Apr 21, 2020

திருச்சி ஊரடங்கு உத்தரவை மீறி கன்னி சரம் வைத்து வேட்டையாட முயன்ற போது பிடிபட்டனர்

காகம் மற்றும் எலிகள் தவிர்த்து மற்ற எந்த விலங்குகள், பறவைகள், வண்ணத்துப்பூச்சிகள் மற்றும் பாம்பு ஆகிய எதை பிடிக்க முயற்சித்தாலும், வேட்டையாடினாலும் குற்றமே என்பதன் அடிப்படையில்

திருச்சி வனச்சரகர் பழனிவேல் தலைமையில்,வனவா்கள்,மதன்ராஜ், சரவணன்   மற்றும் வனக்காப்பாளர்கள்
சரவணன், ரவி, ஞானசம்மந்தம்  ஆகியோர்  (வனத்துறையின்) ரோந்து பணி சோதனை மேற்கொண்டபொழுது மணச்சநல்லுா், வலையூர் கிராமத்தை சாா்ந்த 1. ஜெயபாலன் (35), 2.கோபிநாத் (38), மற்றும்
3.கோபிநாதன் (35) ஆகிய மூன்று நபர்கள் விவசாய நிலத்தில் முயல் பிடிக்க கன்னி சரம்(Trap) வைத்திருந்தது தெரிய வந்தது.

 மேற்கண்ட மூவர்களை பிடித்து விசாரணை செய்த போது வேட்டைக்காக கன்னி வைத்த குற்றத்தை ஒப்புக்கொண்டனா். மேற்காணும் சம்பவம் தொடா்பாக  வன உயிரின பாதுகாப்பு சட்ட பிரிவுகளின்  படி வேட்டையாட முயற்சித்த குற்றத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து பின்னர் மாவட்ட வன அலுவலர், சுஜாதா IFS  உத்தரவின் படி ரூபாய்.15,000/- இனக்க கட்டணம் வசூலிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனா்.

Apr 20, 2020

மே- 3 வரை அம்மா உணவகங்களில் 3 வேளை உணவு இலவசம்

*மே- 3 வரை அம்மா உணவகங்களில் 3 வேளை உணவு இலவசம்*

திருச்சி மேற்கு, திருவெறும்பூர் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளிலுள்ள

 1. *புத்தூர்* ( _அபிஷேகபுரம் கோட்ட அலுவலகம் அருகில்_ ),
 2. *தென்னூர் உழவர் சந்தை* ,
3. *உறையூர் சாலை ரோடு* ,
4. *ஜங்சன் ராக்கின்ஸ் சாலை* ,
5. *கல்கண்டார்கோட்டை* ,
6. *அரியமங்கலம் ஜெகநாதபுரம்*

ஆகிய 6 இடங்களிலுள்ள அம்மா உணவகங்களில், வரும் மே 3-தேதி வரை காலை, மதியம், இரவு என மூன்று வேளைகளும் இலவசமாக உணவு வழங்குவதற்கான செலவினை திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக ஏற்றுக்கொண்டுள்ளது.

இதற்கான தொகையை மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியனிடம் அதிமுக மாநகர் மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்.பியுமான ப.குமார் இன்று வழங்கினார்.

Apr 9, 2020

திருச்சி 144 தடை உத்தரவை மீறி நடத்தப்பட்ட மசாஜ் சென்டருக்கு அரசு அதிகாரிகள் சீல்

  • திருச்சி



அரசு தடையை மீறி அனுமதியின்றி நடத்தப்பட்ட மசாஜ் சென்டர் க்கு சீல்


தமிழகத்தில் தொற்று பரவாமல் இருக்க மத்திய அரசும் மாநில அரசும் பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றன அதன் தொடர்ச்சியாக ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டது இதில் அத்தியாவசிய பொருட்களான மளிகை பால் போன்ற பொருட்களுக்கு கால அவகாசம் கொடுத்து கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது மத்திய அரசு மாநில அரசு அறிவிப்பை எதிர்த்து திருச்சி உறையூர் ஹவுசிங் போர்டில் ஒரு வீட்டில் கேரளா ஆயுர்வேதிக் மசாஜ் சென்டர் என்னும் பெயரில் போலியான மசாஜ் சென்டர் இயங்கி வந்தது


