Feb 25, 2015

ஜெயலலிதா பிறந்தநாளில் 67 பெண்களுக்கு இலவச சேலை: மதுரை கூடல் நகர் அ.தி.மு.க. பிரமுகர்கள் வழங்கினர்

ஜெயலலிதா பிறந்தநாளில் 67 பெண்களுக்கு இலவச சேலை: மதுரை கூடல் நகர் அ.தி.மு.க. பிரமுகர்கள் வழங்கினர்அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, மதுரை கூடல் நகரில் அ.தி.மு.க.வினர் ஏழைப் பெண்கள் 67 பேருக்கு இலவச சேலைகளை வழங்கினர்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதாவின் 67-வது பிறந்தநாள் விழா தமிழ்நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டது. தலைமைக் கழகத்தில் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் கேக் வெட்டி கொண்டாடினர். போயஸ் கார்டனில் ஜெயலலிதாவின் வீட்டின் முன்பு திரண்ட மகளிரணியினர் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.

இதுதவிர அனைத்து பகுதிகளிலும் கோவில்களில் சிறப்பு வழிபாடு, அன்னதானம், நலத்திட்ட உதவிகள் என பல்வேறு வகையில் பிறந்தநாள் விழாவை அந்த வகையில், மதுரை மாநகர் 1-வது வார்டு கூடல் நகரில் அ.தி.மு.க. பிரமுகர் எஸ்.தனபாலன் தலைமையில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

பிறந்தநாளை நினைவூட்டும் வகையில் 67 ஏழைப் பெண்களுக்கு இலவச சேலைகள் வழங்கப்பட்டன. இதுதவிர ஆயிரம் பேருக்கு சர்க்கரைப் பொங்கலும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், குண்டுசேகர், சண்முகம், கே.மாரியப்பன், சின்னசாமி மற்றும் பலர் கலந்துகொண்டனர்