Showing posts with label Trichy reporter sabarinathan. Show all posts
Showing posts with label Trichy reporter sabarinathan. Show all posts

May 16, 2020

திருச்சி தொடர்ச்சியாக நிவாரணப் பொருட்கள் வழங்கி வரும் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்

திருச்சி மே 15

திருச்சியில் 
அரிசி மளிகை மற்றும் காய்கறிகள் பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்குவதற்கு முன்பு பொருட்கள் வாங்க வந்த பொதுமக்களை வரிசையில் அமரச் செய்து சமூக இடைவெளியை பின்பற்ற வலியுறுத்தி அவர்களுக்கு ஆலோசனை வழங்கிய  பின்னர் பொருட்களை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பொதுமக்களுக்கு வழங்கினார். 

கொரோனா  தாக்குதல் காரணமாக 
தமிழகத்திலும் 
ஊரடங்கு மே 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏழை - எளிய பொதுமக்கள்  உணவுக்கு  கஷ்டப்பட்ட வருகின்றனர். 

தமிழக அரசு சார்பிலும், பல்வேறு அரசியல் கட்சியினரும், தன்னார்வலர்களும்  நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர். இந்த வகையில் திருச்சியில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கிழக்கு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 45 நாட்களுக்கு மேலாக வார்டு வாரியாக 

                     
நிவாரண பொருட்களை தொடர்ந்து வழங்கி வருகிறார்.
இன்று மலைக்கேட்டை  பகுதிக்குட்பட்ட 13வார்டு பொதுமக்களுக்கு அப்பகுதியில் 
உள்ள லூர்துசாமி பிள்ளை பூங்காவில் 
அரிசி, மளிகை மற்றும் காய்கறிகள் அடங்கிய 
தொகுப்பை 250 குடும்பத்தினருக்கு  வழங்கினார்.  இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள்  சமூக இடைவெளியை கருத்தில் கொண்டு நாற்காலி போட்டு அமர வைக்கப்பட்டனர்.
மேலும் முக கவசம் அணிந்து பொருட்களைப் வாங்கி சென்றனர்.
இந்நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் ஜவகர்லால் நேரு, பகுதி செயலாளர் அன்பழகன், சந்து கடை சந்துரு அதிமுக வட்ட பொறுப்பாளர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

May 10, 2020

திருச்சியில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மக்களுக்கு நிவாரணம்

திருச்சியில்  அமைச்சர் தொடர் நிவாரணம் ...!


கொரோனா வைரஸ் தாக்குதல் உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. தமிழகத்திலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், படிப்படியாக ஊரடங்கு மே 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏழை மக்கள் பலர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து உணவுக்கே கஷ்டப்பட்ட சூழ்நிலை உருவாகியுள்ளது. இதையடுத்து தமிழக அரசு சார்பிலும், அரசியல் கட்சியினரும், தன்னார்வலர்களும் தாங்களாக முன்வந்து நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர். 


இந்த வகையில் திருச்சியில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் நிவாரண பொருட்களை தொடர்ந்து வழங்கி வருகிறார். அவரது கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வார்டு வாரியாக  நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார். இந்த வகையில் இன்று திருச்சி மாநகராட்சி  மக்களுக்கு
25 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை வீடு வீடாக சென்று வழங்கினார்.  இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் பலர் சமூக இடைவெளியுடனும், முக கவசம் அணிந்து பொருட்களைப் வாங்கி சென்றனர்.

இந்நிகழ்ச்சியின் போது ஜவஹர்லால் நேரு மகளிரணி ஜாக்குலின் முன்னாள் துணை மேயர் ஆசிக் மீரா பகுதி செயலாளர் அன்பழகன் சந்துகடை சந்துரு மற்றும் கட்சிப் பிரதிநிதிகள் கட்சிப் பொறுப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்

May 6, 2020

திருச்சி மாவட்ட ஆட்சியர் தகவல்

*திருச்சிராப்பள்ளி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் நோய் 
தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தகவல்* 

