Oct 5, 2014

Death Information










மடத்துகுளம் சண்முகவேலு எம்.எல்.ஏ.தலைமையில் நடைபயணம் சென்று.....



மடத்துகுளம் சி.சண்முகவேலு எம்.எல்.ஏ.தலைமையில் அண்ணா தி.மு.க.வினர் நடைபயணம் சென்று ஜெயலலிதா விடுதலையாக கோவில்களில் சிறப்பு பூஜை செய்தனர்.
திருப்பூர்மாவட்டம், மடத்துக்குளம் தொகுதியில்அண்ணா தி.மு.க.பொது செயலாளர் ஜெயலலிதாவிற்கு  இழைக்கப்பட்ட அநீதியைக் கண்டித்து மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் சி.சண்முகவேலு தலைமையில்  ஜெயலலிதா விடுதலை பெற வேண்டிகொழுமம்  அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடும், நடைபயணமாக கொமரலிங்கம், மி.நீலம்பூர், மடத்துக்குளம்,கழுகரை, சோழமாதேவி, கணியூர் வழியாக காரத்தொழுவு அழகு நாச்சியம்மன் கோவில், நீலம்பூர் முனியப்ப சுவாமி கோவில், செங்குளம்தர்கா ஆகிய இடங்களில்
சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மடத்துக்குளம் ஒன்றியச்செயலாளர் மெட்ராத்தி நா.அண்ணாத்துரை, கொமரலிங்கம்பேரூராட்சி துணை செயலாளர் எஸ்.ராஜ்குமார், அரசு வழக்கறிஞர் ராமகிருஷ்ணன், மாவட்ட கழக துணைச்செயலாளர் எம்.ஏ.சுப்பிரமணியம், மடத்துக்குளம் பேரூராட்சித்தலைவர் எஸ்.பழனிச்சாமி, துணைத்தலைவர் ஜி.கே.தண்டபாணி, மடத்துக்குளம் வீட்டு வசதி கூட்டுறவு சங்க தலைவர் இயேசுதுரை, குமரலிங்கம் பேரூராட்சித் தலைவர் சிவக்குமார், துணைத் தலைவர் சிவலிங்கம், ஒன்றிய அம்மா பேரவைச் செயலாளர் சிவலிங்கம், கணியூர் பேரூராட்சித்தலைவர் தேவி, துணைத்தலைவர் கணியூர் காஜா மைதீன், கணியூர் ராஜ், காரத்தொழுவு ரவி, சோழமாதேவி இப்ராகிம், சந்திரசேகர்,கொழுமம் தலைவர் இந்திராணி, கொழுமம் ராகவன், அண்ணா தொழிற்சங்கம் சி.டி.சி. மகாலிங்கம், ரத்தினசாமி, பழனிச்சாமி, சி.டி.சி. தங்கவேலு, தம்பிதுரை, பாபு, பாலு, முருகன், கருப்புசாமி மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிவாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

