முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்டுள்ள சிறை தண்டனையை கண்டித்து திருப்பரங்குன்றம் பகுதியில் அதிமுகவினர் தலைவர்களையெல்லாம் மீண்டும் மேடை ஏற்றி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்
சைதை பகுதி மடுவங்கரை மக்கள் சார்பில் அஇஅதிமுக பொதுசெயலாளர் விடுதலை பெற மகா யாகம் நடைபெறுகிறது. இதில் மதவேறுபாடு இன்றியும் அனைத்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
TUJ மாநில தலைவர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் அறிக்கையில் கூறியதாவது.
மூன்று முறை தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டது மிகவும் கண்டனத்திற்குரியது. நீதி மன்றத்தில் ஜாமீன் கேட்டு இரண்டு முறை அனுமதி கோரிய மனுவை கர்நாடக உயர் நீதிமன்றம் விசாரிக்காமலேயே தள்ளுபடி செய்திருப்பது வருந்தக்கூடியது.
மேலும், அரசியல் ரீதியில் தமிழக காங்கிரஸ் தலைவர்கள், ஜி.கே.வாசன், ஞானதேசிகள் போன்றவர்கள், அகில இந்திய காங்கிரஸ் தலைமையின் உதவியுடன், கர்நாடக முதல்வரை அணுகி, கர்நாடக நீதிமன்றத்திற்கு பரிந்துரை செய்து, உடனே ஜாமீன் வழங்கி, இரு மாநிலங்களுக்குள் இருந்து வரும் சுமூக உறவுகளை காக்கவேண்டும். இதன்மூலம், இதில் அரசியல் பின்னணி இல்லை என்பதில் நிரூபிக்க வேண்டும்.
அதன்மூலம், தமிழகத்தில் சில சமூக விரோதிகளால் நடைபெற்று வரும் அசம்பாவிதங்களும், அனைத்து தரப்பினரால் நடந்துக்கொண்டிருக்கும் போராட்டங்களும், ஆர்பாட்டங்களும் நடைபெறாமல் தவித்து, மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியும்.
மேலும், இதன் மூலம் கர்நாடகம் இடையே உள்ள உறவுகளும் பாதிக்கப்படாமல் சட்டம் ஒழுங்கு காக்கப்படும். ஆகவே, மனித உரிமை அடிப்படையில் மக்கள் பிரதிநிதி என்ற முறையில், அவருடைய வயதையும், உடல் நலத்தையும் கருத்தில் கொண்டு, ஜாமீன் வழங்கவேண்டும் என்பதே எங்களின் கோரிக்கையாகும். ஜனநாயக நாட்டில் நீதிமன்ற தீர்ப்பில் மேல்முறையீடு செய்யலாம் மற்றும் ஜாமீன் கேட்டும் மனு அளித்து, அதன்மீது விவாதங்கள் நடைபெற்று ஜாமீன் அளிப்பது குறித்து முடிவு எடுப்பதுதான், சட்டம் சாமான்ய மனிதருக்கும் அளித்திருக்கும் உரிமை. அப்படியிருக்க, மூன்று முறை முதல்வராக இருந்த மக்களின் செல்வாக்கைப் பெற்றுள்ள ஜெயலலிதாவிற்கு, அந்த உரிமை மறுக்கப்பட்டியிருப்பது ஏன் என்பதே எங்களைப் போன்ற நடுநிலையாளர்களின் கேள்வி.
ஒரு சமுதாய அந்தஸ்தில் உள்ள ஒருவருக்கு ஜாமீன் மறுப்பது என்பதே தவறானதாகும். ஆகவே, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அவர்கள் உடனே, இதில் தலையிட்டு, மக்கள் பிரதிநிதியாக இருந்த ஜெயலலிதாவிற்கு, ஜாமீன் மனு பரிசீலித்து, விரைவில் ஜாமீன் வழங்கவேண்டும்.
சிறையில் ஜெயலலிதா நலமாக உள்ளார்
DIG - ஜெய் ஷிம்மா தகவல்
சிறையில் உள்ள ஜெயலலிதாவின் உடல் நிலை சரியாகவே உள்ளது என்றும், அவரை 24 மணி நேரமும், மூன்று டாக்டர்களும், நான்கு நர்சுகளும் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், அவரை சந்திக்க வருபவர்களுக்கு நாங்கள் அனுமதி கொடுத்தும் கூட அவர் யாரையும் சந்திக்காமல் மறுத்து வருகிறார்.
தினமும் பழங்கள், பிரட் மற்றும் பால் மட்டுமே ஆகாரமாக எடுத்துக்கொள்கிறார். டாக்டர்களின் அறிவுரையின்படியே அவருக்கு படுக்கை வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. உணவுகள் கூட டாக்டர்கள் ஆலோசனையின்படியே அளித்து வருவதாகவும், அவர் தற்காலிக குற்றவாளியாக கருதி அவருக்கு கைதியின் உடை கொடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார் DIG - ஜெய் ஷிம்மா.
இதற்கிடையில், வரும் 7-ஆம் தேதி ஜாமீன் மனு விசாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இம் மனுவை ஏற்கனவே இரண்டு முறை விசாரிக்காமலேயே தவிர்த்தது போல, மூன்றாவது முறையும் செய்தால், இதில் நிச்சயம் அரசியல் தலையீடு உள்ளது என்பதில் துளி அளவும் சந்தேகம் இருக்காது.
- டி.எஸ்.ஆர்.சுபாஷ்,
ஆசிரியர்,
பத்திரிகையாளர் குரல்.