என்.வீரமணி என்பவர் மக்கள் முதல்வர் ஜெயலலிதா சிறையில் இருந்து விடுதலையாக வேண்டி தீக்குளித்து தன் உயிரை மாய்த்துக்கொண்டார்.அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஜெயலலிதா உத்திரவின் பேரில் அண்ணா தி.மு.க.தலைமை கழகம் சார்பில் வழங்கப்பட்ட ரூ.3 லட்சம் நிதி உதவி காசோலையை புறநகர் மாவட்ட செயலாளரும், சட்டமன்ற துணை சபாநாயகருமான பொள்ளாச்சி வ,ஜெயராமன் வீரமணியின் துணைவியார் கலாமணியிடம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அரசு கேபிள் டி.வி.நிறுவனத்தலைவர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ.கள் சி.சண்முகவேலு, கே.பி.பரமசிவம், மகேந்திரன் எம்.பி., மாவட்ட ஊராட்சி தலைவர் எம்.சண்முகம், நகராட்சி துணைத் தலைவர் எம்.கண்ணாயிரம், ஒன்றிய செயலாளர் ஆறுச்சாமி, நகர செயலாளர் சாமராயம்பட்டி எஸ்.ராஜ்குமார், வழக்கறிஞர்கள் ராமகிருஷ்ணன், மகேந்திரன்,குமேரேசன் மற்றும் மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.