அண்ணா தி.மு.க.வழக்கறிஞர் சங்கம் உண்ணாவிரதம்




திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.,வழக்கறிஞர் பிரிவு சார்பில் கோர்ட் வீதியில் அணி செயலாளர் கே.என்.சுப்பிரமணியம், தலைவர் ஏ.ஆர்.வெளியங்கிரி ஆகியோர் தலைமையில் வழக்கறிஞர்களின் சேமநல நிதியை ரூ.5 1/4 லட்சமாக உயர்த்தி கொடுத்து திருப்பூர் மாவட்டத்திற்கு முதல்வராக இருந்த காலத்தில் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைக்கவும், கூடுதல் சார்பு நீதிமான்றம் ஏற்படுத்தி கொடுத்தும், மாவட்ட நீதிபதியை நியமனம் செய்த மக்கள் முதலவர் ஜெயலலிதா  வழக்குகளில் இருந்து  மீண்டு வரவும், ஜெயலலிதாவிற்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்தும் அமைதியான முறையில் அறவழியிலும், வழக்கறிஞர்கள், பொதுமக்கள் உள்படஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கருப்பு சட்டை அணிந்து உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிகளில்  மேயர் அ.விசாலாட்சி,துணை மேயர் சு.குணசேகரன், மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் ஜெ.ஆர்.ஜான்,வி.ராதாகிருஷ்ணன், கருவம்பாளையம் மணி, கண்ணப்பன், அன்பகம் திருப்பதி, மார்க்கெட் சக்திவேல், தங்கமுத்து, ராஜேஷ்கண்ணா, பூலுவபட்டி எம்.பாலு,ஹரிஹரசுதன், பட்டுலிங்கம் .ரத்தினகுமார், வி.எம்.கோகுல், பி.லோகநாதன், கே.பி.சண்முகம், சிவா, நீதிராஜன் ஆகியோர்களும்,
வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் ரூபன், சத்தியநாராயணன், சதீஷ்,முருகேஷ்,வேலுசாமி, பரிமளா, தங்கவேல்,மணிகண்டன்,யோகேஷ், ஷிலாதேவி, சித்ரா, கண்ணன்,சையத் இப்ராகிம், திவ்யா, ஜோதிமணி,நடராஜ், உதயகுமார், ராமமூர்த்தி,பூபதி, தங்கமணி ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருப்பூர் வடக்கு தொகுதியில் உண்ணாவிரதம்





திருப்பூர் வடக்கு ஒன்றிய அண்ணா தி.மு.க.சார்பில் பெருமாநல்லூர் ரோட்டில் உள்ள பாண்டியன் நகரில் மக்கள் முதல்வர் ' ஜெயலலிதா, ' மீண்டு வரவும், ஜெயலலிதாவிற்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து அமைதியான முறையில் அறவழியிலும், அண்ணா தி.மு.க.மற்றும் பொதுமக்கள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கருப்பு சட்டை அணிந்து ஒன்றிய எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் பூலுவபட்டி எம்.பாலு தலைமையில் 
உண்ணாவிரதம் இருந்தனர், இந்த நிகழ்ச்சிகளில் மேயர் அ.விசாலாட்சி, துணை மேயர் சு.குணசேகரன், மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் ஜெ.ஆர்.ஜான்,வி.ராதாகிருஷ்ணன், கருவம்பாளையம் மணி, கண்ணப்பன், அன்பகம் திருப்பதி, மார்க்கெட் சக்திவேல், வழக்கறிஞர் கே.என்.சுப்பிரமணி, முன்னாள் எம்.எல்.ஏ.பழனிசாமி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

