Feb 10, 2015

Feb 6, 2015

ஸ்ரீரங்கம் தொகுதி மக்களுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் 'மக்கள் முதல்வர்' புரட்சித்தலைவி செல்வி ஜெயலலிதா அவர்கள் எழுதியுள்ள வேண்டுகோள் கடிதம்

கடந்த 2011–ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றி பெற வைத்து, இந்த வெற்றியின் மூலம் மூன்றாம் முறையாக தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்று, தமிழக மக்களுக்கு சேவை புரிந்திடுவதற்கான நல்வாய்ப்பினை நீங்கள் எனக்கு நல்கினீர்கள். இதற்காக முதலில் எனது நெஞ்சார்ந்த நன்றியை தற்போது மீண்டும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
கடந்த 2006 முதல் 2011 –ம் ஆண்டு வரை நடைபெற்ற மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில், அனைத்துத் துறைகளும் அதல பாதாளத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. அதுவன்றி, நில அபகரிப்பு, நாள்தோறும் கொலை, கொள்ளை, சட்டம் ஒழுங்கு பிரச்சினை என்பதுடன் மின்வெட்டால் தமிழகமே இருள் சூழ்ந்த நிலைக்குத் தள்ளப்பட்டது. ஏழை எளியோருக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு, அனைத்துத் துறைகளையும் தங்கள் குடும்ப சொத்தாக பாவித்து கபளிகரம் செய்து தமிழ்நாட்டையே சின்னாபின்னப்படுத்தியது தி.மு.க. அரசு. ஒரு அவல ஆட்சியை தந்த தி.மு.க.வை மக்கள் சக்தி என்னும் உங்கள் துணையோடு வீழ்த்தி, அண்ணா தி.மு.க. ஆட்சியை மீண்டும் ஏற்படுத்தி தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்று உள்ளேன்.
தமிழக மக்களின் வாழ்வு வளம் பெறவும், தமிழ்நாடு நலம் பெறவும், பல்வேறு முன்னோடி திட்டங்களைத் தீட்டி தமிழர்களின் பெருமையை நிலைநாட்டியதை அங்கீகரிக்கும் வகையில் தான், கடந்த நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் எனது தலைமையிலான அண்ணா தி.மு.க.வுக்கு மகத்தான வெற்றியை தமிழக மக்கள் தேடித்தந்தார்கள். திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட இந்த ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதியிலும் அண்ணா தி.மு.க. வேட்பாளருக்கு பெருவாரியான வாக்குகளை வழங்கி, வளர்ச்சிக்கு உறுதுணையாக நாங்களும் உள்ளோம் என்பதை நீங்கள் பறைசாற்றினீர்கள்.
இந்த நிலையில் ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதிக்கு தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடைத்தேர்தல், நீங்கள் விரும்பாத இடைத்தேர்தல் என்பதை நான் நன்கு அறிவேன். இந்த இடைத்தேர்தல் சதிகாரர்களால் போடப்பட்ட வழக்கின் தீர்ப்பின் காரணமாக ஏற்படுத்தப்பட்ட இடைத்தேர்தல். சதியும் விதியும் இணைந்து நடத்திய சதுராட்டத்தில், விளைந்திட்ட இடைத்தேர்தல், ஸ்ரீரங்கம் தொகுதி வாக்காளர் பெருமக்களாகிய உங்கள் அன்பும், பற்றும் என்னுடன் பின்னிப் பிணைந்துள்ள பாசத்தையும், இந்த இடைத் தேர்தலால் எள்ளளவும் குறைத்திட இயலாது. நமக்குள்ளே உள்ள பந்தம் இன்னும் மேன்மை அடையவே இது வழிவகுக்கும்.
கீழமை நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பு இறுதியானதல்ல. அந்த தீர்ப்பின் மீது மேல்முறையீடு செய்யப்பட்டு, அந்த வழக்கு நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது. தற்போது நடைமுறையில் உள்ள தீர்ப்பு இறைவனின் திருவிளையாடல் தான். நமக்கு சோதனை அளித்துள்ள இறைவன், நம் நெஞ்சுரத்தை வலுப்படுத்தி இதையே சாதனையாய் மாற்றி விடுவார் என்பதில், உங்களைப் போலவே எனக்கும் அதிக நம்பிக்கை உண்டு. இருப்பினும் இந்த இடைப்பட்ட காலத்தில் தேர்தல் சட்ட விதிமுறைகளின்படி நடைபெற உள்ள இந்த இடைத்தேர்தலில், உங்களது பொன்னான வாக்குகளை, அண்ணா தி.மு.க. வேட்பாளர் எஸ்.வளர்மதிக்கு வழங்கும்படி உங்களை இந்த கடிதம் வாயிலாக கேட்டுக்கொள்கிறேன்.
2011–ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றப் பொதுத்தேர்தலின் போது பல்வேறு வாக்குறுதிகளை தேர்தல் அறிக்கை மூலம் தமிழக மக்களுக்கு நான் வழங்கி இருந்தேன். அவற்றில் பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளேன். ஸ்ரீரங்கம் தொகுதி மக்களாகிய உங்களுக்கு தேர்தல் பிரச்சாரத்தின் போது வழங்கிய வாக்குறுதிகளில், பெரும்பாலானவற்றை நிறைவேற்றி உள்ளேன். எஞ்சிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு இன்னும் காலம் உள்ளது.
தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் பீடு நடைபோடச் செய்யவேண்டும் என்ற கோட்பாட்டுடனும், இந்தியாவிலேயே தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக ஆக்கிட வேண்டும் என்ற குறிக்கோளுடனும், பல்வேறு திட்டங்களை கடந்த மூன்றரை ஆண்டுகளில் அண்ணா தி.மு.க. அரசு நிறைவேற்றி உள்ளது.
தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி திட்டங்களுக்கு கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு உள்ளன. அதே நேரத்தில், அனைத்து மக்களையும், குறிப்பாக விளிம்பில் உள்ள மக்களை அரவணைத்து, இந்த அரசு அவர்களுக்கான அரசு, ஏழை எளியோருக்கான அரசு, ‘ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணும் அரசு’ என்பதற்கேற்ப, பல்வேறு நலத்திட்டங்களை அண்ணா தி.மு.க. அரசு செயல்படுத்தி வருகிறது.
ஏழை எளியோருக்கு நிவாரணம் வழங்குவதோடு, அவர்கள் வாழ்வில் வசந்தம் வீசிட, அவர்கள் தங்கள் சொந்தக் கால்களிலேயே நின்று, அரசை மட்டும் சார்ந்திராமல், தங்களுக்குத் தேவையானவற்றை அவர்களே வாங்கிக் கொள்கிற சூழ்நிலையை ஏற்படுத்துவதற்கான திட்டங்களையும் உங்கள் அரசு செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாகத் தான் மனிதவள மேம்பாட்டிற்கான கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுக்கு என பல்வேறு புதுமை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
இந்த அடிப்படையில் தான் குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா அரிசி வழங்கும் திட்டம்; ரூ.50 ஆயிரம் வரை திருமண உதவித்தொகையும், தாலிக்கு 4 கிராம் தங்கமும் வழங்கும் திட்டம், விலையில்லா மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறி வழங்கும் திட்டம், ஏழை கிராமப்புற மக்களுக்கு கறவை பசுக்கள் மற்றும் வௌ்ளாடுகள் வழங்கும் திட்டம்; சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மாதம் ஆயிரம் ஓய்வூதியம் வழங்கும் திட்டம், அரசு கேபிள் டிவி மூலம் மாதம் ரூ.70 என்ற குறைந்த கட்டணத்தில் அதிக எண்ணிக்கையிலான தொலைக்காட்சி சேனல்களை கண்டுகளிக்க வழிவகை செய்யும் திட்டம்; மேல்நிலை வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டம்; விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் திட்டம்;கட்டணமில்லாக் கல்வி; கட்டணமில்லா பேருந்து பயண அட்டை, ஆண்டுதோறும் 4 விலையில்லா பள்ளிச்சீருடைகள், புத்தகப்பைகள், காலணிகள், நோட்டுப்புத்தகங்கள், பாடப்புத்தகங்கள், கணித உபகரணப் பெட்டி, கிரையான்ஸ் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்கள் வழங்கும் திட்டம், பள்ளிக்குழந்தைகள் விரும்பி உண்ணும் வகையிலான கலவை சாதம் வழங்கிடும் சத்துணவுத் திட்டம், உயர் வகுப்புகளில் இடைநிற்றலைத் தவிர்க்கும் வகையிலான ஊக்கத்தொகை வழங்கும் திட்டம், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், தாய் சேய் நலம் காக்கும் வகையில் ரூ.12 ஆயிரம் வழங்கும் மகப்பேறு உதவித் திட்டம், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம், முதலமைச்சரின் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டம், நெசவாளர்களுக்கான பசுமை வீடுகள் திட்டம், இந்துக்கள் மானசரோவர் மற்றும் முக்திநாத் புனிதப் பயணம் மேற்கொள்ள மானியம் வழங்கும் திட்டம் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அதேபோன்று, ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் 20 கிலோ விலையில்லா அரிசி வழங்கப்படுவதுடன், வெளிச்சந்தையில் ஒரு கிலோ ரூ.20 என்ற விலையில் அரிசி விற்பனை, சிறப்பு பொது வினியோகத் திட்டத்தின் கீழ் ஒரு லிட்டர் பாமாயில் ரூ.25–க்கும், ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.30–க்கும், ஒரு கிலோ உளுத்தம் பருப்பு ரூ.30–க்கும் வழங்கப்படுகின்றன. குறைந்த விலையில் தரமான காய்கறி கிடைக்கும் வகையில் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. சமையல் எரிவாயு மீதான மதிப்புக் கூட்டுவரி முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏழை எளிய மக்கள் வயிறாற உண்ணும் வகையில் ‘அம்மா உணவகங்கள்’ அனைத்து மாநகராட்சிகளிலும் திறக்கப்பட்டுள்ளன. இந்த உணவகங்களில் இட்லி ஒரு ரூபாய்க்கும், சாம்பர் சாதம் 5 ரூபாய்க்கும், தயிர் சாதம் 3 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.
