Oct 12, 2014

திருப்பூரில் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் மனைவியுடன் யாகம் நடத்தினார்



 திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் .கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா வழக்கிலிருந்து விடுதலையாக் வேண்டி  மாவட்ட செயலாளரும், வனத்துறை அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில் பார்க் ரோட்டில் உள்ள ராகவேந்திரா கோவிலில்  கணபதி ஹோமம்,சுதர்சன ஹோமம், நவக்கிரஹ ஹோமம், நரசிம்ம ஹோமம் ஆகியவை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மேயர் அ.விசாலாட்சி, துணை மேயர் சு.குணசேகரன், மற்றும் ஜெ.ஆர்.ஜான், வி.ராதாகிருஷ்ணன், அமைச்சர் ஆனந்தன் துணைவியார் லட்சுமி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.