Showing posts with label பேரூராட்சி. Show all posts
Showing posts with label பேரூராட்சி. Show all posts

Oct 5, 2014

ஜெயலலிதாவுக்கு ஆதரவாக காரைக்காலில் அதிமுகவினர் உண்ணாவிரதப் போராட்டம்




காரைக்காலில் ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அதிமுகவினர் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சொத்துக் குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதாவுக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்ததையொட்டி அவர் சிறையிலடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டு வரும் வேளையில், புதுவை மாநில அதிமுகவினர் ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் காரைக்காலில் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேருந்து நிலையம் அருகே நடந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் எஸ்.பி.கருப்பையா தலைமை வகித்தார். மாவட்ட செயலர் எம்.வி.ஓமலிங்கம் முன்னிலையில், புதுவை மாநில அதிமுக செயலரும் சட்டப்பேரவை உறுப்பினருமான பெ.புருஷோத்தமன் போராட்டத்தை தொடங்கிவைத்துப் பேசினார்.
குற்றம் செய்யாத ஜெயலலிதாவுக்கு தண்டனை அளிக்கப்பட்டுள்ளதாகவும், ஜாமீன் மறுப்பு தெரிவிப்பதும் சட்ட நெறிமுறைகளுக்கு புறம்பானது எனவும், அவர் விடுதலை செய்யப்படவேண்டும். புதுவை மாநில அதிமுக அவருக்கு எப்போதும் துணை நிற்குமென கட்சியினர் பேசினர். மேலும்  கட்சியினர், காவிரித் தண்ணீரை பெற்றுத்தந்ததற்காக கர்நாடக அரசு ஜெயலலிதாவை பழிவாங்குவதாகப் பேசினர்.
உண்ணாவிரதப் போராட்டத்தில் மக்களவை முன்னாள் உறுப்பினர் பேராசிரியர் மு.ராமதாஸ், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்கள் வி.கே.கணபதி, வி.எம்.சி.வி.கணபதி மற்றும் அதிமுக மாவட்ட பொருளாளர் எச்.எம்.ஏ.காதர், நகர செயலர் ஜி.வி.ஜெயபால், துணை செயலர் சாகுல்ஹமீது, ஜீவானந்தம் உள்ளிட்ட சுமார் 300 பேர் கலந்துகொண்டனர்.

மாபெரும் உண்ணாவிரதப்போராட்டம் மடத்துக்குளம் ஒன்றியம் அரியாநாச்சிபாளையம் கணியூர் தலைமை மெட்ராத்தி ந .அண்ணாத்துரை

முன்னிலை அழகர்சாமி ஊராட்சி கழக செயலாளர் மடத்துக்குளம்  பேரூராட்சி தலைவர்  பழனிச்சாமி  ஒன்றிய குழுத்தலைவர் திருமலைசாமி  ஒன்றிய குழு உறுப்பினர் சாவித்திரி  கிட்டுசாமி ஒன்றியகுழு உறுப்பினர் செந்தில் [எ ]பொன்னுசாமி மற்றும் கழக நிர்வாகிகள் 1500 க்கும் மேல் கலந்து கொண்டனர் . முடிவில் நன்றி கழகப் பொருளாளர் பன்னீர்செல்வம்  நன்றி கூறினார் உடன் மடத்துக்குளம் கவுன்சிலர் எ .குணசேகரன் கெ .எஸ் .பாலு மற்றும்  திரளான கழக உடன் பிறப்புக்கள் கலந்து கொண்டனர் .

Sep 26, 2014

கால்நடைத் துறையில் புதிதாக ஆய்வாளர் பணி நியமனம்: உத்தரவுகளை அளித்தார் முதல்வர் ஜெயலலிதா..


கால்நடைப் பராமரிப்புத் துறையில் ஆய்வாளர் பணிக்கு புதிதாக நியமிக்கப்பட்டவர்களுக்கு உத்தரவுகளை வழங்கிய முதல்வர் ஜெயலலிதா. உடன் (இடமிருந்து)கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சர் டி.கே.எம். சின்னையா, துறையின் செயலாளர் விஜயகுமார்.


கால்நடைப் பராமரிப்புத் துறையில் ஆய்வாளர் பணிக்கு புதிதாக நியமிக்கப்பட்டவர்களுக்கு உத்தரவுகளை வழங்கிய முதல்வர் ஜெயலலிதா. உடன் (இடமிருந்து)கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சர் டி.கே.எம். சின்னையா, துறையின் செயலாளர் விஜயகுமார்.



கால்நடைத் துறையில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆய்வாளர்களுக்கான பணி நியமன உத்தரவுகளை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.
இதுகுறித்து தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
தமிழகத்திலுள்ள அனைத்து கால்நடைகளுக்கும் மருத்துவச் சிகிச்சை, மேம்பட்ட பராமரிப்பு முறைகள் ஆகிய சேவைகள் கால்நடை மருந்தகங்கள், கால்நடை மருத்துவமனைகள் மூலம் கட்டணம் இல்லாமல் வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும், கால்நடைக் கிளை நிலையங்களில் செயற்கைக் கருவூட்டல், முதலுதவி சேவைகள் கால்நடை ஆய்வாளர்கள் மூலம் கால்நடைகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், தொலை தூரக் கிராமங்களில் உள்ள விவசாயிகள் பயனடையும் வகையில் கால்நடை ஆய்வாளர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று கடந்த 2011-12-ஆம் நிதியாண்டில்
சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, அந்த நிதியாண்டில் 289 பேருக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 2012-13-ஆம் ஆண்டில் தேர்வு செய்யப்பட்ட கால்நடை ஆய்வாளர்களில் பயிற்சி முடித்த 307 பேருக்கு கால்நடை ஆய்வாளர் நிலை-2-க்கான பணி நியமன உத்தரவுகளை முதல்வர் ஜெயலலிதா அண்மையில் வழங்கினார்.
இதன் மூலம், தொலைதூர குக்கிராமங்களில் உள்ள கால்நடைகளுக்குச் செயற்கை முறைக் கருவூட்டல், முதலுதவிச் சேவைகள் ஆகியன அவற்றின் இருப்பிடங்களுக்கு அருகிலேயே கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. பணி நியமன உத்தரவு வழங்கும் நிகழ்ச்சியில், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னையா, தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.