திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் மக்கள் முதல்வர் ஜெயலலிதா பொய் வழக்கில் இருந்து விடுதலையாக வேண்டியும்,பொய்வழக்கில் இருந்து மீண்டு வரவும், மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் போலீஸ் லைன் அருள்மிகு மாரியம்மன் கோவிலில் பால் குடம் மற்றும் பூவோடு எடுத்தும் நிறைவேற்றுவதாக வேண்டியும், பிரார்த்தனை செய்தும் மாநகர் மாவட்ட இளைஞர் அணி செயலாளரும், துணை மேயருமான சு.குணசேகரன் தலைமையில் சிறப்பு பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சியில் மகளிர் அணி மாநில துணை செயலாளரும், மேயருமான அ.விசாலா ட்சி, மாநகர் மாவட்ட நிர்வாகிகள் ஜெ.ஆர்.ஜான்,வி.ராதாகிருஷ்ணன், கருவம்பளையம் மணி, கண்ணப்பன்,அன்பகம் திருப்பதி, மார்கெட் சக்திவேல், வளர்மதி தாமோதரன், சபரீஷ்வரன், மணிகண்டன், ராஜ்குமார், நீதிராஜன், மகளிர் அணி நிர்வாகிகள் கோமதி சம்பத், ருக்குமணி ஆகியோர்கள் உள்பட அண்ணா தி.மு.க.நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.