திருப்பூர் அடுத்துள்ள பெருந்தொழுவில் அமைக்கப்பட்டுள்ள கால்நடை மருந்தகத்தை வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் திறந்து வைத்து, கால்நடைகளுக்கான ஊட்டச்சத்து உணவை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ், மேயர் அ.விசாலாட்சி, பல்லடம் கே.பி.பரமசிவம் எம். எல்.ஏ.,மாவட்ட ஊராட்சி தலைவர் எம்.சண்முகம்,துணைத்தலைவர் ஆனந் தகுமார், மாவட்ட கவுன்சிலர் ப.நடராஜன், மண்டல தலைவர்கள் ராதாகிருஷ்ணன், கிருத்திகா சோமசுந்தரம், நிலைக்குழு தலைவர் அன்பகம் திருப்பதி, பொங்கலூர் ஒன்றிய குழுத்தலைவர் சிவாச்சலம், கரைப்புதூர் நடராஜ், உகயனூர் பழனிசசாமி, லோகநாதன், புத்தரச்சல் பாபு, ராஜேஷ் கண்ணா, கோகுல், ராஜ்குமார், கால்நடை துறை இணை இயக்குனர் நாகராஜன், உதவி இயக்குனர் ராமச்சந்திரன், டாக்டர் சங்கரநாராயணன், மக்கள் தொடர்பு அலுவளர் தமிழ் மொழி அமுது ஆகியோர் கலந்து கொண்டனர்.