Showing posts with label மாநகராட்சி. Show all posts
Showing posts with label மாநகராட்சி. Show all posts

Oct 31, 2014

Oct 14, 2014

திருப்பூரில் அண்ணா தி.மு.கவினர் தொடர்ந்து யாகம்









ஜெயலலிதா விடுதலை பெற வேண்டி  திருப்பூர் அண்ணா தி.மு.க.வினர் யாகம், 
60 அடி உயர வீர பத்திரகாளியம்மனுக்கு பாலாபிஷகம
அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், மேயர் விசாலாட்சி, துணை மேயர் குணசேகரன் பங்கேற்பு 


திருப்பூர்,அக்.14-
அண்ணா தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா விடுதலை பெற வேண்டி திருப்பூர் மாநகர் மாவட்டம் முழுவதும் 17-வது நாளாக தொடர்ந்து யாகங்கள், பிரார்த்தனைகள், வேண்டுதல்கள் ஆகியவற்றை அண்ணா தி.மு.க.வினர் நடத்தி வருகின்றனர். இதில் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், மேயர் அ.விசாலாட்சி,துணை மேயர் சு.குணசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அண்ணா தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா விடுதலையாக வேண்டி, திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.,சார்பில்  மாநகர் மாவட்ட செயலாளரும், வனத்துறை அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில் பார்க் ரோட்டில் உள்ள ஸ்ரீ ராகவேந்திரா கோவிலில்  கணபதி ஹோமம்,சுதர்சன ஹோமம், நவக்கிரஹ ஹோமம், நரசிம்ம ஹோமம் ஆகியவை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ஆனந்தன் துணைவியார் லட்சுமி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.மற்றும் மாவட்ட மகளிர் அணி சார்பில் காலேஜ் ரோட்டில் உள்ள ஐயப்பன் கோவிலில் மகளிர் அணி மாநில துணை செயலாளரும்,மேயருமான அ.விசாலாட்சி தலைமையில் 66 விளக்கு பூஜை மற்றும் பிரார்த்தனை நடைபெற்றது. மகளிர் அணி மாவட்ட செயலாளர் ஜெகதாம்பாள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திருப்பூர் ஆறுகோம்பை வீதியில் 25 வது வார்டு கிளை கழகம் சார்பில் 60 அடி உயர கொண்டத்து வீரப்பத்திரகாளியம்மன் சிலைக்கு 1,000 லிட்டர் பாலாபிஷேகம் செய்து,10,008 எலுமிச்சம் பழங்களாலான மாலை அணிவித்து மேயர் அ.விசாலாட்சி, துணை மேயர் சு.குணசேகரன் தலைமையில் அண்ணா தி.மு.க.வினர் வழிபட்டனர்.
திருப்பூர் பல்லடம் ரோடு, அருண் சில்க்ஸ் அருகில் உள்ள ஸ்ரீ ஜெயவீர ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜையும், வழிபாடும் நடந்தது  இந்த நிகழ்ச்சிக்கு மாநகராட்சி 4-வது மண்டல தலைவர் கிருத்திகா சோமசுந்தரம் தலைமை தாங்கினார். மகளிர் அணி மாநில துணை செயலாளரும், மேயருமான அ.விசாலாட்சி,  மாவட்ட இளைஞர் அணி செயலாளர், துணை மேயர் சு.குணசேகரன் ஆகியோர் முன்னிலையில் 1 மணி நேரம் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.
திருப்பூர் புறநகர் மாவட்டம், தெற்கு ஒன்றிய அண்ணா தி.மு.க.மற்றும் மங்கலம் ஊராட்சி கழகம் சார்பில் மங்கலம் பெருமாள் கோவிலில் இருந்து மலைக்கோவில் குழந்தை வேலாயுதசுவாமி கோலிவில் வரை பல்லடம் எம்.எல்.ஏ. பரமசிவம், மாவட்ட ஊராட்சி தலைவர் சண்முகம், தெற்கு ஒன்றிய செயலாளர் சில்வர் வெங்கடாசலம், ஊராட்சி கழக செயலாளர் சுப்பிரமணியம் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் நடந்து சென்றனர். அங்கு 
108 தேங்காய் உடைத்து ஜெயலலிதாவிற்காக 1 மணி நேரம் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.