அம்மா உணவகங்கள் மட்டுமின்றி, ‘அம்மா குடிநீர்’, ‘அம்மா உப்பு’, ‘அம்மா விதைகள்’ மற்றும் ‘அம்மா மருந்தகங்கள்’ என மக்கள் நலன் காக்கும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இவையன்றி, 190 ரூபாய்க்கு ஒரு மூட்டை சிமெண்ட் வழங்கும் ‘அம்மா சிமெண்ட்’ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்களின் குறைகளுக்கு உடனடித் தீர்வு ஏற்படுத்தும் வகையிலான ‘அம்மா திட்டம்’ செயல்படுத்தப்பட்டு வருகிறது.
சமூக நீதியை நிலைநாட்டிட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வளமான பிரிவினரை நீக்கம் செய்யாமல் தொடர்ந்து 69 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. வாடகைக் கட்டிடங்களில் செயல்பட்டு வரும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விடுதிகளுக்கு சொந்தக் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. புதிய விடுதிகள் துவங்கப்பட்டு உள்ளன. இந்த விடுதிகளில் உணவுக் கட்டணம், பள்ளி விடுதிகளுக்கு மாதம் ஒன்றுக்கு 755 ரூபாய் எனவும், கல்லூரிகளுக்கு 875 ரூபாய் எனவும் உயர்த்தப்பட்டுள்ளது. சுயநிதி கல்வி நிறுவனங்களில் இலவச, கட்டண இருக்கைகளில் அனுமதிக்கப்பட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர், மதம் மாறிய கிறிஸ்துவ ஆதிதிராவிட மாணவ, மாணவியருக்கு நிர்ணயிக்கப்பட்ட கற்பிப்புக் கட்டணம் உள்ளிட்ட கட்டாயக் கல்வி கட்டணங்கள் அனைத்தும் அரசே வழங்குகிறது. தாட்கோ மூலம் சுயதொழில் துவங்க மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்படுகிறது.
வேளாண் துறையில் சிறப்பு சலுகைகள் வழங்கியதன் காரணமாகவும், புதிய உத்திகளை கடைபிடித்ததன் காரணமாகவும், விவசாய உற்பத்தியில் தமிழகம் முன்னோடி மாநிலமாக விளங்கி வருகிறது. 2011–12–ம் ஆண்டு உணவு தானிய உற்பத்தியில் 101.52 லட்சம் மெட்ரிக் டன் என்ற சாதனையை தமிழகம் எய்தியது. இதற்காக மத்திய அரசின் விருதும் நமக்கு கிடைத்துள்ளது. 2012–13–ம் ஆண்டில் பருவ மழை பொய்த்ததன் காரணமாகவும், கர்நாடகா தண்ணீர் திறந்து விட மறுத்ததன் காரணமாகவும், உணவு தானிய உற்பத்தியில் தொய்வு ஏற்பட்டது. விவசாயத்தில் புதிய உத்திகளை கையாண்டதன் காரணமாகவும், டெல்டா மாவட்டங்களில் 12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டதன் காரணமாகவும், விவசாய பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டது. டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கு அரசே தனது செலவில் பயிர் காப்பீடு செய்தது. அதுவன்றி, இந்தியாவிலேயே முதன்முறையாக வறட்சிக்கு என நிவாரணம் வழங்கிய அரசு அண்ணா தி.மு.க. அரசு தான். 20 லட்சத்து 90 ஆயிரம் விவசாயிகளுக்கு 1,328 கோடியே 49 லட்சம் ரூபாய் வறட்சி நிவாரணமாக வழங்கப்பட்டது. 2013–14–ம் ஆண்டில் உணவு தானிய உற்பத்தி 110.65 லட்சம் மெட்ரிக் டன் என புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. 2013–14–ம் ஆண்டுக்கு பயறு வகைகளில் உற்பத்தி சாதனைக்காக கிருஷிகர்மான் என்ற மத்திய அரசின் விரும் கிடைக்கப் பெற்றுள்ளது. முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் அதிகபட்ச உணவு தானிய உற்பத்தி 82.63 லட்சம் மெட்ரிக் டன் தான். ஆனால் கடந்த ஆண்டின் உணவு தானிய உற்பத்தி முந்தைய தி.மு.க. ஆட்சியின் அதிகபட்ச உற்பத்தியை விட 34 விழுக்காடு அதிகமாகும்.
காவிரி டெல்டா பகுதிகளில் எந்தவித பிரச்சினையும் இன்றி விவசாயம் செய்திட நமக்குரிய காவிரி தண்ணீரை கர்நாடகம் திறந்து விடுவது அவசியமாகும். உச்சநீதிமன்றத்தின் மூலம் போராடி காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையை மத்திய அரசிதழில் வெளியிடச் செய்தது உங்கள் அன்பு சகோதரி தான். இந்த இறுதி ஆணையை சரிவர நடைமுறைப்படுத்திட காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழு ஆகியவை அமைக்கப்பட வேண்டும். இதற்காக தமிழக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று காவிரியில் நமக்கு உரிய உரிமைகளை கட்டிக் காக்க மேகதாதுவில் கர்நாடகம் அணைகள் கட்ட உத்தேசித்து உள்ளதற்கு தடையாணை வழங்க உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் துணையோடு தமிழகத்தின் நலன் காக்கப்படும் என்பதை உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்."

