பார்க் ரோட்டில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மேயர் அ.விசாலாட்சி தலைமையில் அண்ணா தி.மு.க.வினர் மாலை அணிவித்தனர்.மாவட்ட இளைஞர் அணி செயலாளரும், துணை மேயருமான சு.குணசேகரன், சார்பு அணி நிர்வாகிகள் கருவம்பாளையம் மணி,வி.ராதாகிருஷ்ணன், கண்ணப்பன், அன்பகம் திருப்பதி, மார்கெட் சக்திவேல், கே.என்.சுப்பிரமணியம் ஆகியோர் உள்ளனர். திருப்பூர் 31-வது வார்டு வாலிபாளையம் கிளை கலக்கம் சார்பில் மற்றும் கே.பி.என்.காலனி முள்ளுக்காடு ஆகிய பகுதிகளில் நடைபெற்ற எம்.ஜி.ஆரின் 98 பிறந்தநாள் விழா நடைபெற்றது.மாவட்ட இளைஞர் அணி செயலாளரும், துணை மேயருமான சு.குணசேகரன் தலைமையில் குழந்தைகள், முதியவர்கள் ஆகியோர்களுக்கு பால் வழங்கியும், பொங்கல் வழங்கியும் கொண்டாடப்பட்டது.