நமது மாவட்டத்தினை சார்ந்த 51 நபர்கள் கொரோனா வைரஸ் நோய் 
பாதிக்கப்பட்டதன் விளைவாக சிகிச்சை பெற்று வந்தனர். இதில் ஏற்கனவே 47 நபர்கள்
பூரண குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 
திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிலிருந்து வருகை 
புரிந்த 28 நபர்கள் மற்றும் இதர மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களிலிருந்து வருகை புரிந்த 
667 நபர்களுக்கு இரத்த பரிசோதனை செய்ததில் ஏற்கனவே 4.5.2020 அன்று 4 நபர்களுக்கு 
கொரோனா வைரஸ் நோய் தொற்று உள்ளது என உறுதி செய்யப்பட்டுள்ளது.
மீதமுள்ள 
304 நபர்களுக்கு இன்று(5.5.2020) ரத்த மாதிரி பரிசோதனை செய்ததில் 303 நபர்களுக்கு
கொரோனா வைரஸ் நோய் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. 1 நபருக்கு 
கொரோனா வைரஸ் நோய் தொற்று உள்ளது என உறுதி செய்யப்பட்டுள்ளது. 
திருச்சி மாவட்டத்தை சார்ந்த 9 நபர்கள் அரியலூர் மாவட்டத்தைச் சார்ந்த 9
நபர்களும் பெரம்பலூர் மாவட்டத்தைச் சார்ந்த 12 நபர்களுக்கும் புதுக்கோட்டை 
மாவட்டத்தைச் சார்ந்த 1 நபரும் ஆக கூடுதல் 31 நபர்கள் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
அனைத்து நபர்களும் நலமுடன் உள்ளனர். 
வெளிமாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பிறமாவட்டங்களிலிருந்து திருச்சி 
மாவட்டத்திற்குள் வரும் நபர்கள் உடனடியாக சுகாதாரத்துறையினரை தொடர்பு கொண்டு 
தகவல் தெரிவிப்பதுடன் 14 நாட்களுக்கு வீட்டினை விட்டு வெளியே வராமல்
தனித்திருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றது. 
தேவையில்லாமல் வெளியில் நடமாடுவதை பொது மக்கள் தவிர்க்க வேண்டும். 
விழித்திரு - விலகி இரு - வீட்டில் இருக்கஎன்பதை கடைபிடிக்க வேண்டும். திருச்சிராப்பள்ளி 
மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் இல்லாத மாவட்டமாக மாற்றுவதற்கு பொதுமக்கள் 
அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்

திருச்சி வனச்சரக அலுவலர்கள் அதிரடி நடவடிக்கை வேட்டையில் ஈடுபட்டவர்கள் கைது

திருச்சி வலைவீசி முயல் பிடிக்க  முயற்சித்தவர் கைது ஒருவர் தப்பி ஓட்டம் தலைமறைவு

திருச்சி வனச்சரகர் பழனிவேல் தலைமையில்  வனவா் சரவணன்   மற்றும் 


வனக்காப்பாளா் கருப்பையா, ஜான் ஜோசப் வனக்காவலா் சுகாஷினி ஆகியோர் திருச்சி வனச்சரகம், கண்ணனூா் பகுதி பகளவாடி காப்புகாட்டில்,  வேட்டையாடிய காளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த ரவி 27/2020 மற்றும் 
சங்கா்(Driver-தலைமறைவு)25/2020 ஆகிய இருவர்  வலை வைத்து முயல் பிடித்த குற்றத்திற்காக  கைது செய்து  
வன உயிரின குற்ற வழக்கு பதிவு செய்து வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972 பிரிவு 2(1), 2(16)(a)( b), 2(35), 2(37), 9, 39(1)(d), 50, 51(1)  & IPC 188, 269, 270, 271  
r/w 3 of Epidemic Act 1897 & 134, 135 TN Public Health Act 1939 r/w 51(d) Disaster Management Act 2002 படி
துறையூா் நீதிமன்ற நீதிபதி அவா்கள் உத்தரவுபடி 15 நாட்கள் சிறைகாவலில் அடைக்கப்பட்டனா். Hero Splendor இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது

Apr 25, 2020

திருச்சி அரசு சித்த மருத்துவர்கள் மற்றும் அப்துல் கலாம் மக்கள் நலச் சங்கம் சார்பில் பகுதி வாழ் மக்களுக்கு கபசுர குடிநீர்