திருப்பூரில் அண்ணா தி.மு.க.வினர்களை தொடர்ந்து ஏற்றுமதியாளர்களும் வேலை நிறுத்தம்








திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.,சிறுபான்மை நலப்பிரிவு சார்பில் காங்கயம் ரோடு, சி.டி.சி.டெப்போ அருகில் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சு.குணசேகரன் தலைமையிலும்,,வடக்கு ஒன்றிய அண்ணா தி.மு.க.சார்பில் பெருமாநல்லூர் ரோட்டில் உள்ள பாண்டியன் நகரில் வடக்கு ஒன்றிய எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் பூலுவபட்டி எம்.பாலு தலைமையிலும், தெற்கு ஒன்றிய அண்ணா தி.மு.க.சார்பில் பல்லடம் ரோடு, வீரபாண்டி பிரிவு அருகில் 4வது மண்டலத்தலைவர் கிருத்திகா சோமசுந்தரம் தலைமையிலும், திருப்பூர் மாநகராட்சி வியாபாரிகள் சங்கம் சார்பில் ஒருநாள் கடை  அடைப்பு நடத்தி காமராஜ் ரோட்டில் சங்கத்தலைவர் தலைமையிலும் மக்கள் முதல்வர் ' ஜெயலலிதா, ' மீண்டு வரவும், ஜெயலலிதாவிற்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து அமைதியான முறையில் அறவழியிலும், கோவில், மசூதி, சர்ச் ஆகிய வழிப்பட்டு தலங்களில் பிராத்தனை செய்தும் 45 பேர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தியும் அண்ணா தி.மு.க.மற்றும் பொதுமக்கள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கருப்பு சட்டை அணிந்து உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிகளில்  கலந்து கொண்ட திருப்பூர் மாநகராட்சி மேயர் அ.விசாலாட்சி கூறியதாவது:-
அண்ணா தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட தீர்ப்பு என்பது நீதிக்கும், தர்மத்திற்கும் வழங்கப்பட்ட தண்டனையாகும்.நீதிபதி என்பவர் சுய விருப்பு, வெறுப்பு இல்லாமல் தீர்ப்பு அளிக்க வேண்டும். ஆனால் இந்த தீர்ப்பை பொருத்தவரையில் தனிப்பட்ட முறையில் வேண்டும் என்றே ஜெயலலிதாவை பழிவாங்க வேண்டும் என்று மனித செயலற்ற வெறித்தனமான தீர்ப்பு ஆகும். இது வரை நடந்த வழக்குகளில் எந்த நீதிபதியும் இது போன்ற அநீதியான நீதியை கொடுத்தது இல்லை.இந்த செயலை அண்ணா தி.மு.க.மற்றும் பொதுமக்கள் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.இவ்வாறு மேயர் அ.விசாலாட்சி கூறினார்.
 துணை மேயர் சு.குணசேகரன் பேசும்போது, மக்களால் நான், மக்களுக்காக நான் என வாழ்ந்த மக்கள் முதல்வர் ஜெயலலிதா ஒரு துறவியைபோல் வாழ்ந்து வந்தார்.அவர் வாழும் காலத்தில் நாம் வாழ்வது என்பது பெரும் பாக்கியமாக கொள்ள வேண்டும். இன்று அவரை கர்னாடகா கோர்ட் தவறான தீர்ப்பினை வழங்கியுள்ளது.அவர்களை ஒருபோதும் தமிழக மக்கள் மன்னிக்க மாட்டர்கள்.அவர் வெளியே வரும்போது எதிர் கட்சியினருக்கு தக்க பாடம் புகட்டுவார்.என அவர் பேசினார்.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில்  மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் ஜெ.ஆர்.ஜான்,வி.ராதாகிருஷ்ணன், கருவம்பாளையம் மணி, கண்ணப்பன், அன்பகம் திருப்பதி, மார்க்கெட் சக்திவேல், வழக்கறிஞர் கே.என்.சுப்பிரமணியம்,ஸ்டீபன்ராஜ், அட்லஸ் லோகநாதன், உஷா ரவிகுமார், எஸ்பி.என்.பழனிசாமி, ராஜேஷ்கண்ணா, கலைமகள் கோபால்சாமி எம்.சி., டி.பார்த்திபன், ஹரிஹரசுதன், சி.எஸ்.கண்ணபிரான், அ.கண்ணப்பன், வடக்கு ஒன்றிய செயலளார் விஜயகுமார், ஒன்றிய குழுத்தலைவர் சாமிநாதன், வி.பட்டுலிங்கம் .ரஞ்சித்ரத்தினம், அசோக்குமார், ராஜ்குமார்,  ரத்தினகுமார், ஈஸ்வரமூர்த்தி,காலனி செல்வராஜ், பாசறை ஏ.எம்.சதீஷ், யுவராஜ் சரவணன், வி.எம்.கோகுல், பி.லோகநாதன், பரமராஜன், அன்பரசன்,ஆகியோர்களும் 
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மண்டல நிர்வாகிகள் கிருஷ்ணன், ராஜசேகர், பொன்னுசாமி, திருப்பூர் கிளை நிர்வாகிகள் ராஜேந்திரன்,சரவணன், ரவிகுமார்,முருகன், குணசேகரன், கணேஷ், சிவகுமார், சி.டி.சி.பழனிசாமி ஆகியோர்களும் 
அஹமது பைசல்,சாகுல்அமீது, தாமோதரன், காதர்பேட்டை ஜின்னாபாய்,அப்பாஸ், ராபிதீன், கே.எம்.பி.சாகுல்ஹமீது, ஷேக்தாவூத், முஹமதுயூனுஸ்,இஸ்மாயில், கவுன்சிலர்கள்  முருகசாமி, செல்வம், பாலசுப்பிரமணியன், கணேஷ்,பாலன், கனகராஜ், விஜயகுமார், சபரீஷ்வரன், சின்னசாமி, ஈஸ்வரன், ஆகியோர்களும், நல்லூர் லோகநாதன், சுரேந்தர், மணிகண்டன்,நீதிராஜன், மகளிர் அணியை சேர்ந்த கோமதி, அன்னபூரணி, சுந்தரம்பாள், இந்திராணி, மும்தாஜ், பேபி பழனிசாமி, சம்சாத், ரிஸ்வானா,ரஹ்மத்நிசா, கதிஜாபானு, சாராபானு மற்றும் தலைமை கழக பேச்சாளர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் கொங்கு ராஜாமணி, ராஜசேகர், அஜீம்பாஷா உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர். 
மேலும் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் பப்பீஸ் ஏ.சக்திவேல் அனுப்பியுள்ள செய்தியில் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு வர்த்தகத் தொழில் மேம்பாடு, தொழிலாளர்கள் நலன் இவற்றுடன் திருப்பூர் நகர வளர்ச்சியிலும் தனி கவனம் செலுத்தி வரும் அண்ணா தி.மு.க.பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுதலையாக ஆதரவு செரிவித்து இன்று அனைத்து பின்னலாடை உற்பத்தியாளர்கள் மற்றும் அதன் தொடர்புடைய சங்கங்கள் சார்பாக ஒருநாள் உற்பத்தி நிறுத்தம் செய்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.
மக்கள் முதல்வர் ஜெயலலிதாவை விடுவிக்கக்கோரி, திருப்பூரில், சாய ஆலை உரிமையாளர்கள் சங்கத்தினர், கடந்த 1-ம் தேதி வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர்.இதை தொடர்ந்து இன்று அனைத்து பின்னலாடை தொழில் துறை சங்கங்கள் இணைந்து முழு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் பின்னலாடை துறையினர் நடத்தும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, அட்டை பெட்டி உற்பத்தி நிறுவனங்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாபெரும் உண்ணாவிரதப்போராட்டம் மடத்துக்குளம் ஒன்றியம் அரியாநாச்சிபாளையம் கணியூர் தலைமை மெட்ராத்தி ந .அண்ணாத்துரை

