திண்டுக்கல்
மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள சேவுகம்பட்டி பேரூராட்சி
முத்துலாபுரத்தை சேர்ந்தவர் கதிரவன். அவரது மனைவி பாலம்மாள். இவர் கணவரை
இழந்தவர். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டு அதே இடத்தில் உயிரிழந்தார்.
இச்சம்பவத்தை அறிந்த வத்தலக்குண்டு ஒன்றிய குழுதலைவர் மோகன், சேவுகம்பட்டி பேரூராட்சி துணைத்தலைவர் சதீஸ்குமார் ஆகியோர் நேரில் சென்று பாலம்மாளின் குழந்தைகளுக்கு ஆறுதல் கூறினர்.
சொத்துகுவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு அளித்த தீர்ப்பை அடுத்து வத்தலக்குண்டுவில் அ.தி.மு.க தொண்டர் சோலைராஜ்(40) என்பவர் பஸ் நிலையம் அருகில் உள்ள தனியார் செல்போன் கோபுரத்தின் மீது ஏறி தற்கொலைக்கு முயன்றார்.
தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் நிலைய அதிகாரி குணசேகரன் தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று கோபுரத்தில் ஏறி சோலைராஜை பத்திரமாக மீட்டனர்.