Feb 3, 2015

சாலை மறியல் செய்தவர்களை சமரசம் செய்த அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன்.

திருப்பூர் அருகே சாலை மறியல் செய்தவர்களை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் சமரசம் செய்து அவர்களது கோரிக்கையை உடனடியாக தீர்த்து வைத்தார்.இது பற்றிய விபரம் வருமாறு:-
திருப்பூர் மாவட்டம், பல்லடம், உடுமலைப்பேட்டை ரோட்டில் உள்ளது ஜல்லிபட்டி ஊராட்சி சின்னப்புத்தூர் கிராமம். இந்த ஊரின் சுற்றுவட்டார பகுதி கிராம மக்கள் பல்லடம், திருப்பூர், உடுமலைபேட்டை மற்றும் கோவை ஆகிய ஊர்களுக்கு செல்ல பல்லடம் - உடுமலை ரோட்டில் உள்ள சின்னப்புத்தூர் பிரிவு பஸ் நிறுத்ததிற்கு வந்து  அங்கிருந்து பஸ் பயணம் மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் இந்த பேருந்து நிறுத்தத்தில் அந்த வழியாக செல்லும் டவுன் பஸ்கள் கூட நிறுத்தப்படாமல் செல்வதாக கூறபடுகிறது. இதனால் கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவ,மாணவிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து கோவை மாவட்ட கலெக்டர், கோவை அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் பல முறை மனு கொடுத்தும் கோரிக்கை நிறைவேற்றப்படாத காரணத்தினால் சின்னப்புத்தூர் பிரிவு பஸ் நிறுத்தத்தில் பள்ளி மாணவ,மாணவிகள்,கிராம மக்கள் சாலை மறியலி ல் ஈடுபட்டுள்ளனர். இதனால் அந்த வழியில் போக்குவரத்து தடைபட்டுள்ளது. 
உடுமலைபேட்டையில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்ளவதற்காக திருப்பூரில்  வனத்துறை அமைச்சர் ஆனந்தன் அந்த வழியாக சென்றார். பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவியர்கள் சாலையில் அமர்ந்து இருப்பதை பார்த்து உடனடியாக காரி லிருந்து இறங்கிய பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன்  தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர்.காரிலிருந்து இறங்கிய அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து பொதுமக்கள் அவர்களது கோரிக்கைகளை சம்பத்தபட்ட அதிகாரிகள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மூலம் தெரிவித்து தீர்வு காணவேண்டும் என்றும், சாலை மறியல் செய்து போக்குவரத்தை தடை செய்ய கூடாது என அறிவுறித்திநார்.
மேலும் அதே இடத்தில் இருந்து அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் அவரது செல்போன் மூலம் பேசி சின்னப்புத்தூர் பிரிவில் நகர பேருந்துகள் நின்று செல்ல உடனடி நடவடிக்கை எடுத்தார்.அதனை அதனை தொடர்ந்து அந்தவழியாக வந்த அரசு பஸ் ஓட்டுனர்கள்  மற்றும் நடத்துனர்களிடம் எக்காரணம் கொண்டும் பஸ் நிறுத்தத்தில் பஸ்களை நிறுத்தாமல் செல்லக்கூடாது என்றும், குறிப்பாக பள்ளி மாணவ,மாணவியர்களை ஏற்றி, இறக்கி செல்ல வேண்டும் என அறிவுரை கூறினார்.
இதனை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தனுக்கு நன்றி தெரிவித்து கலைந்து சென்றனர்.  