முன்னிலை அழகர்சாமி ஊராட்சி கழக செயலாளர் மடத்துக்குளம்  பேரூராட்சி தலைவர்  பழனிச்சாமி  ஒன்றிய குழுத்தலைவர் திருமலைசாமி  ஒன்றிய குழு உறுப்பினர் சாவித்திரி  கிட்டுசாமி ஒன்றியகுழு உறுப்பினர் செந்தில் [எ ]பொன்னுசாமி மற்றும் கழக நிர்வாகிகள் 1500 க்கும் மேல் கலந்து கொண்டனர் . முடிவில் நன்றி கழகப் பொருளாளர் பன்னீர்செல்வம்  நன்றி கூறினார் உடன் மடத்துக்குளம் கவுன்சிலர் எ .குணசேகரன் கெ .எஸ் .பாலு மற்றும்  திரளான கழக உடன் பிறப்புக்கள் கலந்து கொண்டனர் .

குருச்சிக்கோட்டையில் அ .இ .அ .தி .மு .கவினர் .உண்ணாவிரதப்போராட்டம்

 உடுமலை . அ .இ .அ .தி .மு .க.பொது செயலாளர் செல்வி .ஜெ .ஜெயலலிதா அவர்களை சிறையில் அடைக்கப்பட்டதை கண்டித்து  கவுன்சிலர் வாசு தலைமையில் உண்ணாவிரதப்போராட்டம்  நடைபெற்றது .போராட்டத்தில் 2000-க்கும் மேல்  கலந்து கொண்டனர் .மானுப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் .வாசுதேவ் ராம்குமார் ரவிச்சந்திரன்  உள்ளிட்ட  ஏராளமான  கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .கொட்டும் மழையுளும் உண்ணாவிரதப்போராட்டம் நடைபெற்றது .முடிவில் அமராவதி பாசனசங்கத்தலைவர்  எஸ் .ராஜ்குமார் பழரசம் கொடுத்து  உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார் .உடன்  வழக்கறிஞர் ராமகிருஸ்ணன்  கவுன்சிலர் வாசு  மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர் . 

