திருப்பூர் கொடிகம்பம் நகர் பகுதியில், 22-வது வார்டு கவுன்சிலர் அலுவலகத்தை
தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் திறந்து வைத்தார். அம்மா பேரவை செயலாளர் ராதாகிருஷ்ணன் , கலைமகள் கோபால்சாமி தலைமை தாங்கினார்கள்.
மாவட்ட ஊராட்சி தலைவர் சண்முகம், ஜான், முத்துசாமி, ஒன்றிய செயலாளர் கே.என்.விஜயகுமார், , கழக அணி செயலாளர்கள் கண்ணப்பன், கருவம்பாளையம் மணி, அன்பகம் திருப்பதி, மார்க்கெட் சக்திவேல், ஸ்டீபன் ராஜ், தங்கமுத்து, கே.என்.சுப்பிரமணி, கவுன்சிலர்கள் முத்து, கீதா, கலைமகள் கோபால்சாமி, ஏ.எஸ்.கண்ணன், கருணாகரன், சின்னு, ரத்னகுமார், நீதிராஜன், ராஜேஷ் கண்ணா, ஷாஜகான், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.