சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு தண்டனை விதிக்கப்பட்டதால் நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களால் கடந்த 2 நாட்களாக நிறுத்தப்பட்டிருந்த சென்னை - பெங்களூரு இடையேயான கர்நாடக அரசுப் பேருந்துகள் சேவை இன்று வழக்கம் போல துவங்கியது.
கர்நாடகா செல்லும் தமிழக பேருந்துகள் ஓசூர் எல்லையிலும், கர்நாடக அரசுப் பேருந்துகள் அம்மாநில எல்லையிலும் நிறுத்தப்பட்டன.
இந்த நிலையில், பொதுமக்களின் வசதிக்காக, சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜின் நடவடிக்கை காரணமாக கர்நாடக அரசுப் பேருந்துகள் தமிழகத்துக்குள் வருவதற்கு வசதியாக, ஒவ்வொரு மாவட்ட காவல்துறை அதிகாரிகளுடனும் தொடர்பு கொண்டு பாதுகாப்பு கோரப்பட்டது.
இதையடுத்து, கர்நாடக அரசுப் பேருந்து ஒவ்வொரு மாவட்டத்துக்கும் வரும் போது, அந்தந்த மாவட்ட காவல்துறையினர் பேருந்துக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து கர்நாடக பேருந்துகள் வழக்கம் போல இயங்கின.