திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பேரிடர் மேலாண்மை பணி குறித்த அனைத்துததுறை அலுவலர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. திருப்பூர் கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் தலைமையில் நடந்த இந்தகூட்டத்தில் வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேரிடர் மேலாண்மை பணிகள் குறித்த ஆலோசனைகளை வழங்கினார்.
மேலும் மழைக்காலம் தொடரும் நிலையில் மாவட்ட நிர்வாகம் எந்த நேரமும் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுகொண்டார்..
திருப்பூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்தது தொடர்பாக வெள்ளம் ஏற்பட்டன. கடந்த 2013ம் ஆண்டு மாவட்டத்தில் 303 மி.மீ,. மட்டுமே; ஆனால் இந்த ஆண்டு 28.10.2014 வரை 650 மி.மீ., பெய்துள்ளது. இது கடந்த ஆண்டை விட இருமடங்காகும். மேலும் மழைப்பொழிவு இன்னும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் மழை காரணமாக காங்கயம்-தாராபுரம் ரோட்டில் முதலிபாளையம் பகுதியில் தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது. இதில் போக்குவரத்து முழுவதுமாக தடைபட்டது. இப்பாலம் நெடுஞ்சாலை துறை மூலமாக சரி செய்யப்பட்டுள்ளது.கடந்த 1-ந்தேதி முதல் 25.10.2014 வரை மழையால் சேதமடைந்த குடிசைகளுக்கு ரூ. 2500 வீதம் 15 ஆயிரம் ரூபாயும்,முழுவதுமாக சேதமடைந்த 8 குடிசைகளுக்கு ரூ. 5 ஆயிரம் வீதம் 40 ஆயிரம் ரூபாய் என மொத்தம் ரூ. 55 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.
திருப்பூர், தாராபுரம் அருகில் உள்ள அலங்கியம் காந்திநகரில் வசிக்கும் நாசுவம்புளியன் மகன் சுஜித் (வயது 12) என்பவர் கடந்த 27 -ந்தேதி அப்பகுதியில் தேங்கி நின்ற மழை நீரில் மூழ்கி இறந்தார். மேலும் அவினாசி, ராயம்பாளையம் வடிவேல் மகன் உதயகுமார் என்கிற மணிகண்டன் (வயது 10) ஓடைப்புரம்போக்கில் தேங்கி இருந்த மழை நீரில் கடந்த 28-ந்தேதி மூழ்கி இறந்தார். மழை நீரில் மூழ்கி இறந்த இரண்டு சிறுவர்களின் குடும்பத்துக்கு உடனடி நிவாரண உதவியாக தலா ரூ.1.50 லட்சம் என ரூ.3 லட்சம் உதவி தொகை வழங்கப்பட்டது. இத்தொகைக்கான காசோலையை தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.. ஆனந்தன் வழங்கினார். அப்போது திருப்பூர் கலெக்டர் .ஜி.கோவிந்தராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் பாரிவேல் மாவட்ட ஊராட்சி தலைவர் எம்.சண்முகம், திருப்பூர் சப்-கலெக்டர் செந்தில்ராஜன், துணை மேயர் சு.குணசேகரன், அவினாசி பேரூராட்சி மன்ற தலைவர் ஆர்.ஜெகதாம்பாள், மாமன்ற உறுப்பினர்கள் எம்.கண்ணப்பன் சண்முகசுந்தரம்,தாசில்தார்கள் சைபுதீன், கண்ணன்,மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்டத்தில் பேரிடர் மேலாண்மை பணியில் சிறப்பாக ஈடுபட்ட அனைத்து துறை அலுவலர்களுக்கும் மாவட்ட வருவாய் அலுவலர் பாரிவேள் நன்றி தெரிவித்தார்.