Sep 29, 2014

எம்.ஜி.ஆர். சமாதியில் அதிமுகவினர் உண்ணாவிரதம்.. வளர்மதி தலைமையில்

எம்.ஜி.ஆர். சமாதியில் அதிமுகவினர் உண்ணாவிரதம்.. வளர்மதி தலைமையில் 2வது நாளாக தொடர்கிறது

சென்னை: சென்னை மெரீனா கடற்கரையில், உள்ள எம்.ஜி.ஆர். சமாதியில் அதிமுகவினர் இன்று 2வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு தண்டனை விதிக்கப்பட்டதைக் கண்டித்தும், ஜெயலலிதாவை விடுதலை செய்ய வலியுறுத்தியும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று அதிமுகவினர் தொடங்கினர். முதல் நாளில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். இன்று 2வது நாளாக போராட்டம் தொடர்கிறது. இன்றைய போராட்டத்திற்கு அமைச்சர் பா. வளர்மதி தலைமை தாங்கியுள்ளார். அவரது தலைமையில் தென் சென்னை மாவட்ட அதிமுக செயலாளர் வி.பி.கலைராஜன் எம்.எல்.ஏ உள்பட ஏராளமானோர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். ஜெயலலிதா விடுதலையாகும் வரை தொடர் உண்ணாவிரதமாக இது நடைபெறும் என அதிமுகவினர் கூறியுள்ளனர்.

கர்நாடக அரசு பேருந்துகள் இயக்கம்

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு தண்டனை விதிக்கப்பட்டதால் நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களால் கடந்த 2 நாட்களாக நிறுத்தப்பட்டிருந்த சென்னை - பெங்களூரு இடையேயான கர்நாடக அரசுப் பேருந்துகள் சேவை இன்று வழக்கம் போல துவங்கியது.
கர்நாடகா செல்லும் தமிழக பேருந்துகள் ஓசூர் எல்லையிலும், கர்நாடக அரசுப் பேருந்துகள் அம்மாநில எல்லையிலும் நிறுத்தப்பட்டன.
இந்த நிலையில், பொதுமக்களின் வசதிக்காக, சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜின் நடவடிக்கை காரணமாக கர்நாடக அரசுப் பேருந்துகள் தமிழகத்துக்குள் வருவதற்கு வசதியாக, ஒவ்வொரு மாவட்ட காவல்துறை அதிகாரிகளுடனும் தொடர்பு கொண்டு பாதுகாப்பு கோரப்பட்டது.
இதையடுத்து, கர்நாடக அரசுப் பேருந்து ஒவ்வொரு மாவட்டத்துக்கும் வரும் போது, அந்தந்த மாவட்ட காவல்துறையினர் பேருந்துக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து கர்நாடக பேருந்துகள் வழக்கம் போல இயங்கின.

தமிழகம் முழுவதும் அதிமுகவினர் உண்ணாவிரதம்: 3வது நாளாக போராட்டம்


tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper



சென்னை: அதிமுக பொதுச் செய லாளர் ஜெயலலிதாவுக்கு சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து பெங்களூர் தனி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து அவர் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டார். ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டதை கண்டித்து, அதிமுகவினர் தீர்ப்பு வழங்கப்பட்ட சனிக்கிழமை பிற்பகல் முதல் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். மாநிலம் முழுவதும் பஸ்கள் மீது கல் வீசப்பட்டன. காஞ்சிபுரம் உள்ளிட்ட சில இடங்களில் மொத்தம் 3 பஸ்கள் கொளுத்தப்பட்டன. கடைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன. சாலை மறியல்களும் நடந்தன. 2வது நாளான நேற்றும் மாநிலம் முழுவதும் போராட்டம் நடந்தது. பல இடங்களில் கடைகளை அடைக்கச் சொல்லி அதிமுகவினர் மிரட்டல் விடுத்தனர். இதனால் 2வது நாளாக நேற்றும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், மூன்றாவது நாளாக இன்றும் தமிழகம் முழுவதும் அதிமுகவினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் எம்ஜிஆர் சமாதியில் தி.நகர் எம்எல்ஏ கலைராஜன் தலைமையில் அதிமுகவினர் உண்ணாவிரதப் பேராட்டத்தை தொடங்கினர். அதேபோல், கோவையில் காந்திபுரம் பஸ்நிலையம் அருகே அதிமுகவினர் உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளனர். வேலூரிலும் மாநராட்சி முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறது.

