இதையொட்டி பரிவார மூர்த்திகளுக்கு ஜலாதி வாசம் செய்யும் நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, சக்கரத்தாழ்வார், லட்சுமி நரசிம்மர், ஹயக்கிரீவர், தன்வந்திரி மற்றும் 7 ஆழ்வார்கள் உள்ளிட்ட சாமி சிலைகள் தண்ணீர் தொட்டியில் விடப்பட்டு ஜலாதி வாசம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் துணை மேயர் சு.குணசேகரன், நகரமைப்பு குழுதலைவர் அன்பகம் திருப்பதி,கவுன்சிலர் கண்ணப்பன், கூட்டுறவு சங்க தலைவர்கள் எம்.மணி,மார்க்கெட் சக்திவேல், அரசு வழக்கறிஞர் சுப்பிரமணியம், திருப்பணி குழுவினர் கிளாசிக் சிவராமன், டாக்டர் தங்கவேலு, சவுமீஸ் நடராசன், கிரீட்டிங்க்ஸ் ராஜேந்திரன், செயல் அலுவலர் சிவகாமசூரியன், உதவி ஆணையர் ஆனந்த், தலைமை குருக்கள் கோவிந்தராஜ் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.