அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் 67–வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை காளவாசலில் இன்று அ.தி.மு.க. தொழிற்சங்க இணைச் செயலாளர் வக்கீல் சே. பசும்பொன் பாண்டியன் தலைமையில் 67 கிலோ கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் தொழிற்சங்க துணைச்செயலாளர் பூக்கடை முருகன், ராஜசேகர், திருமுருகன், அரசரடி மு.சண்முகம், போஸ், போஸ், வாபர் பாட்சா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் பசும்பொன் பாண்டியன் பேசியதாவது:–
தமிழர்களின் உணர்வாக, உயிர் மூச்சாக, அரணாக மக்களால் நான், மக்களுக்காக நான் என்று வாழ்ந்து வருகிற அம்மா அவர்களின் பிறந்த தினத்தில் அகிலமே ஆர்த்தெழுந்து, ஆர்ப்பரிப்புடன் உள்ளம் உவகையோடு கொண்டாடி வருகிறது. தனக்கென வாழாமல் தமிழர்கள் தரணி யெங்கும் தலை நிமிர்ந்து வாழ்ந்திட தன்னையே அர்ப்பணித்து வாழ்கிற தங்கத்தாரகை அம்மாவின் பிறந்த தினத்தில் தாய் தமிழகமே சீரும், சிறப் போடும் கொண்டாடி மகிழ்ந்து வருகிறது.
பிறந்த குழந்தைகளுக்கு உடனடி தேவையாக கிப்ட் பாக்ஸ் மூலம் தேவையை நிவர்த்தி செய்தததை தாய்மார்கள் அம்மாவை உளமாற வாழ்த்துகிறார்கள். வயோதிகர்களும், கர்ப்பிணிகளும், கணவரால் கைவிடப்பட்டோரும் அம்மா அவர்களின் அற்புத திட்டத்தால் அபார பயன் அடைந்து இதய சக்தியோடு அம்மாவை வாழ்த்துகிறார்கள்.
நீதிக்குத்தண்டனையா? என்று அறம் சார்ந்தோர் வருந்தி அம்மா அவர்கள் அனைத்து சதியிலிருந்தும் விடுபட்டு அனைத்து தரப்பு மக்களின் ஆதரவுடன் அரியணையில் மீண்டும் அமர்ந்து நல்லாட்சி தருவார் என்று நல்லோர் இதயங்கள் அம்மா அவர்களை உலக தமிழினமே வாழ்த்தி வணங்குகிறது.
நாளைய உலகிற்கு அம்மா வழிகாட்டியாக சமூக விஞ்ஞானியாக பரிணமிக்க உள்ளார்கள். அம்மா காலத்தில் நாம் வாழ்ந்ததே நாளைய சரித்திரமாக மாற உள்ளது. அம்மாவின் தலைமையில் சாதனை படைப்போம். அம்மாவை வாழ்த்துவோம், வணங்குவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.