மதுரையில் மேலமாசி, வடக்கு மாசி வீதி சந்திப்பில் அதிமுகவினர் உண்ணாவிரதப் பேராட்டத்தை தொடங்கினர். அதில் மேயர் ராஜன் செல்லப்பா, மதுரை ஆதீனம், நடிகை சரஸ்வதி உட்பட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். திருச்சி ஸ்ரீரங்கத்திலும் அதிமுகவினர் 300 பேர் உண்ணாவிரதத்தை தொடங்கினர். தூத்துக்குடியில் நகரச் செயலாளர் ஏசாதுரை தலைமையில் 500 பேர் உண்ணாவிரதம் இருந்தனர்.மாவட்ட தலைநகர்களிலும், முக்கிய நகரங்களிலும் அதிமுகவினர் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். மேலும், சில ஊர்களில் அதிமுகவினரின் போராட்டம் காரணமாக ஆங்காங்கே கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை: மாலை பெங்களூர் பயணம்



தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களுடன் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை: மாலை பெங்களூர் பயணம்
முதல்வராக பொறுப்பேற்ற ஓ.பன்னீர்செல்வம், தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். 

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதால் முதல்வர் பதவியை இழந்த ஜெயலலிதா பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூடி சட்டமன்றக் கட்சி தலைவாக ஓ.பன்னீர்செல்வத்தை தேர்வு செய்தனர். இதையடுத்து அவரது தலைமையில் புதிய அமைச்சரவை இன்று பதவியேற்றது. 

பதவியேற்றதும் நேராக தலைமைச் செயலகம் சென்ற முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில், தலைமை செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத் மற்றும் அரசின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் ஆகியோரும் பங்கேற்றனர்.

ஆலோசனைக் கூட்டம் முடிந்ததும் இன்று மாலை பெங்களூர் செல்லும் முதல்வர் பன்னீர்செல்வம், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலிதாவை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொண்டர் தீக்குளித்து தற்கொலை



ஆழ்வார் திருநகர், கைகான்குப்பத்தை சேர்ந்தவர், வெங்கடேசன், 65; அ.தி.மு.க., தொண்டர். அவர், நேற்று முன்தினம், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தண்டனை அறிவிப்பை கேட்டவுடன், மனமுடைந்து தீக்குளித்தார். பலத்த காயங்களுடன், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார்.

வத்தலக்குண்டுவில் அதிர்ச்சியில் பெண் சாவு

ஜெயலலிதா தீர்ப்பு எதிரொலி: வத்தலக்குண்டுவில் அதிர்ச்சியில் பெண் சாவு
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள சேவுகம்பட்டி பேரூராட்சி முத்துலாபுரத்தை சேர்ந்தவர் கதிரவன். அவரது மனைவி பாலம்மாள். இவர் கணவரை இழந்தவர். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டு அதே இடத்தில் உயிரிழந்தார்.
இச்சம்பவத்தை அறிந்த வத்தலக்குண்டு ஒன்றிய குழுதலைவர் மோகன், சேவுகம்பட்டி பேரூராட்சி துணைத்தலைவர் சதீஸ்குமார் ஆகியோர் நேரில் சென்று பாலம்மாளின் குழந்தைகளுக்கு ஆறுதல் கூறினர்.
சொத்துகுவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு அளித்த தீர்ப்பை அடுத்து வத்தலக்குண்டுவில் அ.தி.மு.க தொண்டர் சோலைராஜ்(40) என்பவர் பஸ் நிலையம் அருகில் உள்ள தனியார் செல்போன் கோபுரத்தின் மீது ஏறி தற்கொலைக்கு முயன்றார்.
தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் நிலைய அதிகாரி குணசேகரன் தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று கோபுரத்தில் ஏறி சோலைராஜை பத்திரமாக மீட்டனர்.

மதுரை பிளஸ் 2 மாணவி நாகலட்சுமி, 17, தீக்குளித்து



 











எழுமலை:அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட தண்டனையால் அதிர்ச்சியுற்ற, மதுரை பிளஸ் 2 மாணவி நாகலட்சுமி, 17, தீக்குளித்து, உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

நல திட்டங்கள்:மதுரை, எழுமலை முருகன் மகள் நாகலட்சுமி, 17. அரசு மேல்நிலைப் பள்ளி, பிளஸ் 2 மாணவி. சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதாவுக்கு நான்காண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதால், மனமுடைந்த நாகலட்சுமி, நேற்று காலை, 9:45 மணிக்கு, மண்ணெண்ணெய் கேனுடன் வீட்டின் முன் வந்தார்.அங்கு, 'லேப் - டாப், சைக்கிள், நோட்டு புத்தகம் கொடுத்த அம்மாவை, சிறையில் அடைச்சுட்டாங்களே...' எனக் கூறியபடி, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.

