Apr 4, 2020

திருச்சியில் 17 நபர்களுக்கு கொரோனா நோய் உறுதி மாவட்ட ஆட்சியர் பேட்டி

திருச்சி ஏப் 04

திருச்சியில் 17 நபர்களுக்கு கொரனா நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

திருச்சியில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்

தற்போது மருத்துவக்
கல்லூரி
மருத்துவமனையில்
125 நபர்கள்
சேர்க்கப்பட்டுள்ளனர்
இவர்களில் 5நபர்கள் வெளி மாவட்டத்தினை சார்ந்தவர்கள்
(ஈரோடு -1 , கரூர்
திருச்சி மாவட்டத்தினை சார்ந்தவர்கள் 120 நபர்களும், தஞ்சாவூர் - 1 நபரும்)
மேற்குறிப்பிட்ட 120 நபர்களின் இருப்பிடங்களை சுற்றியுள்ள 50 பகுதிகளில்
இதுவரை 25,586 குடியிருப்புகளில் 469 மருத்துவக்குழுவினர் வீடு வீடாக ஆய்வு செய்து
நபர்களை பரிசோதனை செய்துள்ளனர்.
எந்த ஒரு நபருக்கும் கொரோனா
வைரஸ் நோய் அறிகுறி எதுவுமில்லை
ஏற்கனவே கொரோனா வைரஸ் நோய் தாக்கப்பட்ட ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 1 நபருக்கும்,
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 2 நபர்களுக்கும்
உறுதி செய்யப்பட்டு மேற்கண்ட 3
நபர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களது உடல் நிலை சீராக நல்ல
நிலையில் உள்ளது.
இதுவரை 221
நபர்களுக்கு பரிசோதனை
செய்யப்பட்டதில் (மேற்கண்ட
3.
நபர்களை தவிர) இதர 217நபர்களுக்கு  இரத்த மாதிரி பரிசோதனையில் 
கொரோனா வைரஸ் நோய் இல்லை என
தெரியவந்துள்ளது.
தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள 120 நபர்களுக்கு இரத்த மாதிரி பரிசோதனை
முடிவு வரவேண்டும். இவர்களில் 
53நபர்களுக்கு கொரோனா வைரஸ் நோய் இரத்த
மாதிரி பரிசோதனை அறிக்கை முடிவு இன்று பெறப்பட்டு 
17நபர்களுக்கு கொரோனா
வைரஸ் நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதர 36 நபர்களுக்கு கொரோனா
வைரஸ் நோய் தொற்று இல்லையென அறிக்கை
வரப்பெற்றுள்ளது.
இருப்பினும்
இவர்கள்
அனைவரும் மேலும் 14நாட்கள்
மருத்துவமனையில்
சிகிச்சைப்பெற்று
இறுதியாக பரிசோதனை செய்த
பின்னர்
மருத்துவமனையில்
இருந்து
விடுவிக்கப்படுவார்கள்.
மேற்கண்ட 53
நபர்களை தவிர மீதமுள்ள 67
நபர்களின் பரிசோதனை 
நடவடிக்கையில் (Under Processing) உள்ளது என்றார்.
மேலும் தடுப்பு முன்னெச்சரிக்கையாக வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் 
இருந்த வந்த 3,045 பேர் விடுகளில் தனிமைபடுத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்கள் நல்ல நிலையில் உள்ளனர் என தெரிவித்தார்

திருச்சி அதிமுக நிர்வாகி RC கோபி தலைமையில் அதிமுக சார்பில் பொதுமக்களுக்கு தொற்று பரவுதலை தடுக்க கபசுரக் குடிநீர்

திருச்சி ஏப் 04

அதிமுக  நிர்வாகி RC கோபி தலைமையில் அதிமுக சார்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.

தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொற்று பரவாமல் இருக்க பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகிறார் அதன் அடிப்படையில் திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தற்காலிகமாக காய்கறி சந்தை அமைக்கப்பட்டுள்ளது

 மக்கள் அதிகமாகக் கூடும் இடத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்களுக்கு தொற்று பரவாமல் இருக்கவும் அதிமுக  சார்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.

 உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலை காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலும் இந்நோய் பரவாமல் தடுக்கும் வகையில் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒருபகுதியாக தமிழ்நாட்டிலும் நடைமுறை பின்பற்றி வருகிறது. கொரோனா வைரஸை பரவாமல் தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று காலை திருச்சி  ஸ்ரீரங்கம் பகுதி அதிமுக  சார்பில் நிர்வாகி R.C. கோபி தலைமையில் பிரியாசிவகுமார், ராமசாமி திருவேங்கடம்  சசிரேக ஜெயந்தி வெங்கடேஷன் ராஜு,ஆகியோர்  ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் செயல்பட்டு வரும்  காய்கறி மார்க்கெட்டுக்கு வரும் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்தும் வகையில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