*தொடர் சேவையில் அரசு சித்த மருத்துவர்கள்*

தமிழ்நாடு அரசின் "ஆரோக்கியம்" திட்டத்தின் கீழ் கபசுர குடிநீர்  இன்று மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் மருத்துவர்.சா.காமராஜ் அவர்கள் தலைமையில் திருச்சி , வயலூர் சாலை, குமரன் நகர்,சிவன் கோவில்  பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு வழங்கபட்டது.இதில் மருத்துவர்கள் டாக்டர்.தமிழ்க்கனி, டாக்டர்.மெர்லின்  டோரோ,  டாக்டர்.இசையமுது  ஆகியோர் பங்கு பெற்றனர். நிகழ்வில் டாக்டர் அப்துல் கலாம் பொது நலச் சங்கத் தலைவர் சச்சிதானந்தம்,செயலர்.சப்தரிஷி முருகானந்தம்,ஆலோசகர் சுந்தரம் செட்டி யார் ,பொருளாளர்.ராஜேந்திரன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


இன்று மாலை 5 மணிக்கு திருச்சி கீழபுலிவார் ரோடு ,ஆனந்தா அவென்யூ பூங்காவில் இதே போன்று கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Apr 21, 2020

திருச்சி ஊரடங்கு உத்தரவை மீறி கன்னி சரம் வைத்து வேட்டையாட முயன்ற போது பிடிபட்டனர்

காகம் மற்றும் எலிகள் தவிர்த்து மற்ற எந்த விலங்குகள், பறவைகள், வண்ணத்துப்பூச்சிகள் மற்றும் பாம்பு ஆகிய எதை பிடிக்க முயற்சித்தாலும், வேட்டையாடினாலும் குற்றமே என்பதன் அடிப்படையில்

திருச்சி வனச்சரகர் பழனிவேல் தலைமையில்,வனவா்கள்,மதன்ராஜ், சரவணன்   மற்றும் வனக்காப்பாளர்கள்
சரவணன், ரவி, ஞானசம்மந்தம்  ஆகியோர்  (வனத்துறையின்) ரோந்து பணி சோதனை மேற்கொண்டபொழுது மணச்சநல்லுா், வலையூர் கிராமத்தை சாா்ந்த 1. ஜெயபாலன் (35), 2.கோபிநாத் (38), மற்றும்
3.கோபிநாதன் (35) ஆகிய மூன்று நபர்கள் விவசாய நிலத்தில் முயல் பிடிக்க கன்னி சரம்(Trap) வைத்திருந்தது தெரிய வந்தது.

 மேற்கண்ட மூவர்களை பிடித்து விசாரணை செய்த போது வேட்டைக்காக கன்னி வைத்த குற்றத்தை ஒப்புக்கொண்டனா். மேற்காணும் சம்பவம் தொடா்பாக  வன உயிரின பாதுகாப்பு சட்ட பிரிவுகளின்  படி வேட்டையாட முயற்சித்த குற்றத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து பின்னர் மாவட்ட வன அலுவலர், சுஜாதா IFS  உத்தரவின் படி ரூபாய்.15,000/- இனக்க கட்டணம் வசூலிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனா்.

Apr 1, 2020

திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் அறிக்கை

திருச்சி ஏப் 01


திருச்சி மாநகரில் 336 வழக்குகள் பதிவு -1000 நபர்கள் கைது -
10இடங்களில் காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்கும்
கடைகள் - மாநகர காவல்துறை ஆணையர்

இது குறித்து திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் வரதராஜு வெளியிட்டுள்ள அறிக்கையில்

