சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்புக்கு ஆட்சேபம் தெரிவித்து பாளையங்கோட்டையில் சனிக்கிழமை அதிமுக மகளிரணி சார்பில் உண்ணாவிரதம் நடைபெற்றது.
சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்புக்கு ஆட்சேபம் தெரிவித்து திருநெல்வேலி மாவட்டத்தில் அதிமுக சார்பில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்புக்கு ஆட்சேபம் தெரிவித்து திருநெல்வேலி மாவட்டத்தில் அதிமுக சார்பில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
சனிக்கிழமை திருநெல்வேலி மாநகர் மாவட்ட அதிமுக மகளிரணி சார்பில் பாளையங்கோட்டை ஜவாஹர் திடலில் நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு மாநகர் மாவட்ட மகளிரணி செயலர் விஜிலாசத்யானந்த் எம்.பி. தலைமை வகித்தார். மாநகர் மாவட்ட அவைத் தலைவர் பரணி சங்கரலிங்கம் முன்னிலை வகித்தார். கே.ஆர்.பி. பிரபாகரன் எம்.பி. உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
இதில் மாநகர் மாவட்ட மகளிரணி துணைச் செயலரும் மாநகராட்சி மேயருமான இ. புவனேஸ்வரி, துணை மேயரும், இளைஞரணித் தலைவலருமான பூ. ஜெகநாதன், மாநகர் மாவட்ட இளைஞர் பாசறைச் செயலர் மு. ஹரிஹரசிவசங்கர், மாநகராட்சி மண்டலக்குழுத் தலைவர்கள் எம்.சி. ராஜன்,
கி. மாதவராமானுஜம், கூட்டுறவு பேரங்காடித் தலைவர் பல்லிக்கோட்டை செல்லத்துரை, மாமன்ற உறுப்பினர்கள் பரமசிவன், முத்துலட்சுமி, மகளிரணி நிர்வாகிகள் ராமு, வெண்ணிலா, அங்கம்மாள், சாந்தி, தமிழரசி, எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலர் சி.ப. முருகன் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.