*திருச்சி அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டார்*
கொரோனா உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் கூலி தொழிலாளர்கள் பலர் வேலைக்கு செல்ல முடியாமல் தவித்து வருகினறனர்.
அதனால் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கும் பணி இன்று முதல் தமிழகம் முழுவதும் தொடங்கியுள்ளது.
இந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் மரக்கடை பகுதியில் உள்ள ரேஷன் கடையில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் இதை தொடங்கி வைத்தார்.
இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு உணவுப் பொருட்களை பெற்று சென்றனர். இதன் பின்னர் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில். கரோனா தொற்று உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. இந்த தொற்றிலிருந்து தமிழக மக்கள் விடுபட வேண்டும் என்பதற்காக அனைவரும் வீடுகளுக்கு உள்ளேயே இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக திருச்சி மாவட்டத்தில் உள்ள 1,224 ரேஷன் கடைகள் மூலம் 7 லட்சத்து 84 ஆயிரத்து 587 குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணத் தொகையும், உணவுப்பொருட்களும் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்கவேண்டும். வெளியில் வரக்கூடாது. அனைவரும் வெளியில் வரக் கூடாது என்பதற்காக தான் இந்த ஒரு மாதத்திற்கான உணவு பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. அந்த பணி இன்று முதல் தொடங்கியுள்ளது. அடுத்தடுத்த நாட்களில் மற்றவர்களுக்கும் தொடர்ந்து வழங்கப்படும். கரோனா தொற்றிலிருந்து தமிழக மக்களை காக்க வேண்டும் என்றார். இதைத்தொடர்ந்து திருச்சி கடைவீதியில் உள்ள பெரிய கம்மாள தெரு மற்றும் சின்ன கம்மாள தெரு ஆகிய தெருக்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்ட பின்னர் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பார்வையிட்டார்.
கொரோனா உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் கூலி தொழிலாளர்கள் பலர் வேலைக்கு செல்ல முடியாமல் தவித்து வருகினறனர்.
இந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் மரக்கடை பகுதியில் உள்ள ரேஷன் கடையில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் இதை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வின்போது அஇஅதிமுக பொறுப்பாளர்கள் ஜவஹர்,அன்பழகன்,சந்துகடை சந்துரு, அரசு அலுவலர்கள் பணியாளர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்