திருச்சி மாநகரத்தில் கொரோனா நோய் தொற்று பரவாமல் தடுப்பதற்காக சமூக விலகலை
கடைபிடிக்க வேண்டி மார்ச் 25-ந்தேதி முதல் 21 நாட்களுக்கு மக்கள் அனைவரும் அத்தியாவசிய தேவைகளின்றி
வேறு எந்த காரணத்திற்காகவும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு
கடந்த 24-ந்தேதி அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாநகரில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த காவல்துறை வாகனங்கள் மற்றும்
தனியார் வாகனங்களில் ஒலிபெருக்கி அமைத்து சுழற்சி முறையில் காவலர்கள் நியமிக்கப்பட்டு
பொதுமக்களுக்கு திருச்சி மாநகரம் முழுவதும் காவல்துறையினர் விழிப்புணர்வு செய்து வருகின்றனர்.
மேலும், அரசின் உத்தரவை மீறி அத்தியாவசிய தேவையின்றி வெளியில்
சுற்றித்திரிந்ததற்காக திருச்சி மாநகரில் 336 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1000 நபர்கள் கைது
செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்968 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு கே.கே.நகர்
மாநகர ஆயுதப்படை மற்றும் காவல் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.2,08,200 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளின்றி தேவையில்லாமல் வெளியே வருவதை
தவிர்க்கும்படியும், மீறுபவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாநகர
காவல்துறை சார்பில் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
மேலும் திருச்சி மாநகரில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் நலன் கருதி
10இடங்களில்
(1.மதுரம் மைதானம், கீழப்புலிவார்டு ரோடு, 2. அண்ணா நகர் உழவர் சந்தை, தென்னூர், 3. அண்ணா
விளையாட்டரங்க முன்புறம், 4. கே.கே.நகர் உழவர் சந்தை, 5.மத்திய பேருந்து நிலையம், 6.எஸ்.ஐ.டி.
மைதானம், அரியமங்கலம், 7.பிஷப்ஹீபர் கல்லூரி மைதானம், புத்தூர், 8.சத்திரம் பேருந்து
நிலைய சுற்று வட்டாரப் பகுதி,
9.N.S.மேல்நிலைபள்ளி மற்றும் 10. ஸ்ரீரங்கம் ஆண்கள்
மேல்நிலைப்பள்ளி) காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்கும் சில்லறை விற்பனை சந்தைகள் செயல்பட்டு
வருகிறது. மேற்படி இடங்களில் சமூக விலகலை கடைபிடிக்க காவல்துறையினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
மேலும் திருச்சி காவேரி பாலத்தில் இயங்கி வந்த தற்காலிக காய்கறி மார்க்கெட் நாளை முதல்
(02.04.2020) இயங்காது என திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அறிவித்துள்ளார்கள். மேற்கண்ட
இடங்களில் செயல்படும் தற்காலிக காய்கறி மார்க்கெட் கடைகள் காலை 06.00 மணிமுதல் மதியம் 02.30
மணிவரை செயல்படும் என தெரிவித்து கொள்ளப்படுகிறதுமேலும் ஊரடங்கு உத்தரவை முறையாக அமல்படுத்தும் பொருட்டும், அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து,
தேவையற்ற பிற நடமாட்டங்களை குறைக்கும் வகையிலும் மாநகரில் வாகன சோதனை தொடர்ந்து நடைபெற்று
வருகிறது.


Dec 21, 2019

திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் அதிமுக பிரச்சாரம்

திருச்சி



திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட மணிகண்டம் ஒன்றியத்தில் அமைச்சர் வளர்மதி தலைமையில் அதிமுகவினர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.



மக்களுக்கு எந்த நல்ல திட்டங்களும் கிடைக்கவிடாமல் செய்ய எதெற்கெடுத்தாலும் நீதிமன்றத்தை நாடும் இயக்கம் திமுக - அமைச்சர் வளர்மதி வாக்கு சேகரிப்பில் பேச்சு ...


திருச்சி மாவட்டத்தில் ஊரக பகுதியில் 14 ஊராட்சி ஒன்றியங்களில் வருகிற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

இதில் 4077 பதவிகளில் 626 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து, மீதமுள்ள 3451 பதவிகளுக்கு 11,870 பேர் போட்டியிடுகின்றனர்.

அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அவர்களுக்கு வாக்கு சேகரிக்கும் பணியில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதி, திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் குமார், அமைப்பு செயலாளர் பரஞ்சோதி, அதிமுக நிர்வாகிகள், தோழமை கட்சிகளான தேமுதிக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகளும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட மணிகண்டம் ஒன்றியத்தில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் 18 வது வார்டு தாமரை சிவசக்திவேல் 1 முதல் 6 வது வார்டுகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களையும் ஆதரித்து, அதவத்தூர், அல்லித்துறை, சோமரசன்பேட்டை, இனியானூர், நாச்சிக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

வாக்கு சேகரிப்பின் போது பேசிய அமைச்சர் வளர்மதி ...

