திருப்பூர் கேத்தனூர் ஊராட்சி எட்டமமநாயக்கன்பாளையத்தில், அரசின் தொகுப்பு வீடுகளையும், அந்த பகுதியின் அம்மா நகர்' பெயர் பலகையும் தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் திறந்து வைத்தார். திருப்பூர் கலெக்டர் கோவிந்தராஜ், பல்லடம் எம்.எல்.ஏ., பரமசிவம், மாவட்ட ஊராட்சி தலைவர் சண்முகம், ஊராட்சி ஒன்றிய தலைவர் ஆறுமுகம், கேத்தனூர் ஊராட்சி தலைவர் ஹரிகோபால், மக்கள் தொடர்பு அலுவலர் தமிழ் மொழி அமுது, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.