 144 தடை உத்தரவை மீறி நடைபெற்றது நடைபெற்ற மசாஜ் சென்டரில்  மசாஜ் செய்வதாகவும் அரசு முறையான அனுமதி பெறாமல் மசாஜ் சென்டர் நடத்தி வருவதாகவும் மாவட்ட ஆட்சியருக்கு  தகவல் கிடைத்துள்ளது மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் திருச்சி சித்த தலைமை மருத்துவர் காமராஜ் ஆய்வு செய்தார் ஆய்வு செய்து கொண்டிருக்கும் போது மசாஜ் சென்டரில் வேலை பார்க்கும் பெண்கள் மேனேஜர் பின் வழியாக தப்பி ஓடிவிட்டனர் பின்னர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தாசில்தார் முன்னிலையில் மசாஜ் சென்டருக்கு சீல் வைக்கப்பட்டது

தப்பி ஓடிய நபர்களை மற்றும் அதன் உரிமையாளரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்

Apr 6, 2020

திருச்சி முசிறியில் தமிழக அரசு அறிவித்தபடி மலிவு விலை காய்கறி விற்பனை துவக்கம்

திருச்சி முசிறி


முசிறி தெருக்களில் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் காய்கறிகள் விற்க ஏற்பாடு  எம் எல்ஏ துவக்கி வைத்தார் பொதுமக்கள் மகிழ்ச்சி

திருச்சி மாவட்டம் முசிறி பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் பொதுமக்களுக்கு தெருக்களில் சென்று காய்கறிகளை விற்பதற்காக லோடு ஆட்டோ மூலம் காய்கறிகள் அனுப்பி வைக்கப்பட்டது .முசிறி பேரூராட்சி சார்பாக வாரந்தோறும் புதன்கிழமை திருச்சி ரோட்டில், டிஎஸ்பி அலுவலகம் எதிரே உள்ள சந்தையில் காய்கறிகள் விற்பனை நடைபெறும் .இந்த வார சந்தையில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கி வீட்டிற்கு பயன்படுத்துவது வழக்கம் .இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வார சந்தை விடுமுறை விடப்பட்டது. இதனால் வியாபாரிகள் சந்தையில் கடை போடுவது தடைபட்டது. இதையடுத்து பொதுமக்களுக்கு காய்கறிகள் வாங்குவதில் சிரமம் ஏற்பட்டது .தெருக்களில் வந்து காய்கறிகள் விற்கும் வியாபாரிகள் சிலர் அதிக விலைக்கு காய்கறிகளை விற்றதால் பொதுமக்கள் பெரிதும் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் முசிறி பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பாக லோடு ஆட்டோ ஒன்றில் பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பாக உழவர் சந்தையில் வாங்கி வியாபாரத்திற்கு அனுப்பப்படுகிறது. இதுகுறித்து முசிறியைச் சேர்ந்த குடும்பத்தலைவிகள்  வாரந்தோறும்,  காய்கறிகளை சந்தையில் வாங்கி பயன்படுத்தி வந்தோம். வாரசந்தை நடைபெறாததால் சிரமம் ஏற்பட்டது. அதனை போக்கும் வகையில் பேரூராட்சி பேரூராட்சி நிர்வாகம் தெருக்களில் காய்கறிகளை விற்பதற்கு ஏற்பாடு செய்துள்ளது மிகுந்த ஆறுதலைத் தருகிறது பொதுமக்களுக்கு கட்டுப்படியாகும் நியாயமான விலையில் காய்கறிகளை விற்பனை செய்வது வரவேற்கத்தக்கது என்றனர். முன்னதாக காய்கறி விற்பனையை முசிறி தொகுதி எம்எல்ஏ செல்வராஜ், முசிறி பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன்  ஆகியோர் முன்னிலையில் துவக்கி வைத்தார்.அப்போது மாவட்ட கவுன்சிலர் ரவிசந்திரன் , பேரூராட்சி தலைமை எழுத்தர் சேவியர் சுகாதார ஆய்வாளர் புவனேஸ்வரி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Apr 4, 2020