திருப்பூர் மாவட்டம். உடுமலைப்பேட்டையில்புறநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.அமைப்புசாரா ஓட்டுநர் அணி சார்பில் பொதுச்செயலளர் ஜெயலலிதா விடுதலையாக வேண்டி உடுமலை, பொள்ளாச்சி மெயின் ரோட்டில் உள்ள பூர்வீக பள்ளிவாசலில் அணிச்செயலாளர் ஏ.ஹக்கீம் எம்.சி தலைமையில் சிறப்பு கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது. இந்த நிகழ்வில் உடுமலை நகர செயலாளர் கே.ஜி.சண்முகம், நகரமன்றத்தலைவர் கே.ஜி.எஸ்.ஷோபனா, நகரமன்றத் துணைத்தலைவர் கண்ணாயிரம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் தொகுதியில், பிரசித்தி பெற்ற கொழுமம் அருள்மிகு தாண்டேஸ்வரர், அருள்மிகு கரிவரதராஜப்பெருமாள் அருள்மிகு நடராஜர் ஆகிய கோவில்களில் ஜெயலலிதா வழக்குகளிலிருந்து விடுதலையாக வேண்டி மடத்துக்குளம் தொகுதி எம்.எல்.ஏ.,சி.சண்முகவேலு தலைமையில் சென்று மண்சோறு சாப்பிட்டு சிறப்பு வழிபாடு மற்றும் பிரார்த்தனைகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய பேரவைச்செயலாளர் சிவலிங்கம், ஒன்றிய செயலாளர் அண்ணாத்துரை, அரசு வழக்கறிஞர் ராமகிருஷ்ணன், எஸ்.ராஜ்குமார், குமரலிங்கம் பேரூராட்சித் தலைவர் சிவக்குமார், பேரூர்கழகச் செயலாளர் வரதராஜ், மாவட்ட துணைச் செயலாளர் சுப்பிரமணியம், மடத்துக்குளம் பேரூராட்சித் தலைவர் பழனிச்சாமி, துணைத் தலைவர் தண்டபாணி, கொழுமம் ஊராட்சி மன்றத் தலைவர் இந்திராணி, நீலம்பூர் செல்வராஜ், கே.கே.ரவி, கணியூர் காஜாமைதீன்  உள்ளிட்ட.நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இந்த அனைத்து நிகழ்ச்சியிலும் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் ஜெ.ஆர்.ஜான், ராதாகிருஷ்ணன், கண்ணப்பன், அன்பகம் திருப்பதி, மார்க்கெட் சக்திவேல், வழக்கறிஞர் சுப்பிரமணியம், ஸ்டீபன் ராஜ்,சதீஷ், மண்டல தலைவர் கிருத்திகா சோமசுந்தரம், வடக்கு ஒன்றிய செயலாளர் கே.என்.விஜயகுமார்,வளர்மதி கருணாகரன், சாகுல்ஹமீது, தாமோதரன், பட்டுலிங்கம், பூளுவபட்டி பாலு, ஒன்றிய குழுத்தலைவர் சாமிநாதன்,  வேலம்பாளையம் அய்யாசாமி, வி.கே.பி.மணி,ஏ.கண்ணப்பன், அட்லஸ் லோகநாதன், உஷா ரவிக்குமார், எஸ்பி.என்.பழனிச்சாமி, கலைமகள் கோபால்சாமி, ராஜேஷ்கண்ணா, டி.பார்த்திபன், ஹரிஹரசுதன், கண்ணபிரான், ரகுநாதன்,சடையப்பன், ரத்தினகுமார், பி.ராஜ்குமார், பெரிச்சிபாளையம் ஈஸ்வரமூர்த்தி, அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள்  கிருஷ்ணன், ராஜசேகர், பொன்னுசாமி,சரவணன், ராஜேந்திரன், ரவிக்குமார், குணசேகரன், சிவகுமார்,வேலுசாமி, கணேஷ், முருகன், கேபிள் பாலு, வினோத்குமார்,முபாரக், குணசேகர்,  விஸ்வநாதன், கவுன்சிலர்கள் முருகசாமி, செல்வம், கணேஷ், வசந்தாமணி, பிரியா சக்திவேல், பாலசுப்பிரமணியம், சின்னசாமி, ஈஸ்வரன், கனகராஜ், அமுதா வேலுமணி, பேபி தர்மலிங்கம், மற்றும் பாசறை நிர்வாகிகள் யுவராஜ் சரவணன், வி.எம்.கோகுல், லோகநாதன், பரமராஜன், சுரேந்தர், பொன்.அன்பரசன்,  நீதிராஜன், பங்க் என்.ரமேஷ், பேபி பழனிசாமி, என்.சரவணன், தலைமை கழக பேச்சாளர்கள் முகவை கண்ணன், டி.ஏ.பாலகிருஷ்ணன், தீக்கனல் விஜயகுமார், மதுரபாரதி உள்ளிட்டவர்களும் , பாஸ் என்கிற பாஸ்கரன், வே.சரவணன், பஸ் ஸ்டாண்ட் சந்திரன், வாசுதேவன், சீனிவாசன், முன்னால் கவுன்சிலர் சு.கேசவன்,ருக்குமணி, ராஜகோபால், மகளிர் அணி நிர்வாகிகள் கோமதி சம்பத், சுந்தராம்பாள் கேசவன்,ரசூல்மும்தாஜ் உள்பட பலர் லந்து கொண்டனர்.

