திருப்பூர் ,மாநகராட்சி போயம்பாளையம் அவினாசி நகரில் ரூ. 5.25 லட்சம் மதிப்பிலான ரேசன் கடையை தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் திறந்து வைத்தார். திருப்பூர் கலெக்டர் கோவிந்தராஜ், துணை மேயர் சு.குணசேகரன், மண்டல தலைவர்கள் ஜான், ராதாகிருஷ்ணன், கவுன்சிலர்கள் விஜயகுமார், ரங்கசாமி, கண்ணப்பன், பட்டுலிங்கம், சண்முகசுந்தரம், பூளுவபட்டி பாலு, மற்றும் கருவம்பாளையம் மணி, தங்கமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.