Nov 7, 2014

திருப்பூர் வடக்கு ஒன்றியம் பொங்குபாளையம் ஊராட்சி பள்ளிபாளையத்தில் 67 பயனாளிகளுக்கு

ரூ.8.57 லட்சம் மதிப்பிலான விலையில்லா ஆடுகளை வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் வழங்கினார். அருகில் மாவட்ட  கலெக்டர் ஜி.கோவிந்தராஜ், உதவி கலெக்டர் செந்தில்ராஜன்,  ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் ஆர்.சாமிநாதன்,  வடக்கு ஒன்றிய செயலாளர், கே.என்.விஜயகுமார், ஊராட்சி தலைவர் மூர்த்தி, கூட்டுறவி சங்க தலைவர் சுலோச்சனா வடிவேல், நிர்வாகிகள்  ஏ.டி.பி.சுப்பிரமணியம், வேலுசாமி மற்றும் கால்நடைத்துறை மருத்துவர்கள், அதிகாரிகள், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்..

திருப்பூர் வடக்கு தொகுதி ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சி வீதிக்காடு எஸ்.எஸ்.நகரில் சட்டமன்ற உறுப்பினர்

வளர்ச்சி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.7 லட்சம் மதிப்பில் தார்சாலை அமைக்கும் பணிகளுக்கான பூமிபூஜையை வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் துவக்கி வைத்தார். அருகில் கலெக்டர் ஜி.கோவிந்தராஜ்,உதவி செந்தில்ராஜன், ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ஆர்.சாமிநாதன், வடக்கு ஒன்றிய செயலாளர், கே.என்.விஜயகுமார், மண்டலத்தலைவர் வி.ராதாகிருஷ்ணன்,ஊராட்சி தலைவர் செல்வகுமார் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருப்பூர் வடக்கு ஒன்றியம், ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சி கருக்கன்பாளையம் புதூரில்

ரூ.14.95 லட்சம் மதிப்பில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கட்டும் பணிகளுக்கான பூமிபூஜையை வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ், திருப்பூர் உதவி கலெக்டர் செந்தில்ராஜன், ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ஆர்.சாமிநாதன், வடக்கு ஒன்றிய செயலாளர், கே.என்.விஜயகுமார், மண்டலத்தலைவர் வி.ராதாகிருஷ்ணன், ஊராட்சி தலைவர்கள் செல்வகுமார் பொன்னுலிங்கம் மற்றும் கூட்டுறவு சங்க நிர்வாகி வி.எம்.கோகுல், ஏ.எஸ்.கண்ணன், மாவட்ட கல்வி அலுவலர், பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் ஊராட்சி செயலாளர் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Nov 6, 2014

Nov 4, 2014

மக்கள் முதல்வர் ஜெயலலிதாவிற்காக உயிர் நீத்தவர் குடும்பத்திற்கு அண்ணா தி.மு.க., சார்பில் குடும்பநிதி



திருப்பூர் புறநகர் மாவட்டம் உடுமலைப்பேட்டை தொகுதி, குடிமங்கலம் ஒன்றியம்,பெரியபட்டியை அடுத்துள்ள கள்ளபாளையத்தைச் சேர்ந்த டி.மணிகண்டன் என்பவர் அண்ணா தி.மு.க.பொதுச்செயலாளர் மக்கள் முதல்வர் ஜெயலலிதாவை சிறையில் அடைத்ததற்காக வேண்டி உயிர்த்தியாகம்  செய்தார். அவரின் மனைவி பானுமதியிடம் அண்ணா தி.மு.க தலைமை கழகம் சார்பில் ரூ. 3 லட்சத்திற்கான காசோலையை திருப்பூர் புறநகர் மாவட்டச் செயலாளரும், சட்டமன்ற துணை சபாநாயகருமான பொள்ளாச்சி வ.ஜெயராமன் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனத்தலைவர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன், அண்ணா தொழிற்சங்க பேரவை பொருளாளர் அப்துல் ஹமீது, சிறுபான்மைநலப்பிரிவு மாநில துணைச்செயலாளர் எஸ்.இன்பதுரை, பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பரமசிவம், மாவட்ட ஊராட்சிக் குழுத்தலைவர் வி.எம்.சண்முகம், பொள்ளாச்சி தெற்கு ஒன்றியச்செயலாளர் கே.சுகுமார், மாவட்ட கவுன்சிலர் தமயந்தி மாசிலாமணி, மாவட்ட அம்மா பேரவைச் செயலாளர் ஜி.வி.வாசுதேவன், குடிமங்கலம் ஒன்றியச் செயலாளர் சுந்தரசாமி, தொகுதி கழக செயலாளர் பாண்டியன், ஒன்றியக்குழு தலைவர் முருகன், உடுமலை நகரமன்றத் துணைத் தலைவர் எம்.கண்ணாயிரம்,ஒன்றியக்குழு துணைத்தலைவர் முரளி, ஊராட்சிமன்றத்தலைவர்கள் சி.மாசிலாமணி, ஜனார்த்தனன், வீராச்சாமி, வழக்கறிஞர் சிவா, திலீப்குமார் மற்றூம் அண்ணா தி.மு.க.நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