திருப்பூரில் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில் மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி


திருப்பூரில் மொழிப்போர் தியாகிகளுக்கு அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில் அண்ணா தி.மு.க.வினர் ஊர்வலமாக சென்று மலர் அஞ்சலி செலுத்தினர்.
மக்கள் முதல்வர் ஜெயலலிதா வழிகாட்டுதலின் பேரில் 1965ம் ஆண்டு ஜன.,25ம் தேதி இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து தமிழகத்தில் தொடங்கப்பட்ட போராட்டத்தில் இன்னுயிர் துறந்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.மற்றும் மாணவர் அணி சார்பில் நடைபெற்றது. மாநகர் மாவட்ட செயலாளரும், வனத்துறை அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில் அண்ணா தி.மு.க.வினர் பார்க் ரோட்டில் உள்ள எம்.ஜி.ஆர்.சிலை அருகில் இருந்து ஊர்வலமாக நடந்து சென்று மாநகராட்சி அலுவலகம் அருகில் வைக்கப்பட்டிருந்த மொழிப்போர் தியாகிகளின் படங்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தினர். 
இந்த நிகழ்ச்சியில் மேயர் அ.விசாலாட்சி, பல்லடம் எம்.எல்.ஏ., பரமசிவம், துணை மேயர் குணசேகரன்,  மாணவரணி செயலாளர் அன்பகம் திருப்பதி, வடக்கு தொகுதி செயலாளர் ஜெ.ஆர்.ஜான், மாவட்ட கவுன்சிலர் தண்ணீர் பந்தல் நடராஜன், நிர்வாகிகள் வழக்கறிஞர்கள் சுப்பிரமணியம், வெளியங்கிரி, அட்லஸ் லோகநாதன், உஷாரவிக்குமார், என்பிஎன்பழனிசாமி, ராஜேஷ்கண்ணா, கண்ணபிரான், யுவராஜ் சரவணன், மாரிமுத்து, மயில்ராஜ், ரஞ்சித் ரத்தினம்,ராஜ்குமார், அசோக்குமார், பரமராஜன், அன்பரசன், அய்யாசாமி, கண்ணப்பன், டி.டி.பி.தேவராஜ், மாமன்ற உறுப்பினர்கள் புலுவபட்டி பாலு, செல்வம், புலவர் சக்திவேல், சண்முகசுந்தரம், சண்முகம் ஆனந்தன் உள்ளிட்டவர்கள், முன்னாள் கவுன்சிலர் கேசவன், சிட்டி பழனிசாமி, விவேகானந்தன், வினோத்குமார், பிரிண்டிங் மணி, சுபாஷ், பேபி பழனிசாமி  சரவணன், முகவை கண்ணன் உள்ளிட்ட தலைமை கழக பேச்சாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் ஐயப்பன் உள்பட பலர் கலந்து கொண்டானர்.

Jan 21, 2015

திருப்பூர் மாநகராட்சி 23-வது வார்டு, அம்பேத்கர் நகரில் திருப்பூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் மூலம் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு ஆவணப்படங்கள் திரையிடப்படுவதை தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பார்வையிட்டார்







திருப்பூர் மாநகராட்சி 23-வது வார்டு, அம்பேத்கர் நகரில் திருப்பூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் மூலம் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு ஆவணப்படங்கள் திரையிடப்படுவதை தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பார்வையிட்டார். திருப்பூர் துணை மேயர் சு.குணசேகரன், மண்டல தலைவர்கள் ஜான், ராதாகிருஷ்ணன், நிலைக்குழு தலைவர் அன்பகம் திருப்பதி, கவுன்சிலர்கள் கண்ணப்பன், சண்முகசுந்தரம்,  மற்றும் ஹரிஹரசுதன், தமிழக அரசின் கள விளம்பர துணை இயக்குனர் சண்முக சுந்தரம்,  மக்கள் தொடர்பு அலுவலர்கள் கலைச்செல்வன், தமிழ்மொழி அமுது, உதவி அலுவலர்கள் சாய்பாபா, பாலாஜி, உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம்; அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் தந்தவர் மக்கள் முதல்வர் அம்மா பொங்கல் விழாவில் வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பெருமிதம்