மக்களுக்கு எந்த நல்ல திட்டங்களும் கிடைக்கவிடாமல் செய்ய எதெற்கெடுத்தாலும் நீதிமன்றத்தை நாடும் இயக்கம் திமுக -

அதிமுக தலைமையிலான தமிழக அரசின் திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களையும் வந்தடைய உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள்

தமிழகம் மின் மிகை மாநிலம் போல திருச்சியில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து தண்ணீர் மிகை மாவட்டமாக திருச்சி உள்ளது என அமைச்சர் வளர்மதி வாக்கு சேகரிப்பின் போது பேசினார்.

அதிமுக கழக ஆட்சியின் சாதனைகளை விளக்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் அதிமுக வேட்பாளர்கள், அமைச்சர் வளர்மதிக்கு அப்பகுதி மக்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.


இந்நிகழ்ச்சியின் போது அதிமுக மாவட்டச் செயலாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குமார், ஜவஹர் சகாதேவன்பாண்டி ,முத்துக்கருப்பன், மற்றும் கழக நிர்வாகிகள் பிரமுகர்கள் முன்னாள் அமைச்சர்கள் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கூட்டணி கட்சி மாவட்ட செயலாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்


Dec 17, 2019

திருச்சி உள்ளாட்சி தேர்தல் மனு தாக்கல்

திருச்சி மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் 6 ஊராட்சி ஒன்றியத்திற்கு முதல் கட்டமாக 27ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக 30 ஆம் தேதி 8 ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.


மணச்சநல்லூர் ஒன்றியத்தில் அதிமுக சார்பாக மணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் பரமேஸ்வரி கணவர் முருகன் மற்றும் ஏராளமான அதிமுகவினர் பல்வேறு பதவிகளுக்கு மனு தாக்கல் செய்தனர் மேலும் அதிமுக கூட்டணி கட்சியினர் பாட்டாளி மக்கள் கட்சி ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்


இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9ம் தேதி தொடங்கியது.    வேட்புமனு தாக்கல் கடைசி நாளான நேற்று வேட்புமனு தாக்கல் செய்ய அரசியல் கட்சியினரும் சுயேட்சைகளும் குவிந்தனர்.
24 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 149 பேரும், 241 ஊராட்சி யூனியன் வார்டு கவுன்சிலருக்கு 1,443 பேரும்,404 கிராம ஊராட்சித் தலைவருக்கு 2,212 பேரும், 3408 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 9 ஆயிரத்து 582 பேரும் என நேற்று வரை 13 ஆயிரத்து 386 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

Jun 1, 2019

திருச்சி தனியார் பேருந்துகள் போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு

திருச்சி - 31.05.2019

திருச்சியில் உள்ள தனியார் பள்ளி பேருந்துகளின் பாதுகாப்பு குறித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வுசெய்தனர்.




கோடைவிடுமுறை முடிந்து வருகிற திங்கள் கிழமை  பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளி வாகனங்களின் தகுதி குறித்த ஆய்வு திருச்சியில் நடைபெற்றது. இதில் பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு வசதிகள், வேகக் கட்டுப்பாட்டு கருவி, தீயணைப்பு கருவி மற்றும் அவசரகால வழி  போன்றவை பற்றி ஆய்வு செய்யப்பட்டது.


ஆகஸ்போர்டு கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆய்வு முகாமில் டாக்டர் அகர்வால்  கண் மருத்துவமனை சார்பில், பள்ளி வாகனங்களின் ஓட்டுனர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் முகாமில் மாவட்ட துணை ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பேசும்போது பேருந்து ஓட்டுநர்கள் பேருந்தை குறிப்பிட்ட வேகத்திலேயே இயக்கவேண்டும், பேருந்தில் இருக்கும் தீயணைப்பு கருவிகள் செயல்படுவது குறித்து அறிந்து கொள்ளவேண்டும்.  பேருந்தில் பழுது ஏதும் ஏற்பட்டால் உடனடியாக தங்களின் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து அதை சரிசெய்ய வேண்டும். பேருந்தில் பயணிக்கும் குழந்தைகள் அனைவரையும் பாதுகாப்பாக அழைத்து செல்வது ஒவ்வொரு ஓட்டுநரின் கடமை என கூறினார்.