அவரை, ஆபத்தான நிலையில், உசிலம்பட்டி அரசு மருத்து
வமனையில் சேர்த்தனர். டி.எஸ்.பி., சரவணக்குமார் விசாரித்தார். நாகலட்சுமி கூறுகையில், ''பள்ளி மாணவர்களுக்கு நலத் திட்டங்களை வழங்கிய முதல்வரை சிறையில் அடைத்ததை, தாங்கிக் கொள்ள முடியாததால் தீக்குளித்தேன்,'' என்றார்.

எஸ்.பி., விஜயேந்திர பிதரி விசாரித்தார். பின் மேல் சிகிச்சைக்காக நாகலட்சுமி, மதுரை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மூதாட்டி சாவு:விழுப்புரம், சித்தேரிக்கரை பகுதியைச் சேர்ந்தவர், தங்கவேலு மனைவி அம்மணியம்மாள், 70; அ.தி.மு.க., உறுப்பினர். இவர், நேற்று முன்தினம் மாலை, 4:00 மணிக்கு, தன் வீட்டில், 'டிவி' பார்த்துக் கொண்டிருந்த போது, ஜெ., குற்றவாளி என அறிவிக்கப்பட்ட செய்தியை பார்த்ததும், அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது.

தொண்டர் தீக்குளிப்பு: கடலுார் அடுத்த பாதிரிக்குப்பம், காலனி வாட்டர் டேங்க் தெருவைச் சேர்ந்தவர், பாலகிருஷ்ணன், 52; தீவிர அ.தி.மு.க., விசுவாசியான இவரது மனைவி லட்சுமி, அப்பகுதி, ஜெ., பேரவை கிளை பொருளாளராக உள்ளார்.நேற்று முன்தினம், ஜெயலலிதா குறித்த செய்தியை அறிந்த பாலகிருஷ்ணன், மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். நேற்று மதியம், 2:30 மணிக்கு, பாலகிருஷ்ணன் தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ஜெயலலிதா வழக்கில் தீர்ப்பு: கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை மேலும் ஒரு மாணவி தீக்குளித்தார்

ஜெயலலிதாவுக்கு சிறைத்தண்டனை வழங்கியதால் அதிர்ச்சியடைந்த லால்குடி கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
4 ஆண்டு சிறை சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு கர்நாடக நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நேற்று முன்தினம் தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகிறது.
மேலும் ஆங்காங்கே அ.தி.மு.க. தொண்டர்கள் தற்கொலை செய்தும், தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டும் வருகின்றனர்.
கல்லூரி மாணவி திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள நகர் கிராமத்தை சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ். அ.தி.மு.க. உறுப்பினர். இவருடைய மகள் ஜோனாஷா டி சன்னா (வயது 19), லால்குடி பரமசிவபுரத்தில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியில் படித்து வந்தார்.
சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பை தொலைக்காட்சி மூலம் பார்த்துக் கொண்டிருந்த ஜோனாஷா டி சன்னா, ஜெயலலிதாவுக்கு எதிராக தீர்ப்பு வெளியானதை பார்த்ததும் மிகுந்த வேதனை அடைந்தார்.
அ.தி.மு.க.வினர் அஞ்சலி இதனால் மனமுடைந்த அவர், தனது வீட்டு சமையலறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஜெயலலிதாவுக்கு தண்டனை கிடைத்ததால், வேதனை தாங்காமல் ஜோனாஷா இந்த துயர முடிவை தேடிக் கொண்டதாக தெரிகிறது.
இது குறித்து தகவல் அறிந்த லால்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். மாணவியின் உடலுக்கு திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் ரத்தினவேல் எம்.பி. உள்பட அ.தி.முக. நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.
மிகுந்த வேதனை இதைப்போல மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா எழுமலையை அடுத்த வங்கிநாராயணபுரத்தை சேர்ந்த முருகன் என்பவரின் மகள் நாகலட்சுமி (வயது 17). இவர் எழுமலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்–2 படித்து வருகிறார்.
ஜெயலலிதாவுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட செய்தியை அறிந்தது முதல் நாகலட்சுமி மிகுந்த வேதனையுடன் இருந்து வந்தார். நேற்று காலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து, நாகலட்சுமி தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
தீவிர சிகிச்சை இதனால் வேதனை தாங்கமுடியாமல் அலறியபடியே தெருவில் ஓடிய அவரை, அந்த பகுதியினர் மீட்டு உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து எழுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Sep 28, 2014

