கடலூர்,
ஜெயலலிதா விரைவில் விடுதலைபெற வேண்டி நெய்வேலி, குறிஞ்சிப்பாடி மற்றும் கடலூர் பகுதிகளில் உள்ள கோவில்களில் அ.தி.மு.க.வினர் சிறப்பு யாக பூஜை நடத்தினர்.
நெய்வேலி
ஜெயலலிதா விடுதலை பெற வேண்டி நெய்வேலி வட்டம் 12-ல் அமைந்துள்ள துர்கை அம்மன் கோவிலில் சிறப்பு யாகம் நடைபெற்றது. இதன்பின் துர்கைஅம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, தீபாராதனை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை அ.தி.மு.க. 12- வது வட்ட கிளை செயலாளர் தேவாநந்தன், அ.தி.மு.க. நகர நிர்வாகிகள் கோவிந்தராஜ், வெற்றிவேல், செல்வராஜ்,அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்க நி£வாகிகள் அபு, உதயகுமார், அல்போன்ஸ் ஆகியோர் செயதிருந்தனர். இதில் மாவட்ட மாணவர் அணி செயலாளர் மகேஷ், என்.எல்.சி. வருங்கால வைப்புநிதி இயக்குநர்கள் ராமலிங்கம், தமிழ்செல்வன், கணேசன், மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் ஜோதிகுமார், ஞானபிரகாசம் உள்ளிட்ட பலர்கலந்து கொண்டனர்.
குறிஞ்சிப்பாடி
இதுபோல் குறிஞ்சிப்பாடி ஒன்றிய, நகர ஜெயலலிதா பேரவை சார்பில் குறிஞ்சிப்பாடி புத்து மாரியம்மன் கோவிலில் சிறப்பு யாகம் மற்றும் கூட்டு வழிபாடு ஒன்றிய பேரவை செயலாளர் வீரமணி தலைமையில் நடந்தது. இதில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் அருண்மொழித்தேவன் எம்.பி. ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைத்தலைவர் ராஜசேகர், பேரூராட்சி மன்றத்தலைவர் முத்துலிங்கம், நகர செயலாளர் ரஜினிகாந்த், நகர பேரவை செயலாளர் ரவி, காயல்பட்டு தொடக்க வேளாண்மை வங்கி தலைவர் வெங்கடாஜலபதி, கவுன்சிலர் ஆனந்தபாஸ்கர், கார்த்திகேயன், ஒன்றியக்குழு தலைவர் சண்முகசுந்தரம், துணைத்தலைவர் மல்லிகா தங்கப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கடலூர் தெற்கு ஒன்றியம்
கடலூர் தெற்கு ஒன்றியம் அ.தி.மு.க. சார்பில் ஒன்றிய செயலாளர் ராம. பழனிச்சாமி தலைமையில் திருமாணிக்குழி வாமனபுரீஸ்வரர் கோவில் 108 குடம் பால் அபிசேகம் செய்து சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் மாவட்ட பேரவை செயலாளர் ஆறுமுகம், நிலவள வங்கி துணைத்தலைவர் ரவி, ஒன்றிய மாணவர் அணி செயலாளர் விஜயராயலு, ஊராட்சி மன்றத்தலைவர் அருள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
புதுப்பேட்டை
அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியம் பண்டரக்கோட்டை, அம்மாபேட்டை, வாணியம்பாளையம், குச்சிப்பாளையம் ஆகிய கிராம பொதுமக்கள் சார்பில் பண்டரக்கோட்டை அய்யனார் கோவில் மெயின் ரோட்டில் இருந்து அ.தி.மு.க. வினர் ஒன்றிய செயலாளர் என்.டி.கந்தன் தலைமையில் ஊர்வலமாக புறப்பட்டனர். மாநில இலக்கிய அணி துணைச்செயலாளர் நத்தம் கோபு, மாவட்ட பொருளாளர் ஜானகிராமன், தொகுதி செயலாளர் ராமசாமி, துணை செயலாளர் முத்தழகி தெய்வசிகாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர் இதில் பெண்கள் தலையில் பால் குடங்களை சுமந்து வந்தனர். புதுப்பேட்டை காசி விசுவநாதர் கோவிலை வந்தடைந்ததும், அங்கு சாமிக்கு பால் அபிசேகமும், செய்து சிறப்பு பூஜையும் நடந்தது.
இதில் ஒன்றியக்குழு தலைவர் சுந்தரிமுருகன், துணைத்தலைவர் எம்.சி.சம்பந்தம், மாவட்ட விவசாய பிரிவு தலைவர் புஷ்பராஜ், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் கோதண்டம், ஒன்றிய கவுன்சிலர்கள் ஜெய்சங்கர், மனோகரன், மேலவை பிரதிநிதி ராமலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.