Oct 13, 2014

திருப்பூரில் ஆயிரம் லிட்டர் பால் அபிஷேகம்




திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.,.25 வது வார்டு கிளைக்கழகம் சார்பில் .மக்கள் முதல்வர் ஜெயலலிதா பொய் வழக்கிலிருந்து விரைவில் விடுதலையாக வேண்டி  மாவட்ட செயலாளரும், வனத்துறை அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் வழிகாட்டுதலின் பேரில் கிளை செயலாளர் தங்கவேல் தலைமையில்,மேயர் அ.விசாலாட்சி, துணை மேயர் சு.குணசேகரன், வடக்கு தொகுதி செயலாளர் ஜெ.ஆர்.ஜான், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் வி.ராதாகிருஷ்ணன், வடக்கு ஒன்றிய செயலாளர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலையில் பி.என்.ரோட்டில் உள்ள ராமையா காலனி ஆறுகொம்பை வீதியில் உள்ள ஸ்ரீ வீர பத்திரகாளியம்மன் கோவில் சாமிக்கு 1000 லிட்டர் பால் அபிஷோகம், 1008 எலுமிச்சை கனி மாலை அணிவித்தும்,புடவைசத்தியும், பூமாலை அணிவித்தும் உச்சிகால பூஜையும்  நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் மன்ற உறுப்பினர்கள், கொட்டுரவு சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் மேயர் விசாலாட்சி, துணை மேயர் குணசேகரன்.ஆகியோர் வேண்டுதலின்போது மனம் உருகியபடி  கண்ணீர் விட்டு ஜெயலலிதாவிற்கு ஜாமீன் கிடைக்க பிரார்தனை செய்தனர்.இதனை பார்த்த மற்ற நிர்வாகிகளும் கதறி அழுதது. அங்கிருந்த அனைவரையும் நெகிழ வைத்தது.