TUJ தலைவர் கூறிய தகவல்

யார் இந்த குன்ஹா?? இதோ சில விவரங்கள் (1) சுமார் 11 ஆண்டுகலுக்கு முன்னர் அப்போதைய மத்திய பிரதேச முதல்வர் செல்வி உமாபாரதி அவர்கள் கர்நாடக மாநிலம் பெல்காம் வந்து ஆர் எஸ் எஸ் கொடியை ஏற்றி வைத்தார் உடனே கர்நாடக கத்தை ஆண்ட காங்கிரஸ் அரசு அவர் மீது எப்ஐஆர் போட்டது இதை ரத்து செய்ய பெல்காம் நீதிமன்றத்தில் கர்நாடகா பிஜேபி யினால் வழக்கு தொடரப்பட்டது ஆனால் அதை ரத்து செய்ய மறுத்து உமாபாரதி முதல்வர் பதவி இழந்து சிறை செல்ல காரணமாக இருந்த்து இதே குண்ஷா தான் அப்போதே இவருடைய இந்து எதிர்ப்பு மற்றும் காங்கிரஸ் ஆதரவு பெரிதும் விவாதிக்கப்பட்டது (2) ஜெயலலிதா மீது அரசாங்க வக்கீல் கூறிய 18 வகையான சொத்துக்கள் குறித்த குற்றச்சாட்டுகள் களுக்கு ஒவ்வொன்றுக்கும் ஆதாரத்துடன் புள்ளி விவரத்தோடு முதல்வரின் வக்கீல் குமார் counter செய்த பிறகும் இதை பற்றி எல்லாம் சட்டை செய்யாமல் தீர்ப்பு கொடுத்தது சட்டம் படித்த அனைவருக்கும் ஐயத்தை ஏற்படுத்தி உள்ளது. (3) தீர்ப்பின் முழு தண்டனை முடிவை மாலை ஆறு மணி வரை வழங்காமல் இழுத்தடித்து பெங்களூர் உயர்நீதிமன்றத்துக்கு ஜாமீன் கேட்டு செல்லமுடியாமல் செய்த காரணம் என்ன? (4) முன் கூட்டியே பரப்பன அக்ராகார நீதி மன்றத்தில் பெண்கள் சிறையினை தயார் நிலையில் வைத்த காரணம் என்ன?? (5) 950 கோடி ஊழல் செய்த லல்லுக்கு 25 லட்சம் அபராதம் 5 ஆண்டு சிறைத்தண்டனை ஆனால் 66 கோடிக்கும் உன்டான கணக்கை நீதிமன்றத்தில் ஆதாரத்துடன் தாக்கல் செய்தும் அதைப்பற்றி எல்லாம் பரீசிலனை செய்யாமல் 130 கோடி அபராதமும் 4 ஆண்டு சிறைத்தண்டனை யும் கொடுத்த்து ஏன் ?? (6) இது ஏற்கனவே குற்றம்சாட்ட பட்டவர்களின் வாதங்கள் தொடங்குவதற்கு முன்னரே விலைபேச பட்ட மற்றவர்களாள் எழுதி கொடுக்கபட்ட தீர்ப்பா?? (7) சுமார் 8 மாதங்களுக்கு முன்னரே முதல்வர் மற்றும் 3 பேர்களை " குற்றவாளிகள் " என்று குண்ஹா கூறியது ஏன் ?? குற்றம்சாட்ட பட்டவர்கள் என்றுதானே கூறவேண்டும் இரு தரப்பு வாதங்களை கேட்டு தீர்ப்பு வழங்கும் நாள் ( அதாவது இன்று ) தான் குற்றவாளிகள் என்று கூறி இருக்க வேண்டும்!! 8 மாதங்களுக்கு முன்னரே கூறிய மர்மம் என்ன?? தீர்பை முன்னரே முடிவு செய்து சும்மா கடனுக்காக நடத்த பட்ட விசாரணை நாடகமா இது?? (9) கர்நாடக த்திற்கு எதிராக காவிரி நடுவன் மன்ற ஆனையை தமிழகதிற்கு பெற்றதுக்கு முதலமைச்சர் க்கு கர்நாடக காங்கிரஸ் சால் கொடுக்க பட்ட பரிசா?? சிந்தித்து பாருங்கள் இந்த சதிகார கும்பலை இனம் கண்டு கொள்ளுங்கள். இதிலிருந்து மாண்புமிகு அம்மா அவர்கள் மீண்டு வருவார். சோதனைகள் அவருகென்ன புசுசா??