சென்னை: சென்னை மெரீனா கடற்கரையில், உள்ள எம்.ஜி.ஆர். சமாதியில் அதிமுகவினர் இன்று 2வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு தண்டனை விதிக்கப்பட்டதைக் கண்டித்தும், ஜெயலலிதாவை விடுதலை செய்ய வலியுறுத்தியும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று அதிமுகவினர் தொடங்கினர். முதல் நாளில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். இன்று 2வது நாளாக போராட்டம் தொடர்கிறது. இன்றைய போராட்டத்திற்கு அமைச்சர் பா. வளர்மதி தலைமை தாங்கியுள்ளார். அவரது தலைமையில் தென் சென்னை மாவட்ட அதிமுக செயலாளர் வி.பி.கலைராஜன் எம்.எல்.ஏ உள்பட ஏராளமானோர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். ஜெயலலிதா விடுதலையாகும் வரை தொடர் உண்ணாவிரதமாக இது நடைபெறும் என அதிமுகவினர் கூறியுள்ளனர்.