திருப்பூர் ,டிச.22-
திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்காக திருப்பூர் நம்பிக்கை நமது அமைப்பு மற்றும் பிக் பஜார் சார்பில் ரத்ததான முகாம் நேற்று காலை திருப்பூர் டவுனில் உள்ள பிக் பஜார் வளாகத்தில் நடந்தது. முகாமிற்கு நம்பிக்கை அமைப்பு மாவட்ட தலைவர் ஆடிட்டர் சரவணன் தலைமை தாங்கினார். 45 வார்டு கவுன்சிலர் கண்ணப்பன், நம்பிக்கை நிறுவனர் ரஹீம், மாநில செயலாளர் சுந்தரமூர்த்தி, பொருளாளர் பன்னீர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிக் பஜார் மேலாளர் வெங்கடேசன் வரவேற்று பேசினார். ரத்ததான முகாமை தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம் ஆனந்தன் தொடக்கி வைத்தார்.முகாமில் பிக் பஜார் ஊழியர்கள்,பொதுமக்கள் 50 பேர் ரத்த தானம் கொடுத்தனர். இதனை திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை டாக்டர் சண்முகவடிவு பெற்றுக்கொண்டார். இதைதொடர்ந்து நடந்த ரத்த பரிசோதனை முகாமை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.தங்கவேல் தொடக்கி வைத்தார். இதில் 79 பேருக்கு ரத்த வகை கண்டறியப்பட்டது. நிகழ்ச்சியில் மண்டலத்தலைவர்கள் ராதாகிருஷ்ணன், ஜான் மாவட்ட ஊராட்சி தலைவர் சண்முகம், ஒன்றிய செயலாளர் கே.என்.விஜயகுமார், கழ க அணி செயலாளர்கள் கருவம்பாளையம் மணி, அன்பகம் திருப்பதி, கே.என்.சுப்பிரமணி, கீதாஆறுமுகம், நிர்வாகி ஏ.எஸ்.கண்ணன் மற்றும் நம்பிக்கை அமைப்பின் 1 வது மண்டல நிர்வாகிகள் பாலாஜி, செல்வம், மணிவேல் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் பிக் பஜார் துணை மேலாளர் தேவராஜ் நன்றி கூறினார். இதைதொடர்ந்து பிக் பஜார் வளாகத்தில் அமைக்கப்பட்டு இருந்த கிருஸ்துமஸ் குடிலை அனைவரும் பார்வையிட்டு பாராட்டினார்கள். முகாமிற்கான ஏற்பாடுகளை நம்பிக்கை நிர்வாகிகள் சதானந்தம், நாராயணசாமி, நக்கீரன், காளீஸ்வரன், சையது அபுதாகீர், சுதாகர், ராஜேந்திரன், குமார் ஆகியோர் செய்து இருந்தனர்.
படம் : திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்காக திருப்பூர் நம்பிக்கை நமது அமைப்பு மற்றும் பிக் பஜார் சார்பில் ரத்ததான முகாமை தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம் ஆனந்தன் தொடக்கி வைத்த போது எடுத்தபடம்