Oct 12, 2014

ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை



ஜெயலலிதா விரைவில் விடுதலையாக வேண்டி மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க. சார்பில் ஆஞ்சநேயர் கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் மேயர், துணை மேயர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மக்கள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 15 நாட்களாக கர்நாடகா சிறையில் அடைப்பட்டுள்ளார்.அவரை விடுதலை செய்ய வேண்டி தமிழ்நாடு முழுவதும் அண்ணா தி.மு.க.நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்தும் ,யாகம் நடத்தியும், தலைமுடி காணிக்கை செலுத்தியும், கருப்புசட்டைகள் அணிந்தும், மனித சங்கிலி நடத்தியும், அமைதியான முறையில் அறவழியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க. சார்பில் ஜெயலலிதா விரைவில் விடுதலையாக வேண்டி திருப்பூர் பல்லடம் ரோடு, அருண் சில்க்ஸ் அருகில் உள்ள ஸ்ரீ ஜெயவீர ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜையும், வழிபாடும் நடந்தது  இந்த நிகழ்ச்சிக்கு மாநகராட்சி 4-வது மண்டல தலைவர் கிருத்திகா சோமசுந்தரம் தலைமை தாங்கினார். மகளிர் அணி மாநில துணை செயலாளரும், மேயருமான அ.விசாலாட்சி,  மாவட்ட இளைஞர் அணி செயலாளர், துணை மேயர் சு.குணசேகரன், வடக்கு தொகுதி செயலாளர் ஜெ.ஆர்.ஜான், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலளார் வி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் ஜெயலலிதா விரைவில் விடுதலையாக வேண்டியும், நல்ல உடல்நல ஆரோக்யத்துடன் இருக்க வேண்டியும் 1 மணி நேரம் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.
இதனை தொடர்ந்து 4-வது மண்டலம் சார்பில் காலை 5 மணி முதல், மாலை வரை அபிஷேக, அலங்கார பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்து. மேலும் கோவிலுக்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும் 4வது மண்டலம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள், நகர மற்றும் கிளை கழக நிர்வாகிகள், மகளிர் அணியினர், தலைமை கழக பேச்சாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்

Oct 11, 2014

திருப்பூர் மாநகர் மாவட்ட இளைஞர் அணி செயலாளரும், துணை மேயருமான சு.குணசேகரன் தலைமையில் சிறப்பு பூஜை



திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் மக்கள் முதல்வர் ஜெயலலிதா பொய் வழக்கில் இருந்து விடுதலையாக வேண்டியும்,பொய்வழக்கில் இருந்து மீண்டு வரவும், மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் போலீஸ் லைன் அருள்மிகு மாரியம்மன் கோவிலில் பால் குடம் மற்றும் பூவோடு எடுத்தும் நிறைவேற்றுவதாக வேண்டியும், பிரார்த்தனை செய்தும் மாநகர் மாவட்ட இளைஞர் அணி செயலாளரும், துணை மேயருமான சு.குணசேகரன் தலைமையில் சிறப்பு பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சியில் மகளிர் அணி மாநில துணை செயலாளரும், மேயருமான அ.விசாலாட்சி, மாநகர் மாவட்ட நிர்வாகிகள் ஜெ.ஆர்.ஜான்,வி.ராதாகிருஷ்ணன், கருவம்பளையம் மணி, கண்ணப்பன்,அன்பகம் திருப்பதி, மார்கெட் சக்திவேல், வளர்மதி தாமோதரன், சபரீஷ்வரன், மணிகண்டன், ராஜ்குமார், நீதிராஜன், மகளிர் அணி நிர்வாகிகள் கோமதி சம்பத், ருக்குமணி ஆகியோர்கள் உள்பட அண்ணா தி.மு.க.நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.


Oct 9, 2014

அம்மா அவர்களுக்கு நீதி கிடைத்திட மதுரையில் பூஜை செய்து வேண்டிகொண்டனர்

Photo: மதுரை மாநகர் மாவட்ட கழகத்தின் சார்பில் தமிழக மக்களின் காவல் தெய்வமாக விளங்கும் கழக நிரந்தரப்பொதுசெயலாளர் ,தங்கத்தாரகை ,இதய தெய்வம், புரட்சித்தலைவி,மக்களின் முதலவர் அம்மா அவர்களுக்கு நீதி கிடைத்திட மதுரை அருள்மிகு பிரசன்னா வெங்கடேச பெருமாள் சந்நிதியில் மாண்புமிகு அமைச்சர் அவர்கள்,மற்றும் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு  பூஜை செய்து வேண்டிகொண்டனர் .. 
மதுரை மாநகர் மாவட்ட கழகத்தின் சார்பில் தமிழக மக்களின் காவல் தெய்வமாக விளங்கும் கழக நிரந்தரப்பொதுசெயலாளர் ,தங்கத்தாரகை ,இதய தெய்வம், புரட்சித்தலைவி,மக்களின் முதலவர் அம்மா அவர்களுக்கு நீதி கிடைத்திட மதுரை அருள்மிகு பிரசன்னா வெங்கடேச பெருமாள் சந்நிதியில் மாண்புமிகு அமைச்சர் அவர்கள்,மற்றும் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு பூஜை செய்து வேண்டிகொண்டனர்

