திருப்பூர் திருமுருகன் பூண்டி பேரூராட்சி அ.தி.மு.க., சார்பில், திருப்பூர் அம்மாபாளையத்தில், பேரறிஞர் அண்ணா அவர்களின் 106 வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடந்தது. பேரூராட்சி கழக செயலாளர் பூண்டி விஸ்வநாதன் தலைமை தாங்கினார். தமிழக வனத்துறை அமைச்சர் .எம்.எஸ்.எம்.ஆனந்தன், முன்னாள் அமைச்சர் ராமசாமி, தலைமை கழக பேச்சாளர் ,செல்வராஜ், அவினாசி எம்.எல்.ஏ., கருப்பசாமி, துணை மேயர் சு.குணசேகரன், ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் அவினாசி ஒன்றிய செயலாளர் மு.சுப்பிரமணியம், தொகுதி கழக செயலாளர் வேலுசாமி, பேரூராட்சி தலைவர் பழனிசாமி, பூண்டி லதா, மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஊராட்சி துணை தலைவர் ஆனந்தகுமார், கருவம்பாளையம் மணி, ராஜேஷ் கண்ணா, ராமசாமி, ஷாஜகான், ரத்தினகுமார், லோகனாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.