Dec 4, 2014

ரூ.11.09 லட்சம் மதிப்பில் புதிய கால்நடை மருத்துவமனையை அமைச்சர் திறந்து வைத்தார்.

பொங்கலூர் ஒன்றியம் வேலம்பட்டியில்ரூ.11.06 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய கால்நடை மருத்துவமனையை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் திறந்து வைத்தார்.
திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் ஒன்றியம் வேலம்பட்டியில் தெற்கு அவினாசிபாளையம், பொங்கலூர், மாதப்பூர் ஆகிய 3 ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்றால் திருப்பூர் தாராபுரம் ரோட்டில் உள்ள வேலம்பட்டி கால்நடை மருத்துவமனைக்கு தான் பொதுமக்கள் செல்ல வேண்டும். பல ஆண்டுகளாக இடப்பற்றாக்குறையால் இயங்கி வந்த  இந்த மருத்துவமனைக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என பொதுமக்கள்  அண்ணா தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிற்கு கோரிக்கை விடுத்து இருந்தனர். அவரதுவழிகாட்டுதலின் பேரில், மாவட்ட கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் ரூ.11.06 லட்சத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய புதியதாக கால்நடை மருத்துவமனை கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. 



விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ்,தலைமை தாங்கினார். பல்லடம் எம்.எல்.ஏ., பரமசிவம், மாவட்ட ஊராட்சி தலைவர் எம்.சண்முகம், ஒன்றிய பெருந்தலைவர் எஸ்.சிவாச்சலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதிய கட்டிடத்தை வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் திறந்து வைத்து கால்நடைகளுக்கு குடற்புழு நீக்க மருந்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பல்லடம் ஒன்றிய குழு தலைவர் ஆறுமுகம், மாமன்ற கவுன்சிலர் எம்.கண்ணப்பன், மாநகராட்சி நிலைக்குழுத்தலைவர் அன்பகம் திருப்பதி, வளர்மதி கூட்டுறவு சங்க துணைத்தலைவர் எம்.மணி, அரசு வழக்கறிஞர் கே.என்.சுப்பிரமணியம், தண்ணீர் பந்தல் ப.நடராஜ் உள்ளிட்ட மாவட்ட கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் கரைபுதூர் நடராஜன், உகாயனூர் பழனிசாமி, திருப்பூர் கால்நடைத்துறை துணை இயக்குனர் டாக்டர்.சண்முகவேல், உதவி இயக்குனர்கள்  டாக்டர்கள் ராமச்சந்திரன், பிரபாகரன்,கால்நடை உதவி மருத்துவர் ஜெகநாதன், மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள், கூட்டுறவு சங்க தலைவர்கள் புத்தரச்சல் பாபு, சித்துராஜ், வி.எம்.கோகுல் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க. நிர்வாகிகள் நீதிராஜன், அர்ஜுனன், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.