Apr 3, 2020

திருச்சி ஆயிரக்கணக்கான வழக்குகள் தடை மீறியவர்கள் மீது

திருச்சி ஏப் 03

திருச்சி மாவட்டத்தில் சுற்றித்திரிந்த 500 வாகனங்கள் பறிமுதல்

திருச்சி மாவட்ட எஸ்.பி ஜியா உல் ஹக் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்
திருச்சி மாவட்டத்தில் ஒரு நாள் மட்டும் 600 பேர் மீது 500 வழக்கு பதியப்பட்டு, 500 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஹெல்மெட் அணியாமலும், விதிமீறல் செய்தவர்கள் எனவும் என  2300 பேர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. கடந்த 25ஆம் தேதி முதல் நேற்று
2558 நபர்கள் மீது

2151வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இதுவரை 2228 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. காரணமின்றி சுற்றித் இருந்ததாக மார்ச் 25ம் தேதி முதல் ஏப்ரல்
2வரை 19 ஆயிரத்து, 970 வழக்குகள் பதியப்பட்டுள்ளது
என தெரிவித்துள்ளார்.


திருச்சி மலிவு விலை காய்கறி விற்பனையை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

திருச்சி ஏப் 03

திருச்சி மாநகராட்சி பகுதிகளுக்கு
மலிவு விலையில் காய்கறி விற்பனை - அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.

கொரோனா வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வரும் 14ம் தேதி வரையிலான 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளைத் தவிர இதர வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது.  இதையடுத்து தமிழக அரசின் உள்ளாட்சி துறை சார்பில் மலிவு விலையில் காய்கறி விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.

திருச்சி மாநகராட்சி பாலக்கரை பகுதியில் உள்ள அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தில் இன்று இந்த விற்பனையை அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன்,  வளர்மதி ஆகியோர் தொடங்கி வைத்தனர். திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இதன் பின்னர் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஒரு வாரத்திற்கு தேவையான 11 வகையான காய்கறிகள் 150 ரூபாய் என்ற மலிவு விலைக்கு தமிழக அரசால் விற்பனை செய்யப்படுகிறது. மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க வீட்டை விட்டு வெளியில் வரக்கூடாது என்ற காரணத்திற்காக வீடுகள் தோறும் சென்று இந்த காய்கறி விற்பனை செய்யப்படுகிறது. இந்த காய்கறிகளை மக்கள் வாங்கி பயன் அடைந்து கொள்ள வேண்டும்.  வீட்டைவிட்டு வெளியில் வராமல் உள்ளேயே இருக்க வேண்டும். அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளை உள்ளடக்கிய 4 கோட்ட பகுதிகளில் தினமும் இந்த காய்கறி விற்பனை நடைபெறும். அதனால் கரோனா தொற்று மேலும் பரவுவதை தடுக்கும் வகையில் மக்கள் வீட்டிலேயே இருந்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.


திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் இலவச முக கவசம் வழங்கினார்

திருச்சி மாநகரில் ஊரடங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் தடுப்பதற்காக காவல் அதிகாரிகள், காவலர்கள், ஊர்க்காவல் படையினர்,

அமைச்சு பணியாளர்கள் உள்ளிட்ட 2500 பேருக்கு சானிடைசர், முகக் கவசம் உள்ளிட்டவை அடங்கிய பையினை மாநகர காவல் ஆணையர் வி.வரதராஜூ இன்று வழங்கினார்.

Apr 2, 2020

திருச்சி வெளியில் சுற்றுபவர்கள் மீது குற்ற வழக்கு

திருச்சி ஏப் 2

திருச்சி அரசு  மருத்துவமனையில் கொரோனா வைரஸ்
நோய் 100ஐ தாண்டியது  - வெளியில் சுற்றி திரிந்தால்  இனி  குற்றவியல் வழக்கு தான் - மாவட்ட
ஆட்சித்தலைவர் எச்சரிக்கை 

திருச்சி  அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்
3நபர்கள் கொரோனா
வைரஸ் நோய் தடுப்பு தனி பிரிவில் சிகிச்சைபெற்று வந்தனர்
இதில் ஈரோட்டை சேர்ந்த நபருக்கு
கொரோனா வைரஸ்
நோய் உள்ளதாக
உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று 80நபர்களும்
இன்று 27நபர்களும் சிகிச்சைக்காக
சேர்க்கப்பட்டுள்ளனர்
இதில் 43நபர்களுக்கு இரத்த மாதிரி
பரிசோதனை
எடுக்கப்பட்டுள்ளது.
இது வரை மொத்தம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்
110 நபர்கள்
சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
சாலைகளில் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக இருசக்கர வாகனங்களில்
1 நபர் - மட்டுமே மாஸ்க் அணிந்து பயணம்
செய்ய வேண்டும். பொதுமக்கள் சிலர்
காய்கறிகள் வாங்க குழந்தைகளுடன் வருவதை தவிர்த்தல் வேண்டும்
2நபர்கள் பயணம்
செய்தால் அவர்கள் மீது குற்றவியல் வழக்கு தொடரப்படுவதுடன் வாகனம் பறிமுதல்
செய்யப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர்  எச்சரித்துள்ளார்.


திருச்சி மக்கள் சேவையில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்

*திருச்சி அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டார்*

கொரோனா உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் கூலி தொழிலாளர்கள் பலர் வேலைக்கு செல்ல முடியாமல் தவித்து வருகினறனர்.

