Oct 9, 2014

அம்மா அவர்களுக்கு நீதி கிடைத்திட மதுரையில் பூஜை செய்து வேண்டிகொண்டனர்

Photo: மதுரை மாநகர் மாவட்ட கழகத்தின் சார்பில் தமிழக மக்களின் காவல் தெய்வமாக விளங்கும் கழக நிரந்தரப்பொதுசெயலாளர் ,தங்கத்தாரகை ,இதய தெய்வம், புரட்சித்தலைவி,மக்களின் முதலவர் அம்மா அவர்களுக்கு நீதி கிடைத்திட மதுரை அருள்மிகு பிரசன்னா வெங்கடேச பெருமாள் சந்நிதியில் மாண்புமிகு அமைச்சர் அவர்கள்,மற்றும் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு  பூஜை செய்து வேண்டிகொண்டனர் .. 
மதுரை மாநகர் மாவட்ட கழகத்தின் சார்பில் தமிழக மக்களின் காவல் தெய்வமாக விளங்கும் கழக நிரந்தரப்பொதுசெயலாளர் ,தங்கத்தாரகை ,இதய தெய்வம், புரட்சித்தலைவி,மக்களின் முதலவர் அம்மா அவர்களுக்கு நீதி கிடைத்திட மதுரை அருள்மிகு பிரசன்னா வெங்கடேச பெருமாள் சந்நிதியில் மாண்புமிகு அமைச்சர் அவர்கள்,மற்றும் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு பூஜை செய்து வேண்டிகொண்டனர்

உடுமலையில் அண்ணா தி.மு.க.வினர் பிரார்த்தனை



திருப்பூர்மாவட்டம், உடுமலைப்பேட்டையில்புறநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.அமைப்புசாரா ஓட்டுநர் அணி சார்பில் பொதுச்செயலளர் ஜெயலலிதா விடுதலையாக வேண்டி உடுமலை, பொள்ளாச்சி மெயின் ரோட்டில் உள்ள பூர்வீக பள்ளிவாசலில் அணிச்செயலாளர் ஏ.ஹக்கீம் எம்.சி தலைமையில் சிறப்பு கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது. இந்த நிகழ்வில் உடுமலை நகர செயலாளர் கே.ஜி.சண்முகம், நகரமன்றத்தலைவர் கே.ஜி.எஸ்.ஷோபனா, நகரமன்றத் துணைத்தலைவர் கண்ணாயிரம் மற்றும் நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஜெயலலிதா விடுதலைபெற வேண்டி அ.தி.மு.க.வினர் கோவில்களில் சிறப்பு யாக பூஜை



கடலூர்,

ஜெயலலிதா விரைவில் விடுதலைபெற வேண்டி நெய்வேலி, குறிஞ்சிப்பாடி மற்றும் கடலூர் பகுதிகளில் உள்ள கோவில்களில் அ.தி.மு.க.வினர் சிறப்பு யாக பூஜை நடத்தினர்.

நெய்வேலி

ஜெயலலிதா விடுதலை பெற வேண்டி நெய்வேலி வட்டம் 12-ல் அமைந்துள்ள துர்கை அம்மன் கோவிலில் சிறப்பு யாகம் நடைபெற்றது. இதன்பின் துர்கைஅம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, தீபாராதனை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை அ.தி.மு.க. 12- வது வட்ட கிளை செயலாளர் தேவாநந்தன், அ.தி.மு.க. நகர நிர்வாகிகள் கோவிந்தராஜ், வெற்றிவேல், செல்வராஜ்,அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்க நி£வாகிகள் அபு, உதயகுமார், அல்போன்ஸ் ஆகியோர் செயதிருந்தனர். இதில் மாவட்ட மாணவர் அணி செயலாளர் மகேஷ், என்.எல்.சி. வருங்கால வைப்புநிதி இயக்குநர்கள் ராமலிங்கம், தமிழ்செல்வன், கணேசன், மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் ஜோதிகுமார், ஞானபிரகாசம் உள்ளிட்ட பலர்கலந்து கொண்டனர்.