திருச்சியில் 17 நபர்களுக்கு கொரோனா நோய் உறுதி மாவட்ட ஆட்சியர் பேட்டி

திருச்சி ஏப் 04

திருச்சியில் 17 நபர்களுக்கு கொரனா நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

திருச்சியில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்

தற்போது மருத்துவக்
கல்லூரி
மருத்துவமனையில்
125 நபர்கள்
சேர்க்கப்பட்டுள்ளனர்
இவர்களில் 5நபர்கள் வெளி மாவட்டத்தினை சார்ந்தவர்கள்
(ஈரோடு -1 , கரூர்
திருச்சி மாவட்டத்தினை சார்ந்தவர்கள் 120 நபர்களும், தஞ்சாவூர் - 1 நபரும்)
மேற்குறிப்பிட்ட 120 நபர்களின் இருப்பிடங்களை சுற்றியுள்ள 50 பகுதிகளில்
இதுவரை 25,586 குடியிருப்புகளில் 469 மருத்துவக்குழுவினர் வீடு வீடாக ஆய்வு செய்து
நபர்களை பரிசோதனை செய்துள்ளனர்.
எந்த ஒரு நபருக்கும் கொரோனா
வைரஸ் நோய் அறிகுறி எதுவுமில்லை
ஏற்கனவே கொரோனா வைரஸ் நோய் தாக்கப்பட்ட ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 1 நபருக்கும்,
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 2 நபர்களுக்கும்
உறுதி செய்யப்பட்டு மேற்கண்ட 3
நபர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களது உடல் நிலை சீராக நல்ல
நிலையில் உள்ளது.
இதுவரை 221
நபர்களுக்கு பரிசோதனை
செய்யப்பட்டதில் (மேற்கண்ட
3.
நபர்களை தவிர) இதர 217நபர்களுக்கு  இரத்த மாதிரி பரிசோதனையில் 
கொரோனா வைரஸ் நோய் இல்லை என
தெரியவந்துள்ளது.
தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள 120 நபர்களுக்கு இரத்த மாதிரி பரிசோதனை
முடிவு வரவேண்டும். இவர்களில் 
53நபர்களுக்கு கொரோனா வைரஸ் நோய் இரத்த
மாதிரி பரிசோதனை அறிக்கை முடிவு இன்று பெறப்பட்டு 
17நபர்களுக்கு கொரோனா
வைரஸ் நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதர 36 நபர்களுக்கு கொரோனா
வைரஸ் நோய் தொற்று இல்லையென அறிக்கை
வரப்பெற்றுள்ளது.
இருப்பினும்
இவர்கள்
அனைவரும் மேலும் 14நாட்கள்
மருத்துவமனையில்
சிகிச்சைப்பெற்று
இறுதியாக பரிசோதனை செய்த
பின்னர்
மருத்துவமனையில்
இருந்து
விடுவிக்கப்படுவார்கள்.
மேற்கண்ட 53
நபர்களை தவிர மீதமுள்ள 67
நபர்களின் பரிசோதனை 
நடவடிக்கையில் (Under Processing) உள்ளது என்றார்.
மேலும் தடுப்பு முன்னெச்சரிக்கையாக வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் 
இருந்த வந்த 3,045 பேர் விடுகளில் தனிமைபடுத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்கள் நல்ல நிலையில் உள்ளனர் என தெரிவித்தார்

திருச்சி அதிமுக நிர்வாகி RC கோபி தலைமையில் அதிமுக சார்பில் பொதுமக்களுக்கு தொற்று பரவுதலை தடுக்க கபசுரக் குடிநீர்

திருச்சி ஏப் 04

அதிமுக  நிர்வாகி RC கோபி தலைமையில் அதிமுக சார்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.

தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொற்று பரவாமல் இருக்க பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகிறார் அதன் அடிப்படையில் திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தற்காலிகமாக காய்கறி சந்தை அமைக்கப்பட்டுள்ளது

 மக்கள் அதிகமாகக் கூடும் இடத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்களுக்கு தொற்று பரவாமல் இருக்கவும் அதிமுக  சார்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.

 உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலை காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலும் இந்நோய் பரவாமல் தடுக்கும் வகையில் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒருபகுதியாக தமிழ்நாட்டிலும் நடைமுறை பின்பற்றி வருகிறது. கொரோனா வைரஸை பரவாமல் தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று காலை திருச்சி  ஸ்ரீரங்கம் பகுதி அதிமுக  சார்பில் நிர்வாகி R.C. கோபி தலைமையில் பிரியாசிவகுமார், ராமசாமி திருவேங்கடம்  சசிரேக ஜெயந்தி வெங்கடேஷன் ராஜு,ஆகியோர்  ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் செயல்பட்டு வரும்  காய்கறி மார்க்கெட்டுக்கு வரும் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்தும் வகையில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

Apr 3, 2020

திருச்சி ஆயிரக்கணக்கான வழக்குகள் தடை மீறியவர்கள் மீது

திருச்சி ஏப் 03

திருச்சி மாவட்டத்தில் சுற்றித்திரிந்த 500 வாகனங்கள் பறிமுதல்

திருச்சி மாவட்ட எஸ்.பி ஜியா உல் ஹக் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்
திருச்சி மாவட்டத்தில் ஒரு நாள் மட்டும் 600 பேர் மீது 500 வழக்கு பதியப்பட்டு, 500 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஹெல்மெட் அணியாமலும், விதிமீறல் செய்தவர்கள் எனவும் என  2300 பேர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. கடந்த 25ஆம் தேதி முதல் நேற்று
2558 நபர்கள் மீது

2151வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இதுவரை 2228 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. காரணமின்றி சுற்றித் இருந்ததாக மார்ச் 25ம் தேதி முதல் ஏப்ரல்
2வரை 19 ஆயிரத்து, 970 வழக்குகள் பதியப்பட்டுள்ளது
என தெரிவித்துள்ளார்.


திருச்சி மலிவு விலை காய்கறி விற்பனையை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

திருச்சி ஏப் 03

திருச்சி மாநகராட்சி பகுதிகளுக்கு
மலிவு விலையில் காய்கறி விற்பனை - அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.

கொரோனா வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வரும் 14ம் தேதி வரையிலான 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளைத் தவிர இதர வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது.  இதையடுத்து தமிழக அரசின் உள்ளாட்சி துறை சார்பில் மலிவு விலையில் காய்கறி விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.

திருச்சி மாநகராட்சி பாலக்கரை பகுதியில் உள்ள அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தில் இன்று இந்த விற்பனையை அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன்,  வளர்மதி ஆகியோர் தொடங்கி வைத்தனர். திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இதன் பின்னர் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஒரு வாரத்திற்கு தேவையான 11 வகையான காய்கறிகள் 150 ரூபாய் என்ற மலிவு விலைக்கு தமிழக அரசால் விற்பனை செய்யப்படுகிறது. மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க வீட்டை விட்டு வெளியில் வரக்கூடாது என்ற காரணத்திற்காக வீடுகள் தோறும் சென்று இந்த காய்கறி விற்பனை செய்யப்படுகிறது. இந்த காய்கறிகளை மக்கள் வாங்கி பயன் அடைந்து கொள்ள வேண்டும்.  வீட்டைவிட்டு வெளியில் வராமல் உள்ளேயே இருக்க வேண்டும். அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளை உள்ளடக்கிய 4 கோட்ட பகுதிகளில் தினமும் இந்த காய்கறி விற்பனை நடைபெறும். அதனால் கரோனா தொற்று மேலும் பரவுவதை தடுக்கும் வகையில் மக்கள் வீட்டிலேயே இருந்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.


திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் இலவச முக கவசம் வழங்கினார்

திருச்சி மாநகரில் ஊரடங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் தடுப்பதற்காக காவல் அதிகாரிகள், காவலர்கள், ஊர்க்காவல் படையினர்,

அமைச்சு பணியாளர்கள் உள்ளிட்ட 2500 பேருக்கு சானிடைசர், முகக் கவசம் உள்ளிட்டவை அடங்கிய பையினை மாநகர காவல் ஆணையர் வி.வரதராஜூ இன்று வழங்கினார்.