Oct 5, 2014

ஜெ.ஆர்.ஜான் தலைமையில் கருப்பு சட்டை அணிந்து உண்ணாவிரதம் இருந்தனர்




திருப்பூர் 26வது வார்டு எம்.எஸ்.நகர் மெயின் ரோட்டில்  மக்கள் முதல்வர் ஜெயலலிதா வை விடுதலை செய்ய கோரி 2ம் மண்டலத்தலைவர் ஜெ.ஆர்.ஜான் தலைமையில் கருப்பு சட்டை அணிந்து உண்ணாவிரதம் இருந்தனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் தங்கமுத்து, செல்லம் தங்கவேல், அசோக்குமார், சாமி கணேஷ்,, பங்க் என்.ரமேஷ், தலைமை கழக பேச்சாளர்கள் தீக்கனல் விஜயகுமார், வெள்ளியங்கிரி, பாரதி பிரியன், நாகராஜ், வேங்கை விஜயகுமார், கனகராஜ், மளிகை மணி,  குருமூர்த்தி, பெரியசாமி, கோபால், துரை, லலிதா, ஜானகி, நாகவல்லி, சிதம்பரம், சுந்தரம், ஜெகநாதன் உள்ளிட்ட பலர் கொண்டனர். 

Oct 3, 2014

திருப்பூரில் வழிப்பட்டு தலங்களில் அண்ணா தி.மு.க.வினர் பிரார்த்தனை








திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க. ஜெயலலிதா பேரவை சார்பில் பொதுசெயலாளர் ஜெயலலிதா மீண்டு வர வேண்டி வழிபாட்டு தலங்களில் சர்வ மத பிராத்தனை நடந்தது.
அண்ணா தி.மு.க.பொதுசெயலாளர் ஜெயலலிதா தமிழக முதல்வராக பொறுப்பு ஏற்கும்போது எல்லாம் திருப்பூர் மாவட்டத்திற்கு தனி கவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக ரெயில்வே மேம்பாலம், குமரன் மகளிர் கல்லுரி, புதிய பஸ் நிலையம், 103 கோடி ரூபாய் மதிப்பில் பெருந்திட்ட வாளகம், இ.எஸ்.ஐ.மருத்துவமனை, மாநகராட்சிக்கு 330 கோடியில் 60 வது வார்டுகளுக்கும் சம நிலையில் வளர்ச்சி பணிகள், தினசரி குடிநீர் வழங்க ரூ.45 கோடி நிதி ஒதுக்கீடு போன்ற பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்றுள்ளது. இது தவிர பள்ளிகூடங்களை தரம் உயர்த்துவது, பள்ளி குழந்தைகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பது என்பது உள்ளிட்ட வைகலும் சிறப்பாக செய்து கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் கர்நாடக தனி நீதி மன்றம் அவருக்கு தவரான தீர்ப்பு வழங்கியுள்ளதால் தமிழக மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது அவருக்கு எதிரான தீர்ப்பு என்று மட்டும் அல்லாமல் ஒட்டு மொத்த தமிழக மக்களுக்கு வழங்கப்பட்ட அநீதி என்று அவர் மீண்டு வர வேண்டி தமிழகம் முழுவதும் மக்கள் உண்ணாவிரதம், மனித சங்கிலி போராட்டம், கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தி அறவழியில் போராடி வருகின்றனர்.
