Sep 29, 2014

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை: மாலை பெங்களூர் பயணம்



தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களுடன் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை: மாலை பெங்களூர் பயணம்
முதல்வராக பொறுப்பேற்ற ஓ.பன்னீர்செல்வம், தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். 

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதால் முதல்வர் பதவியை இழந்த ஜெயலலிதா பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூடி சட்டமன்றக் கட்சி தலைவாக ஓ.பன்னீர்செல்வத்தை தேர்வு செய்தனர். இதையடுத்து அவரது தலைமையில் புதிய அமைச்சரவை இன்று பதவியேற்றது. 

பதவியேற்றதும் நேராக தலைமைச் செயலகம் சென்ற முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில், தலைமை செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத் மற்றும் அரசின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் ஆகியோரும் பங்கேற்றனர்.

ஆலோசனைக் கூட்டம் முடிந்ததும் இன்று மாலை பெங்களூர் செல்லும் முதல்வர் பன்னீர்செல்வம், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலிதாவை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.