாக செயலாற்றுவது, அம்மா அவர்கள் மீண்டும் முதல்வராக வேண்டி திருப்பூரில் உள்ள கோவில்கள், மசூதிகள், சர்ச்களில் தொடர் பிரார்த்தணைகள் நடத்துவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 கூட்டத்தில், தொகுதி செயலாளர் ஜே.ஆர்.ஜான், வடக்கு ஒன்றிய செயலாளர் கே.என்.விஜயகுமார், ஒன்றிய பெருந்தலைவர் சாமிநாதன்,  அண்ணா தொழிற்சங்க செயலாளர் கண்ணப்பன், எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் கருவம்பாளையம் மணி, மாணவரணி செயலாளர் அன்பகம் திருப்பதி, மருத்துவரணி செயலாளர் சீனியம்மாள், வக்கீல் அணி செயலாளர் கே.என்.சுப்பிரமணி, வீரபாண்டி சோமு, சிறுபான்மை பிரிவு செயலாளர் ஸ்டீபன்ராஜ், மீனவரணி செயலாளர் தங்கமுத்து, அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் மார்க்கெட் சக்திவேல், நல்லூர் நகர செயலாளர் டெக்ஸ்வெல் முத்து, வேலம்பாளையம் அய்யாசாமி, வி.கே.பி.மணி,அவினாசி சுப்பிரமணி, ஜெகதாம்பாள், அன்னூர் சவுகத் அலி,பட்டுலிஙம், பூலுவபட்டி பாலு, நத்தக்காட்டு மணி,  சேவூர் வேலுசாமி, சில்வர் வெங்கடாச்சலம், எச்.ஆர்.ஜெயக்குமார், முன்னாள் எம்.பி., தியாகராஜன், கருணாகரன், கண்ணபிரான், தம்பி மனோகரன், பல்லடம் சித்ரா தேவி, ஏ.எஸ்.கண்ணன், சடையப்பன், கவுன்சிலர்கள் வசந்தாமணி, கேபிள் சிவா, சுபா மோகன், ஆனந்தன், லட்சுமி, வேலுசாமி, பிரியா சக்திவேல், சத்யா, கல்பனா, பேபி தர்மலிங்கம், ஜெயந்தி, சண்முகசுந்தரம், கே.பி.சண்முகம், வேலுசாமி,செல்வம்  சின்னசாமி, கனகராஜ், சபரி, கணேஷ், பாலன், சேகர், ஈஸ்வரன், சின்னசாமி, செந்தில்குமார், பாலசுப்பிரமணியம், அமுதா, முருகசாமி, உமா மகேஷ்வரி, கனகரராஜ், கலா, செல்வி, சுஜாதா சின்னசாமி, யு.எஸ்.பழனிசாமி, சரளை ரத்தினசாமி,அன்னூர் காளியப்பன், பூண்டி விஸ்வநாதன், ராஜேஷ்கண்ணா, நீதிராஜன், பரமராஜன், ரத்தினகுமார், பெரிச்சிபாளையம் ஈஸ்வரமூர்த்தி,  செந்தில், மூர்த்தி, செல்வம், கேபிள் பாலு, ஹரிஹரசுதன், வே.சரவணன், பாஸ் என்கிற பாஸ்கரன், அசோக், உள்ளிட்டோர் பங்கேற்றனர்

திருப்பூர் ,மாநகராட்சி போயம்பாளையம் அவினாசி நகரில் ரூ. 5.25 லட்சம் மதிப்பிலான ரேசன் கடையை தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் திறந்து வைத்தார்








திருப்பூர் ,மாநகராட்சி போயம்பாளையம் அவினாசி நகரில் ரூ. 5.25 லட்சம் மதிப்பிலான ரேசன் கடையை தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் திறந்து வைத்தார். திருப்பூர் கலெக்டர் கோவிந்தராஜ், துணை மேயர் சு.குணசேகரன், மண்டல தலைவர்கள் ஜான், ராதாகிருஷ்ணன், கவுன்சிலர்கள் விஜயகுமார், ரங்கசாமி,  கண்ணப்பன், பட்டுலிங்கம், சண்முகசுந்தரம், பூளுவபட்டி பாலு, மற்றும் கருவம்பாளையம் மணி, தங்கமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