திருப்பூர் ஈஸ்வரன் கோவில், பெருமாள் கோவில், அவினாசி சாலையில் உள்ள சி.எஸ்.ஐ.தூய பவுல் தேவாலயம், எஸ்.ஏ.பி.தியேட்டர் அருகில் உள்ள இஸ்லாமியர்கள் மசூதி ஆகியவற்றில் மாநகர மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலளார் வி.ராதாகிருஷ்ணன் தலைமையில், மகளிர் அணி செயலாளரும், மேயருமான அ.விசாலாட்சி, துணை மேயர் சு.குணசேகரன், வசகு தொகுதி செயலாளர் ஜெ.ஆர்.ஜான் ஆகியோர் முன்னிலையில் மக்கள் முதல்வர் ஜெயலலிதா மீண்டு வர வேண்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இந்த மூன்று நிகழ்சிகளிலும்  நிர்வாகிகள் கருவம்பாளையம் மணி, கண்ணப்பன், அன்பகம் திருப்பதி, மார்க்கெட் சக்திவேல், ஸ்டீபன்ராஜ், அட்லஸ் லோகநாதன்,உஷா ரவிக்குமார், கலைமகள் கோபால்சாமி, மாவட்ட பிரதிநிதி ரஞ்சித்ரத்தினம், யுவராஜ் சரவணன், கவுன்சிலர்கள் கணேஷ், சேகர்,ஈஸ்வரன், ஆகியோர்களும், சொர்க்கம் நீதிராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக சி.எஸ்.ஐ.தேவாலயத்தில் நடந்த சிறப்பு பிரத்தனியில் பாதிரியார் விஜயன், செயலாளர் ஜெபரூபன் ஜான்சன்,  பொருளாளர் ஜான் சந்திரராஜ், கமிட்டி உறுப்பினர் ஜெயராஜ் உள்ளிட்ட ஏராளமான அண்ணா தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.மேலும் திருப்பூர் ஏற்றுமதி இரண்டாம் நிலை பனியன் வியாபாரிகள் சங்கம், தமிழ்நாடு அனைத்து வியாபாரிகள் சங்கம், பிரிண்டிங் மற்றும் கம்பக்டிங் சங்கம் ஆகியவை சார்பிலும் ஒரு நாள் கடை அடைப்பு போராட்டமும் நடந்தது.  
பின்னர் 'மக்கள் முதல்வர் ' ஜெயலலிதா மீண்டு வருவார் அம்மா என்ற நோட்டீசை மேயர் அ.விசாலாட்சி, துணை மேயர் சு.குணசேகரன், மாவட்ட பேரவை செயலாளர் வி.ராதாகிருஷ்ணன், ஜெ.ஆர்.ஜான்,ஆகியோர் தலைமையில் அண்ணா தி.மு.க., வினர் பொதுமக்களுக்கு விநியோகித்தனர்.  

மதுரை ஐராவதநல்லூர் 55 வட்டத்தில் ஜெயலலிதா அவர்களுக்கு பொய்யான தீர்ப்பை வழங்கியதை கண்டித்து உண்ணாவிரத போராட்டம்

மதுரை ஐராவதநல்லூர் 55 வட்டத்தில் ஜெயலலிதா அவர்களுக்கு பொய்யான தீர்ப்பை வழங்கியதை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடை பெற்றது.
இந்த உண்ணாவிரத போராட்டம்  ஊராட்சி கிளை செயலாளர் A . ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது, இந்த  உண்ணாவிரத போராட்டத்தில் ஊரக செயலாளர் பொன்.சதுரகிரி , அவை தலைவர் ஸ்ரீனிவாசன் பேரவை குழு தலைவர் எழில் பாண்டி , அம்மா பேரவை செயலாளர் பிள்ளையார் மற்றும் கழக தொண்டர்கள் கலந்து கொண்டனர்  



அதிமுகவினர் தலைவர்களையெல்லாம் மேடை ஏற்றி இருக்கிறது அம்மா வின் சிறைவாசம் !!!!


முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்டுள்ள சிறை தண்டனையை கண்டித்து திருப்பரங்குன்றம் பகுதியில்  அதிமுகவினர் தலைவர்களையெல்லாம் மீண்டும் மேடை ஏற்றி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்