திருப்பூர் மாநகராட்சி 23-வது வார்டு, அம்பேத்கர் நகரில் திருப்பூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் மூலம் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு ஆவணப்படங்கள் திரையிடப்படுவதை தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பார்வையிட்டார். திருப்பூர் துணை மேயர் சு.குணசேகரன், மண்டல தலைவர்கள் ஜான், ராதாகிருஷ்ணன், நிலைக்குழு தலைவர் அன்பகம் திருப்பதி, கவுன்சிலர்கள் கண்ணப்பன், சண்முகசுந்தரம், மற்றும் ஹரிஹரசுதன், தமிழக அரசின் கள விளம்பர துணை இயக்குனர் சண்முக சுந்தரம், மக்கள் தொடர்பு அலுவலர்கள் கலைச்செல்வன், தமிழ்மொழி அமுது, உதவி அலுவலர்கள் சாய்பாபா, பாலாஜி, உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.