ஜெயலலிதாவை தமிழ்நாட்டுக்கு மாற்ற வேண்டும்: முன்னாள் பிரதமர் வலியுறுத்தல்

ஜெயலலிதாவை தமிழ்நாட்டுக்கு மாற்ற வேண்டும்: முன்னாள் பிரதமர் வலியுறுத்தல்

கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும் என முன்னாள் பிரதமர் தேவேகவுடா தெரிவித்துள்ளார்.

சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தால் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட தமிழக முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதா பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் வி.ஐ.பி. கைதியாக அடைக்கப்பட்டுள்ளார்.

பெங்களூர் ஐகோர்ட்டில் அவரது சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மற்றும் மேல் முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை வரும் 7-ம் தேதி நடைபெறவுள்ளது. ஜெயலலிதாவை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் தமிழகம், புதுவை மற்றும் தமிழக-கர்நாடக எல்லையோர மாவட்டங்களில் கடந்த ஒரு வார காலமாக ஆர்ப்பாட்டங்களும், உண்ணாவிரதங்களும், போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

கர்நாடகத்தின் மண்டியா, கோலார் தங்க வயல், மற்றும் பெங்களூர் நகரில் வசிக்கும் தமிழர்களும் ஜெயலலிதாவை விடுவிக்க கோரி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு காவலாகவும், பரப்பன அக்ரஹாரா சிறை வளாகம் அருகே ஜெயலலிதாவை சந்திக்கும் ஆவலுடன் குவிந்துள்ள அ.தி.மு.க.வினரை கட்டுப்படுத்தவும் ஏராளமான போலீசாரை பணியில் ஈடுபடுத்தும் சூழ்நிலை கர்நாடக அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் பிரதமரும், கர்நாடக மாநில முன்னாள் முதல் மந்திரியும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவருமான தேவேகவுடா கூறியதாவது:-

ஒவ்வொரு நாளும் இங்கு (பெங்களூருக்கு) ஏராளமானவர்கள் போராட்டம் நடத்த வருகின்றனர். இவர்களை கட்டுப்படுத்தவும், சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டவும் சிறப்பு போலீசாரை நியமிக்க வேண்டியுள்ளது. இந்த சுமையை நாம் ஏன் சுமக்க வேண்டும்?

அவருக்கு ஜாமீன் கிடைக்கிறதா? இல்லையா? என்பது நீதித்துறை சம்பந்தப்பட்ட விவகாரம். அதில் நாம் ஒன்றும் செய்ய இயலாது. அவர்கள் எந்த நீதி மன்றத்திலாவது போய் முறையிட்டுக் கொள்ளட்டும். இதில் நமக்கு என்ன வந்தது?

எனவே, ஜெயலலிதாவை தமிழ்நாட்டு(சிறை)க்கு மாற்ற வேண்டும் என்று மட்டும் (கர்நாடக) மாநில அரசை நான் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஜெயலலிதாவின் விடுதலையை வலியுறுத்தி தமிழகத்தில் ஈழத் தமிழர்கள் முன்னெடுத்த உண்ணா விரதப் போராட்டம்!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை விடுதலை செய்ய வலியுறுத்தி முன்னாள் சட்டசபை உறுப்பினர் திருச்சி சவுந்திரராஜன் தலைமையில் இந்தியா வாழ் ஈழத் தமிழர் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். இதில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்துத் தெரிவித்தனர்.

இன்று சென்னை கோயம்பேடு செங்கொடி அரங்கத்தில், இந்தியா வாழ் ஈழத் தமிழரின் சார்பில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு எம்.எல்.ஏ, புரட்சி பாரதம் பொதுச்செயலாளர் பூவை ஜெகன் மூர்த்தி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.