திருப்பூர் மாவட்டம் கேத்தனூர் ஊராட்சி அம்மா நகரில், பொங்கல் விழா நடந்தது. 
தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பொதுமக்களுக்கு பொங்கல், கரும்பு மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ&மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார். திருப்பூர் கலெக்டர் கு.கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். கோவை எம்.பி., நாகராஜன், பல்லடம் எம்.எல்.ஏ., பரமசிவம், மாவட்ட ஊராட்சி தலைவர் சண்முகம், சப்&கலெக்டர் செந்தில்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  தாரை தப்பட்டை முழங்க அப்பகுதி மக்கள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் முன்னிலையில் பொங்கல் வைத்து பூஜை செய்தனர்.
 விழாவில் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசும்போது கூறியதாவது:&பல்லடம் சட்டமன்ற தொகுதி, கேத்தனூர் ஊராட்சியில் மக்கள் முதல்வர் அம்மா அவர்கள் ஆணைக்கிணங்க, பட்டாக்களை வழங்கி வீடுகளை உருவாக்கி இப்பகுதியில் பொங்கல் விழா நடக்கிறது. இன்று மனிதனுக்கு தேவை உண்ண உணவு, இருப்பிடம், உடை ஆகியவை; இம்மூன்றும் தான் முக்கிய தேவைகள். இன்றைக்கு மக்கள் முதல்வர் அம்மா அவர்கள் ஆட்சி பொறுபேற்ற போது முதல் அனைத்து ரேசன் கார்டுகளுக்கு 20 கிலோ  விலையில்லா அரிசி வழங்கி வருகிறார், அதே போல மக்களின் குடியிருப்பு சிக்கல்களை தீர்க்க வருடத்துக்கு 2 லட்சம் பட்டாக்களை வழங்க அம்மா அவர்கள் உத்தரவிட்டார். அதனடிப்படையில் நிலத்தை வகை மாற்றம் செய்து 51 பேருக்கு பட்டா வழங்கி, ரூ. 1.03 கோடி வீடு கட்டவும், அடிப்படை வசதிகளுக்காகவும் ஒதுக்கப்பட்டு பணிகள் செய்யப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்லது. 
 மக்கள் முதல்வர் அம்மா அவர்கள் காலத்தில், தமிழகத்தில் ஏழை எளீய மக்களுக்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்லது. அது போல உடுக்க உடை வேண்டும், என்பதற்காக விலையில்லா வேட்டி சேலை வழங்கப்பட்டு வருகிறது. 
 இவ்வாறு மக்கள் முதல்வர் அம்மா அவர்கள் உண்ண உணவு, உடுக்க உடை மற்றும் இருக்க இருப்பிடம் ஆகிய மூன்றையும் தந்து உள்ளார்.அனைத்து மக்களும் இன்பமாக தமிழக மக்கள் பொங்கல் கொண்டாட வாழ்த்து செய்தியும் அம்மா தந்துள்ளார். கேத்தனூரில் உருவாக்கப்பட்டுள்ள அம்மா நகர் மேம்படவும் தொடர்ந்து பொங்கல் விழா நடத்தவும், மிகப்பெரிய மாநகராக அம்மா நகர் உருவாகவும் வாழ்த்துகிறேன். இவ்வாறு அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார்.
 இந்த விழாவில் ஒன்றிய செயலாளர்கள் கே.என்.விஜயகுமார், சிவாச்சலம், புத்தரச்சல் பாபு, யு.எஸ்.பழனிசாமி, கேத்தனூர் ஊராட்சி தலைவர் ஹரிகோபால், வக்கீல் சிவசுப்பிரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திருப்பூர் மாவட்டம் கேத்தனூர் ஊராட்சி அம்மா நகரில், பொங்கல் விழா நடந்தது. 
தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பொதுமக்களுக்கு பொங்கல், கரும்பு மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ&மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார். திருப்பூர் கலெக்டர் கு.கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். கோவை எம்.பி., நாகராஜன், பல்லடம் எம்.எல்.ஏ., பரமசிவம், மாவட்ட ஊராட்சி தலைவர் சண்முகம், சப்&கலெக்டர் செந்தில்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  தாரை தப்பட்டை முழங்க அப்பகுதி மக்கள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் முன்னிலையில் பொங்கல் வைத்து பூஜை செய்தனர்.
இந்த விழாவில் ஒன்றிய செயலாளர்கள் கே.என்.விஜயகுமார், சிவாச்சலம், புத்தரச்சல் பாபு, யு.எஸ்.பழனிசாமி, கேத்தனூர் ஊராட்சி தலைவர் ஹரிகோபால், வக்கீல் சிவசுப்பிரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

Jan 20, 2015

பல்லடம் அடுத்துள்ள கேத்தனூர் அம்மா நகரில் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் முன்னிலையில் பொங்கல் விழா

