ஜெயலலிதாவை தமிழ்நாட்டிற்கு மாற்ற வேண்டும் என்றும், அவர் தொடர்ந்து பதவி வகிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் தமிழக, கர்னாடக உயர்நீதிமன்றங்களில் சிலர் மனு தாக்கல் செய்திருப்பதற்குஅண்ணா தி.மு.க. தலைமை நிலையச் செயலாளரும், அமைச்சருமான பழனியப்பன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நீதிபதிகளிடையே ஜெயலலிதா மீது தவறான எண்ணம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக எதிரிகள் செய்யும் சதிச்செயல் இது என்றும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து அண்ணா தி.மு.க. தலைமை நிலையச் செயலாளரும், உயர் கல்வித் துறை அமைச்சருமான பி. பழனியப்பன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
தமிழ்நாடு முதலமைச்சராக அம்மா தொடர்ந்து பதவி வகிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்திலும், பெங்களூர் சிறையில் இருக்கும் அம்மாவை தமிழ்நாட்டிற்கு மாற்ற வேண்டும் என்று கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்திலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக, செய்திகள் நாளிதழ்களில் வெளி வந்துள்ளன.
கண்டனம்
இந்த மனுக்களை யாரோ வேண்டுமென்றே விஷமத்தனமாக, தீய எண்ணத்துடன் தாக்கல் செய்துள்ளனர் என்றும், இதற்கும் அம்மாவுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்வதோடு, இதற்கு எனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
அம்மா ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள நிலையில், நீதிபதிகளிடையே அம்மா மீது தவறான எண்ணத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக எதிரிகள் செய்யும் சதிச் செயல் இது என்பதை எடுத்துக் கூற கடமைப்பட்டு இருக்கிறேன்.
மேலும், அம்மா தாக்கல் செய்ய வேண்டிய மனுக்களை, அவர்களுடைய வழக்கறிஞர்கள் குழு கவனித்துக் கொள்ளும் என்பதையும், அம்மாவின் அனுமதியின்றி எவ்வித மனுக்களையும், யாரும் நீதிமன்றங்களில் தாக்கல் செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு பி. பழனியப்பன் தெரிவித்துள்ளார்.