பசும்பொன் முத்துராமலிங்கதேவர் 107
வது ஜெயந்தி விழா மற்றும் 52 வது குருபூஜை விழாவில் கடந்த
3 நாட்களாக ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் நடந்து வருகிறது.
மூன்றாம் நாளான இன்று காலை பசும்பொன் கிராமத்தில் உள்ள அவரது சமாதியில்
பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் அஞ்சலி செலுத்தினர்.தமிழக அரசின் சார்பில்
முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன்,
வைத்தியலிங்கம், செல்லூர் ராஜு, காமராஜ், டாக்டர் சுந்தர்ராஜன், செந்தூர்
பாண்டியன், ஆர்.பி.உதயகுமார், விஜயபாஸ்கர் ஆகியோர் மலர் வளையம் வைத்து
அஞ்சலி செலுத்தினர்.அஞ்சலி நிகழ்ச்சிக்கு பின், மூவேந்தர் முன்னேற்றக்
கழகம், மூவேந்தர் முன்னேற்ற முன்னனி ஆகிய கட்சிகளின் சார்பில் ஏற்பாடு
செய்யப்பட்ட அன்ன தானத்தினை முதல்வர் பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.உடன்
எராளமான அ.தி.மு.க தொண்டர்கள் கலந்து கொண்டனர் ...