குறிஞ்சிப்பாடி

இதுபோல் குறிஞ்சிப்பாடி ஒன்றிய, நகர ஜெயலலிதா பேரவை சார்பில் குறிஞ்சிப்பாடி புத்து மாரியம்மன் கோவிலில் சிறப்பு யாகம் மற்றும் கூட்டு வழிபாடு ஒன்றிய பேரவை செயலாளர் வீரமணி தலைமையில் நடந்தது. இதில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் அருண்மொழித்தேவன் எம்.பி. ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைத்தலைவர் ராஜசேகர், பேரூராட்சி மன்றத்தலைவர் முத்துலிங்கம், நகர செயலாளர் ரஜினிகாந்த், நகர பேரவை செயலாளர் ரவி, காயல்பட்டு தொடக்க வேளாண்மை வங்கி தலைவர் வெங்கடாஜலபதி, கவுன்சிலர் ஆனந்தபாஸ்கர், கார்த்திகேயன், ஒன்றியக்குழு தலைவர் சண்முகசுந்தரம், துணைத்தலைவர் மல்லிகா தங்கப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கடலூர் தெற்கு ஒன்றியம்

கடலூர் தெற்கு ஒன்றியம் அ.தி.மு.க. சார்பில் ஒன்றிய செயலாளர் ராம. பழனிச்சாமி தலைமையில் திருமாணிக்குழி வாமனபுரீஸ்வரர் கோவில் 108 குடம் பால் அபிசேகம் செய்து சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் மாவட்ட பேரவை செயலாளர் ஆறுமுகம், நிலவள வங்கி துணைத்தலைவர் ரவி, ஒன்றிய மாணவர் அணி செயலாளர் விஜயராயலு, ஊராட்சி மன்றத்தலைவர் அருள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

புதுப்பேட்டை

அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியம் பண்டரக்கோட்டை, அம்மாபேட்டை, வாணியம்பாளையம், குச்சிப்பாளையம் ஆகிய கிராம பொதுமக்கள் சார்பில் பண்டரக்கோட்டை அய்யனார் கோவில் மெயின் ரோட்டில் இருந்து அ.தி.மு.க. வினர் ஒன்றிய செயலாளர் என்.டி.கந்தன் தலைமையில் ஊர்வலமாக புறப்பட்டனர். மாநில இலக்கிய அணி துணைச்செயலாளர் நத்தம் கோபு, மாவட்ட பொருளாளர் ஜானகிராமன், தொகுதி செயலாளர் ராமசாமி, துணை செயலாளர் முத்தழகி தெய்வசிகாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர் இதில் பெண்கள் தலையில் பால் குடங்களை சுமந்து வந்தனர். புதுப்பேட்டை காசி விசுவநாதர் கோவிலை வந்தடைந்ததும், அங்கு சாமிக்கு பால் அபிசேகமும், செய்து சிறப்பு பூஜையும் நடந்தது.

இதில் ஒன்றியக்குழு தலைவர் சுந்தரிமுருகன், துணைத்தலைவர் எம்.சி.சம்பந்தம், மாவட்ட விவசாய பிரிவு தலைவர் புஷ்பராஜ், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் கோதண்டம், ஒன்றிய கவுன்சிலர்கள் ஜெய்சங்கர், மனோகரன், மேலவை பிரதிநிதி ராமலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Oct 8, 2014

அவினாசி கோவிலில் வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் அங்கப்பிரதட்சணம்

 




திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க., சார்பில் , மக்கள் முதல்வர் அம்மா மீண்டு வர  வேண்டி அவினாசியில் உள்ள கருணாம்பிகை உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில், வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில் அ.தி.மு.க., வினர் நூற்றுக்கணக்கானோர் அங்கப்பிரதட்சணம் செய்தனர். இதில் கருப்பசாமி எம்.எல்.ஏ., திருப்பூர் துணை மேயர் சு.குணசேகரன், மண்டல தலைவர்கள்  ஜான்,ராதாகிருஷ்ணன், கருவம்பாளையம் மணி,  கண்ணப்பன்,அன்பகம் திருப்பதி, மார்க்கெட் சக்திவேல், தம்பி மனோகரன், வக்கீல் சுப்பிரமணியம், பாசறை சதீஷ், பேரூராட்சி தலைவர்கள் ஜெகதாம்பாள், பழனிசாமி, துணை தலைவர் மூர்த்தி, ஒன்றிய செயலாளர் மு.சுப்பிரமணி, ஜெகதீசன், நகர செயலாளர் ராமசாமி, நகர இளைஞர் அணி செயலாளர் ஜெயபால், சேவூர் வேலுசாமி,  திருப்பூர் கவுன்சிலர்கள் கணேஷ், கீதா, கருணாகரன், கனகராஜ், தங்கமுத்து, நீதிராஜன், ஈஸ்வரமூர்த்தி,ரத்தினகுமார், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

