திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் தொகுதியில், பிரசித்தி பெற்ற கொழுமம் அருள்மிகு தாண்டேஸ்வரர், அருள்மிகு கரிவரதராஜப்பெருமாள் அருள்மிகு நடராஜர் ஆகிய கோவில்களில் மக்களை முதல்வர் ஜெயலலிதா வழக்குகளிலிருந்து விடுதலையாக வேண்டி ஒன்றிய ஜெயலலிதா பேரவை சார்பில் மடத்துக்குளம் தொகுதி எம்.எல்.ஏ.,சி.சண்முகவேலு தலைமையிலும், ஒன்றிய பேரவைச் செயலாளர் எஸ்.பி.சிவலிங்கம், ஒன்றிய செயலாளர் அண்ணாத்துரை, அரசு வழக்கறிஞர் ராமகிருஷ்ணன், எஸ்.ராஜ்குமார், குமரலிங்கம் பேரூராட்சித் தலைவர் சிவக்குமார், பேரூர்கழகச் செயலாளர் கே.ஏ.வரதராஜ் ஆகியோர் முன்னிலையில் மண்சோறு சாப்பிட்டு சிறப்பு வழிபாடு மற்றும் பிரார்த்தனைகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் எம்.ஏ.சுப்பிரமணியம், மடத்துக்குளம் பேரூராட்சித் தலைவர் எஸ்.பழனிச்சாமி, துணைத் தலைவர் ஜி.கே.தண்டபாணி, கொழுமம் ஊராட்சி மன்றத் தலைவர் இந்திராணி, நீலம்பூர் செல்வராஜ், கே.கே.ரவி, கணியூர் காஜாமைதீன் உள்ளிட்ட அண்ணா தி.மு.க.நிர்வாகிகள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.