50 பேர் ரத்த தானம் அமைச்சர் எம்.எஸ்.எம் ஆனந்தன் துவக்கி வைத்தார்








திருப்பூர் ,டிச.22-

திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்காக திருப்பூர் நம்பிக்கை நமது அமைப்பு மற்றும் பிக் பஜார் சார்பில் ரத்ததான முகாம் நேற்று காலை  திருப்பூர் டவுனில் உள்ள பிக் பஜார் வளாகத்தில் நடந்தது. முகாமிற்கு நம்பிக்கை அமைப்பு மாவட்ட தலைவர் ஆடிட்டர் சரவணன் தலைமை தாங்கினார். 45 வார்டு கவுன்சிலர் கண்ணப்பன், நம்பிக்கை நிறுவனர் ரஹீம், மாநில செயலாளர் சுந்தரமூர்த்தி, பொருளாளர் பன்னீர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிக் பஜார் மேலாளர் வெங்கடேசன் வரவேற்று பேசினார். ரத்ததான முகாமை தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம் ஆனந்தன் தொடக்கி வைத்தார்.முகாமில் பிக் பஜார் ஊழியர்கள்,பொதுமக்கள் 50 பேர் ரத்த தானம் கொடுத்தனர். இதனை திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை டாக்டர் சண்முகவடிவு பெற்றுக்கொண்டார். இதைதொடர்ந்து நடந்த ரத்த பரிசோதனை முகாமை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.தங்கவேல் தொடக்கி வைத்தார். இதில் 79 பேருக்கு ரத்த வகை கண்டறியப்பட்டது. நிகழ்ச்சியில் மண்டலத்தலைவர்கள்   ராதாகிருஷ்ணன், ஜான் மாவட்ட ஊராட்சி தலைவர் சண்முகம், ஒன்றிய செயலாளர் கே.என்.விஜயகுமார், கழக அணி செயலாளர்கள் கருவம்பாளையம் மணி, அன்பகம் திருப்பதி, கே.என்.சுப்பிரமணி, கீதாஆறுமுகம்,  நிர்வாகி ஏ.எஸ்.கண்ணன் மற்றும் நம்பிக்கை அமைப்பின் 1 வது மண்டல நிர்வாகிகள் பாலாஜி, செல்வம், மணிவேல் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் பிக் பஜார் துணை மேலாளர் தேவராஜ் நன்றி கூறினார். இதைதொடர்ந்து பிக் பஜார் வளாகத்தில் அமைக்கப்பட்டு இருந்த கிருஸ்துமஸ் குடிலை அனைவரும் பார்வையிட்டு  பாராட்டினார்கள். முகாமிற்கான ஏற்பாடுகளை  நம்பிக்கை நிர்வாகிகள் சதானந்தம், நாராயணசாமி, நக்கீரன், காளீஸ்வரன், சையது அபுதாகீர், சுதாகர், ராஜேந்திரன், குமார் ஆகியோர் செய்து இருந்தனர். 

படம் : திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்காக திருப்பூர் நம்பிக்கை நமது அமைப்பு மற்றும் பிக் பஜார் சார்பில் ரத்ததான முகாமை தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம் ஆனந்தன் தொடக்கி வைத்த போது  எடுத்தபடம்

திருப்பூர் கொடிகம்பம் நகர் பகுதியில், 22-வது வார்டு கவுன்சிலர் அலுவலகத்தை தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் திறந்து வைத்தார்






திருப்பூர் கொடிகம்பம் நகர் பகுதியில், 22-வது வார்டு கவுன்சிலர் அலுவலகத்தை 
தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன்  திறந்து வைத்தார். அம்மா பேரவை செயலாளர் ராதாகிருஷ்ணன் , கலைமகள் கோபால்சாமி தலைமை  தாங்கினார்கள்.
மாவட்ட ஊராட்சி தலைவர் சண்முகம்,  ஜான், முத்துசாமி,  ஒன்றிய செயலாளர் கே.என்.விஜயகுமார், ,  கழக அணி செயலாளர்கள் கண்ணப்பன், கருவம்பாளையம் மணி, அன்பகம் திருப்பதி, மார்க்கெட் சக்திவேல், ஸ்டீபன் ராஜ், தங்கமுத்து, கே.என்.சுப்பிரமணி,  கவுன்சிலர்கள் முத்து, கீதா, கலைமகள் கோபால்சாமி,  ஏ.எஸ்.கண்ணன், கருணாகரன், சின்னு, ரத்னகுமார், நீதிராஜன், ராஜேஷ் கண்ணா,  ஷாஜகான், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.