குண்டடம் பகுதி செய்திகள்


திருப்பூர் மாவட்டம் குண்டடம் ஒன்றிய அண்ணா தி.மு.க.சார்பில் மக்கள் முதல்வர் ஜெயலலிதா விடுதலயாக வேண்டி ஒன்றிய செயலளார் செந்தில்குமார் தலைமையில் 200 பெண்கள் உள்பட 500 க்கும் மேற்பட்டவர்கள் கோவை,மதுரை ரோட்டில் கோஷங்கள் எழுப்பி அறவழியில் போராட்டம் நடத்தினர்  நிகழ்ச்சியில் ஒன்றியி  செயலாளர் கார்த்திகேயன், ஒன்றியக்குழு தலைவர் பக்த்வாச்சலம்,  நிலவள வங்கி தலைவர் சிவபாலகிருஷ்ணன், பேரூர் கழக செயலாளர் தமிழரசு,பேரவை செயலாளர் தியாகராஜன், ஒன்றிய கவுன்சிலர் சோமசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பல்லடம் பகுதி செய்திகள்





திருப்பூர் புறநகர் மாவட்டம் அண்ணா தி.மு.க.மகளிர் சார்பில் அதன் மாவட்ட செயலளார் சித்ராதேவி தலைமையில் மகளிர் அணியை சேர்ந்தவர்கள் பொய் வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலையாக வேண்டி பலளிடம் எம்.எல்.ஏ. பரமசிவம் முன்னிலையில் பால்குடம் எடுத்து வேண்டுதல் செய்தனர்.இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி தலைவர்  சண்முகம், நகராட்சி துணை தலைவர் வைஸ் பழனிசாமி, ம்மாவ்த்ட கவுன்சிலர் ப.நடராஜன், கூட்டுறவு சங்க தலைவர்கள் சித்துராஜ், ராமமூர்த்தி,எஸ்.எஸ்.மணியன், நிர்வாகிகள் சூ.தர்மராஜன்,பாரதி செல்வராஜ்உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மடத்துகுளம் பகுதி செய்திகள்



மடத்துக்குளம் பேரூராட்சி கழுகரையில் மக்களின் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எதிரான பொய் வழக்கிலிருந்து விரைவில் மீண்டு வந்து தமிழக ஆட்சிப் பொறுப்பேற்கவும் பேரூராட்சித் தலைவர் எஸ்.பழனிச்சாமி தலைமையில்,ஒன்றிய செயலாளர் நா.அண்ணாத்துரை, திருப்பூர் மாவட்ட அரசு வழக்கறிஞர் ராமகிருஷ்ணன், அமராவதி பாசன சபைத் தலைவர் ராஜ்குமார், பேரூராட்சித் துணைத் தலைவர் தண்டபாணி, ஆகியோர் முன்னிலையில் கழுகரை மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடத்தி ஆயிரம் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் உடுமலை நகரமன்றத் தலைவர் கே.ஜி.எஸ்.ஷோபனா,பேரவை செயலாளர் சிவலிங்கம், வீட்டு வசதி கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் யேசுதுரை, நீலம்பூர் செல்வராஜ், கழுகரை பாபு, கவுன்சிலர்கள் பாலு, குணா,தண்டபாணி, சுப்பிரமணி, கணியூர் காஜா மைதீன், தேவி, உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

உடுமலை செய்திகள்








Oct 7, 2014

ஜெயலலிதா விடுதலை வேண்டி வழிவிடு முருகன் கோயிலில் சிறப்பு ஹோமம்

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிதா விடுதலை வேண்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள பிரசித்திபெற்ற நத்தம்பட்டி, வழிவிடு முருகன் திருகோயிலில் சிறப்பு ஹோமங்கள் மற்றும் பூஜைகளை வத்திராயிருப்பு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் சுப்புராஜ் தலைமையில் செவ்வாய்கிழமை செய்தனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழக்கிலிருந்து இருந்து விடுதலை பெற்று, மீண்டும்  தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்று, நிலையான நல்லாட்சி வழங்க வேண்டி, வத்திராயிருப்பு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் சிறப்பு ஹோமம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது.மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் நத்தம்பட்டி அருகேயுள்ள பிரசித்திபெற்ற அருள்மிகு வழிவிடு முருகன் திருக்கோயிலில் ஷ்கந்த ஹோம யாகம் மற்றும் கணபதி ஹோம யாகத்தை பட்டர்கள் நடத்தினர்.
நிகழ்ச்சியில் வத்திராயிருப்பு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் சுப்புராஜ், வத்திராயிருப்பு ஒன்றியக் குழுத் தலைவர் கனகுஅம்மாள், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான கட்சித் தொண்டர்கள் ஹோமம் மற்றும் பூஜைகளில் கலந்து கொண்டனர்.