Oct 12, 2014

ஜெயலலிதா விடுதலையாக வேண்டி அண்ணா தி.மு.க.எம்.எல்.ஏ. தலைமையில் பாதயாத்திரை





ஜெயலலிதா விரைவில் விடுதலையாக வேண்டி பரமசிவம் எம்.எல்.ஏ.வுடன் அண்ணா தி.மு.க.வினர் பாதயாத்திரையாக சென்று, கோவிலில் 108 தேங்காய் உடைத்து சிறப்பு வழிபாடு செய்தனர்.
மக்கள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 15 நாட்களாக கர்நாடகா சிறையில் உள்ளார். அவர் விரைவில் விடுதலையாகி  வரவேண்டி தமிழகம் முழுவதும் அண்ணா தி.மு.க.வினர் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக ஜெயலலிதா விரைவில் விடுதலையாக வேண்டியும், நீண்ட ஆரோக்யத்துடன் வாழ வேண்டியும் திருப்பூர் தெற்கு ஒன்றிய அண்ணா தி.மு.க.மற்றும் மங்கலம் ஊராட்சி கழகம் சார்பில் மங்கலம் பெருமாள் கோவிலில் இருந்து மலைக்கோவில் குழந்தை வேலாயுதசுவாமி கோலிவில்வரை அண்ணா தி.மு.க.வினர் பாதயாத்திரை சென்றனர். இந்த பாதயாத்திரையில் பல்லடம் எம்.எல்.ஏ. பரமசிவம், மாவட்ட ஊராட்சி தலைவர் சண்முகம், தெற்கு ஒன்றிய செயலாளர் சில்வர் வெங்கடாசலம், ஊராட்சி கழக செயலாளர் சுப்பிரமணியம் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் நடந்து சென்றனர்.
இதை தொடர்ந்து மலைக்கோவில் குழந்தை வேலாயுதசுவாமி கோவில் வாசலில் மங்கலம் ஊராட்சி தலைவர் பாலாமணி சுப்பிரமணியம் தலைமையில் அண்ணா தி.மு.க. நிர்வாகிகள் 108 தேங்காய் உடைத்து வேண்டுதல் செய்தனர். பின்னர் கோவிலில் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் மக்கள் முதல்வர் ஜெயலலிதாவிற்காக 1 மணி நேரம் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் கரைபுதூர் நடராஜன், மாவட்ட கவுன்சிலர் தண்ணீர்பந்தல் நடராஜன், திருப்பூர் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் சிராஜøதீன், கொடுவாய் லோகநாதன், மாநகராட்சி கணக்குகுழுத் தலைவர் வசந்தாமணி, கவுன்சிலர்கள் கேபிள் சிவா, லட்சுமி, வேலுசாமி, திருப்பூர் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் சிராஜøதீன், இடுவாய் ஊராட்சி கழக செயலாளர் சென்னியப்பன், தெற்கு ஒன்றிய இளைஞரணி துணைதலைவர் வெங்கடாசலம், இடுவாய் ஊராட்சி தலைவர் லட்சுமி செல்வராஜ், மங்கலம் ஊராட்சி மன்ற மன்ற துணை தலைவர் அஸ்கர்அலி, மற்றும் உறுப்பினர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.