இதில் பள்ளிபேருந்து ஓட்டுநர்களுக்கு பேருந்தில் தீவிபத்து ஏற்பட்டால் அதை எவ்வாறு அணைப்பது என்பது குறித்து தீயணைப்பு துறையினரால்  செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

Mar 26, 2019

அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் தொழிலதிபர் கண்ணையன் அவர்களிடம் ஆதரவு கோரினார்

அம்மா மக்கள் முன்னேற்ற கழக திருச்சி நாடாளுமன்ற வேட்பாளர் சாருபாலா தொண்டைமான்  திருச்சி தொழிலதிபர் பொன்மலைப்பட்டி கண்ணையனிடம் ஆதரவு கோரினார்.திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன்  அவைத்தலைவர் சாத்தனூர் ராமலிங்கம் பொருளாளர் திரிசங்கு, இணைச்செயலர் சேட் ஜோதிவானன், உறையூர் பகுதி செயலாளர் சதீஷ் ஜங்சன் பகுதி செயலர் தன்சிங் பாலக்கரை பகுதி செயலாளர் கண்ணன் பொன்மலை பகுதி செயலாளர் சங்கர்  ஏர்போர்ட் பகுதி செயலாளர் ரமேஷ்   அம்மா பேரவை செயலாளர் சரவணன் செயற்குழு உறுப்பினர் ராமமூர்த்தி மகளிர் அணி செயலாளர் வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் , உட்பட பல நிர்வாகிகள உடனிருந்தனர்.

திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் விஜய் ரசிகர் மன்ற இளைஞர் அணி தலைவரிடம் ஆதரவு கோரினார்

அம்மா மக்கள் முன்னேற்ற கழக திருச்சி நாடாளுமன்ற வேட்பாளர் சாருபாலா தொண்டைமான்  திருச்சி விஜய் ரசிகர் மன்ற மாவட்ட இளைஞரணி தலைவர் குடமுருட்டி கரிகாலனிடம் ஆதரவு கோரினார்.திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன்  அவைத்தலைவர் சாத்தனூர் ராமலிங்கம் பொருளாளர் திரிசங்கு, இணைச்செயலர் சேட் ஜோதிவானன், உறையூர் பகுதி செயலாளர் சதீஷ் ஜங்சன் பகுதி செயலர் தன்சிங் பாலக்கரை பகுதி செயலாளர் கண்ணன் பொன்மலை பகுதி செயலாளர் சங்கர்  ஏர்போர்ட் பகுதி செயலாளர் ரமேஷ்   அம்மா பேரவை செயலாளர் சரவணன் செயற்குழு உறுப்பினர் ராமமூர்த்தி மகளிர் அணி செயலாளர் வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் , உட்பட பல நிர்வாகிகள உடனிருந்தனர்.

Mar 24, 2019

தேமுதிக தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டது


திருச்சி-24.03.19

தேமுதிக திருச்சி பாராளுமன்ற தேர்தல் அலுவலக திறப்பு விழா நடைபெற்றது

அதிமுக கூட்டணி கட்சியான தேமுதிக வின் திருச்சி பாராளுமன்ற தேர்தல் அலுவலகம் இன்று திறக்கப்பட்டது. திருச்சி அரசு மருத்துவமனை அருகே அமைந்துள்ள அலுவலகத்தை தேமுதிக வேட்பாளர் இளங்கோவன் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் அதிமுக அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி மற்றும் பாமக, பாஜக, உள்ளிட்ட கூட்டணி கட்சியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Jan 27, 2019

திருச்சி ஸ்ரீரங்கம்ஸ்ரீ மத் ஆண்டவன் கலை அறிவியல் தன்னாட்சிக் கல்லூரி இருபத்தி மூன்றாம் ஆண்டு விழா



ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் தன்னாட்சிக் கல்லூரி இருபத்தி மூன்றாம் ஆண்டு விழா 
கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரி செயலர் அம்மங்கி பாலாஜி வரவேற்றார். 