திருப்பூர் அடுத்துள்ள கேத்தனூரில் ரூ.1.03 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்ட அம்மா நகர் பெரிய மாநகராக உருவாகும் என அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆஅன்ந்தன் கூறினார்.
மக்கள் முதல்வர் ஜெயலலிதா வழி காட்டுதலின் பேரில்,திருப்பூர் அடுத்துள்ள கேத்தனூர் அம்மா நகரில் நடைபெற்ற பொங்கல் விழாவில் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், கலெக்டர் கோவிந்தராஜ் எம்.பி.,எம்.எல்.ஏ.,ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் தொகுதியில் உள்ள கேத்தனூர் ஊராட்சி அம்மா நகரில் நடைபெற்ற பொங்கல் விழா நடைபெற்றது.விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். கோவை எம்.பி., நாகராஜன், பல்லடம் எம்.எல்.ஏ.,பரமசிவம், மாவட்ட ஊராட்சி தலைவர் சண்முகம், சப்-கலெக்டர் செந்தில்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கேத்தனூர் ஊராட்சி தலைவர் ஹரிகோபால் அனைவரையும் வரவேற்றார்.அப்பகுதி மக்கள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் முன்னிலையில் பொங்கல் வைத்து பூஜை செய்தனர்.
பின்னர் பொதுமக்களுக்கு பொங்கல், கரும்பு மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி  வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசியதாவது:- 
திருப்பூர் மாவட்டம், பல்லடம் சட்டமன்ற தொகுதியில் உள்ள கேத்தனூர் ஊராட்சியில் மக்கள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க, பட்டாக்களை வழங்கி வீடுகளை உருவாக்கி இப்பகுதியில் பொங்கல் விழா நடக்கிறது.இன்றைக்கு ஜெயலலிதா ஆட்சி பொறுபேற்ற போது முதல் அனைத்து அனைத்து ரேசன் கார்டுகளுக்கு 20 கிலோ  விலையில்லா அரிசி வழங்கி வருகிறார், அதே போல மக்களின் குடியிருப்பு சிக்கல்களை தீர்க்க வருடத்துக்கு 2 லட்சம் பட்டாக்களை வழங்க உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் நிலத்தை வகை மாற்றம் செய்து 51 பேருக்கு பட்டா வழங்கி, ரூ.1.03 கோடி மதிப்பில் வீடு கட்டவும், அடிப்படை வசதிகளுக்காகவும் ஒதுக்கப்பட்டு பணிகள் செய்யப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளது.
ஜெயலலிதா ஆட்சி காலத்தில், தமிழகத்தில் ஏழை எளீய மக்களுக்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்லது. அது போல உடுக்க உடை வேண்டும், என்பதற்காக விலையில்லா வேட்டி சேலை வழங்கப்பட்டு வருகிறது.உண்ண உணவு, உடுக்க உடை மற்றும் இருக்க இருப்பிடம் ஆகிய மூன்றையும் தந்து உள்ளார்.அனைத்து மக்களும் வளமாக வாழ வேண்டும் என்பதற்காக தமிழக மக்களுக்கு பொங்கல் கொண்டாட வாழ்த்து செய்தியும் அனுப்பியுள்ளார். கேத்தனூரில் உருவாக்கப்பட்டுள்ள அம்மா நகர் மேம்படவும் தொடர்ந்து பொங்கல் விழா நடத்தவும், மிகப்பெரிய மாநகராக அம்மா நகர் உருவாகவும் வேண்டும்..இவ்வாறு அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார்.
இந்த விழாவில் பொங்கலூர் ஒன்றியக்குழு தலைவர் எஸ்.சிவாசலம், விவசாய அணி பிரிவு செயலாளர் புத்தரச்சல் பாபு, உகாயனூர் ஊராட்சி தலைவர் யு.எஸ்.பழனிசாமி, திருப்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கே.என்.விஜயகுமார், பலல்டம் நகர துணைத்தலைவர் வைஸ் பழனிசாமி மற்றும் உள்ளாட்சி மன்ற, கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் எம்.ஜி.ஆரின் 97-வது பிறந்தநாள் விழாவில்



பார்க் ரோட்டில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மேயர் அ.விசாலாட்சி தலைமையில் அண்ணா தி.மு.க.வினர் மாலை அணிவித்தனர்.மாவட்ட இளைஞர் அணி செயலாளரும், துணை மேயருமான சு.குணசேகரன், சார்பு அணி நிர்வாகிகள் கருவம்பாளையம் மணி,வி.ராதாகிருஷ்ணன், கண்ணப்பன், அன்பகம் திருப்பதி, மார்கெட் சக்திவேல், கே.என்.சுப்பிரமணியம் ஆகியோர் உள்ளனர். திருப்பூர் 31-வது  வார்டு வாலிபாளையம் கிளை கலக்கம் சார்பில் மற்றும் கே.பி.என்.காலனி முள்ளுக்காடு ஆகிய பகுதிகளில் நடைபெற்ற எம்.ஜி.ஆரின் 98 பிறந்தநாள் விழா நடைபெற்றது.மாவட்ட இளைஞர் அணி செயலாளரும், துணை மேயருமான சு.குணசேகரன் தலைமையில் குழந்தைகள், முதியவர்கள் ஆகியோர்களுக்கு பால் வழங்கியும், பொங்கல் வழங்கியும் கொண்டாடப்பட்டது.