திருப்பூர் புறநகர் மாவட்ட அண்ணா திமுக இளைஞர் பாசறைமற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில்

பல்லடம் பேருந்து நிலையம் அருகில் திமுக தலைவர் கருணாநிதி குடும்பத்தினரின் ஊழல் முறைகேடுகள் பற்றிய துண்டு பிரசுரம் விநியோகத்தை ம் நிகழ்ச்சி சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி வ.ஜெயராமன் துவக்கி வைத்தார், இதில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத் தலைவர் கே.ராதாகிருஷ்ணன், பல்லடம் எம்.எல் ஏ பரமசிவம், மாவட்ட ஊராட்சி தலைவர் சண்முகம்,ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் ஆறுமுகம்,சிவாச்சலம்,நகராட்சி துணைத்தலைவர் வைஸ் பி.கே.பழனிசாமி, மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் நடராஜன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பழனிச்சாமி, கழக இணை செயலாளர் ஜோதிமணி, பாசறை மாவட்ட செயலாளர் காளிஸ்வரன், மாவட்ட் கவுன்சிலர் தண்ணீர்பந்தல் நடராஜன், மகளிர் அணி செயல்லாளர் சித்ராதேவி, கூட்டுறவு சங்கத் தலைவர்கள் சித்துராஜ் ராமமூர்த்தி பாசறை நிர்வாகிகள் பரணிகுமார், சண்முகசுந்தரம், வெங்கேடஷ் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர். .  

திருப்பூர் மாநகராட்சி நெசவாளர் காலனி உயர்நிலைப்பள்ளியில்



புதிய வாக்காளர் பெயர் சேர்ப்பு பணிகளை வனத்துறை  அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பார்வையிட்டார். உடன் துணை மேயர் சு.குணசேகரன்  மண்டலத்தலைவர்கள் ஜெ.ஆர்.ஜான், வி.ராதாகிருஷ்ணன், எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் கருவம்பாளையம் எம்.மணி  மாமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் மற்றும் காலனி செல்வராஜ், நீதிராஜன் ஆகியோர் உள்ளனர். 

திருப்பூர் மாவட்டம், உடுமலையை அருகே உள்ள நரசிங்கபுரம்பகுதியை சேர்ந்த அண்ணா தி.மு.க.பிரமுகர்

என்.வீரமணி என்பவர் மக்கள் முதல்வர் ஜெயலலிதா சிறையில் இருந்து விடுதலையாக வேண்டி தீக்குளித்து தன் உயிரை மாய்த்துக்கொண்டார்.அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஜெயலலிதா உத்திரவின் பேரில் அண்ணா தி.மு.க.தலைமை கழகம் சார்பில் வழங்கப்பட்ட ரூ.3 லட்சம் நிதி உதவி காசோலையை புறநகர் மாவட்ட செயலாளரும், சட்டமன்ற துணை சபாநாயகருமான பொள்ளாச்சி வ,ஜெயராமன் வீரமணியின் துணைவியார் கலாமணியிடம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அரசு கேபிள் டி.வி.நிறுவனத்தலைவர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ.கள் சி.சண்முகவேலு, கே.பி.பரமசிவம், மகேந்திரன் எம்.பி., மாவட்ட ஊராட்சி தலைவர் எம்.சண்முகம், நகராட்சி துணைத் தலைவர் எம்.கண்ணாயிரம், ஒன்றிய செயலாளர் ஆறுச்சாமி, நகர செயலாளர் சாமராயம்பட்டி எஸ்.ராஜ்குமார், வழக்கறிஞர்கள் ராமகிருஷ்ணன், மகேந்திரன்,குமேரேசன் மற்றும்  மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.