ஆண்டவன் ஆசிரம தேசியத்தலைவர் ராஜகோபால் தலைமை உரையாற்றினார். கல்லூரி முதல்வர் ராதிகா அறிக்கை வாசித்தார். தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத் துறை அமைச்சர் வளர்மதி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றார்கள். நிகழ்ச்சியில் பாடசாலை மாணவர்களையும் கல்லூரியில் 20 ஆண்டுகள் பணி புரிந்தவர்களையும் பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது.  இயக்குனர் ராமானுஜம் முன்னிலை வகித்தார் துணை முதல்வர் பிச்சைமணி நன்றி கூறினார்

Dec 1, 2018

திருச்சி மாணவ மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி

திருச்சி 1.12.18
திருச்சி மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறையின் சார்பில்
2017-18 மற்றும் 2018-19ஆம் ஆண்டிற்கு 47,208 மாணவ, மாணவியர்களுக்கு ரூபாய் 19 கோடி மதிப்பில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் பணியினை சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி ஆகியோர் தொடங்கி வைத்தார்கள்.

முதற்கட்டமாக திருச்சியில் இன்று 2183 மாணவ, மாணவியர்களுக்கு ரூபாய் 80 இலட்சம் மதிப்பில் விலையில்லா மிதிவண்டிகளை சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி ஆகியோர் வழங்கினார்கள்

திருச்சிராப்பள்ளி மாவட்டம், பள்ளிக்கல்வித்துறையினர் அரசு சையது முர்துஷா மேல்நிலைப்பள்ளி 406 மாணவ, மாணவியர்களுக்கு ரூபாய் 15 இலட்சம் மதிப்பில் விலையில்லா மிதிவண்டிகள் மாணவ, மாணவியர்களுக்கு ரூபாய் 80 இலட்சம் மதிப்பில் விலையில்லா மிதிவண்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் .இராசாமணி. தலைமையில்,  சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் , பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி ஆகியோர் இன்று வழங்கினார்கள்.

 விலையில்லா மிதிவண்டிகளை மாணவ, மாணவியர்களுக்கு வழங்கி மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் விழா பேருரையாற்றியதாவது

மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தார்கள். மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் சிந்தனையில் உதித்த நல்ல பல திட்டங்களில் இதுவும் ஒன்றாகும். குழந்தைகள் கருவில் இருக்கும் காலம் முதல் பள்ளி படிப்பு, உயர்கல்வி, அரசு பணியில் சேரும் வரை அவர்களுக்காக சீரிய பல திட்டங்களை மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கொண்டு வந்தார்கள். கல்வித்துறைக்கென மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்த ஆண்டு 27,500 கோடி நிதிஒதுக்கீடு செய்துள்ளார்கள்.

கல்வித்துறையில் இந்திய திருநாடே வியக்கின்ற வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா காலணி, விலையில்லா மதியஉணவு, கலர் சீருடை போன்றவை வழங்கப்படுகிறது.

மாண்புமிகு அம்மாவின் அரசு அற்புதமான அரசு. எனவே மாணவ, மாணவியர்கள் இவ்வாய்ப்புகளை பயன்படுத்தி நன்றாக படிக்க வேண்டும். வரலாற்று சாதனைகள் படைக்க வேண்டும். தாய் தந்தையரை மதித்து நடக்க வேண்டும். இந்த சையது முர்துஷா மேல்நிலைப்பள்ளி எனது சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பள்ளியாகும். எனவே எனது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து இப்பள்ளிக்கு மேலும் கூடுதலாக முதல் தளத்தில் 4 வகுப்பறைகள் கட்டுவதற்கு ரூபாய் 47 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் திருச்சிராப்பள்ளி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றிய பெருந்தலைவர் கார்த்திகேயன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இராமகிருட்டினன், மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) ராமசாமி, அரசு சையது முதுர்ஷா மேல்நிலைப்பள்ளி தாளாளர் திரு.வேலுச்சாமி, மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவியர்கள், கூட்டுறவு வங்கி தலைவர்கள், முன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

May 17, 2018

திருச்சி கல்லூரி மற்றும் பள்ளி வாகனங்கள் முதல் கட்டமாக ஆய்வு

திருச்சி   17.5.18

திருச்சி தீரன் ஆக்ஸ்போர்டு பொறியியல் கல்லூரி வளாகத்தில் மேற்கு வட்டார போக்குவரத்து துறை அலுவலகத்திற்குப் பட்ட பள்ளி வாகனங்களில் வருடாந்திர பாதுகாப்பு அம்சங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் இராசாமணி தலைமையில் ஆய்வு செய்யப்பட்டது.