திருப்பூரில் எம்.ஜி.ஆரின் 98வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், மாநகர் மாவட்டம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பழைய பஸ் நிலையம் எதிரில் அவரது படத்திற்கு மகளிர் அணி மாநில துணைச் செயலாளரும், மேயருமான அ விசாலாட்சி தலைமையில் மாவட்ட இளைஞர் அணி செயலாளரும், துணை மேயருமான சு.குணசேகரன், வடக்கு தொகுதி செயலாளர் ஜெ.ஆர்.ஜான்ஆகியோர் முன்னிலையில் அண்ணா தி.மு.க.நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.பின்னர் அனைவரும் ஊர்வலமாக நடந்து சென்று பார்க் ரோட்டில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்தனர். அங்கு திரண்டிருந்த அண்ணா தி.மு.க.தொண்டர்கள் மத்தியில் மேயர் அ.விசாலாட்சி தலைமையில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அப்போது அவர் பேசியதாவது:-
ஒன்றரை கோடி தொண்டர்களையும், இந்த நாட்டையும், நம்மளையும் வாழவைத்து அழகு பார்க்கும், எப்பொழுதும் அண்ணா தி.மு.க.வில் உழைப்பவர்களுக்கு உயர்ந்த பதவிகளை வழங்கி வரும் ஜெயலலிதா அவர்களை மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் அடுத்த ஆண்டு பிறந்த நாள் விழாவில் மகத்தான மக்கள் சக்தியுடன் மீண்டும் தமிழக முதல்வராக அரியணையில் அமர வைப்போம் என உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் கருவம்பாளையம் மணி, வி.ராதாகிருஷ்ணன், எம்.கண்ணப்பன், அன்பகம் திருப்பதி, மார்கெட் சக்திவேல்,அரசு வழக்கறிஞர் கே.என்.சுப்பிரமணியம்,4-வது மண்டலத்தலைவர் கிருத்திகா சோமசுந்தரம், பல்லடம் நகர்மன்ற துணைத்தலைவர் வைஸ்.பழனிசாமி, உகாயனூர் ஊராட்சி தலைவர் பழனிசாமி, மகளிர் அணி சித்ராதேவி, தம்பி மனோகரன், வளர்மதி கருணாகரன், அட்லஸ் லோகநாதன், கலைமகள் கோபால்சாமி, உஷா ரவிக்குமார்,ராஜேஷ்கண்ணா, எஸ்பி.என்.பழனிச்சாமி, டி.பார்த்தீபன், ஹரிஹரசுதன், கவுன்சிலர்கள் செல்வம்,புலவர் சக்திவேல் சின்னசாமி, வேலுசாமி, ராஜகோபால், பாசறை நிர்வாகிகள் யுவராஜ் சரவணன், லோகநாதன்,பரமராஜன், நகர நிர்வாகிகள்  ரத்னகுமார், மாணவரணி மாரிமுத்து,மயில்ராஜ், வளர்மதி கூட்டுறவு சங்க இயக்குனர்கள் சாகுல்அமீது, ராயபுரம் தாமோதரன், மாவட்ட பிரதிநிதி ரஞ்சித்ரத்தினம், கிளை செயலாளர் விவேகானந்தன்,ஹனிபா, மூர்த்தி, பனியன் சங்க குணசேகரன்,கேபிள் பாலு,பெரிச்சிபாளையம் ஈஸ்வரமூர்த்தி, நீதிராஜன், அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் சி.எஸ்.கண்ணபிரான், டி.டி.பி.மில் தேவராஜ், வினோத்குமார்,முபாரக், சி.டி.சி.அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் பொன்னுசாமி, ராஜேந்திரன், சரவணன், ரவிகுமார், சிவகுமார், மாரிமுத்து, பாஸ் என்கிற பாஸ்கரன், வே.சரவணன், தலைமை கழக பேச்சாளர்கள் வேங்கை விஜயகுமார், பாரதிபிரியன், சாரதா மற்றும் உள்ளாட்சி மன்ற, கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் ஈஸ்வரன் கோவிலில் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்ப்பட்டவர்கள் கலந்து கொண்டனர். மேலும் மாநகர் பகுதியில் உலா 60 வவார்டு கிளை சார்பில் கொடி ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்க்கபப்ட்டன.98 லிட்டர் பால் வழங்கும் விழா:- 
        திருப்பூர் 31-வது  வார்டு வாலிபாளையம் கிளை கலக்கம் சார்பில் மற்றும் கே.பி.என்.காலனி முள்ளுக்காடு ஆகிய பகுதிகளில் நடைபெற்ற எம்.ஜி.ஆரின் 98 பிறந்தநாள் விழா நடைபெற்றது.மாவட்ட இளைஞர் அணி செயலாளரும், துணை மேயருமான சு.குணசேகரன் தலைமையில் குழந்தைகள், முதியவர்கள் ஆகியோர்களுக்கு பால் வழங்கியும், பொங்கல் வழங்கியும் கொண்டாடப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் மாவட்ட இலக்கிய அணி துணை செயலாளர் பி.கே.எஸ்.சடையப்பன், வெங்கிடுபதி, கிளைசெயலாளர் ரவிகுமார், மோகன், கிருஷ்ணன், பாலன், வேலாயுதம், வெங்கடேஷ், சந்தானம்,, பரமேஸ்வரன், சுப்பிரமணியன், தாமோதிரன், உண்ணி கிருஷ்ணன், சிவக்குமார், சதீஷ், சிவசக்தி, கதிரேசன்,  சசிகுமார், மகேந்திரன், லட்சுமணன், நிவேந்திரன், நிவாஸ்,மணிகண்டன், பாலாஜி ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.