May 22, 2020

திருச்சி பேரரசர் முத்தரையர் பிறந்தநாள் விழா மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர்
அவர்களின் பிறந்த நாள் விழா ஒவ்வொரு ஆண்டும் அரசின் சார்பில் மே-23 தேதி
அவரது திருவுருவச்சிலைக்கு அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை
செய்யப்படுகிறது.

மன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1345-வது பிறந்த நாள்
விழா அவரது திருவுருவச்சிலைக்கு அரசின் சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்
மட்டுமே மாலை அணிவித்து மரியாதை செய்யப்படவுள்ளது மாவட்ட ஆட்சித்தலைவர்
சிவராசு அறிவிப்பு

மன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1345-வது பிறந்த நாள் விழா
தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மேலும்  தெரிவித்ததாவது
கொரோனா வைரஸ் நோய் தொற்று தொடர்பாக 144 – தடை உத்தரவு அமலில்
உள்ளதால் பொது மக்களின் நலன் கருதியும் கொரோனா வைரஸ் நோய் தொற்று
பரவாமல் தடுக்கும் நோக்கத்திலும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
எனவே வருகின்ற (23.5.2020) அன்று மன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர்
அவர்களது 1345 - வது பிறந்த நாள் விழா அவரது திருவுருவச்சிலைக்கு தமிழ்நாடு
அரசின் சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் மட்டும் மாலை அணிவித்து மரியாதை
செலுத்துவார்கள். 144 – தடை உத்தரவு காரணமாக இந்நிகழ்ச்சிகளில் பொது மக்கள்
கலந்து கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது மேலும் திருவுருவச்சிலைக்கு
செல்வதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறதுஇவ்வாறு மாவட்ட
ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.