திருச்சி மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி வாகனங்களும் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி தமிழக அரசின் உத்தரவுப்படி ஒவ்வொரு ஆண்டும் ஆய்வு செய்யப்படுகிறது.வரும் கல்வியாண்டு ஜூன் முதல் வாரத்தில் தொடங்கப்படவுள்ளது. தனியார் பள்ளிகள் மற்றும் அனைத்து பள்ளி வாகனங்களும் முறையாக பராமரிக்கப் படுகிறதா ஆய்வு செய்யப்படுகிறது. குழந்தைகளின் பாதுகாப்பு அம்சங்கள் 100% உறுதி செய்யப்படும் அனைத்து பள்ளி வாகனங்களும் இந்த மாத இறுதிக்குள் ஆய்வு செய்து முடிக்கப்படும்.

பள்ளி வாகனங்கள் ஆய்வை வருவாய் துறை மற்றும் இதர துறைகள் மூலம் கண்காணிக்கப்படும். பள்ளி வாகனஒட்டுனர்களுக்கு உடல் தகுதி, கண் பரிசோதனை போன்றவை ஆய்வு செய்யப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் பள்ளி வாகனங்களின் வருடாந்திர பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது.இந்த ஆய்வில் பாதுகாப்பில்லாத வகையில் இயக்கப்படும் வாகனங்களை தகுதி நீக்கம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி ஆண்டுதோறும் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி வாகனங்கள் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கொண்ட குழுவினரால் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன

அந்த வகையில் திருச்சி மாவட்ட போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட பள்ளி வாகனங்களில் வருடாந்திர பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

திருச்சி மேற்கு மற்றும் மணப்பாறை போக்குவரத்து துறை அலுவலகத்திற்கு உட்பட்ட 152 வாகனங்கள் இன்று பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் 17 வாகனங்கள் குறைபாடுகள் கண்டறியப்பட்டு தகுதி சான்று தற்காலிமாக ரத்து செய்யப்பட்டது. இன்று மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பள்ளி வாகனங்களும் முதலுதவி பெட்டி, அவசர கால வழிகள் உள்ளதா, டயர் மற்றும் பிரேக் திறன் ஆகியவற்றில் குறைபாடு இருப்பின் பள்ளி வாகனங்களின் அனுமதி ரத்து செய்யப்படும்.

ஆய்வின் போது பள்ளி வாகனஒட்டுநர்களுக்கு Dr.அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் மருத்துவனை செய்யப்பட்டு 152 ஒட்டுநர்களில் 16 ஒட்டுநர்க்கு கண் குறைபாடு கண்டறியப்பட்டு மேல் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டு அந்தந்த பள்ளி தாளாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஒட்டுநர்களுக்கு தீ தடுப்பு நடவடிக்கை குறித்து தீயணைப்பு கருவிகள் மூலம் தீயை எப்படி அணைப்பது தொடர்பாக செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

மேலும், ஆய்வின் போது சார் ஆட்சியர் கமல் கிஷோர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன், திருச்சி சரகம் துணை போக்குவரத்து ஆணையர் உமாசக்தி, உதவி காவல்துறை ஆணையர் அருணாச்சலம், தீயணைப்பு மீட்பு பணிகள் துறை உதவி மாவட்ட அலுவலர் கருணாகரன், மணப்பாறை காவல் துணை கண்காணிப்பாளர் ஆசை தம்பி, மணப்பாறை மோட்டார் வாகனம் ஆய்வாளர் உமாமகேஸ்வரி, மேற்கு வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் அனிதா, முகமது மீரா ஆகியோர் உடன் இருந்தனர்