Dec 22, 2014

திருப்பூரில் கியாஸ் மணியம் பெற சிறப்பு முகாமை துணை மேயர் தொடங்கி வைத்தார்

திருப்பூரில், சமையல் கியாஸ் மானியத்திற்கான பதிவு செய்யும் சிறப்பு முகாமை துணை மேயர் குணசேகரன் தொடக்கி வைத்தார்.சமையல் கியாஸ் மானியத்தை பெற வாடிக்கையாளர்களுக்கு வங்கிக் கணக்கு மூலமாக வழங்கிட மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்காக, வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கு, ஆதார் அட்டை எண் ஆகியவை சமையல்கியாஸ் ஏஜென்சி விநியோக மையங்களில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், திருப்பூர் மாநகர் மாவட்டஇளைஞர் அணி செயலாளரும், மாநகராட்சி துணை மேயருமான  சு.குணசேகரன், பாரத் கியாஸ் ஏஜென்சியுடன் இணைந்து திருப்பூர் வாலிபாளையம் மாநகராட்சி பள்ளியில் கியாஸ் மானிய பதிவு முகாம் நடத்த ஏற்பாடு செய்தார். அதன்படி கியாஸ் மானிய பதிவு முகாம் நடந்தது. திருப்பூர் துணை மேயர் சு.குணசேகரன் பொதுமக்களுக்கு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அளிக்க ஏற்பாடு  செய்திருந்தார்.இதனால் ஒரே நாளில் 31-வது வார்டு பகுதியை சேர்ந்த 800 க்கும் அதிகமானோர் கியாஸ் மானியம் பெற பதிவு ,செய்தனர். இந்த முகாமில் பி.கே.எஸ்.சடையப்பன், சிவகுமார், மாப்பிள்ளை என்கிற வெங்கிடுபதி ஆகியோர் உள்ளிட்ட கியாஸ் ஏஜன்சி அலுவலர்கள் பங்கேற்றனர். வருகின்ற 23 ந் தேதி வாலிபாளையம் மாநகராட்சி பள்ளியில் மக்களின் முதல்வர் இதய தெய்வம், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், மாநகர் மாவட்ட கழக செயலாளரும், வனத்துறை அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் ஆலோசனையின் பேரில் கியாஸ் மானியத்துக்காக வங்கி கணக்கு துவங்க சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக திருப்பூர் துணை மேயர் சு.குணசேகரன் தெரிவித்தார்.