அதனால் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ஆயிரம் ரூபாய்  நிவாரண நிதி மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கும் பணி இன்று முதல் தமிழகம் முழுவதும் தொடங்கியுள்ளது.
 இந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் மரக்கடை பகுதியில் உள்ள ரேஷன் கடையில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் இதை தொடங்கி வைத்தார்.

இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு உணவுப் பொருட்களை பெற்று சென்றனர். இதன் பின்னர் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில். கரோனா தொற்று உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. இந்த தொற்றிலிருந்து தமிழக மக்கள் விடுபட வேண்டும் என்பதற்காக அனைவரும் வீடுகளுக்கு உள்ளேயே இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக  திருச்சி மாவட்டத்தில் உள்ள 1,224 ரேஷன் கடைகள் மூலம் 7 லட்சத்து 84 ஆயிரத்து 587 குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணத் தொகையும், உணவுப்பொருட்களும் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்கவேண்டும். வெளியில் வரக்கூடாது.  அனைவரும் வெளியில் வரக் கூடாது என்பதற்காக தான் இந்த ஒரு மாதத்திற்கான உணவு பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. அந்த பணி இன்று முதல் தொடங்கியுள்ளது. அடுத்தடுத்த நாட்களில் மற்றவர்களுக்கும் தொடர்ந்து வழங்கப்படும். கரோனா தொற்றிலிருந்து தமிழக மக்களை காக்க வேண்டும் என்றார். இதைத்தொடர்ந்து திருச்சி கடைவீதியில் உள்ள பெரிய கம்மாள தெரு மற்றும் சின்ன கம்மாள தெரு ஆகிய தெருக்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்ட பின்னர் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பார்வையிட்டார்.

இந்நிகழ்வின்போது அஇஅதிமுக பொறுப்பாளர்கள் ஜவஹர்,அன்பழகன்,சந்துகடை சந்துரு, அரசு அலுவலர்கள் பணியாளர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்

Apr 1, 2020

திருச்சி போலி மருத்துவர்களை நம்ப வேண்டாம் அரசு சித்த மருத்துவர் காமராஜ்

கொரோனா நோய் தடுப்புக்கு அனைத்து வயதினரும் அச்சமின்றி கபசூர குடிநீரை பருகலாம் என்று திருச்சி மாவட்ட சித்த அலுவலர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
 இது குறித்து திருச்சி மாவட்ட சித்த அலுவலர் டாக்டர் காமராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில்,


இந்தியாவை தொற்று நோயான கரோனா அச்சுறுத்தி வருகிறது. இதனால் நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. ஆனால் எவ்வித அச்சமும் இன்றி மக்கள் வெளியில் நடமாடி வருகின்றனர். அது நமக்கு தான் ஆபத்தை விளைவிக்கும். அடுத்த இரண்டு வாரங்களுக்கு வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும். அப்போது தான் இந்த நோய் பரவாமல் தடுக்க முடியும். அரசு உத்தரவை மீறினால் ஆபத்தை சந்திக்க நேரிடும்.


அனைத்து ஆயுஷ் மருத்துவமனைகளிலும் பல ஆண்டுகளாக நுரையீரல் நோய்க்கு எதிர்ப்பு சக்தியாக நிலவேம்பு குடிநீர் மற்றும் கபசூர குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இது புதிய மருந்து கிடையாது. இதை பல ஆண்டுகளாக நாம் பயன்படுத்தி வருகிறோம். இது தடுப்பு மருந்தாகும். மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் தமிழக அரசு மருத்துவமனைகளில் கபசூர குடிநீர் இலவசமாக வழங்கப்படுகிறது. மக்கள் அதை வாங்கி பருகி நோய் வராமல் தடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் வெளியில் இந்த குடிநீர் பொடியை வாங்கும்போது அதில் நிறுவனப் பெயர், அனுமதி எண், மூலப்பொருள்கள் விபரம், விலை, காலாவதி தேதி உள்ளிட்டவற்றை பார்த்து வாங்க வேண்டும். இவை குறிப்பிடப்படவில்லை என்றால் அந்த மருந்துகளை வாங்க கூடாது என்றார்.

திருச்சி அமைச்சர் வளர்மதி இலவசமாக முகக் கவசம் வழங்கினார்

திருச்சி



கொரோனா வைரஸ் தாக்குதல் உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் இதன் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து உயிர் இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.


இதை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. வரும்  ஏப்ரல் 15ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.


இதன் ஒரு பகுதியாக திருச்சி ஸ்ரீரங்கம் அரசு மருத்துமனையில் உள்ள வார்டுகளை தமிழக பிற்படுத்தப்பட்டோர் துறை அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார். பின்னர் வைரஸ் தாக்கத்தில் இருந்து காத்து கொள்ளும் வகையில் மருத்துவமனை மற்றும் அப்பகுதியில் இருந்து பொது மக்களுக்கு முக கவசம் வழங்கி அறிவுரை கூறினார்.

இந்நிகழ்வின்போதுபகுதிச் செயலாளர் டைமன்செயலாளர் டைமண்ட் திருப்பதி  அதிமுக பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்