தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளதையொட்டி பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வேட்புமனு தாக்கல் செய்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் திருச்சி மாநகராட்சி 03 வது வார்டில் அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் ரேவதி போட்டியிடுகிறார். இதையொட்டி தனது வார்டுக்குட்பட்ட நிர்வாகிகள், பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் இன்று 03 வது வார்டுக்குட்பட்ட ரயில்வே ஸ்டேஷன் சாலையில் உள்ள வீடுகளுக்கு சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
வாக்கு சேகரிப்பின் போது வட்ட கழக செயலாளர் கே.செல்வம், பி.சுப்பிரமணி, அமுல்தாஸ், ராஜம்மாள், ராஜா, சவேரியார், கலைவாணன், கிருஷ்ணவேணி, லலிதா உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.